Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 108

Advertisement

SHALU shalu

Well-known member
Member
மறுநாள் எப்போதும் போல, அனைவரும் கிளம்பித் தாங்கள் வாக்குக் கொடுத்ததைப் போலவே, அவ்வூரில் இருந்து ருத்ராக்ஷியின் திருமணத்திற்கு வரப் போகும் ஒரு சிலருக்குத் துணிமணிகள் எடுத்துத் தருவதற்காக கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது,”சம்பந்தியம்மா, நீங்களும், சம்பந்தியும் வேணும்னா இங்கேயே இருங்களேன். நாங்கப் போய் அவங்களுக்கு டிரெஸ் எடுத்துக் கொடுத்துட்டு வர்றோம்” என்று மஹாபத்ராவின் பெற்றோரிடம் சொல்லிப் பார்த்தார் சந்திரதேவ்.

“அச்சோ! என்னங்க சம்பந்தி இப்படி சொல்லிட்டீங்க? நாங்களும் வந்தால் தான் எங்களுக்கு சந்தோஷமாகவே இருக்கும். அதுவுமில்லாமல் அந்த விஷயத்துக்காகத் தானே நாங்களும் இந்த ஊருக்கு வந்தோம்?” என்று அவரிடம் வினவினார்கள் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன்.

“ஆமாம் மாமா. அவங்களும் நம்மக் கூட வரட்டுமே?” என்றாள் மஹாபத்ரா.

“சரிம்மா. நான் அவங்க ஓய்வெடுக்கட்டும்ன்னு தான் அப்படி சொன்னேன். வேறெதுவும் இல்லை. தப்பா எடுத்துக்காதீங்க!” என்று அவளது பெற்றோரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார் சந்திரதேவ்.

“அப்படியெல்லாம் நினைக்கலை சம்பந்தி. இதை விட்ருங்க” என்று அவரைச் சமாதானம் செய்தார் பிரியரஞ்சன்.

“ஓகே கைஸ்! எல்லாரும் ரெடியா? நான் மாப்பிள்ளைக்குக் கால் பண்ணப் போறேன்” என அவர்களிடம் வினவினான் காஷ்மீரன்.

“கால் பண்ணுங்க அண்ணா” என்று முந்திக் கொண்டு கூறியவளைக் குறும்புடன் பார்த்தாள் மஹாபத்ரா.

“ஹிஹி! லேட் ஆகுதுல்ல அண்ணி? அதான்” என்று கூறித் தன் வெட்கத்தை மறைக்க முயன்றாள் ருத்ராக்ஷி.

“ஓஹ்! சரிம்மா” என அவளைக் கேலிச் செய்து விட்டுத் தன் கணவனிடம், ஸ்வரூபனுக்குச் செல்பேசி அழைப்பு விடுக்குமாறு கூறினாள் காஷ்மீரனின் மனைவி.

அவனும் தங்கள் வீட்டு வருங்கால மாப்பிள்ளைக்குக் கால் செய்து தங்கள் இருப்பிடத்திற்கு வருமாறு அழைக்கவும், அதற்கு மறுமுனையில் ஒப்புதல் வந்து விட்டது போலும்,

எனவே, அழைப்பைத் துண்டித்து விட்டு,”அவங்க ரெண்டு பேரும் ஸ்ட்ரைட் ஆக அங்கே வந்துடறாங்களாம். நாம போகலாமா?” எனத் தன்னுடைய குடும்பத்தினரைப் பார்த்துக் கேட்டான் காஷ்மீரன்.

“போகலாம் ங்க” என்றாள் மஹாபத்ரா.

அப்படியே அனைவரும் கிளம்பி ருத்ராக்ஷி பயிற்சி அளிக்கும் வீட்டிற்குச் செல்லவும், சிறிது நேரத்திலேயே அங்கே கவிபாரதியும், ஸ்வரூபனும் வந்து விட்டிருந்தார்கள்.

