Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 104

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ருத்ராக்ஷிக்குத் திருமணம் நிகழப் போவதையும், அவளதனை மணக்கப் போகும் மாப்பிள்ளையையும் பார்க்க வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டிருந்தனர் அவளிடம் பயிற்சி பெறும் பெண்களும், அவ்வூர் மக்களும்.

“அப்படி எந்தச் சீமையில் இருந்து மாப்பிள்ளைப் பையனப் பார்த்திருப்பாங்க?” என்றும்,

“நிறைய படிச்சவனாகத் தான் இருப்பான், சொத்து, பத்தும் இவங்களுக்குத் தகுதியாகத் தான் இருக்கும்!” என்று ஒரு சிலரும்,

“அதெல்லாம் சலிச்சு எடுத்து இருப்பாங்க!” என்றும்,

தங்களது மனதிலிருந்தவற்றை ஆர்வம் தாளாமல் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

அதற்குப் பிறகும் கூட, அவர்களுக்கு யார் அந்த மாப்பிள்ளை? என்ற செய்தி மறைத்து வைக்கப்பட்டே இருந்தது.

ஆனால், அந்த ஊரிலிருக்கும் நூலகத்தின் உரிமையாளர் துரைமுருகனுக்கு மட்டும் விஷயம் தெரியும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

அப்படியிருக்க, ருத்ராக்ஷியின் குடும்பமோ, அந்த ஊருக்குச் செல்ல வேண்டிய நாளைத் தேர்ந்தெடுத்து விட்டிருந்தனர்.

“இந்த முறை நீங்களும் எங்க கூட வாங்களேன்” எனத் தாங்கள் அனைவருக்கும் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்த ஊர், தன் தாய், தந்தைக்கும் நிச்சயம் பிடிக்கும் என்ற எண்ணத்தினால் தான், தன்னுடைய பெற்றோரிடம் இவ்வாறு கூறிக் கேட்டுக் கொண்டு இருந்தாள் மஹாபத்ரா.

“அப்படியா? உங்க அப்பாவுக்கு வேலை இருக்கான்னுக் கேட்டுட்டுச் சொல்றேன் டி” என்று அவளிடம் சொன்னார் கனகரூபிணி.

“சரிம்மா. ஆனால் நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பாக அங்கே வந்து சுத்திப் பார்க்கனும்” என்று அவரிடம் கறாராக உரைத்து விட்டாள் அவரது மகள்.

“சரிடி. நீ தேதியை மட்டும் சொல்லு” என்று அவளிடம் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டார் அவளது அன்னை.

அதற்குப் பதிலளித்து விட்டு அழைப்பை வைத்தாள் மஹாபத்ரா.

தன்னிடம் மகள் சொன்னதைக் கணவரிடம் கூறிய கனகரூபிணியோ,”இப்போ என்னங்க செய்யலாம்? உங்களுக்கு அன்னைக்கு வேலை இருக்கா?” என்று அவரிடம் வினவினார்.

“ஏதாவது வேலை இருந்தாலும் கூட அதை வேற நாளைக்கு மாத்தி வச்சுக்கலாம் மா. ஆனால், நாமளும் அங்கே வர்றது தெரிஞ்சா அவங்களால் சமாளிக்க முடியுமா? நம்மளையும் தனியாக கவனிக்கனுமே?” என்று மனைவியிடம் கேட்டார் பிரியரஞ்சன்.

“அதையெல்லாம் அவகிட்ட கேட்டுட்டேன் ங்க. அங்கே எவ்வளவு பேர் போனாலும் முகம் மாறாமல் இன்வைட் செஞ்சு நல்லா கவனிப்பாங்களாம் ங்க” எனவும்,

“ஓகே ம்மா.நான் வேலை விஷயத்தைப் பார்த்து வச்சிட்டு வர்றேன்” என்று அவருக்கு ஒப்புதல் அளித்தார் அவரது கணவர்.

அதை மகளிடம் தெரிவித்து விட்டுத் தாங்களும் அவளுடன் மற்றும் அவளது புகுந்த வீட்டாருடன் ஊருக்குச் செல்லப் போவதால் தங்கள் இருவருக்கும் தேவையானப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டார் கனகரூபிணி.

“அவங்க வர்றதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா?” என்று தன் புகுந்த வீட்டார் மற்றும் ருத்ராக்ஷியின் புகுந்த வீட்டினரிடமும் தயக்கத்துடன் கேட்டாள் மஹாபத்ரா.

“ஹேய்! நாம எல்லாரும் ஒரே குடும்பம்ன்னு எப்போவோ சொல்லியாச்சு! அதுக்கப்புறமும் நீ இப்படி கேட்கனுமா?” என்று அவளிடம் கூறிப் புரிய வைத்தார்கள் இரண்டு குடும்பங்களும்.

“தாங்க்யூ” எனத் தனது நன்றியுணர்வை வார்த்தையின் வழியாக அவர்களுக்குத் தெரியப்படுத்தினாள் காஷ்மீரனின் மனைவி.

“நாம அவங்களுக்குப் பரிசு வாங்கிட்டுப் போகனும் ங்க” என்று தன் கணவரிடம் உரைத்தார் கனகரூபிணி.

