Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 102

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“வேண்டாம் ப்பா‌ ப்ளீஸ்!” எனத் தன்னுடைய தந்தையிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டுப் பார்த்து விட்டான் காஷ்மீரன்.

ஆனால், அதை நிர்தாட்சண்யமாக மறுத்து விட்ட சந்திரதேவ்வோ,”உங்க அம்மாவோட பொருட்கள் இருந்தால் தான் அவளோட நினைவுகள் நம்மக் கூட இருக்கும்ன்னு அர்த்தம் இல்லையே ப்பா?” என்று அவனைச் சமாதானப்படுத்தினார்.

“ம்ஹ்ம்! நான் இதுக்கு மேல உங்ககிட்ட என்ன சொன்னாலும் நீங்க கேட்கப் போகிறது இல்லைன்னு எனக்குத் தெரிஞ்சுப் போச்சு ப்பா. உங்க இஷ்டப்படி பண்ணுங்க” என்று அவரிடம் வெறுமையான குரலில் உரைத்து விட்டான் அவரது மைந்தன்.

“பார்த்துக்கலாம் விடுடா” என்று அவனிடம் சொல்லி விட்டுச் சென்றார் சந்திரதேவ்.

அதற்குப் பிறகு தங்களது வீட்டிற்குள் என்ன நடந்தாலும் அதை ருத்ராக்ஷியிடம் பகிர்ந்து கொள்ளவில்லை காஷ்மீரன்.

ஆனால், அதைத் தன் இணையிடம் சொல்லாமல் மறைத்து வைக்க மனம் வரவில்லை அவனுக்கு.

எனவே, தங்களது அறையில் தனிமையில் இருக்கும் பொழுது,”உங்கிட்ட ஒரு விஷயத்தை ஷேர் பண்ணப் போறேன் ம்மா. ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை நீ என் தங்கச்சிகிட்டே சொல்லக் கூடாது!” என்று அவளிடம் தீர்க்கமாக கூறினான் காஷ்மீரன்.

“இப்போ என்னப் பூகம்பத்தை வெளியே கொண்டு வரப் போறீங்க? அதுவும் உங்கத் தங்கச்சியைப் பத்தின விஷயமாக வேற இருக்கு” என்றாள் மஹாபத்ரா.

“எஸ் ம்மா. நீ ஃபர்ஸ்ட் பிராமிஸ் பண்ணு” என்று கேட்டவனைப் பார்த்துச் சிரித்தவளோ,”என்னங்க நீங்க என்னை மாதிரி சின்னப் பிள்ளைத்தனமாகப் பிஹேவ் செய்துட்டுப் பிராமிஸ் எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க?” என்று அவனிடம் கேட்டாள் மஹாபத்ரா.

“ப்ச்! ப்ளீஸ் ம்மா” என்று அவளிடம் கெஞ்சினான் காஷ்மீரன்.

“ஓகே ங்க. பிராமிஸ்!” என்று அவனது கையில் தன்னுடைய கரத்தை வைத்து அடித்தாள் அவனது மனைவி.

“நானும், அப்பாவும் அவளுக்குத் தெரியாமல் ஒரு காரியத்தைப் பண்ணப் போறோம்” என்று சொன்னவனோ, அது என்னவென்பதை அவளிடம் முழுமையாக கூறி விட்டிருந்தான் அவளுடைய மணாளன்.

அதைக் கேட்டு முடித்தவளோ,”ஏங்க இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? இது மட்டும் அவளுக்குத் தெரிஞ்சா என்ன ஆகுறது?” என்று வியப்பு மற்றும் ஆத்திரத்துடன் வினவினாள் மஹாபத்ரா.

“நானும் இதையே தான் எங்கப்பா கிட்டே கேட்டேன் ம்மா. அதுக்கு அவர் என்னப் பதில் சொன்னாருன்னு அதையும் உங்கிட்ட சொல்லிட்டேன் தானே?” என்று அவளுக்குப் பதிலளித்தான் காஷ்மீரன்.

“ஆமாம் ங்க. எனக்குப் புரியுது. அவளுக்குத் தெரியக் கூடாது! அவ்வளவு தான் ம்மா” என்று இவனும் உறுதியாக இருப்பதைக் கண்டு,

“சரிங்க. நீங்களும், மாமாவும் செய்றது ருத்ராவோட நல்லதுக்குத் தானே? அப்போ ஓகே தான் ங்க” என்று தானும் அதற்குச் சம்மதித்து விட்டாள் அவனுடைய இல்லாள்.

