Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 4

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அதேபோல, வருங்கால மாப்பிள்ளையான காஷ்மீரனின் கரத்திலும், அவனுக்காக தேர்ந்தெடுத்து வைத்திருந்தப் பெண்ணின் புகைப்படம் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதைக் கண்ணுற்றவனோ, மஹாபத்ராவின், பூரண நிலவைப் போன்ற, வதனத்தை, ரசனையோடு ஆராய்ந்து விட்டு, அவளது வேலையைப் பற்றியும் அலசியவன்,

அதிலும், திருப்தி அடைந்து விடவே, இப்போது திருமணம் செய்து கொள்ளும், ஆர்வம் இல்லாவிட்டாலும், தந்தை மற்றும் சகோதரிக்காக அந்தப் பந்தத்தில் நுழைய முடிவெடுத்தான் காஷ்மீரன்.

மஹாபத்ராவிற்குமே அதே எண்ணம் தான், இருவரது சிந்தனைகளும் ஒரே மாதிரியானதாக இருக்க, அவனைக் கண்டு, பேசிப் பார்த்து, விருப்பு, வெறுப்புகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையும், பரிதவிப்பும், ஏனோ முழுமையடையவே இல்லை.

ஆனாலும், கண்ணைக் கட்டிக் கொண்டு, கல்யாணத்தில் அமர்வதை விட, அவனைப் பற்றி தெரிந்து கொண்டு, முழு மனதுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மூளைக் கட்டளையிடவே, காஷ்மீரனுடைய தனிப்பட்ட செல்பேசி எண் அவளிடம் தரப்பட்டது.

எனவே, அவனுக்கு உடனடியாக அழைத்துப் பேச நினைத்தவளுக்கு, அவனிடமிருந்து அழைப்பு வரவும், தூக்கி வாரிப் போட்டது. இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை மஹாபத்ரா.

இவளுடைய புகைப்படத்தைத் தன்னிடம் கொடுத்தது முதல், அவனுக்கு, பெண்ணவளின் குரலையும் கேட்கத் தோணிற்று.

எனவே, மஹாபத்ராவின் அலைபேசி எண்ணைத் தந்தையிடமிருந்து பெற்று அவளுக்கு அழைத்தும் விட்டான் காஷ்மீரன்.

திடீரென, தான் அவளுக்கு அழைக்கவும், பீதியடைந்து விட்டால் போலும் என்றெண்ணியவன்,”ஹேய் ரிலாக்ஸ் ம்மா! உன் ஃபோட்டோவை இப்போ தான் பார்த்தேன். பேசனும்னு தோனுச்சு. அதான், கால் பண்ணேன்” என்று அவளை இலகுவாக்க முயன்றான்.

மஹாபத்ராவோ, தன் இதயம் இருக்கும் பகுதியை நீவி விட்டுக் கொண்டு,”ஓஹ்… நானும் உங்ககிட்டப் பேசனும்னு நினைச்சிட்டு இருந்தேன். அதே மாதிரி திடீர்னு நீங்க கூப்பிடவும், திக்குன்னு ஆகிடுச்சு!” என அவனுக்கு விளக்கினாள்.

“சரி சரிம்மா. நோ இஷ்யூஸ்! நீ என்னப் பேசனும்னு கால் செஞ்சியோ, அதை என்கிட்ட ஷேர் பண்ணு” என்று அவளை முதலில் பேசத் தூண்டினான் காஷ்மீரன்.

“பரவாயில்லை. நீங்களே சொல்லுங்க! நான் அடுத்து சொல்றேன்” என்று அவனுக்கு விட்டுக் கொடுத்தாள் மஹாபத்ரா.

“பொண்ணுப் பார்க்கிற வரை வெயிட் பண்ணாமல், உன் கூட இன்ட்ரோ ஆகனும்னு ஆசை. அதான். வேற ஒன்னும் இல்லை. நீ சொல்லு” என்று அவளை உந்தவும்,

அவனது சாதாரணமானப் பேச்சு, இவளுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது.

அதனால், “நான் உங்களைப் பத்தி, தெரிஞ்சுக்கனும்னு கால் செஞ்சேன்” என்றாள்.

“தெரிஞ்சுக்கனும்னா?” என்று வினவினான் காஷ்மீரன்.

“உங்களோட பிடிச்சப், பிடிக்காத விஷயங்கள் எல்லாம்!” என்று பதிலளித்தாள் மஹாபத்ரா.

“அதை நான் நேரில் சொல்லவா?” என்கவும்,

“சரிங்க” என்றாள்.

“இதான் என் நம்பர், உன்னோடதை நான் சேவ் பண்ணிக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான் காஷ்மீரன்.

இவனிடம் பேசியதை தாயிடம் கூறி விட்டாள் மஹாபத்ரா.

“சரி… பொண்ணுப் பார்க்க வர்றப்போ, எந்தக், குழப்பமும் இல்லாமல், நீ நிதானமாக இருக்கலாம்” என்றுரைத்தார் அவளது அன்னை கனகரூபிணி.

