Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 13

Advertisement

SHALU shalu

Well-known member
Member
உணவுண்டு முடிந்ததும், சிறிது நேரம் அமர்ந்து பேசலானார்கள் மூவரும்.

“அண்ணி ரொம்ப அழகாக இருந்தாங்க ண்ணா!” என்று அவனிடம் கூறினாள் ருத்ராக்ஷி.

அதற்குக் காஷ்மீரனோ,”ஆஹான்! இதை நான் மஹாபத்ரா கிட்டச் சொல்லிடறேன் டா” என்று தங்கையிடம் தெரிவித்தான்.

“நீ வர்றதுக்காகத் தான் காத்துட்டு இருந்தோம் டா. நீ தானே, உங்க அண்ணிக்குப் பூ வச்சு விடனும். அதுக்காகவாவது, இங்கே வந்தியே!” என்று மகளிடம் கூறிப் பெருமூச்செறிந்தார் சந்திரதேவ்.

“நானும் உங்களை மிஸ் பண்ணாமல் இருப்பேன்னு நினைச்சீங்களா அப்பா?” எனத் தந்தையிடம் தன் வருத்தத்தை அவரிடம் வெளிப்படுத்தினாள் ருத்ராக்ஷி.

“அச்சோ! அப்படி நினைக்கலை ம்மா. நீ வர்றதுக்கான சுவிட்சுவேஷன் அமையிறதே இல்லையேன்னு சொன்னேன் டா!” என்று மகளைச் சமாதானப்படுத்தினார் அவளது அப்பா.

“இப்போ இதை எதுக்குப் பேசிக்கிட்டு, நாங்க உன்னோட ரூமை சூப்பராக டெக்கரேட் பண்ணி இருக்கோம் டா. வந்து பாரு” என்று தங்கையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, அவளது அறைக்குப் போனான் காஷ்மீரன்.

அவர்களைக், கனிவுடனும், நிம்மதியுடனும் பார்த்த சந்திரதேவ்விற்கு, மகள் வந்தப் பிறகு தான், இந்த வீட்டிற்கு உயிர்ப்பு வந்தது போல் இருந்தது.

“உனக்குப் பிடிச்சதை எல்லாம் வாங்கி வச்சாச்சு!” என்று அனைத்தையும் ஆசையாக அவளுக்கு எடுத்துக் காண்பித்தான் காஷ்மீரன்.

“அண்ணா! இதையெல்லாம் பார்த்தாலே, ரொம்ப மன அமைதி கிடைக்குது” என்று அவளுடைய பிடித்தங்களைப் பார்த்துப் பார்த்து வாங்கிய தமையனைப் பாசத்துடன் ஏறிட்டுக் கூறினாள் ருத்ராக்ஷி.

“அதனால் தான் வாங்கி வச்சேன் டா” என்றுரைத்தான் அவளது அண்ணன்.

“எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு ண்ணா! இதெல்லாம் எப்பவும் இப்படியே இருக்கட்டும். நான் வரும் போதெல்லாம் எல்லாத்தையும் யூஸ் பண்ணிக்கிறேன்” என்று அவனிடம் கூறி விட்டாள் தமக்கை.

“உன் இஷ்டம் போல செய் ம்மா” என்றான் காஷ்மீரன்.

அப்போது, மஹாபத்ராவிடமிருந்து, அவனுக்குக் குறுந்தகவல் வந்தது.

அதில், இவனது தங்கைக்கு என்னப் பிடிக்கும் என்று வினவி இருந்தாள்.

மெழுகுவர்த்திகளைச் செய்வது, சமைப்பது மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் இவையெல்லாம் ருத்ராக்ஷிக்குப் பிடிக்கும் என்று பட்டியலிட்டுத் தன் வருங்கால மனைவிக்கு அனுப்பி வைத்தான் காஷ்மீரன்.

அதைக் கண்டதும், தன் அன்னையிடம் சொல்லி விட்டு, அவளுக்கானப் பரிசை, கடைக்குப் போய், வாங்கி வந்து வைத்து விட்டாள் மஹாபத்ரா.

அன்றைய இரவு நேரத்தில்,“அப்பா, அண்ணா! டிராவல் பண்ணி வந்தது ரொம்பவே டயர்ட் ஆக இருக்கு! நான் போய்க் தூங்கவா?” என்றவள், தந்தையிடமும் அதையே கூறிக் கேட்டாள் ருத்ராக்ஷி.

“சரிடா. வேலையாட்களும் வீட்டுக்குப் போயிட்டாங்க. உனக்கு ஏதாவது வேணும்னா, எங்களை வந்து எழுப்பு. காலையில் பேசலாம்” என்று மகள் உறங்குவதற்கு அனுமதி அளித்தார் சந்திரதேவ்.

தங்கைக்கு விடை கொடுத்து விட்டுத் தானும் நித்திரை கொள்ளப் போனான் காஷ்மீரன்.

தன் மனம் கவர்ந்தவள், இப்போது, தன்னை விட்டு வெகு தூரம் சென்றதை, ஏற்க இயலாமல், உறக்கம் பிடிக்காமல், தவித்துக் கொண்டு இருந்தவன்,‘உன் மேல் எனக்குக் காதல் துளிர்க்கும் சமயத்தில் தான், என்னை விட்டுப் பிரிந்து சென்று செல்வாயா?’ எனச் சோகமாக நினைத்துக் கொண்டு, ருத்ராக்ஷியின் புகைப்படம் கூடத், தன்னிடம் இல்லை என்பதை நினைத்து நொந்து போனான் ஸ்வரூபன்.

