Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 83

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“ரொம்ப தாங்க்ஸ்” என்று தனது தந்தை மற்றும் தங்கையிடம் நன்றி தெரிவித்தாள்.

“அப்போ ஆடி மாசம் முடிஞ்சு மருமக நம்ம வீட்டுக்கு வந்ததும் ஊருக்குப் போய் அவங்க வீட்டில் பேசிடுவோமா?” என்று அவளிடம் வினவினார் சந்திரதேவ்.

“ஷூயர் ப்பா” என்று வெட்கத்தில் சிவந்த முகத்துடன் அவரிடம் உரைத்தாள் ருத்ராக்ஷி.

“அட! ஆமால்ல! நான் இதை மாஹாகிட்டே ஷேர் செய்துட்டு வர்றேன். ஏற்கனவே அவள் இல்லாமல் இதையெல்லாம் பேசிட்டோம்னு ஃபீல் பண்ணுவாளே!” என்று முணுமுணுத்துக் கொண்டே தன் அறைக்குச் சென்று மனைவிக்குச் செல்பேசியில் அழைப்பு விடுத்தான் காஷ்மீரன்.

“ஹலோ, என்னங்க!” என்று உற்சாகம் பொங்க பேசினாள் அவனது மனைவி.

“ஹாய் ம்மா! உன்கிட்ட ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லத் தான் கால் பண்ணேன்” என்று அவளிடம் கூறினான் அவளுடைய கணவன்.

“என்ன விஷயம் ங்க?” என்றவளிடம்,

“நம்ம ருத்ரா கிட்ட பேசியாச்சு” என்று கூறவும்,

“என்ன, எதைப் பத்திப் பேசினீங்க?” என்று அவனிடம் குழப்பத்துடன் வினவினாள் மஹாபத்ரா.

“அதைக் கேட்டு நீ கோபப்படக் கூடாது!” என்று அவளிடம் பொடி வைத்துப் பேசினான் காஷ்மீரன்.

“நான் எதுக்குக் கோபப்படனும் ங்க? முதல்ல விஷயத்தைச் சொல்லுங்க” என்றாள் அவனது மனைவி.

“ஏன்னா நான் சொல்லப் போறது அப்படி!” என்றவன், அவளிடம் விஷயத்தைக் கூறி முடித்தான் அவளுடைய மணாளன்.

“ம்ஹூம்! நான் அங்கே வர்றதுக்குள்ளே அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் அவசரம்! போங்க!” என்று அவனிடம் சினுங்கிக் கொண்டே கூறினாள் மஹாபத்ரா.

“நீ கோபப்படக் கூடாதுன்னு முன்னாடியே கேட்டுக்கிட்டேன்ல ம்மா!” என்று தன் மனைவியிடம் பாவமாக சொன்னான் காஷ்மீரன்.

“நான் ஃபீல் தான் பண்றேன் ங்க! எனக்குக் கோபம் எல்லாம் வரவே இல்லை” என அவனிடம் உரைத்தாள்.

“சாரிடா ம்மா! இப்போ விட்டால், ருத்ராக்ஷியைப் பிடிக்க முடியாதுல்ல? அதான், அவகிட்ட இப்போவோ எல்லாத்தையும் கேட்டுத் தெளிவுபடுத்திக்கிட்டோம்” என்று மனைவியைச் சமாதானப்படுத்தினான்.

“இதெல்லாம் செல்லாது! போங்க!” என்று அவனிடம் இன்னுமின்னும் முறுக்கிக் கொண்டாள் மஹாபத்ரா.

“ப்ளீஸ்டா ம்மா! என் செல்லம்ல?” என்று கொஞ்சியே அவளை அமைதிப்படுத்தி விட்டான் காஷ்மீரன்.

“ஓகே ங்க. அப்போ நான் அங்கே வந்ததுக்கு அப்பறம் தான் அடுத்து எல்லாத்தையும் நடத்தனும். டீலா ங்க?” என்று அவனிடம் தீர்க்கமாக கேட்டாள்.

“டீல் ம்மா! நாங்க உனக்காக வெயிட் செய்துட்டு இருப்போம்” என்று அவளிடம் காதல் வார்த்தைகளைப் பேசினான் அவளது மணாளன்.

“சரிங்க. நான் இப்போ போய் உங்கத் தங்கிச்சி கிட்டே பேசறேன்” என்று கூறி அவனுடைய உழைப்பைத் துண்டித்து விட்டுத் தனது நாத்தனாருக்கு அழைத்துப் பேசினாள் மஹாபத்ரா.

“ஹாய் அண்ணி!” என்றவளிடம்,

“ஹலோ ருத்ரா ம்மா!” என்று பேசி விட்டுத் தாங்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்து முடித்ததும்,

“என்னை விட்டுட்டு நீங்க மூனு பேரும் கூட்டுச் சேர்ந்துட்டீங்கள்ல?” என அவளிடம் பொய்க் கோபத்துடன் கேட்டாள் மஹாபத்ரா.

