Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 84

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தங்களது மருமகனை உரிய மரியாதைகளுடன் வரவேற்று, அவனைத் தங்கள் மகளிடம் பேச அனுப்பி வைத்து விட்டு நாகரீகத்துடன் ஒதுங்கிக் கொண்டார்கள் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன்.

இத்தனை நாட்களாக பிரிந்திருந்த போதிலும், தாங்களும் நாகரீகமாகவே நடந்து கொண்டனர் காஷ்மீரனும், மஹாபத்ராவும்.

ஒரு இதமான அணைப்புடனும், இனிப்பான நெற்றி முத்தத்துடனும், தங்களுடைய நீண்ட கால பிரிவைச் சமன்படுத்திக் கொண்டார்கள் இருவரும்.

அதன் பின்னர், மஹாபத்ராவின் பெற்றோரோ, ஒரு தட்டில் உடைகள் மற்றும் பொருட்களை வைத்து, தங்கள் மகன் மற்றும் மருமகளுடைய கரத்தில் திணித்தார்கள் பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணி.

இந்த உடைகளை அணிந்து வந்த ஜோடிகளுக்குச் சாப்பாடு பரிமாறி உணண் வைத்ததும்,”நான் உடனே கிளம்பனுமா ம்மா?” என்று தன் மனைவியிடம் கேட்டான் காஷ்மீரன்.

“நீங்க இங்கே ஈவ்னிங் வரைக்கும் தங்கிட்டுப் போகலாம் ங்க!” என்று அவனிடம் கூறிக் குதூகலித்தாள் மஹாபத்ரா.

“சூப்பர்!” என்றவனோ, அவளுடன் தனிமையில் நேரத்தைச் செலவழிக்க விருப்பம் இருந்தாலும், அது இங்கிதம் இல்லை என்று எண்ணியவாறு அவளுடன் சேர்ந்து, மாமனார் மற்றும் மாமியாருடன் அளவளாவத் தொடங்கி விட்டான்.

அவை யாவும் முடிந்ததுமே, மாலை நேரம் வந்து விட, அவர்கள் மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டுத் தன்னுடைய வீட்டிற்குப் போனான் காஷ்மீரன்.

“என்னப்பா! அங்கே எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று தன் மகனிடம் வினவினார் சந்திரதேவ்.

“ஹாங்! மூனு பேரும் நல்லா இருக்காங்க ப்பா. உங்க மருமக நம்ம வீட்டை ரொம்ப மிஸ் பண்றா!” என்றுரைத்தான்.

“இன்னும் கொஞ்ச நாள் தான்! அப்பறம் இங்கே வந்திருவா” என்றார் சந்திரதேவ்.

“அது அவளுக்குமே தெரியும் ப்பா. ஆனாலும் அங்கே இருக்கவும் அவளுக்கு ஆசை தான்! ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்கனும்ன்னு விருப்பப்பட்றா!” என்று அவரிடம் கூறிப் புன்னகைத்தான் காஷ்மீரன்.

“ஹாஹா!” என்று தானும் அவனுடன் சேர்ந்து சிரித்தார் அவனது தந்தை.

அதற்குப் பிறகு, ருத்ராக்ஷியின் வாழ்க்கையைப் பற்றிய சிறு உரையாடலை மேற்கொண்டு விட்டுத் தங்களது வேலையைத் தொடர்ந்தார்கள் இருவரும்.

************************

“என்ன‌ கவியக்கா! அந்தப் பொண்ணு ருத்ராக்ஷி, ஊருக்குத் திரும்பி வந்த சந்தோஷத்தில் இருக்கீங்க போலவே?” என்று அவரது வாயைக் கிண்டினார் ஒரு பெண்மணி.

தனது மகனுக்கும், அவளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையை மகனின் வாயிலாக அறிந்து கொண்ட நாளிலிருந்தே தன்னுடைய மருமகளாக வரப் போவது ருத்ராக்ஷி தான் என்பதை தெளிவாக அறிந்து கொண்டார் கவிபாரதி.

ஆனால், அந்த விஷயத்தை ஊரே கேட்கும் அளவிற்குத் தம்பட்டம் அடித்துக் கொள்ளத் தேவையில்லை என்பதாலும், இரு வீட்டாரும் தங்களுக்குள் நேரடியாகப் பேசி விட்டப் பிறகு அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்ளலாம் என்று காத்திருந்தார்.

இப்போது இந்தப் பெண்கள் யாவரும் தன்னை அப்படி இருக்க விடப் போவதில்லை என்றுணர்ந்து அவர்களை வெறித்துப் பார்த்தவரோ,”ஆமாம். நமக்குக் கிளாஸ் எடுத்துட்டு இருக்கிறாளே? அப்போ, நான் அப்படித் தானே சந்தோஷப்படனும்?” என்று அலட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் கேட்டார் கவிபாரதி.

“ஓஹோ! அப்போ அதுக்காக மட்டும் தான் நீங்க சந்தோஷமாக இருக்கீங்க? அப்படித் தானே?” என்றார் மற்றொரு பெண்.

“அதைத் தெரிஞ்சிக்க நீங்க ஏன் இவ்ளோ ஆர்வமாக இருக்கீங்க அக்கா?” என்று அவரிடம் வினவினார் மிருதுளா.

“ஹிஹி! எல்லாம் சும்மா ஒரு பொழுதுபோக்குக்குத் தான் ம்மா!” என்று அசடு வழியக் கூறினார்கள் மற்றப் பெண்மணிகள்.

“இதை இப்படியும் சொல்லலாமா க்கா?” என்று இடக்காக வினவியவரிடம்,

“நாங்க கவியக்கா கிட்டே தானே கேட்டோம்? நீ ஏன் சம்பந்தமே இல்லாமல் உள்ளே நுழையுற?” என்றார்கள் அனைவரும்.

