Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 1

Advertisement

Dhanuja

Well-known member
Member
பெண்ணா(ஆ)ழி

அத்தியாயம் – 1



மதுரையை தாண்டி இருக்கும் சிறு கிராமம் கமுதி……



கதிரவன் ஒளி சற்றுக் கடுமையாக அந்த மணல் மேட்டில் வீச தங்கமாக மின்னியது அந்த மணல் மேடு தண்ணீர் பசையற்ற நிலங்கள் எங்கும் காணிலும் வரட்சி முதுமை கொண்ட மூதாட்டியின் தோல் சுருங்கி வெடித்து நிற்பது போல் தண்ணீரற்ற நிலங்கள் அங்கங்கே வெடித்து நின்றது.

கண்ணுக்கு எட்டிலும் கருவேல மரம் நிரம்பி இருக்க ஆட்கள் சிலர் இடைவெளிவிட்டு வேலை செய்து கொண்டு இருந்தனர். அவர்களோடு சேர்ந்து ஓர் அரிவை பெண்ணும் விறகை வெட்டி கொண்டு இருந்தாள்.

வயதென்று பார்த்தால் இருபதைக் கடந்தவள் சூரியனின் ஆதிக்கம் அவளது மேனியில் சற்றுப் பலம் கொண்டு வீச அதன் விளைவால் வேர்வை ஆறாகப் ஓடி அவளது உழைப்பின் அளவை சொல்லாமல் சொல்லியது.

அவள் மேனி தழுவி இருக்கும் எட்டுக் கஜம் புடவையில் எட்டாயிரம் கிழிசல்கள்.அந்த கிழிசல்களை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டு இருக்கும் முந்தியென பார்ப்பதற்குப் பாவம் போல் இருந்தாள் பெண்.

தனது தோற்றத்தை கருத்தில் கொள்ளாமல் உழைப்பே சதம் என்ற நிலையில் மரத்தை பிளந்து கொண்டு இருந்தால்.கைகள் மட்டுமே அரிவாளுடன் பேசி கொண்டு இருந்தது கண்ணும் கருத்தும் அவ்வப்போது தனது ஆறு மாத குழந்தையைத் தீண்டி சென்றது.

அக்குழந்தையோ மழலை மொழியில் தனது தாயின் கடுமையான உழைப்பிற்குப் பின் இருக்கும் வலியை கடவுளிடம் சொல்லி நியாயம் கேட்பது போல் அத்தனை ஆவேசம் கொண்டு சத்தம் எழுப்பியது ஊ..........ஆவென்று.


“ஏ!... வஞ்சி புள்ள வந்து எம்புட்டு நேரமாகுது புள்ளைக்குப் பசிக்காது போய்ப் பசியாத்திட்டு வா புள்ள”


“இன்னும் கொஞ்சம் தான் மாரியக்கா முடிச்சுப்புட்டே போறேன்”


“அடிப்பாவி மவளே அது வரைக்கும் பச்ச மண்ணு காஞ்சு கடக்கணுமா கிழக்கு சிவக்கும் முன்னே வந்தவ இப்போ அது உச்சிக்கு நிக்குது முதல போ புள்ள”


அதற்கு மேல் வாயாடாமல் மறைவிடம் சென்று குழந்தைக்குப் பசியாற்றினால்.குழந்தை பருகும் ஒவ்வொரு சொட்டுக்கும் ஒவ்வொரு துளி கண்ணீர்.. உதிரத்தை உருக்கி பாலாகக் கொடுக்க அந்த இளம் தாய்க்கு சத்தில்லை போலும். நேற்று இரவு குடித்த கால் வயிறு கஞ்சி அதிலும் சிறுது பிள்ளைக்கு.


தாயின் உணர்வை தாய் பாலின் மூலம் கண்டதோ என்னமோ இரு மிடறு பருகி தூங்கிவிட்டது குழந்தை.உறக்கமா இல்லை பசியின் மயக்கமா என்பது இறைவனுக்கே வெளிச்சம் தூங்கிய குழந்தையைப் பார்த்தவாறே கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தாள் அரிவை பெண்.


என்ன பாவம் செய்தேன் பெண்ணாகப் பிறக்க....... இப்போது நீயும் பெண்ணாக உள்ளம் குமுறியது இளம் தாய்க்கு. தான் பட்ட துன்பம் நீ படவே கூடாது என்பது போல் குழந்தையை இறுக்கி கொண்டாள்.என்ன செய்ய ஒவ்வொரு தாயுடைய எண்ணமும் இது தானே ‘தான் பட்ட துன்பத்தைத் தனது குழந்தை படக் கூடாது’ அதில் வஞ்சி மட்டும் விதி விலக்கா என்ன.