அது மட்டுமில்லாமல், காஷ்மீரனை நேரில் சந்திக்கப் போவதாகவும் தந்தை மற்றும் தாயிடம் கூறினாள் மகள்.

இந்தக் காலகட்டத்தில், இதெல்லாம் சகஜம் என்பதால்,“எங்கே, எப்போ மீட் பண்ணப் போறீங்கன்னு எனக்கும், அப்பாவுக்கும் சொல்லிடுங்க” என்று அவளுக்கு வலியுறுத்தினார் கனகரூபிணி.

“ஆமாம் டா. நீங்கப் பார்த்துப், பேசி முடிச்சு வந்ததும் தான், நாங்கப் பொண்ணுப் பார்க்கிற தேதியையே குறிப்போம்” என்று முடிவாக கூறி விட்டார் அவளது தந்தை பிரியரஞ்சன்.

அதே போல, தன்னுடைய அப்பாவிடமும் இதைப் பகிர்ந்திருந்தான் காஷ்மீரன்.

அதற்குச் சந்திரதேவ்வும் சம்மதித்து விட்டார்.

இருவருக்குமே தோதாக அமைந்த நாள் மற்றும் இடத்தை தெரிவு செய்து கொண்டார்கள்.

அதற்கிடையில், பள்ளியில், தன்னுடைய குழுவுடன் அமர்ந்திருந்த மஹாபத்ராவோ,”ஸ்ரீகாந்த்தோட ரிப்போர்ட் மட்டும் மிஸ் ஆகுது நவ்யா” என்றாள்.

அந்தப் பெண்ணும் மஹாபத்ரா இருக்கும் குழுவுடன் சேர்ந்து வேலை செய்பவள் தான்!

அந்த வார நாட்களில், பரிசோதனை செய்யப்பட்ட மாணவ, மாணவியருடைய நலக் குறிப்புகளை ஒரு கோப்பில் அடுக்கி வைக்கும் வேலையைப் பார்த்தவள், அதைக் கணினியிலும் சேகரித்து வைக்க வேண்டும்.

எனவே, தாங்கள் இறுதியாக, பரிசோதித்த மாணவன் ஸ்ரீகாந்த்தின் குறிப்பு அடங்கிய தாள் மட்டும், அவளுக்குப் புலப்படவில்லை. அதைத் தான், சக ஊழியரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள் மஹாபத்ரா.

“என்னோட டேபிள் டிராயரில் இருக்கான்னுப் பாக்குறேன்” எனத், தன்னுடைய மேஜை அலமாரியைச் சாவி கொண்டு திறந்து, தேடிப் பார்க்க,
அந்தக் குறிப்புத் தாளும், அங்கே தான் இருந்தது. அதை எடுத்து, அவளிடம் சேர்ப்பித்தாள் நவ்யா.

“தாங்க்ஸ்” எனத் தாளைப் பெற்றுக் கொண்டு, கோப்பின் உள்ளே சொருகினாள் மஹாபத்ரா.

“இவனோட மெடிக்கல் ரிப்போர்ட் இன்னும் வரலை மஹா?” என்றாள் நவ்யா.

“நேத்தே கொண்டு வந்து கொடுக்குறோம்னு அவனோட பேரன்ட்ஸ் சொன்னாங்களே?” என வினவியவாறே, மற்றைய தோழியிடம்,

“உங்கிட்ட இருக்காப் பாரு?” என்றாள் மஹாபத்ரா.

தீப்தியோ,”ஊஹூம். நான் காலையிலேயே எல்லாத்தையும் செக் பண்ணிட்டேன். என்கிட்ட இல்லை” என்று கூறி விட்டாள்.

“அப்போ அவனோட கிளாஸ் இன்சார்ஜ் கிட்ட தான் கேட்கனும்” என ஸ்ரீகாந்த்தின் வகுப்பாசிரியருக்கு அழைத்து அவனுடைய மருத்துவப் பரிசோதனை அறிக்கையைப் பற்றிக் கேட்டாள் மஹாபத்ரா.

இவர்களது குழு மேற்தளத்தை தங்களது பணிக்காக தேர்ந்தெடுத்து இருந்தனர். அதன், கீழ்தளத்தில் இருக்கும் வகுப்பறையில் தான், அவர் ஆசிரியராக இருக்கிறார்.

இப்போது இடைவேளை நேரம் என்பதால், அந்த அழைப்பை ஏற்றவர்,

“அவங்கப் பேரன்ட்ஸ் மார்னிங் வந்து அதைக் கொடுக்கலை மிஸ். மஹாபத்ரா மேடம்” என்றுரைத்தார் ஸ்ரீகாந்த்தின் வகுப்பாசிரியை.