“அப்படித் தான் நுழைவேன்! என்னப் பண்ணுவீங்க?” என்று சிரித்தவாறே அவர்களிடம் அழுத்தமாக கேட்டார் மிருதுளா.

“ஸ்ஸப்பா! நாங்க இனிமேல் ஒன்னுமே கேட்கலை ம்மா! எங்களை விட்ரு” என அவரிடம் சொல்லி அமைதியாகி விட்டார்கள் அனைவரும்.

“நீங்க என்னக்கா அவங்களுக்கு எந்தப் பதிலும் கொடுக்காமல் அப்படியே உட்கார்ந்து இருக்கீங்க? என்னாச்சு?” என்று அவரிடம் கனிவுடன் வினவினார் மிருதுளா.

கவிபாரதி,”என் பையனுக்கும், அந்தப் பொண்ணுக்கும் விருப்பம் இருக்கு தான் ம்மா. அதை நானும் ஏத்துக்கிட்டேன்! ஆனால், இன்னும் அவங்களைச் சேர்த்து வைக்கிறதுக்கான பேச்சு வார்த்தை நடக்கலை. அதுக்குள்ளே இப்படியெல்லாம் அவங்கப் பேசும் போது, நானும், ஸ்வரூபனும், ருத்ராக்ஷிக்குக் கெட்டப் பேர் வாங்கித் தர்றோமோன்னு தோனுது!” என்று தன் மனக்குறையை வெளிப்படுத்தினார்.

“இந்தக் கிளாஸ் முடிஞ்சதும், ருத்ராக்ஷியும், அவங்களும் கிளம்பிப் போகட்டும். நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பத்திச் சொல்லியே ஆகனும். இனிமேல் அதை உங்ககிட்ட இருந்து மறைக்க முடியாது” என்று அவரிடம் உறுதியாக உரைத்தார்.

“சரிம்மா” என்றவுடன், அங்கே ருத்ராக்ஷியும் வந்து விட, அவர்களது மெழுகுவர்த்திகளைச் செய்யத் தெரிந்து கொள்ளும் வகுப்பைக் கவனிக்க ஆரம்பித்து விட்டனர் அனைவரும்.

அவர்களுக்குத், தான் பயிற்சி எடுக்கும் போது, கவிபாரதியின் முகத்தைக் கவனித்துக் கொண்டு இருந்தவளோ,

அதை என்னவென கேட்டுத் தெரிந்து கொள்ள முனைந்து, அந்த வகுப்பை முடித்ததும்,”கவிபாரதியம்மா! அவங்க எல்லாரும் கிளம்பட்டும். நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று அவரிடம் கூறித் தடுத்து நிறுத்தினாள் ருத்ராக்ஷி.

“ம்ஹ்ம்” என்று அவளது சொல்லுக்கு மறுப்பு சொல்லாமல் அங்கேயே நின்று விட, அவருடன் மிருதுளாவும் இருந்து கொண்டார்.

”நீங்க கிளம்புங்க அக்கா. உங்க வீட்டுக்காரர் இந்நேரம் வந்திருப்பாருல்ல?” என்று அவரிடம் அழுத்திக் கூறவும்,

அவரது விழிகளோ கவிபாரதியை ஏறிட்டது.

“நீ போயிட்டு வா ம்மா. நான் பேசிட்டு வர்றேன்” என அவரிடம் சொன்னார் ஸ்வரூபனுடைய அன்னை‌.

“சரிங்க அக்கா” என்று கூறி அங்கேயிருந்து அகன்று விட்டார் மிருதுளா.

இப்போது அனைவருமே அவ்விடத்தை விட்டு அகன்றதும்,”என்னாச்சு ம்மா? நான் கிளாஸ் எடுக்கிறப்போ உங்களைக் கவனிச்சுட்டுத் தான் இருந்தேன். உங்க முகத்தில் ஒரு தெளிவே இல்லையே?” என்று அவரிடம் ஆதூரமாக விசாரித்தாள் ருத்ராக்ஷி.

“ஒன்னும் இல்லை ம்மா” என்று அவளிடமிருந்து விஷயத்தை மறைக்க முயற்சி செய்தார் கவிபாரதி.

“ஊஹூம்! ஏதோ தீவிரமான விஷயம் தான்! ஆனால் உங்களுக்கு எங்கிட்டே அதைச் சொல்ல விருப்பமில்லை. அப்படித் தானே?” என்று அவரைக் கூர்மையாகப் பார்த்தவாறே வினவியவளிடம்,

அதற்குப் பிறகு, அவளிடம் எதையும் மறைத்துப் பயனில்லை என்ற முடிவிற்கு வந்தவரோ, ருத்ராக்ஷியிடம் அனைத்தையும் ஒப்புவித்து முடித்தார் ஸ்வரூபனின் தாய்.

- தொடரும்

வணக்கம் நண்பர்களே!

நாளைக்கு என்னோட அம்மாவுக்குப் பர்த்டே, அதுக்கப்புறம், ஒரு வாரம் ஃபுல்லா எனக்கு எக்ஸாம் நடக்கப் போகுது. அதனால், அதை எழுதி முடிச்சிட்டு, 11 - ஆம் தேதி இந்தக் கதையோட அடுத்த யூடிஸோட வந்துடறேன். அதுவரைக்கும், என்னை மறந்துடாதீங்க! 🙏
 
உங்க அம்மாவுக்கு எனது வாழ்த்துக்கள் மா 💐💐

உங்க எக்ஸாம்க்கு நல்லா படிச்சு, சிறப்பா எழுதிவட்டு வாங்க.👍
 
Top