தன்னிலை மறந்து கண் மூடி அழுது கரைந்தவளை கலைத்தது மாரியின் தொடுகை “ஏப்புள்ள வஞ்சி இந்தச் சோறு திண்ணுட்டு அப்புறம் புள்ளைய எழுப்பிப் பால கொடு”


மாரியாக்க என்று அழைக்கப் படும் பேரிளம் பெண் பக்கத்து விட்டு மாரியம்மாள். வஞ்சியின் நிலை உணர்ந்து அவளை அவ்வப்போது காக்கும் தாய் என்றே சொல்லலாம் அவர் கொடுத்த உணவை தலையை இடமும் வளமும் ஆட்டி வேண்டாம் என்பது போல் செய்கை செய்தவளை பார்த்து பெரு மூச்சு விட்டவர்.


“இங்கன பாரு வஞ்சி” என்றவர் குனிந்து கொண்டே கண்ணீர் சிந்தும் அந்த அரிவை பெணின் முகம் பற்றித் தன்னைக் காண செய்து “எம்புட்டுச் சோதனை வந்தாலும் தூக்கி எறிஞ்சுப்புட்டு புள்ளய பாரு புள்ள”


அவரது ஆறுதல் உணர்வுகளை வெடிக்கச் செய்ய “நான் என்னக்கா பாவம் பண்ணுனேன் பாவி பைய பாதில விட்டுபுட்டு போயிட்டான் அப்பன் ஆத்தாளும் இல்ல சாதி சனம் அம்புட்டுக்கும் நான் பாரம்.சொல்லி அழுக கூட நாதியத்து நிக்குறேன்.இரவைக்கு நிம்மதி இல்லக்கா போற வர நாயெல்லாம் கதவை தட்டுது” சொல்லியவள் கதறி அழுக என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவருக்கு.

வஞ்சி தாய் தந்தையற்று தனது தாய் மாமன் வீட்டில் தஞ்சம் புகுந்தவள் கஞ்சியோ கூழ்லோ உழைத்து பசியாற்றி தேவைக்குப் பேசி தோழிகளுடன் சிரித்து என்று நாட்கள் அவள் வசதிக்கேற்ப அழகாகத் தான் சென்றது எல்லாம் பதின் வயதை எட்டிய வரை தான்.


பருவம் எய்தவுடன் பொறுப்புகள் கூட இரு பெண்களை மகளாகக் கொண்ட தாய் மாமன் தமக்கையின் மகளான வஞ்சிக்குத் திருமணம் செய்ய எண்ணி அதே ஊரில் வசித்து வரும் வேலன் என்ற குடி மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.


ஆம் குடிமகன் தான் மூன்று வேளையும் குடித்துக் குடித்தே இறுதி நாட்களை எண்ணி கொண்டு இருக்கும் வேலணை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்தார் அந்த நல்ல உள்ளம் கொண்ட தாய் மாமன்.இரு மகள்கள் இருக்கும் நிலையில் வஞ்சி அவருக்குச் சுமை…..அதுவும் குணம் கொண்ட மனைவியைக் கொண்டு அவரும் என்ன செய்ய.


ஒரு வருடம் தான் வஞ்சியின் வாழ்க்கை கையில் ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டு தனது கடமை முடிந்ததென்று சென்று விட்டார் வேலன். வேலனின் உறவோ தாய் தகப்பனற்று தந்தையின் தம்பி வளர்ப்பில் வாழ்ந்து வந்தவர் என்பதால் அவரும் வஞ்சியின் பொறுப்பைத் தட்டி கழித்து விட்டார்.

இப்படி இருக்கும் நிலையில் வெளி ஆண்களின் கூர் பார்வையும் தனது இளமை கொண்ட உடலை தீண்ட அவளுக்குத் தீயாய் காந்தியது.பால் காரன் தொடங்கிக் குடிகாரன் வரையில் தொல்லைகள் தொடர தவித்துப் போனாள்.


அவளது உடல் நடுக்கம் அவளது பயத்தைச் சொல்ல இதற்கு ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று சிந்தித்தவர் மனதில் வந்து நின்றாள் தூரத்து உறவு பெண் மாலா அவளது நினைவு வர..


