Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 2

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தன்னுடைய நெருங்கிய சொந்தமான ஒருவருடைய இன்னொரு வீட்டில் தான், வாடகைக்குக் குடியிருக்கிறாள் ருத்ராக்ஷி.

அந்த வீட்டிற்கானச் சொந்தக்காரப் பெண் மிருதுளா என்பவரோ, இவளுக்காக மட்டுமே அதை வாடகைக்கு விட்டு இருந்தார்.

"உனக்கு ஏதுவான வாடகையைக் கொடு ம்மா. போதும்" என்றார் அவளிடம்.

அது மட்டுமின்றி, தேவையில்லாமல், மேலே சென்று பார்ப்பது என ருத்ராக்ஷியைத் தொந்தரவு செய்யாமல், அவளது போக்கில் அங்கே தங்க அனுமதித்தார்.

அதே மாதிரி மிருதுளாவிடம்,எதையும் எதிர்பார்க்காமல் பழகுவாள். அந்த வீட்டிலும், தனது வேலையிலும், எவ்வித சங்கடமும் சூழாமல், இரண்டையும் திறமையாக கையாள்கிறாள் ருத்ராக்ஷி.

நூலகத்தில் தான் அவளுக்கு வேலை. அங்கேயிருக்கும் புத்தகங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும், கணிணியிலும், தனது மூளையிலும் சரியாகச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். அதன் மூலம், அங்கு வரும் வாசகர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு ருத்ராக்ஷியுடையது தான்.

அதற்காகப் பொருத்தமான சம்பளமும், அவ்வூரில் நல்லப் பெயரும் கிடைத்திருந்தது அவளுக்கு.

அவள் தன் வீட்டின் பூட்டைத் திறந்ததும்,"குட் ஈவினிங் ருத்ரா!" என்று அவளுக்கு வணக்கம் வைத்தார் மிருதுளா.

"குட் ஈவினிங் அக்கா" என்று மென்னகையுடன் கூறினாள் ருத்ராக்ஷி.

"உங்க அண்ணன் கூடப் பேசிட்டியா?"

"இல்லை க்கா. இனிமேல் தான், ஃப்ரெஷ் ஆகிட்டு, அவருக்குக் கால் பண்ணனும்" என்றாள்.

"ஓகே. நீ அவங்க கூடப் பேசிட்டு வா" என்று தன் வீட்டினுள் போனார் மிருதுளா.

தனது அலைபேசியில், தமையனின் எண்ணுக்கு அழைத்தாள் ருத்ராக்ஷி.

"ஹாய் டா ருத்ரா" என்று உற்சாகமாகப் பேசினான் அவளுடைய பாசமிகு அண்ணன்.

"வொர்க் முடிஞ்சிருச்சா ண்ணா?"

"முடிஞ்சி வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன் டா" என்றான்.

"நானும் இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்" என்று கூறினாள் ருத்ராக்ஷி.

"காஃபி எதுவும் குடிக்காம அப்படியே கால் பண்ணிட்டியா?" என்று வினவினான்.

"இல்லை ண்ணா. முகம் கழுவி, காஃபி குடிச்சிட்டுத் தான் பேசறேன்" என விடையளித்தாள் அவனது தங்கை.

"சரிடா ம்மா. லாஸ்ட் டைம் அனுப்பிய உன்னோட ஃபோட்டோஸைப் பார்த்துட்டு, நீ இன்னும் ஒல்லியாகிட்டன்னு ஃபீல் செய்றாருடா"

"நான் நல்லா தான் ண்ணா சாப்பிடறேன். இனிமேல் இன்னும் கவனமாகப் பாத்துக்கிறேன்" என்று சாமாதானமாகப் பேசினாள் ருத்ராக்ஷி.

"ம்ம்… குட்"

"அப்பா எப்படி இருக்கார் ண்ணா?" என்று தந்தையைப் பற்றி விசாரித்தாள்.

"அவர் நல்லா இருக்கார். உன்னோட ஹெல்த்தைப் பாத்துக்கச் சொன்னார். நீ அவருக்கும் கால் செய்து பேசுடா" என்று அறிவுரை செய்தான்.

"ஷ்யூர் ண்ணா" என்றவள்,

"உன்னோட கல்யாண விஷயம் என்னாச்சு?" என்று குறுஞ்சிரிப்புடன் தமையனிடம் கேட்கிறாள் ருத்ராக்ஷி.

