Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 68

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தன்‌ மகளுக்கும், மருமகனுக்கும் பிடித்த உணவு வகைகளைத் தான் கைகளாலேயே சமைத்துக் கொண்டு இருந்தவரோ,“ஏங்க! மஹாவுக்குக் கூப்பிட்டு, எப்போ வர்றாங்கன்னுக் கேளுங்க” என்று தன்னுடைய கணவனிடம் கூறினார் கனகரூபிணி.

“சரிம்மா” என்று அவரிடம் சொல்லி விட்டு, மஹாபத்ராவிற்கு அழைத்துக் கேட்டார் பிரியரஞ்சன்.

“நீங்களே டைமிங் சொல்லுங்க ப்பா” என்றாள்.

உடனே தன் மனைவியிடம் நேரத்தைக் கேட்டு மகளிடம் தெரிவித்தார் அவளது தந்தை.

அவர்கள் மதிய உணவைத் தயாரித்து வைக்கப் போவதால், ஒன்றரை மணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று மகளிடம் கூறியிருந்தார்கள்.

எனவே அதைக் கணவன் காஷ்மீரன், தன் மாமாவிடமும், நாத்தனாரிடமும் உரைத்து விட்டிருந்தாள் மஹாபத்ரா.

சம்பந்தி வீட்டின் மறு வீட்டு விருந்து முடிந்ததும் தங்களுடைய இல்லத்திலும் அந்த வைபவத்தை நடத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார் சந்திரதேவ்.

அதன்பின், சாப்பாடு வகைகளை எல்லாம் உணவு மேஜையில் அடுக்கி வைத்து விட்டு மகள் மற்றும் அவளது புகுந்த வீட்டாரின் வருகைக்காக காத்திருக்கலானார்கள் மஹாபத்ராவின் பெற்றோர்.

தங்களது மகள், மருமகன் மற்றும் அவளது புகுந்த வீட்டு உறுப்பினர்கள் காரில் வந்து இறங்கவும்,

“வாங்க! வாங்க. எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபடியே புதிதாக திருமணம் செய்திருந்த தன் மகள் மற்றும் மருமகனுக்கு ஆரத்தி எடுத்து விட்டே உள்ளே வர அனுமதித்தனர் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன்.

“நல்லா இருக்கோம்” என்று அவர்களிடம் தெரிவித்து விட்டு நீள்சாய்வு இருக்கையில் அமர்ந்தார்கள் மஹாபத்ரா, காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ், அவரது மகள் ருத்ராக்ஷி.

சிறிது நேரத்திற்குப் பேச்சு வார்த்தை மட்டுமே நடத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பசி எடுக்க ஆரம்பித்து விடவே,“சாப்பிடலாமா?” என்று வினவினார் பிரியரஞ்சன்.

“ஆமாம் சம்பந்தி. எங்களுக்கும் ரொம்ப பசிக்குது” என்றார் சந்திரதேவ்.

உடனே, சாப்பாட்டு மேஜையின் நாற்காலிகளில் புதுமணத் தம்பதியை ஒன்றாக அமர வைத்து விட்டு, சந்திரதேவ்வைத் தன் கணவனுடன் அமர வைத்து விட்டு, ருத்ராக்ஷியைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.

அவர் கூறியதைப் போல, மகள் மற்றும் மருமகனின் விருப்ப உணவுகளைச் செய்து அசத்தி இருந்தார் கனகரூபிணி.

“எனக்குப் பிடிச்சதையும் சமைச்சு வச்சதுக்குத் தாங்க்ஸ் அத்தை” என அவருக்கு நன்றி கூறியபடியே உணவுண்டான் காஷ்மீரன்.

“இருக்கட்டும் மாப்பிள்ளை. நல்லா சாப்பிடுங்க” என்று அவனுக்குப் பரிமாறி விட்டுத் தானும் உண்டார்.

“இதே மாதிரி தானே நாங்களும் விருந்து கொடுக்கனும் சம்பந்தி?” எனப் பிரியரஞ்சனிடம் வினவினார் சந்திரதேவ்.

“அட ஆமாங்க சம்பந்தி” என்று முந்திக் கொண்டு பதிலளித்தார் கனகரூபிணி.

அனைவருக்கும் முன்பாகவே உண்டு முடித்து இருந்தாள் ருத்ராக்ஷி.

“நீ வேணும்னா என் ரூமில் போய் ரெஸ்ட் எடு” என்று அவளிடம் கூறினாள் மஹாபத்ரா.

“பரவாயில்லை அண்ணி” என அவர்களுடனேயே அமர்ந்து கொண்டாள்.

அதன் பின்னர், எல்லாரும் சாப்பிட்டு முடித்து உட்கார்ந்தனர்.

தன் மகளை அவளது அறைக்குத் தனியாக அழைத்துச் சென்று,”இந்தச் சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் அவங்களுக்குத் தெரியாது தான் மஹா! அதையெல்லாம் உன் புகுந்த வீட்டு ஆளுங்களுக்கு நான் சொல்லித் தர்றேன்” என்று அவளிடம் கூறினார் கனகரூபிணி.

“இன்னும் என்னென்ன இருக்கு ம்மா?” என்று அவரிடம் சோர்வுடன் கேட்டாள் மஹாபத்ரா.

“இதுக்குப்புறம் தாலிப் பிரிச்சுக் கோர்க்கிறது, தலை தீபாவளின்னு உனக்குக் குழந்தை பிறக்குற வரைக்கும் எல்லாம் உங்களுக்குப் பண்ணனும். அதுக்குப் பிறகு, உங்க ரெண்டு பேருக்கும் பிறக்கப் போற குழந்தைக்குச் செய்யனும்!” என்று விளக்கிச் சொன்னார் அவளது அன்னை.