“இங்கன பாரு வஞ்சி முதல கண்ணா துடை புள்ள இதுக்கெல்லாம் ஒரு வழி கிடைக்கும் நம்பு…. முதல சோத்த திண்ணு” என்றவர் பிடிவாதம் பிடித்தவளை உண்ண வைத்தே ஓய்ந்தார்.உண்டு முடித்து மீண்டும் குழந்தையைச் சுண்டி பசியாற்ற பேச்சை தொடங்கினர் மாரி.


“வஞ்சி நான் ஒரு வழி சொல்லுறேன் நீ அதைக் கேளு இராவோடு இரவா நான் பட்டணத்துக்குக் கூட்டிட்டு போறேன் அங்கன எங்க பெரியாத்தா பொண்ணு மாலா டைலரா இருக்கா வயசு நாற்பது இருக்கும். புள்ள புருஷன் எதுவும் கிடையாது ஒண்டி கட்ட அவகிட்ட உன்ன விடுறேன்,


நல்ல பார்த்துக்கும் அங்கனயே வேலை வாங்கித் தர சொல்லுறேன் நீ வேலைக்குப் போனா அவ கூடப் புள்ளய பார்த்துக்குவா என்ன சொல்லுற”


அவர் சொல்வது சரியென்றாலும் மனதில் உள்ள பயம் அகல மறுக்க அவரது கைகளைப் பற்றிக் கொண்ட வஞ்சி “அக்கா இங்கனயே என்னால தைரியமா குப்ப கொட்ட முடியல தெரியாத இடத்துல போய் என்ன செய்ய அதுவும் பட்டணத்துல நெஞ்சம் குமுறியது ஆனால் இங்கு இருந்தாள் பருந்துக்கு அல்லவா இரை


“வஞ்சி இங்கன இருந்தா உன்னையும் புள்ளையையும் வாழ விட மாட்டானுக எம்புட்டு நாள்தேன் போராடுவ.என்னால எம்புட்டு நாள் உதவ முடியும் சொல்லு.. நிதர்சனம் வேற வஞ்சி நான் உன்ன பார்த்துக்குவேன்னு வாய் வார்த்தையா கூடச் சொல்ல முடியாது நிலைமை அம்புட்டு கேடு”


உண்மை தானே அவர் தான் அவளுக்குத் தூண் போல் ஆனால் சிறுது நாட்களாகவே மாரியின் கணவன் பார்வையும் கண்ணியம் துளைக்கிறது அதனை அவரும் அறிந்தே இருந்தார் அதனால் தான் இந்த முடிவு.


“பயப்புடாத வஞ்சி நமக்கு வேற வழி இல்ல சொல்லுறதை கேளு தாயி” என்றவராது பேச்சை கேட்டே ஆக வேண்டிய சூழல் என்பதால் பயத்தை மனதில் புதைத்துக் கொண்டு நாட்கள் கடத்தாமல் மறு நாள் இரவே பட்டணத்துக்குப் பயணப் பட்டனர் இருவரும் குழந்தையுடன்.


முதல் நாளே வஞ்சியைப் பற்றிய விவரத்தை மாலாவிடம் சொல்லியாயிற்று அவரும் வர சொல்லி சொல்லவே இதோ பட்டணத்தில் வஞ்சி தனது குழந்தையுடன்.


சென்னை மண்ணடி………


நிற்க நேரமற்று ஊன் உறக்கமற்று ஏன் தன்னையே மறந்து ஓடி கொண்டு இருக்கும் மனிதர்களையும். பகட்டு காட்டி ஓங்கி நிற்கும் கட்டிடங்களும் வஞ்சியை மிரள வைத்தது. அவரவர் வசதி கொண்டு காலில் சக்கரம் கட்டி ஓடுபவர்களைப் பார்க்க விந்தையாகத் தான் இருந்தது.


இவற்றையெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சிரியத்தில் பார்த்துக் கொண்டே வந்தாள் வஞ்சி.சென்னை அரிவை பெண்ணைச் சற்று மிரட்டி தான் வைத்தது போலும் முகம் கொள்ளா குழப்பமும் பயமும்.


வேடிக்கை பார்த்துக் கொண்டே மாரியும், வஞ்சியும் வீடு வந்து சேர்ந்தனர் மாலா அவர்களை வரவேற்று உணவளித்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்காரரை பார்த்து வருவதாகச் சொல்லி சென்று விட்டாள்.பயணம் அலுப்பு தட்ட சோர்ந்து போய் உறங்கினாள் வஞ்சி குழந்தையும் தூங்கி விட்டது.மாலாவின் தோற்றம் கூட வாஞ்சியின் கருத்தில் பதியவில்லை மனசும் உடலும் சோர்த்து நின்றது பெண்ணுக்கு.


