Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 7

Advertisement

Dhanuja

Well-known member
Member
வஞ்சி கொண்டான் பேசியதில் அதிர்ந்து நின்ற உடையவன் தயங்கியவாறே மாலாவை பார்க்க அவளோ என்ன இது? என்பது போல் பார்த்து வைத்தாள்...

இவர்களது கலக்கத்துக்குக் காரணம் வஞ்சி இனி அவள் குழந்தையோடு இரவு அவர்கள் வீட்டில் தங்கி கொள்ளட்டும் என்று வஞ்சி கொண்டான் சொன்னதே.மாலாவிற்குக் கோபம் எல்லையைக் கடக்க அதைக் காட்ட முடியாத இயலாமையை வஞ்சியிடன் தான் காட்டினாள்.

வெளியில் உடையவன் வஞ்சி கொண்டானை சமாளிக்க முடியாமல் திணற வீட்டினுள் மாலா அடிக்காத குறையாக வஞ்சியை மிரட்டி கொண்டு இருந்தார் “சொன்னேனே அப்பவே சொன்னேன் ஒரு அளவோட இருன்னு நீ அங்க வேலைக்குப் போய் எத்தினி நாள் ஆகுது? முழுசா இரண்டு வாரம் தான் ஆகுது அதுக்குள்ள வம்பை விலை பேசியாச்சு”

“அக்கா நான் என்ன செய்ய....அங்கன என் கண் முன்னே பிள்ளைங்க கடந்து தவிக்குதுங்க பார்த்துட்டு சும்மா இருக்க முடியல அதேன் ஆனா அது இம்புட்டுத் தூரம் வினையக் கொண்டு வரும்னு கானாவ கண்டேன் எனக்கு முன்னாடி என் நேரம் போய் நிக்குது”

“நல்ல ஒணக்கம் பேசு இப்போ வாடினு நிலையா நிற்கிறான் என்ன பண்ண போற”

“என்னக்கா வம்பு எனக்குப் பயமா இருக்கு”

“இப்போ பயந்து என்ன செய்ய அவுங்க குடும்பத்துல இவன் ஒரு தினுசு ஐயாவும் அம்மாவும் இருந்த காலத்துலையே யார் பேச்சையும் கேட்காது இப்போ சுத்தம் நானே பயந்து பயந்து தான் பேசுவேன் உடையவன் தம்பி மாதிரி பழக மாட்டான் இவ்வுளவு ஏன் இத்தனை வருசத்துக்கு என்ன இப்போ தான் வாய் திறந்து ‘மாலா அக்கானு’ கூப்பிட்டுருக்கான்.

அவனைப் பற்றி என்ன கண்டாள் அவள் முதல் முதலில் அங்குச் செல்லும் போதுக் குடும்பமே மர்ம தொடர் போல் இருந்தது.ஒரே ஆண் மூன்று பெண் பிள்ளைகள் இதில் இரு பிள்ளைகள் பருவ வயதில், ஒரு பிள்ளை பால் மனம் மாறாமல் மாலா விடயத்தைச் சொல்லும் வரையில் என்ன ஆச்சு?யார் இவன்? இந்தப் பிள்ளைகள் என்று ஓராயிரம் கேள்விகள் வண்டாய் குடந்ததை எங்கனம் போய் சொல்ல.

ஒருவழியாகச் சில தகவல் பெற்று இப்போது தான் அக்குடும்பத்தில் உள்ளவர்களை அறிந்திருக்கிறாள் அப்படி இருக்கையில் எங்கனம் இவனைப் பற்றி அறிய.

பானுவை பசியாற்றி நெஞ்சோடு அனைத்து தூங்க வைத்து தனது மகளுக்கு மறுபுறம் படுக்க வைத்தவள் அடுத்து என்ன என்பது போல் மாலாவை பார்க்க,

அவரும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார் என்ன சொல்லி இப்பெண்ணுக்கு புரிய வைப்பது நீ எண்ணியது போல் நமது சமூகம் இல்லை பெண்ணே இச்சமூகம் சுயநலம் மிகுந்த மக்களை கொண்டவை உன்னை போல் மனம் படைத்தவர்கள் இதில் தேங்கி நிற்பது அத்தனை எளிதல்ல என்று எண்ணி பெருமூச்சு விட்டவர் ஒரு முடிவுடன் வெளியில் சென்றார்.
*************
அங்கே உடையவன் கெஞ்சி கொண்டு நின்றான் “அண்ணா நீ வா அந்தப் பொண்ணு காலையில வரும் நான் பேசி இனி அங்கையே தங்குற மாதிரி ஏற்பாடு பண்ணுறேன்”

“இல்லடா பானு பாப்பா இப்போதான் என்கூடப் பழகி இருக்கு…….” கிட்டத்தட்ட ஒரே வார்த்தையைப் பல பல விதமாகச் சொல்லி கொண்டு இருக்கும் தனது தமையனை என்ன செய்தால் தகும் என்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தான் உடையவன்.

அவனும் வித விதமாக அவனை மாற்ற எண்ணினால் பானு வேண்டும் அதற்கு வஞ்சி வேண்டும் ... இருவரும் வேண்டும் என்று வாக்கியத்தை மாற்றி அமை என்பது போல் பேசி வைக்கிறான்.