ஆகவே, காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ்வும் இணைந்து எடுத்த முடிவை விரைவில் செயலாற்ற முடிவெடுத்து விட்டு, ருத்ராக்ஷிக்குப் போடப்படும் தாலிச் செயினின் வடிவமைப்பின் படியே, ஒன்றை செய்து வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் நிச்சயத்திற்கான மோதிரங்களை வாங்க வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது.

எனவே, இரு குடும்பமும் ஒரு பிரபலமான நகைக்கடையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்.

“உங்கப் பட்ஜெட் என்னன்னு சொல்லுங்க?” என்று அந்தக் கடையின் ஊழியர் அவர்களிடம் வினவவும்,

அதைக் கேட்டவுடன்,”நல்லா கிராண்ட் ஆக, இப்போ ட்ரெண்டில் இருக்கிற டிசைன்ஸ்ஸை எல்லாம் காட்டுங்க” என்று அந்தப் பெண்ணிடம் சொன்னாள் மஹாபத்ரா.

“ஓஹ்! ஓகே மேம்!” என்று கூறியபடியே, அவள் கூறிய பண மதிப்புள்ள மற்றும் வடிவமைப்புகளைக் கொண்ட மோதிரங்களை அவர்களுக்கு முன்னால் எடுத்து வைத்துக் காட்டினாள் அந்த விற்பனைப் பெண்.

“இந்தாங்க. நீங்க ரெண்டு பேரும் பார்த்து எடுங்க” என்று தனது வேலை முடிந்து விட்டது என்பதைப் போல அங்கேயிருந்து எழுந்து தன்னுடைய கணவனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் காஷ்மீரனின் மனையாள்.

அதன்பின், ஸ்வரூபனும், ருத்ராக்ஷியும் மட்டும் தான், அந்த மோதிரங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்.

“இந்த டிசைன் நல்லா இருக்கா ங்க?” என்றதற்கு,

“இது கொஞ்சம் பெருசா இருக்கு ம்மா” என்று அதை அவளிடம் சுட்டிக் காட்டினான் ஸ்வரூபன்.

“ஆமாங்க” என்று அந்த மோதிரத்தைப் போட்டுப் பார்த்து விட்டு ஒப்புக் கொண்டாள் ருத்ராக்ஷி.

“நாம் வேணும்னா வெளியே போய் ஏதாவது சாப்பிட்டு வருவோமா? இவங்க செலக்ட் பண்ணி வைக்கட்டும்” என்று தன் கணவன், மாமனார் மற்றும் கவிபாரதியிடம் வினவினாள் மஹாபத்ரா.

“இரும்மா. இதை அவங்ககிட்ட கேட்டுக்குவோம்” என்று தன் தங்கையிடமும், வருங்கால மாப்பிள்ளையிடமும் கேட்டான் காஷ்மீரன்.

“ஷூயர்! போயிட்டு வாங்க” என்று அவர்களும் அனுமதி அளித்து விட்டார்கள்.

“உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரச் சொல்லிட்டுப் போறோம்” என்று கூறிய சந்திரதேவ்வோ, சொன்னதைச் செய்தார்.

“நான் வேணும்னா இவங்க கூட இருக்கவா?” என்று அந்த மூவரிடமும் கேட்டுப் பார்த்தார் கவிபாரதி.

“இல்லை ம்மா. நாங்கப் பாத்துக்கிறோம். நீங்கப் போய்ச் சாப்பிடுங்க” என்று அவரிடம் வலியுறுத்தி அனுப்பி வைத்து விட்டவனோ,

அவர்கள் சென்றதும், தன்னருகே இருந்த ருத்ராக்ஷியிடம்,”என் கூடத் தனியாக உட்கார்ந்து இருக்கிறதுக்கு உங்களுக்குப் பிராப்ளம் இல்லையே ங்க?” எனக் கேட்டான் ஸ்வரூபன்.

“ஊஹூம்! கண்டிப்பாக இல்லை ங்க” என்று கூறிப் புன்னகைத்தாள் பெண்ணவள்.