இத்தனை நாள் தூங்காத தூக்கத்தை எல்லாம் சேர்த்து வைத்து தூங்கினாலோ என்னமோ வஞ்சி எழும் பொது மாலை ஆறாகிவிட்டது அவளுக்கு முன்னே குழந்தை முழித்துக் கொண்டு அழுகவே மாரி அவருக்குப் பாலை ஆற்றி கொடுத்தார்.


மாலாவும்,மாரியும் குழந்தையை வைத்துக் கொண்டு வெளி திண்டின் முன் பகுதில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.பத்துக்குப் பத்து சதுரடி கொண்ட வீடுகள் ஒரே குளியல் மற்றும் கழிவறை உள்ள சின்ன ஸ்டோர்.


அதில் ரெண்டே வீடுகள் ஒரு வீட்டில் மாலா இருக்க இன்னொரு வீடு காலியாக இருந்தது.அந்த இடத்துக்கே மாதம் ஆயிரத்தி நூறு கொடுக்க வேண்டும் குடி தண்ணீர் முப்பது மின்சாரக் கட்டணம் தனியாக முன்னூறு வரும்.

மாலா இங்கு குடி பெயர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது.வஞ்சியின் வரவை பற்றித் தெரிந்தவுடன் பக்கத்து வீட்டையும் பிடித்து விட்டாள்.மாலாவின் வீட்டில் பாதி இடத்தைத் தையல் மிஷின் விழுங்கி கொள்ள மீதி இடத்தைப் பாத்திரங்களும், துணிகளும் விழுங்கி கொண்டது.


மாலா மட்டும் என்பதால் கால்களைக் குறுக்கி படுத்து கொள்வாள் ஆனால் பிள்ளைக்காரியான வஞ்சியை என்ன செய்வது அதான் துணிந்து அந்த வீட்டையும் பிடித்து விட்டாள்.


பெண்கள் இருவரும் இருப்பது வசதி தான் வெளியாள் குடும்பமாக வந்தால் இன்னும் சிரமம் என்பதால் மாரியும் உதவி இருக்கக் கூடுதல் தொகை முன் பணமாகக் கொடுத்து பிடித்து விட்டனர்.

***********


தூங்கி முழித்த வஞ்சிக்கு சற்று நேரம் எதுவும் பிடிபடவில்லை மூளை வேலை நிறுத்தம் செய்யக் கண்கள் மூடி சில நிமிடங்கள் நிதானித்துப் பின்பு கண்களைச் சுழட்டி அங்கு இருக்கும் கடிகாரத்தைப் பார்க்க அது சரியாக ஆறு முப்பது எனக் காட்ட வாரி சுருட்டி எழுந்தாள் “ஐயோ எம்புட்டு நேரம் தூங்கி புட்டேன் அந்த அக்கா என்ன நினைக்கும்” என்று பதறியவரே திண்ணைக்கு வர அவளது வரவை பார்த்த மாரியம்மா

“வா வஞ்சி” அந்த அழைப்பில் அத்தனை வாஞ்சை

“அக்கா” என்றவளது அவளது சங்கடம் புரிய.


“வந்து இப்படி உட்காரு வஞ்சி நான் டீ எடுத்துட்டு வரேன்” என்றவர் கையில் உள்ள குழந்தையை வஞ்சியிடம் கொடுத்து விட்டுச் சென்றார். மாலாவை இப்போது தான் நன்றாக பார்க்கிறாள் பேச தயக்கமாக இருந்தது அதனைப் புரிந்து கொண்டவர் “வஞ்சி என்ன உன் அக்காவா நினைச்சுக்கோ மாரி அக்கா எல்லாம் சொல்லுச்சு”


சிறிது நேரம் இரு பெண்களிடமும் அமைதி “இங்கன பார் வஞ்சி நம்மல்ல கேட்டது ஆயிரம் இருக்கு இனி நீ வேலை, குழந்தை இதைத் தவிற எதையும் யோசிக்காத என்ன” கண்ணீர் மல்க மாலாவை பார்த்தவள் சரியென்பது போல் தலையை ஆட்டினாள்


“ஒரு மாசத்துக்கு நீ எங்கையும் வேலைக்குப் போக வேண்டாம் புள்ள என்கிட்ட பழகரவரை இரு அப்புறம் உனக்கு வேலை வாங்கித் தரேன்”


“அவரது பேச்சில் நிகழ்ந்தாலும் உழைக்காமல் உண்ண முடியுமா என்ன?”