இத்தனைக்கும், தன்னுடைய, இந்த உணர்வுகளையும், வருத்தத்தையும், தனது தாயான கவிபாரதிக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டவன்,

எத்தனை நாட்கள், ருத்ராக்ஷி அங்குத் தங்குவாள் என்பதெல்லாம் கூட, தனக்குத் தெரியவில்லையே! எனவும், வெதும்பிப் போனான் ஸ்வரூபன்.

இப்படியான ஒரு நினைவில், இவன் சுத்திக் கொண்டிருக்க, தன் அண்ணன் மற்றும் அண்ணியின் பூ வைக்கும் படலத்தைப் பற்றி தந்தையிடம் உரையாடிக் கொண்டு இருந்த போது,

“நாம மட்டும் தானே அங்கேப் போய்ப் பொண்ணைப் பார்த்துட்டுப், பூ வைக்கப் போறோம்?” என அவரிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் டா. நாம மூனு பேரும் மட்டுமே, போயிட்டு வந்துடுவோம்” என்று அவளிடம் கூறினார் சந்திரதேவ்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, ஒரு பையை எடுத்து வந்து,”ருத்ரா ம்மா! இதில், உனக்கு டிசைனர் டிரெஸ்ஸூம், சேலையும் இருக்கு. எதை வேணும்னாலும், ஃபங்க்ஷனுக்குப் போட்டுக்கோ” என்று தங்கையிடம் கொடுத்தான் காஷ்மீரன்.

அதை வாங்கிப் பார்க்க, இரண்டுமே அழகாகவும், நேர்த்தியாகவும் தைக்கப்பட்டு இருந்ததால்,”லவ்லி ண்ணா!” என்று தமையனைப் பாராட்டிப் பேசினாள் ருத்ராக்ஷி.

“உனக்கும், மஹாபத்ராவுக்கும் சேலை டிசைன் பண்ண சொன்னேன் டா‌. இது உன்னோடது. உங்க அண்ணியோடதைப் பாக்குறியா?” என்று அவளிடம் கேட்டான்.

“ஆமாம் ண்ணா. காமிங்க!” என்று ஆவலுடன் கூறினாள்.

“உனக்குப் பிடிச்சக் கலரில் சேலை, அவங்களுக்குப் பிடிச்சா மாதிரி, கலரில் ஒன்னு எடுத்து வச்சேன், இதோ!” என்று அந்தப் புடவையைத் தங்கையிடம் தந்தான் காஷ்மீரன்.

“இதுவும் செம்மயா இருக்கு ண்ணா!” என்று மனதாரக் கூறினாள் ருத்ராக்ஷி.

“நானும் உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு வாங்கி வச்சிருக்கேன்” என மகளிடம் உரைத்து விட்டு, அவளுக்காகச் செய்து வாங்கி வைத்த வைர அட்டிகையைக் கொண்டு வந்து தந்தார் சந்திரதேவ்.

“டைமண்ட் நெக்லஸா அப்பா?!” என்று விழிகளை விரித்து, திகைப்புடன் அதை வாங்கிப் பார்த்தாள் அவருடைய புத்திரி.

மிகச் சிறியதாக இருந்த வெள்ளை வைரக்கற்கள் கொண்டு, மகளின் கழுத்திற்கு அடக்கமான அட்டிகையாகத் தான் தேடிப் பிடித்து வாங்கி வைத்திருந்தார் அவளது தந்தை.

அதைப் போலவே, மருமகளுக்கும் வாங்கியதையும், மகளிடம் காண்பித்தார் சந்திரதேவ்.

“ரெண்டு பேரும் கலக்குறீங்க!” எனத் தந்தை மற்றும் தமையனைப் பாராட்டினாள் ருத்ராக்ஷி.

“பூ வச்சு முடிச்சதுமே, இது ரெண்டையும், நீயே உன் அண்ணி கிட்டக் கொடுத்துருடா” என அவளுக்கு வலியுறுத்தினான் காஷ்மீரன்.

“ஓகே ண்ணா!” என்று அதை ஆனந்தமாக ஏற்றுக் கொண்டாள் தங்கை.

அவள் ஓய்வெடுத்துக் கொள்வதற்காக, அடுத்த நாளை, ஒதுக்கி விட்டு, அதற்கு மறுநாள், பூ வைக்கும் வைபவத்தை நடத்தத் திட்டமிட்டார்கள் இரு வீட்டாரும்.

தங்கள் பக்கத்தில் இருந்து எந்த சொந்தத்தையும் அழைத்து வர மாட்டோம் என்று பெண் வீட்டாரிடம், காஷ்மீரனின் தந்தை, தெரிவித்து இருக்க, அவர்களைப் போலவே, தங்களுடைய சொந்த பந்தம் யாரையும் இந்தச் சடங்கிற்கு அழைக்க வேண்டாமென முடிவெடுத்து விட்டனர் மஹாபத்ராவின் பெற்றோர்.

- தொடரும்
 
ருத்ரா இங்க அண்ணன் கல்யாண வேலையில் பிஸியாக இருக்கா 😂😂😂😂அங்க ஒருத்தன் இவளை நினைச்சு தூக்கம் வராமல் தவிச்சுகிட்டு இருக்கான் 😆😝😝😝😝😝😝
 
ருத்ரா இங்க அண்ணன் கல்யாண வேலையில் பிஸியாக இருக்கா 😂😂😂😂அங்க ஒருத்தன் இவளை நினைச்சு தூக்கம் வராமல் தவிச்சுகிட்டு இருக்கான் 😆😝😝😝😝😝😝
ஹாஹா , மிக்க நன்றி சகி ❤️
 
Top