“ஓஹ் சரி. கால் பண்ணி இன்ஃபார்ம் பண்ணிட்டு, நாளைக்குக் கொண்டு வந்தா, வாங்கி வைங்க மேடம்” என்று அவரிடம் கூறியவள்,

அதை மற்றவர்களிடம் தெரிவித்து விட்டுக், குறிப்புத் தாள்களில் இருந்தவற்றைக் கணிணியில் பதிவிட ஆரம்பித்து விட்டாள் மஹாபத்ரா.
_______________________

“ம்மா! சாப்பிட்டீங்களா?” என்று வீட்டினுள் வந்தான் ஸ்வரூபன்.

அவனது அன்னை கவிபாரதியோ,”இல்லை ப்பா, இப்போ தான், சாதம் வைக்கிறேன்” என்று மகனிடம் கூறினார்.

“அப்போ எனக்கும் சேர்த்து வச்சிருப்பீங்க தான?” என்று கேட்டவாறே அவரருகே அமர்ந்தான் மகன்.

“ஆமாம். நீ வீட்டுக்கு வர்ற நேரம் தான் - னு சாப்பாடு வச்சிட்டேன்” என்று புன்னகைத்தனர் கவிபாரதி.

நடுத்தர குடும்பமான அவர்களுடைய வீட்டில், அத்தியாவசியமானப் பொருட்கள் போதுமானதாகவே இருந்தது.

கணவனை இழந்த கவிபாரதிக்கும், தகப்பனை இழந்த ஸ்வரூபனுக்கும், பரம்பரை நிலம் ஒன்று இருந்தது. அதில் தான், விவசாயம் பார்த்து, வீட்டிற்குத் தேவையானவற்றைச் செய்து கொள்கிறார்கள் அன்னையும், மகனும்.

தாயை வயலுக்கு வர வேண்டுமென, சொல்லி, அவரை வீட்டிலேயே இருக்க வலியுறுத்தி உள்ளான் ஸ்வரூபன்.

ஏனெனில், தந்தை இறந்த பிறகு, அன்னை தளர்ந்து விட்டார் என்பதை அறிந்திருந்தான் மகன்.

அதனால் தான், கவிபாரதியை, நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறான் ஸ்வரூபன்.

அவர்கள் வீட்டில் விறகு அடுப்பு இல்லை, கேஸ் அடுப்பு இருந்தது. ஒவ்வொரு வருட விளைச்சலின் போதும், வீட்டிற்குத் தேவையான ஏதாவது ஒரு பொருளை தாயும், மகனும் வாங்கி விடுவார்கள்.

இந்த வருடத்தில், வந்தப் பணத்தில், இருவரும் வெளியூருக்குச் சென்று, துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

“சாப்பிடலாம், வா ப்பா” என மகனை அழைத்து விட்டு, அவருக்கும் தட்டு எடுத்து வைத்து, இருவருக்கும் பரிமாறிக் கொண்டார் கவிபாரதி.

அவர்கள் உணவுண்ணும் போதே, மெதுவாகப் பேச்சைத் தொடங்கியவர்,

அந்த லைப்ரரியில் வேலைப் பார்க்கிற ருத்ராக்ஷி பொண்ணு, வீட்டிலேயே மெழுகுவர்த்தி செஞ்சு வித்துட்டு இருக்காளாம் ப்பா! விதவிதமாக, பார்க்கவே அழகாக இருக்கு! ஊரே அங்கே தான் மெழுகுத்திரி வாங்குறாங்க. நமக்கும் கொஞ்சம் வாங்குவோமா? அது அத்தியாவசியம் தான? கரண்ட் போனா, பயன்படும்ல?” என்று மகனிடம் கூறினார் அன்னை.

அவ்வூர் நூலகத்தில் வேலை செய்யும் ருத்ராக்ஷி என்னும் பெண்ணைப் பற்றி தெரிந்தும், ஒரு சில சமயங்களில், பார்த்தும் இருக்கிறான் ஸ்வரூபன்.

அவளுடைய சுயதொழில் பற்றியும் தாய் மூலம் அறிந்திருந்தவன், இன்று வரை, அவளிடம் மெழுகுவர்த்திகள் வாங்கியதில்லை.

இப்போது, அன்னை கேட்கவும், அவனுக்குச் சம்மதிக்கவே தோன்றியது.

“சரிம்மா.கொஞ்சமாகவே வாங்குங்க. பயன்படுத்திப் பாத்துட்டு, அடுத்து வாங்கலாம்” என்று கவிபாரதியிடம் கூறி விட்டான் ஸ்வரூபன்.

- தொடரும்
 
Super 👍
 
காஷ்மீரன் மஹாபத்ரா இரண்டு பேருக்கும் கல்யாண விஷயத்தில் ஒரு மாதிரி தான் நினைக்குறாங்க 😃😃😃😃😃

ஸ்வரூபன் தான் ருத்ராவுக்கு ஜோடியா 🧐🧐🧐🧐🧐🧐
 
Ama sis. Avan dhan Jodi. Thank you so much ❤️
 
Top