“அக்கா எதாவது சின்ன வேலை ஒரு மணி நேரம் இருந்தாலும் பரவாயில்ல பாப்பா தூங்கும் போது போயிட்டு ஓடியாந்துருவேன்”


அவளது எண்ணத்தை சரியாக கணித்தவர் “உன் யோசனை புரியுது எனக்கு உதவி பண்ணு வஞ்சி”


“தையலை பத்தி தெரியாது அக்கா”


“தெரியாதுன்னு ஒன்னு இருக்கா அதுவும் நம் பெண் இனத்துக்குச் சித்திரமும் கை பழக்கம் வஞ்சி முதல அழுகுறத நிறுத்து ஒவ்வொரு துள்ளி கண்ணீரும் புனிதம் புரியுதா,


உன்னைச் சில இடத்துல மாத்திக்கோ வஞ்சி இன்னும் நாள் இருக்கு நான் இருக்கேன் நம்பிக்கை வை என்கூட வா உன் புள்ளைய என் புள்ளை மாதிரி அதை நல்ல படிக்கச் வச்சு பெரிய இடத்துல உட்கார வச்சு அழகு பார்க்கலாம்”


மாலாவின் வார்த்தைகள் வியக்கத்தக்க தெம்பை கொடுக்கக் கண்ணில் சிறு ஒளி கொண்டு உதட்டில் உறையும் புன்னகையோடு “சரிக்கா” என்று கைகளைப் பற்றிக் கொண்டாள்


மனதில் பல கேள்விகள் பல எண்ணங்கள் இருந்தாலும் காலம் அதற்கு விடை சொல்லும் என்ற நம்பியுடன் இருந்தால் வஞ்சி.மேலும் சில நொடிகள் இருவரும் பேசியவாரே இருக்க வஞ்சிக்கு டீ எடுத்துவந்த மாரி அதனை வஞ்சியிடம் கொடுத்து விட்டு அவளுடன் அமர்ந்தவர்.


“வஞ்சி நான் காலையில ஊருக்கு போகனும் நீ இருக்குற இடத்தை என் வூட்டுகாருகிட்ட கூடச் சொல்லல நீ தைரியமா இரு என்ன மாலா உனக்குத் துணையை இருப்பா”அவரது பேச்சில் அதிர்ந்தவள் கண்ணீர் கண்ணுடன் பார்க்க.


“எனக்கு எல்லாம் தெரியும் வஞ்சி நீ சங்கடப்பட வேண்டாம் யாரு செஞ்சாலும் தப்பு தப்புதேன் முடிஞ்ச என்ன மனுச்சுடு”


“என்னக்கா பேசுறீங்க நீ இல்லனா நான் எங்கன இருவரது சங்கடம் உணர்ந்து பேச்சை மற்றும் பொருட்டு அக்கா நீ துணிய எடுத்து வை நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன் வஞ்சி புள்ளைக்கு ஊட்டி விடு என்று அவர்களைத் திசை திருப்ப.


“ரொம்ப நன்றிக்கா இந்த உதவிய மறக்கவே மாட்டேன்” என்று கை கூப்பி நின்ற வஞ்சியின் கைகளைப் பற்றியவர் “என்ன வஞ்சி இது நானும் ஒரு பொண்ணு வச்சு இருக்கேன் அதுக்கு ஒன்னுனா செய்ய மாட்டேனா நீயும் எனக்கு பொண்ணு தான் எதையும் யோசிக்காத”


“சரிக்கா பத்திரமா போயிட்டு வாங்க”


“ஹ்ம்ம்…. பார்த்துக்கோ மாலா காலையில பேச கூட நேரம் இருக்காது எனக்கு ரயில புடிக்கணும் அதேன் இப்போவே பேசுறேன் இனி வஞ்சி உன் பொறுப்பு”


“நீ கவலைய விடு நிம்மதியா போயிட்டு வாக்க”


மாலாவின் பதிலில் நிம்மதி பிறக்க அதன் பின் கவலை அகன்றவராகப் பேசி சிறிது உண்டு உறங்கி விட்டனர்.விடியலில் அனைவரிடமும் சொல்லி கொண்டு தூங்கும் குழந்தையை ஒரு முறை கண்களால் வருடி விட்டு சென்றார் மாரி.


இனி வஞ்சி மாலாவின் வசம்.....................


 
Last edited:
என்ன சொல்ல இனியாவது
இவ துன்பம் விலகுமா
 
Top