“ஹைய்யோ! இவ்வளவு இருக்கா ம்மா?” எனக் கண்களை விரித்துக் கொண்டு மொழிந்தாள் அவருடைய மகள்.

“ஆமாம் டி. அது தான் நான் இவ்வளவு பிரஷர் ஆகுறேன்! எங்களுக்கு இருக்கிறது நீ ஒரே பொண்ணு தானே? உனக்கு எல்லாத்தையும் முறையாகச் செய்யனும்ல?” என்று அதையே கூறி அவளது மனதைக் கரைத்தார் கனகரூபிணி.

“எனக்குப் புரியுது ம்மா. ஆனால் இதனால் யாரோட மனசும் கஷ்டப்படாமல் பாத்துக்கோங்க” என்று அவருக்கு அறிவுறுத்தினாள் மஹாபத்ரா.

“இதில் கஷ்டப்பட என்ன இருக்குடி? எல்லாமே சுப காரியம் தானே? நீ எதுவும் நினைச்சுக்காத” என்று மகளிடம் தெரிவித்து விட்டார் அவளது தாய்.

தன் பிறந்த வீட்டில் சில மணி நேரங்கள் வசதியாக இருந்து விட்டு இப்போது தனது புகுந்த வீட்டாருடன் அவர்களது இல்லத்தை அடைந்தாள் மஹாபத்ரா.

தன்னுடையதைப் போலவே தொழில் நடத்திக் கொண்டு இருக்கும் ஒரு தொழிலதிபரிடம் இருந்து சந்திரதேவ்விற்கு அழைப்பு வந்தது.

“ஹலோ சார்? எப்படி இருக்கீங்க?” என்றார்.

“நல்லா இருக்கேன் சார். நீங்களும், ஃபேமிலியும் நல்லா இருக்கீங்களா?” எனத் தானும் விசாரித்தார்.

“எல்லாரும் ஃபைன் சார். உங்ககிட்ட ஒன்னுக் கேட்கனும்” என்று ஆரம்பித்தார்.

“சொல்லுங்க விதார்த் சார்?” என்று அவரிடம் கேட்டார் சந்திரதேவ்.

“என் பையன் சஸ்வினை உங்களுக்குத் தெரியும் தான?” என்று வினவவும்,

“நல்லா தெரியுமே”

“அவனுக்கு உங்கப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சுத் தர சம்மதமா சந்திரதேவ் சார்?” என்று அவர் அவ்வாறு கேட்டதும், அவருக்குச் சங்கடமாகிப் போனது.

“அது வந்து சார். என் பொண்ணுக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற ஐடியா இல்லையே!” என்று அவரிடம் தயக்கத்துடன் கூறினார் சந்திரதேவ்.

“ஓஹ்… எப்போ கல்யாணத்தை முடிக்கப் பார்க்கிறீங்க?” என்று கேட்டார் விதார்த்.

“அதை இன்னும் முடிவு பண்ணலை சார்” என்று பதில் உரைத்தார் ருத்ராக்ஷியின் தந்தை.

“சரிங்க சார்” என அவரோ வைத்து விட, இதை நேரடியாகவே தன் மகளிடம் பகிர்ந்து கொள்ளவும்,

அந்த நிமிடத்தில் அவளுக்கு ஸ்வரூபனின் முகம் தான் மனதிற்குள் வந்து போனது.

“பையன் பேர் சஸ்வின். உன்கிட்ட கேட்காமல் வார்த்தையை விட்டுடக் கூடாதுன்னு அவர்கிட்ட எதுவுமே சொல்லலை டா!” என்று மகளை ஆழம் பார்த்தார் சந்திரதேவ்.

“ஆங்! எனக்குக் கொஞ்சம் டைம் தாங்க ப்பா” என்று தயங்கியவாறே சொன்னாள் ருத்ராக்ஷி.

“நீ யோசிச்சு தெளிவான முடிவு எடுக்கிற வரைக்கும் நான் மேற்படி எதுவும் செய்யப் போறதில்லை ம்மா” என அவளுக்கு உறுதி அளித்தார் தந்தை.

“தாங்க்ஸ் ப்பா” என்றவளோ, ஊருக்குச் சென்றதும், அங்கே தனக்கு ஏற்படும் அனுபவங்களை வைத்து ஒரு முடிவிற்கு வர எண்ணினாள் ருத்ராக்ஷி.

அஃது போல, தன் வீட்டில் நடைபெற்ற தமையனுக்கும், அண்ணிக்குமான மறு வீட்டு விருந்தில் கலந்து கொண்டு அதை
ச் சிறப்பித்து விட்டுத் தான் தங்கியிருக்கும் ஊருக்குச் செல்லத் திண்ணமாக இருந்தாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
Last edited:
அம்மா கனகரூபிணி நீங்களும் உங்க பொண்ணு, மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கல. அதற்காகவே நானு இந்த எபிய கவனிச்சு படித்தேன் 🤔🤔🤔🤔🤔
 
அம்மா கனகரூபிணி நீங்களும் உங்க பொண்ணு, மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கல. அதற்காகவே நானு இந்த எபிய கவனிச்சு படித்தேன் 🤔🤔🤔🤔🤔
Avanga marakala sis. Na dha marandhute... Add panidre ..Thank you so much ❤️🤩
 
Top