"ஹாஹா… பொண்ணோட ஃபோட்டோ இன்னும் தரகர் கொடுக்கலை போல! அப்பா எதுவும் சொல்லாமல், பிஸினஸைப் பத்தி மட்டும் கேட்டார்" என்றான் அவளது அண்ணன்.

"அதையும், அவர்கிட்ட நான் விசாரிக்கனும் ண்ணா" என்று கூறினாள்.

"நீ உன் பங்குக்கு எதுவும் சொல்லிடாதேடா" என்று தங்கையை எச்சரித்தான்.

"பொண்ணுப் பார்த்தாச்சா? ஃபோட்டோ இருந்தால் அனுப்பி விடுங்கன்னு தான் கேட்கப் போறேன் ண்ணா" என்று அவனிடம் விளக்கினாள் ருத்ராக்ஷி.

"நானும் கல்யாணம் வேணாம்னு மறுத்தாலும், அப்பா விட மாட்டேங்குறார் டா" எனக் கூறிக் கொண்டே வீட்டிற்குள் வந்தான்.

"ம்ஹ்ம்… எனக்கும், உங்களுக்கும் ஓரே நேரத்தில் கல்யாணம் செய்து வைக்கப் பிளான் போட்டு இருக்கார் ண்ணா. இந்நேரம், நான் அங்கே இருந்திருந்தால், எனக்குத் தான், வலை வீசி, மாப்பிள்ளையைத் தேடி இருப்பார்" என்று கூறிச் சிரித்தாள்.

"நான் சிக்கிட்டேனே!" என்று இவனும் புன்னகைத்தான்.

"ஹாஹா! ஆமாம்.வீட்டுக்குப் போயிட்டீங்களா ண்ணா?" என்று கேட்டாள் ருத்ராக்ஷி.

"யெஸ் டா. வந்துட்டேன். அப்பாவோட ரூமுக்குப் போகனும்" என்றான் அவன்.

"சரி ண்ணா. நீங்க அவரைப் பாத்துக்கோங்க. உங்க கல்யாணம் ஃபிக்ஸ் ஆச்சுன்னா, எனக்கு அண்ணியோட ஃபோட்டோவை அனுப்பி விடுங்க" என்ற கோரிக்கையுடன் அழைப்பை வைத்தாள் ருத்ராக்ஷி.

அவள் அழைப்பைத் துண்டித்ததும், தனது அறைக்குப் போய், உடம்பு கழுவி, உடை மாற்றி விட்டு, தந்தையின் அறைக்குச் சென்றான் காஷ்மீரன்.

ஆம்! அவனுடைய தங்கை தான் ருத்ராக்ஷி. நகரத்து வாழ்க்கை வேண்டாமென, சிறு ஊர் ஒன்றுக்குப் போய், அங்கே அமைதியாக வாழ்ந்து வருகிறாள்.

தனது அண்ணனுடன் பேசி முடித்ததும்,
மிருதுளாவிடம் சென்று,"நான் என் அண்ணா கூடப் பேசிட்டேன் க்கா. நீங்க அப்போவே கூப்பிட்டீங்களே?" என்று அவரிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

"ம்ஹ்ம். அவர் வர லேட்டாகும் மா. அதான், உங்கூட பேசலாம்னுக் கூப்பிட்டேன். நீ ஃப்ரீயா இருக்கியா? இல்லை, வேலை இருக்காடா?" என்று விசாரித்தார் மிருதுளா.

"இல்லை க்கா. வாங்க பேசலாம்" என அவருடன் அன்றைய நாளில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டாள்.

மிருதுளா,"உங்க அண்ணனுக்குப் பொண்ணுப் பாக்கிறதாகச் சொன்னியே? அது என்னாச்சு?" என்று அவர் தனது அண்ணனைப் பற்றிக் கேட்டதும்,

"நான் இன்னும் அதைப் பத்தி விசாரிக்கலை க்கா" என்று கத்தரித்து விட்டாள் ருத்ராக்ஷி.

"ஓஹ் சரிடா" என்றார் மிருதுளா.