“அங்கே இருக்கிற கடையில் தான், அவங்க எல்லாருக்கும் துணி எடுத்துக் கொடுக்கப் போறாங்களாம். நாமளும் அப்படியே கிஃப்ட்ஸ் வாங்கித் தந்திடலாம்” என்றுரைத்து விட்டார் பிரியரஞ்சன்.

அந்த யோசனை அவருக்கும் பிடித்துப் போகவே அவரிடம் மறு பேச்சுப் பேசவில்லை அவரது துணைவியார்.

இவர்கள் இருவருடைய வரவையும் ஸ்வரூபன், கவிபாரதி மற்றும் மிருதுளா, வித்யாதரனிடமும் அறிவித்து விட்டாள் ருத்ராக்ஷி.

அதைக் கேட்டவர்களும் கூட, அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், அவர்களை வரவேற்க காத்திருப்பதாகவும் உற்சாகத்துடன் உரைத்தார்கள்.

அதன் பின், அவர்கள் அனைவரும் ஊருக்குச் செல்லும் நாளும் வந்தது.

அந்த நாளின் காலை வேளையில், எழுந்து வந்த மகளிடம்,

“பூ வச்சதுக்கு அப்பறம் எங்கேயும் கூட்டிட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லுவாங்க! ஆனால், உன்னை ஊரு விட்டு ஊருக்கு அழைச்சிட்டுப் போகப் போறோம்!” என்று கூறினார் சந்திரதேவ்.

“ஹாஹா! அதெல்லாம் எனக்கு ஒன்னும் நெகட்டிவ் ஆக நடக்காது ப்பா” என்று கூறி அவருக்குத் தைரியம் அளித்தாள் ருத்ராக்ஷி.

“குட்மார்னிங் ப்பா! குட்மார்னிங் டா” என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்தனர் காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா.

“உங்களைத் தான் எதிர்பார்த்தோம்” என்றார்கள் தந்தையும், மகளும்.

“நாங்க ரெடி. நீங்க?” என அவர்களிடம் வினவினாள் அவரது மருமகள்.

“நாங்களும் தயார் தான் ம்மா. உங்கப் பேரன்ட்ஸ் கிட்டேயும் ஒரு வார்த்தைக் கேட்டிரு” என்று அவளிடம் தெரிவித்தார் சந்திரதேவ்.

உடனே தன்னுடைய பெற்றோருக்கு அழைத்துப் பேசி விட்டு வந்தவளோ,”அவங்களும் ரெடியாக இருக்காங்களாம். அப்படியே இங்கே வந்துட்டா எல்லாரும் ஒன்னா சேர்ந்து போடலாம்ன்னு சொல்லிட்டேன். இப்போ வந்துடுவாங்க” என்று மற்ற மூவரிடம் தெரிவித்தாள் மஹாபத்ரா.

அதற்குப் பிறகு, அனைவரும் தங்களுடைய ஒரு சில உடைமைகளை எடுத்துக் கொண்டுத் தயாராக இருக்கவும், அவளது பெற்றோர் அங்கே வரவும் நேரம் சரியாக இருந்தது.

காரிலிருந்து இறங்கிய பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணியை,”வாங்க சம்பந்தி, வணக்கம் சம்பந்தியம்மா” என்று கூறி வரவேற்றார் சந்திரதேவ்.

“காஃபி குடிங்க‌. கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் கிளம்புவோம்” என்று சொல்லி விட்டு, அந்தப் பானத்தை அவர்களுக்காக வரவழைத்தாள் ருத்ராக்ஷி.

அவர்கள் அதைப் பருகிக் கொண்டிருந்த சமயத்தில்,”எப்போ அங்கேயிருந்து கிளம்புவீங்க?” என அவளிடம் குறுந்தகவலின் மூலமாக வினவினான் ஸ்வரூபன்.

“அண்ணியோட அப்பா, அம்மா வந்துட்டாங்க. உடனே கிளம்பி வர வேண்டியது தான் ங்க” என அவனுக்குப் பதில் அனுப்பினாள்.

“அப்போ சரிம்மா. காரில் ஏறி உட்கார்ந்ததுமே எனக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க” என்று கூறி விடவும்,

கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சனும் காஃபியைப் பருகி முடித்ததும், அவர்களது தங்களது காரில் ஏறிக் கொள்ள, சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும் ஒரு காரில் ஏறிக் கொண்டார்கள்.

“கூகுள் மேப்பில் லொகேஷன் ஷேர் பண்றேன் மாமா. டிரைவர் கிட்டே சொல்லிடுங்க” என்று தான் சொன்னதைச் செய்து முடித்தாள் ருத்ராக்ஷி.

அவளுக்கானப் பயணம் தான் இது! ஆனால், அனைவரும் ஒரு சிறு முகச் சுணக்கம் கூடக் காட்டாமல் அவளுடன் கிளம்பிச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

அந்தக் குடும்பத்தின் தேவதைப் பெண்ணாக அவளைச் சொன்னால் மிகையாகாது!


- தொடரும்
 
Top