“சரி. அப்போ மோதிரங்களைச் சீக்கிரம் செலக்ட் பண்ணுவோமா? எனக்கும் ரொம்ப பசிக்குது” என்று அவளிடம் சொல்லவும்,

“அச்சோ! இதோ முடிச்சிடலாம் ங்க” என்றவாறே, தனக்கும், அவனுக்கும் பிடித்த, திருப்தியான மனநிலையைக் கொடுத்த இரண்டு மோதிரங்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர் இருவரும்.

இதே சமயத்தில்,”நாம அவங்களைத் தனியாகப் பேச விட்றதும் இல்லை, அப்படியான சுவிட்சுவேஷனும் அவங்களுக்கு அமையுறதும் இல்லை. அதான், இப்படி ஒரு பிளானைப் போட்டு உங்க எல்லாரையும் என் கூடக் கூட்டிட்டு வந்தேன்” என்று தனது சாமர்த்தியத்தை அவர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டாள் மஹாபத்ரா.

“இதை என்கிட்டேயும் ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல?” என்றான் காஷ்மீரன்.

“எனக்கே ஆன் தி ஸ்பாட்டில் தான் தோனுச்சு ங்க” என்று அசடு வழியக் கூறினாள் அவனுடைய மனைவி.

அதைக் கேட்ட அவளது மாமனாரும், கவிபாரதியும் வாய் விட்டுச் சிரித்து விட,

“நல்லவேளை, நான் செஞ்சதைக் கேட்டதும் என் மேல் கோபப்படுவீங்கன்னு நினைச்சுப் பயந்துட்டு இருந்தேன். இப்போ தான் நிம்மதியாக இருக்கு” என்று சொன்னாள் மஹாபத்ரா.

“ஹாஹா! நீ என்னப் பண்ணாலும் அது நல்லதுக்காகத் தான் இருக்கும்ன்னு எங்களுக்குத் தெரியும் டா ம்மா” என்று அவளைப் பாராட்டினார் சந்திரதேவ்.

அதையே வழி மொழிந்தார் கவிபாரதி.

“ஹப்பாடா! ஸ்நாக்ஸ் வந்தாச்சு. நாம சாப்பிடலாம்” எனக் கூறியவுடன், அதில் தங்களது கவனத்தைச் செலுத்தினார்கள் அந்த மூவரும்.

தங்களுக்குப் பிடித்தமுன வடிவமைப்புகளைக் கொண்ட இரண்டு மோதிரங்களைத் தேர்ந்தெடுத்து விட்டதும், அதைத் தன்னுடைய அண்ணிக்கு அழைத்து உரைத்து விட,”நாங்களும் சாப்பிட்டு முடிச்சாச்சு ம்மா. இதோ வர்றோம்” என்றவளோ, தனது கணவன், மாமனார் மற்றும் கவிபாரதியுடன் அங்கே போனாள் மஹாபத்ரா.

கணையாழிகள் இரண்டையும் அவர்களிடம் காட்டவும், அதைப் பார்த்தவர்களுக்கும் மிகவும் பிடித்துப் போயிற்று.

“சூப்பரா இருக்கு! ரெண்டு பேருக்கும் ரொம்ப நல்ல டேஸ்ட் தான்” என்று அவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தனர்.

அதன் பின்னர், அவற்றிற்குரிய பணத்தைக் கொடுத்து வாங்கிச் சென்றார்கள்.

வீட்டிற்குப் போனதும், அவற்றை மறக்காமல் புகைப்படம் எடுத்து மிருதுளாவிற்கு அனுப்பி வைத்தவளோ,

அதற்குப் பிறகுத், தனது செல்பேசியில் இருந்து ஸ்வரூபனுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பி விட்டுக் காத்திருந்தாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
ருத்ராக்ஷி கிட்ட அப்படி என்ன ரகசியத்தை மறைக்கிறாங்க குடும்பமா.

மஹா நீ சூப்பர் மா. அவங்களுக்கு தனிமை வேணும்னு நினைச்ச பாரு
😍😍😍😍😍😍
 
ருத்ராக்ஷி கிட்ட அப்படி என்ன ரகசியத்தை மறைக்கிறாங்க குடும்பமா.

மஹா நீ சூப்பர் மா. அவங்களுக்கு தனிமை வேணும்னு நினைச்ச பாரு
😍😍😍😍😍😍
Adhe dha sis... Thank you so much ❤️
 
Top