“ஹாய்!” என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர்.

“இன்னைக்கு எந்தப் பிரச்சனையும், பேச்சும் வராதுன்னு நம்புவோம்!” என்று தனது கணவரிடம் கூறிக் கொண்டே அங்கே வந்து சேர்ந்தார் மிருதுளா.

“நீங்க இன்னும் இதை விடலையா? எல்லாமே நேத்தே முடிஞ்சு போச்சு க்கா” என அவரிடம் சொல்லி அறிவுறுத்தினாள் ருத்ராக்ஷி.

“ஓகே ம்மா. மத்த எல்லாரும் வரட்டும். நாமக் கடைக்குப் போவோம்” என்றுரைத்து விடவும்,

அந்தச் சமயத்தில், மற்ற அனைவரும் வந்து விட்டனர்.

இந்தத் துணிகளை எடுத்துக் கொடுப்பதைத் தவிர, தனது திருமணத்திற்கு வரப் போகும் அந்தச் சிலருக்காகத் தனியாக, ஸ்பெஷலாக ஒரு பரிசு கொடுக்க விரும்பினாள்.

அது என்னவென்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், அந்தப் பரிசு வழங்குதலை இப்போது வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்து விட்டாள் ருத்ராக்ஷி.

அவர்கள் அழைப்பு விடுத்திருந்த அனைவரும் அங்கே வந்து சேர்ந்ததும்,”வாங்க! வாங்க!” என்று முகத்திலும், மனதிலும் சிறியதாக கூட கல்மிஷம் அதுவுமில்லாமல் தங்களை வரவேற்ற அந்தக் குடும்பத்தைப் பார்த்ததும் தங்களுக்குள்ளும் ஒரு நேர்மறையான உணர்வு எழுவதை அவர்களால் மறுக்க முடியவில்லை.

“வணக்கம் ங்க” என்று தாங்களும் மிகவும் அழகான புன்னகை முகங்களுடன் அவர்களுக்கு வணக்கம் வைத்தார்கள்.

இதைப் பார்த்ததும், ருத்ராக்ஷியின் வீட்டாருக்குக் கேட்கவா வேண்டும்?

“ஹாங்! உங்க எல்லாருக்கும் எங்க கூட வந்து எங்கப் பொண்ணுக் கல்யாணத்துக்காக நாங்க உங்களுக்கு எடுத்துக் கொடுக்கப் போகிற டிரெஸ்ஸை வாங்கிக்கச் சம்மதம் தானே?” என்று அவர்களிடம் வினவினார் சந்திரதேவ்.

என்ன தான், தாங்கள் இதையெல்லாம் முடிவெடுத்து விட்டிருந்தாலும், அதை ஊர் மக்கள் சிலரிடம் கேட்டு அனுமதி பெற்றுக் கொண்டு இருந்தாலும் இப்போதும் ஒரு தடவை அவர்களது சம்மதத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகப்பட்டது.

“எங்களுக்கு முழுச் சம்மதம் சார்!” என்று அவர்கள் ஒப்புக் கொண்டவுடன் தான், ருத்ராக்ஷியும், அவளது குடும்பத்தாரும் அந்தக் கூட்டத்துடன் அவ்வூரில் இருக்கும் சிறப்புமிக்கத் துணிக்கடைக்கு அழைத்துப் போனார்கள்.

கடைக்குள் நுழைந்த மறு கணமே,”உங்களுக்கு எந்த மாதிரியான துணியெல்லாம் பிடிச்சிருக்கோ அதை விலையைப் பார்க்காமல் எடுங்க” என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர் சந்திரதேவ் மற்றும் காஷ்மீரன்.

அவர்களுடன் இணைந்து மிருதுளா மற்றும் வித்யாதரன் தம்பதியும் போய் விட,

இந்தச் செலவில், தங்களுக்கும் பாதிப் பங்கு இருக்கின்றது என்பதை அவர்களிடம் மீண்டுமொரு முறை சொல்லி நினைவுபடுத்தினான் ஸ்வரூபன்.