அவரிடம் நன்றாக முகம் கொடுத்துப் பேசினாலும், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி தகவல் கூற மாட்டாள். அண்ணனின் திருமணத்தைப் பற்றியும் கூறவில்லை தான். ஆனால், இவள் அவனுடன் செல்பேசியில் உரையாடிக் கொண்டு இருந்தப் போது, யதேச்சையாக அவர் கேட்டு விட்டார் போலும்! அதனால் தான், இவளிடம் துருவிக் கேட்டுப் பார்த்தார் மிருதுளா. அதற்குப் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அவளை வேவு பார்க்கவில்லை என்றாலும், இப்படியான விஷயங்களைக் கேட்பதில், மிருதுளாவிற்கு ஆர்வம் அதிகம்.

ஆனால், அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் பொதுவானவற்றை மற்றும் பேசி ஒதுங்கிப் போய் விடுவாள்.

அன்றாட வேலைகளைப் பார்த்தபடி, தானும், தன் அண்ணன் மற்றும் தந்தையும் ஒன்றாக, சந்தோஷமாக வாழ்ந்த காலங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். அவளுக்குக் காயங்கள் கொண்ட கடந்த காலம் எல்லாம் இல்லை. மன அமைதியைத் தேடியே, இவ்வூருக்கு வந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் ருத்ராக்ஷி.

அங்கேயிருந்த வரை, அவளுக்குச் சொல்லிக் கொள்ளும் படி தோழிகளும் அமையவில்லை.

இந்த ஊரில் தான் இவளுக்கான மணாளன் கிடைக்கப் போகிறான் என்பதை அறிந்திருந்தால், இவ்வூரிலேயே காலடி எடுத்து வைத்திருக்க மாட்டாளோ ருத்ராக்ஷி?

- தொடரும்

காஷ்மீரனின் தங்கை தான் ருத்ராக்ஷி. இவர்கள் இருவருக்குமான ஜோடிகள் இன்னும் கதையில் தோன்றவில்லை. நன்றி நண்பர்களே! 💞
 
அண்ணன் தங்கச்சி போன் பேசுனதை பார்க்கும் போதே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துச்சி 🤣🤣🤣🤣🤣🤣 காஷ்மீரன் தான் ருத்ரா அண்ணன் என்று 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் இப்படி பிரிஞ்சி இருக்க என்ன காரணம் 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
ருத்ராக்ஷியோட ஹீரோ சீக்கிரமாக அவளை சந்திக்க வாழ்த்துக்கள் 💐💐
 
அண்ணன் தங்கச்சி போன் பேசுனதை பார்க்கும் போதே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துச்சி 🤣🤣🤣🤣🤣🤣 காஷ்மீரன் தான் ருத்ரா அண்ணன் என்று 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் இப்படி பிரிஞ்சி இருக்க என்ன காரணம் 🤔🤔🤔🤔🤔🤔🤔
Haha ama sis... Rudrakshi ku mind relaxation kaga ipdi vandhu iruka sis... Vera edhuvum specific reason ila... Thank you so much ❤️
 
தன்னுடைய நெருங்கிய சொந்தமான ஒருவருடைய இன்னொரு வீட்டில் தான், வாடகைக்குக் குடியிருக்கிறாள் ருத்ராக்ஷி.

அந்த வீட்டிற்கானச் சொந்தக்காரப் பெண் மிருதுளா என்பவரோ, இவளுக்காக மட்டுமே அதை வாடகைக்கு விட்டு இருந்தார்.

"உனக்கு ஏதுவான வாடகையைக் கொடு ம்மா. போதும்" என்றார் அவளிடம்.

அது மட்டுமின்றி, தேவையில்லாமல், மேலே சென்று பார்ப்பது என ருத்ராக்ஷியைத் தொந்தரவு செய்யாமல், அவளது போக்கில் அங்கே தங்க அனுமதித்தார்.

அதே மாதிரி மிருதுளாவிடம்,எதையும் எதிர்பார்க்காமல் பழகுவாள். அந்த வீட்டிலும், தனது வேலையிலும், எவ்வித சங்கடமும் சூழாமல், இரண்டையும் திறமையாக கையாள்கிறாள் ருத்ராக்ஷி.

நூலகத்தில் தான் அவளுக்கு வேலை. அங்கேயிருக்கும் புத்தகங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும், கணிணியிலும், தனது மூளையிலும் சரியாகச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். அதன் மூலம், அங்கு வரும் வாசகர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு ருத்ராக்ஷியுடையது தான்.

அதற்காகப் பொருத்தமான சம்பளமும், அவ்வூரில் நல்லப் பெயரும் கிடைத்திருந்தது அவளுக்கு.