“அச்சோ! அப்படியெல்லாம் இல்லை அண்ணி! ஏதோ யதேச்சையாக நடந்த விஷயம் தான்! உங்களை விட்டுட்டுப் பேசனும்னுலாம் நினைக்கலை” என்று அவளுக்கு விளக்கம் கொடுக்க முயற்சி செய்தாள் ருத்ராக்ஷி.

“ஹேய்! நோ பிராப்ளம் மா! நான் சும்மா உன்னை வம்பிழுக்கத் தான் அப்படி பேசினேன்” என்றாள் அவளது அண்ணி.

அதற்குப் பிறகு தான், அவளது மனதை நோகடித்து விடவில்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் காஷ்மீரனின் தங்கை.

*தாங்க்ஸ் அண்ணி” என அவளிடம் கூறவும்,

*இட்ஸ் ஓகே ம்மா. எப்படியோ உனக்குப் பிடிச்ச ஊரில் இருக்கிறவரைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போற!” என்று அவளிடம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தாள் மஹாபத்ரா.

“ஹாஹா! ஆமாம் அண்ணி. ஆனால் என்னால் அடிக்கடி இங்கே வர முடியாதே!” என்று கூறியும் வருத்தப்பட்டுக் கொண்டாள் ருத்ராக்ஷி.

“ம்ஹ்ம்! ஏன் ம்மா இப்படி சொல்ற? நீ எங்களுக்காக வந்து தான் ஆகனும்” என்றுரைத்தாள் அவளுடைய அண்ணி.

“கண்டிப்பாக வந்து போறேன்! ஓகேவா?” என அவளிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“ம்ம். இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு!” என்று தனது நாத்தனாரிடம் மொழிந்தாள் மஹாபத்ரா.

“பார்றா! உங்களோட புரொஃபஷன் எப்படி போகுது? இந்த ஒரு மாசத்தில் எப்போதாவது இடையில் இங்கே வர வாய்ப்பு இருக்கா?” என்று அவளிடம் கேட்கவும்,

“நான் அங்கே வர்றதுக்கு வாய்ப்பு இல்லைடா. உங்க அண்ணன் தான், ஆடி பதினெட்டுக்கு வர்றா மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன்” என்றாள் காஷ்மீரனுடைய மனைவி.

“ஓகோ! அப்போ இந்த மாசம் ஃபுல்லா அண்ணா தான் அங்கே வரனும் போலிருக்கே அண்ணி” என்று கூறிச் சிரித்தாள் ருத்ராக்ஷி.

“ஹிஹி! ஆமாம் டா. ஆடி மாசம் முடிவில் தான் நான் அங்கே வருவேன்” என்ற தகவலை அவளிடம் சொன்னாள் மஹாபத்ரா.

அவர்களது உரையாடல் அத்துடன் முடிவடைந்து விட்டதும்,

மிருதுளா தான், இவருடைய விசுவாசியாக இருந்து ருத்ராக்ஷி மற்றும் ஸ்வரூபனைப் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொடுத்தார்.

எனவே, முதலில் அவரிடம் இதைக் கூறுவது தான் சாலச் சிறந்தது என்று எண்ணியவரோ, இந்த விஷயங்களை மிருதுளாவிடம் பகிர்ந்து கொண்டார் சந்திரதேவ்.

‘சூப்பர் ப்பா! ரொம்ப சந்தோஷம்! நானும், அவரும் நீங்க இப்படியொரு முடிவைத் தான் எடுப்பீங்கன்னு முந்தியே பேசிக்கிட்டோம்” என மனமகிழ்ந்துப் போய்க் கூறி விட்டார்.

“உன் ஹஸ்பெண்ட் கிட்டே மட்டும் இதைச் சொல்லு ம்மா. கவிபாரதியம்மா கிட்டேயும், அவங்களோட பையன் கிட்டேயும் நாங்களே நேரில் வந்து சொல்லிக்கிறோம்” என அவரிடம் சொன்னார் சந்திரதேவ்.

“சரிங்க ப்பா” என்றுரைத்து விட்டார் மிருதுளா.

அதற்கான கால, நேரங்கள் அமையும் வரைக் காத்திருக்கலானார்கள் மூவரும்.

தான் எதற்காக வந்தோமோ? அது நல்லபடியாக நடந்து முடிந்து விட்டதால், அடுத்த சில நாட்களிலேயே அனைவரிடமும் விடைபெற்றுத் தான் தங்கியிருக்கும் ஊருக்குத் திரும்பி விட்டாள் ருத்ராக்ஷி.

அதே சமயம், காஷ்மீரனும், மஹாபத்ராவும், தங்களுடைய ஆடி பதினெட்டுக் கொண்டாட்டத்திற்குத் தயாரானார்கள்.

அதற்குரிய புதிய ஆடைகளைத் தயாராக வைத்துக் கொண்டு தங்களது மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்திருந்தார்கள் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன்.

நீண்ட நாட்கள் கழித்து தன் மனைவியைப் பார்த்ததும் பரவசம் அடைந்தான் காஷ்மீரன்.

- தொடரும்
 
Top