“ஞாபகம் இருக்கு மாப்பிள்ளை” என்று கூறி அவனுக்கு உறுதி அளித்தாள் மஹாபத்ரா.

“சரிங்க சிஸ்டர்” எனச் சொல்லி விட்டு அமைதியாக நின்று கடையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி விட்டான்.

தனது மருமகளுடன் அளவளாவிக் கொண்டிருந்தார் கவிபாரதி.

“இங்கே உங்களுக்கு ஏதாவது பிடிச்சக் கலெக்ஷன்ஸ் இருந்தால் அதைச் செலக்ட் செஞ்சு வைங்க. நாம அதையும் வாங்கிக்கலாம்” எனத் தன் மனைவி மற்றும் தங்கையிடம் உரைத்தான் காஷ்மீரன்.

“ஆமாம் மா. வாங்க நாம எல்லாரும் அவங்க கூட சேர்ந்து டிரெஸ்ஸை எடுக்கலாம்” என்று ருத்ராக்ஷி, மஹாபத்ரா மற்றும் கவிபாரதியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டுப் போய் விட்டார் கனகரூபிணி.

அவர்களுடன் ருத்ராக்ஷி சென்றதுமே, நீளப் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட ஸ்வரூபனைக் கண்டு வாய் விட்டு நகைத்தனர் மற்ற ஆண்கள்.

“க்கும்! எதுக்குச் சிரிக்கிறீங்க?” என இயல்பாக கேட்பதைப் போல அவர்களிடம் வினவியவனிடம்,

“உன்னோட நிலைமையைப் பார்த்தால் அப்படியே நாங்க அனுபவிச்சது மாதிரியே இருக்கு. அதனால் தான் சிரிச்சோம் ப்பா!” என்றார் பிரியரஞ்சன்.

“நீங்களுமா?” என்று அவரிடம் ஆச்சரியத்துடன் கேட்டான் ஸ்வரூபன்.

“ஆமாம். இதிலென்ன ஷாக் ஆக இருக்கு? அவங்க டிரெஸ் எடுக்கிறதுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கிட்டாலும் அது எனக்குக் கோபம் வராது! ஆனால், அவங்க எப்பவுமே ஜோடியாகப் போகனும்னு நினைக்க மாட்டாங்க! லேடீஸ் மட்டும் தான் ஒன்னாகப் போவாங்க! அதுதான், எனக்கும் லைட்டாக கஷ்டமாக இருக்கும்” என அவனுக்கு விளக்கிக் கூறினார் மஹாபத்ராவின் தந்தை.

“அதே தான்! எங்க கல்யாணத்துக்கு முன்னாடியும் கூட, நாங்க மூனு பேரும் ஷாப்பிங் அல்லது அவுட்டிங் போனாலும் மஹாவும், ருத்ராவும் மட்டும் தான் போய்ச் செலக்ட் பண்ணுவாங்க. முதல்ல நானே அவங்களை அனுப்பி வைப்பேன். இப்போ அவங்களே போய்ப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க” எனத் தன் பங்கிற்கு அவனிடம் உரைத்தான் காஷ்மீரன்.

“டேய்! சாதாரண விஷயத்தை இப்படி பெரிசுப்படுத்திச் சொல்லி மாப்பிள்ளையை பயமுறுத்தாதே!” என்று தன் மகனை அதட்டினார் சந்திரதேவ்.

“எப்படியும் அவரும் எங்க கூடச் சேரத் தானே போறார் ப்பா? அது தான், அவரை எச்சரிக்கைப் பண்ணேன்” என்று தந்தையிடம் கூறிச் சிரித்தான் அவரது மகன்.

- தொடரும்
 
Shopping பண்ணுறதுக்குள்ள படுகிற பாடு இருக்கே, நினைக்கவே பயமா இருக்கு.
 
Last edited:
Top