அவள் தன் வீட்டின் பூட்டைத் திறந்ததும்,"குட் ஈவினிங் ருத்ரா!" என்று அவளுக்கு வணக்கம் வைத்தார் மிருதுளா.

"குட் ஈவினிங் அக்கா" என்று மென்னகையுடன் கூறினாள் ருத்ராக்ஷி.

"உங்க அண்ணன் கூடப் பேசிட்டியா?"

"இல்லை க்கா. இனிமேல் தான், ஃப்ரெஷ் ஆகிட்டு, அவருக்குக் கால் பண்ணனும்" என்றாள்.

"ஓகே. நீ அவங்க கூடப் பேசிட்டு வா" என்று தன் வீட்டினுள் போனார் மிருதுளா.

தனது அலைபேசியில், தமையனின் எண்ணுக்கு அழைத்தாள் ருத்ராக்ஷி.

"ஹாய் டா ருத்ரா" என்று உற்சாகமாகப் பேசினான் அவளுடைய பாசமிகு அண்ணன்.

"வொர்க் முடிஞ்சிருச்சா ண்ணா?"

"முடிஞ்சி வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன் டா" என்றான்.

"நானும் இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்" என்று கூறினாள் ருத்ராக்ஷி.

"காஃபி எதுவும் குடிக்காம அப்படியே கால் பண்ணிட்டியா?" என்று வினவினான்.

"இல்லை ண்ணா. முகம் கழுவி, காஃபி குடிச்சிட்டுத் தான் பேசறேன்" என விடையளித்தாள் அவனது தங்கை.

"சரிடா ம்மா. லாஸ்ட் டைம் அனுப்பிய உன்னோட ஃபோட்டோஸைப் பார்த்துட்டு, நீ இன்னும் ஒல்லியாகிட்டன்னு ஃபீல் செய்றாருடா"

"நான் நல்லா தான் ண்ணா சாப்பிடறேன். இனிமேல் இன்னும் கவனமாகப் பாத்துக்கிறேன்" என்று சாமாதானமாகப் பேசினாள் ருத்ராக்ஷி.

"ம்ம்… குட்"

"அப்பா எப்படி இருக்கார் ண்ணா?" என்று தந்தையைப் பற்றி விசாரித்தாள்.

"அவர் நல்லா இருக்கார். உன்னோட ஹெல்த்தைப் பாத்துக்கச் சொன்னார். நீ அவருக்கும் கால் செய்து பேசுடா" என்று அறிவுரை செய்தான்.

"ஷ்யூர் ண்ணா" என்றவள்,

"உன்னோட கல்யாண விஷயம் என்னாச்சு?" என்று குறுஞ்சிரிப்புடன் தமையனிடம் கேட்கிறாள் ருத்ராக்ஷி.

"ஹாஹா… பொண்ணோட ஃபோட்டோ இன்னும் தரகர் கொடுக்கலை போல! அப்பா எதுவும் சொல்லாமல், பிஸினஸைப் பத்தி மட்டும் கேட்டார்" என்றான் அவளது அண்ணன்.

"அதையும், அவர்கிட்ட நான் விசாரிக்கனும் ண்ணா" என்று கூறினாள்.

"நீ உன் பங்குக்கு எதுவும் சொல்லிடாதேடா" என்று தங்கையை எச்சரித்தான்.

"பொண்ணுப் பார்த்தாச்சா? ஃபோட்டோ இருந்தால் அனுப்பி விடுங்கன்னு தான் கேட்கப் போறேன் ண்ணா" என்று அவனிடம் விளக்கினாள் ருத்ராக்ஷி.

"நானும் கல்யாணம் வேணாம்னு மறுத்தாலும், அப்பா விட மாட்டேங்குறார் டா" எனக் கூறிக் கொண்டே வீட்டிற்குள் வந்தான்.

"ம்ஹ்ம்… எனக்கும், உங்களுக்கும் ஓரே நேரத்தில் கல்யாணம் செய்து வைக்கப் பிளான் போட்டு இருக்கார் ண்ணா. இந்நேரம், நான் அங்கே இருந்திருந்தால், எனக்குத் தான், வலை வீசி, மாப்பிள்ளையைத் தேடி இருப்பார்" என்று கூறிச் சிரித்தாள்.

"நான் சிக்கிட்டேனே!" என்று இவனும் புன்னகைத்தான்.

"ஹாஹா! ஆமாம்.வீட்டுக்குப் போயிட்டீங்களா ண்ணா?" என்று கேட்டாள் ருத்ராக்ஷி.

"யெஸ் டா. வந்துட்டேன். அப்பாவோட ரூமுக்குப் போகனும்" என்றான் அவன்.

"சரி ண்ணா. நீங்க அவரைப் பாத்துக்கோங்க. உங்க கல்யாணம் ஃபிக்ஸ் ஆச்சுன்னா, எனக்கு அண்ணியோட ஃபோட்டோவை அனுப்பி விடுங்க" என்ற கோரிக்கையுடன் அழைப்பை வைத்தாள் ருத்ராக்ஷி.

அவள் அழைப்பைத் துண்டித்ததும், தனது அறைக்குப் போய், உடம்பு கழுவி, உடை மாற்றி விட்டு, தந்தையின் அறைக்குச் சென்றான் காஷ்மீரன்.

ஆம்! அவனுடைய தங்கை தான் ருத்ராக்ஷி. நகரத்து வாழ்க்கை வேண்டாமென, சிறு ஊர் ஒன்றுக்குப் போய், அங்கே அமைதியாக வாழ்ந்து வருகிறாள்.

தனது அண்ணனுடன் பேசி முடித்ததும்,
மிருதுளாவிடம் சென்று,"நான் என் அண்ணா கூடப் பேசிட்டேன் க்கா. நீங்க அப்போவே கூப்பிட்டீங்களே?" என்று அவரிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

"ம்ஹ்ம். அவர் வர லேட்டாகும் மா. அதான், உங்கூட பேசலாம்னுக் கூப்பிட்டேன். நீ ஃப்ரீயா இருக்கியா? இல்லை, வேலை இருக்காடா?" என்று விசாரித்தார் மிருதுளா.

"இல்லை க்கா. வாங்க பேசலாம்" என அவருடன் அன்றைய நாளில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டாள்.

மிருதுளா,"உங்க அண்ணனுக்குப் பொண்ணுப் பாக்கிறதாகச் சொன்னியே? அது என்னாச்சு?" என்று அவர் தனது அண்ணனைப் பற்றிக் கேட்டதும்,

"நான் இன்னும் அதைப் பத்தி விசாரிக்கலை க்கா" என்று கத்தரித்து விட்டாள் ருத்ராக்ஷி.

"ஓஹ் சரிடா" என்றார் மிருதுளா.

அவரிடம் நன்றாக முகம் கொடுத்துப் பேசினாலும், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி தகவல் கூற மாட்டாள். அண்ணனின் திருமணத்தைப் பற்றியும் கூறவில்லை தான். ஆனால், இவள் அவனுடன் செல்பேசியில் உரையாடிக் கொண்டு இருந்தப் போது, யதேச்சையாக அவர் கேட்டு விட்டார் போலும்! அதனால் தான், இவளிடம் துருவிக் கேட்டுப் பார்த்தார் மிருதுளா. அதற்குப் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அவளை வேவு பார்க்கவில்லை என்றாலும், இப்படியான விஷயங்களைக் கேட்பதில், மிருதுளாவிற்கு ஆர்வம் அதிகம்.

ஆனால், அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் பொதுவானவற்றை மற்றும் பேசி ஒதுங்கிப் போய் விடுவாள்.

அன்றாட வேலைகளைப் பார்த்தபடி, தானும், தன் அண்ணன் மற்றும் தந்தையும் ஒன்றாக, சந்தோஷமாக வாழ்ந்த காலங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். அவளுக்குக் காயங்கள் கொண்ட கடந்த காலம் எல்லாம் இல்லை. மன அமைதியைத் தேடியே, இவ்வூருக்கு வந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் ருத்ராக்ஷி.

அங்கேயிருந்த வரை, அவளுக்குச் சொல்லிக் கொள்ளும் படி தோழிகளும் அமையவில்லை.

இந்த ஊரில் தான் இவளுக்கான மணாளன் கிடைக்கப் போகிறான் என்பதை அறிந்திருந்தால், இவ்வூரிலேயே காலடி எடுத்து வைத்திருக்க மாட்டாளோ ருத்ராக்ஷி?

- தொடரும்

காஷ்மீரனின் தங்கை தான் ருத்ராக்ஷி. இவர்கள் இருவருக்குமான ஜோடிகள் இன்னும் கதையில் தோன்றவில்லை. நன்றி நண்பர்களே! 💞
Very interesting 🤩 nice Starting 👍
 
Top