உடையவன் மண்டை காய்ந்து போய் நிற்க மாலா அவர்களை நெருங்கி “பெரிய தம்பி பாப்பா நல்ல தூங்குது காலையில அங்கன வரோம் இப்போ முழிச்சா புள்ள உடம்பு தாங்காது ஏற்கனவே காய்ச்சல் கண்ட உடம்பு”

“காய்ச்சலா எப்போ? ஏன்? என்கிட்டே சொல்லல” என்றவனை முறைத்துக் கொண்டே “கனவுல இருந்து நீ இப்போதான் முழிச்சு இருக்க அவளுக்கு அடிக்கடி உடம்பு முடியாம போகும் இது இயல்பு தான்” அவனது பேச்சில் உள்ள உண்மை சுட்டாலும் அதனைக் கண்டு கொள்ளும் நிலையில் அவன் இல்லை

“சரிக்கா காலையில வரத்தானே போகுது அதை இப்போ வந்த என்ன” என்றவனை என்ன செய்ய

“அடேய்!.....” என்று அவனது மண்டையைப் பிடித்து ஆட்ட வேண்டும் போல் தோணியது இருவருக்கும் இது சரிவராது என்று எண்ணிய மாலா சடாரென வீட்டினில் நுழைந்து அமர்ந்திருந்த வஞ்சியிடம்

“வஞ்சி நீயே அவன்கிட்ட பேசு இல்லாட்டி சரிவராது ஆடமா நிக்கிறான் இவன் இங்கன வந்ததை எத்தனை பேர் பார்த்தங்களோ அதுக்கே நாளைக்கி பதில் சொல்லியாகணும் இதுல நம்ப அங்க போனோம் சுத்தம்”

“அக்கா!.....”

“வேற வழியில்லை வஞ்சி போ போய்ப் பேசு நாளைக்கி விடியல் அங்கன தான் பேசி முடுச்சுட்டு வந்துருவோம் இனி எங்கையும் வேலைக்குப் போக வேண்டாம்”

“சரிக்கா” என்றவள் தயங்கியவாறே வெளியில் செல்ல இரு ஆண்களும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து பார்த்தனர் அவர்கள் பார்வை உணர்ந்த வஞ்சிக்கு தான் பகிரென்றது கொடுமை கொடுமை என்று கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒன்று ஆடிய கதையாகி போனது அவளுக்கு. தான் பயந்தாள் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவள்

“சார் நான் நாளைக்கி காலையில வந்து நம்பப் பாப்பாவ விடுறேன் சார் கொஞ்சம் நிலைமையப் புரிஞ்சுக்கிடுங்க”

எந்த வித மறுப்பும் இல்லாமல் உடனே “சரி ஆனா காலையில ஆறு மணிக்கெல்லாம் அங்க இருக்கனும்” கட்டளையாகச் சொன்னவனைப் பார்த்து தலையைப் பலகமாக ஆட்டிவைத்தாள்

அவள் ஒப்புதலில் மகிழ்ந்தவன் “நான் வரேன்” என்று இருவர் நிற்பதை மறந்து செல்ல செல்லும் அவனை ஆ... வென்று பார்த்துக் கொண்டு நின்றனர் மாலாவும் உடையவனும்.

உடையவன் நானும் ஒரு மணி நேரமா இதைத் தாண்ட சொல்லிக்கிட்டு இருந்தேன் என்று எண்ண மாலாவோ இது என்னடா கூத்தா இருக்கு சரியில்லையே என்று மனதுக்குள் அலறி விட்டார்.

உடையவனைப் பார்த்தவர் “தம்பி காலையில வரோம் பேசிக்கலாம் நேரம் ஆகுது துளசியும்,மதுவும் தனியா இருப்பாங்க நீங்க கிளம்புங்க” என்று சொல்ல சரியென்று தலையை ஆட்டியவன் கிளம்பும் முன்பு மாலாவை பார்த்துச் சங்கடமாக “அக்கா நீங்க எதுவும் தப்ப நினைச்சுக்காதீங்க எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம் எங்க குடும்பத்தால உங்களுக்கோ அந்தப் பொண்ணுக்கோ மன கஷ்டம் வராது” என்று சொல்ல

“சரிங்க தம்பி” என்றவர் வேறு எதுவும் பேசவில்லை அவனை வழி அனுப்பி வைத்து விட்டு கதவை தள்ளிட்டு வர வஞ்சி அழுது கொண்டு இருந்தாள்

“வஞ்சி............. “சற்று அழுத்தமான அழைப்பு

“அக்கா...........”

“நீ எதுவும் பேச வேணாம் உன்ன எதுக்கு எடுத்தாலும் அழுகாதனு சொல்லி இருக்கேன் அழுதா தோத்து போயிடுவோம் எதுவா இருந்தாலும் நாளைக்கி பேசிக்கலாம் தூங்கு” என்றவர் இரவு விளக்கை போட்டு விட்டு படுத்து விட்டார்.

கண்கள் மூடி இருந்தாலும் நாளை விடியலை எண்ணி இரு பெண்களும் கலங்கி தான் இருந்தார்கள்.அவர்கள் எண்ணியது போல் தான் கலக்கத்துடன் விடிந்தது...

காலையில் பால் வாங்க கிளம்பி கொண்டு இருந்த மாலாவை வாசலில் நின்று ஏலம் போட்டுக் கொண்டு இருந்தார் வீட்டின் உரிமையாளர் பக்கத்தில் அவர் பையன் நின்று கொண்டு இருக்க மாலாவிற்குப் புரிந்து போனது தன்னைச் சமாளித்துக் கொண்டு

“வாங்க அக்கா என்ன விடியல்ல வந்து இருக்கீங்க”

“என்ன மாலா இது ராத்திரி இரண்டு ஆம்பளைங்க வந்துட்டு போனாங்கனு எதிர்த்த வீட்டு சாந்தி விடியும் விடியாம வந்து காத்திட்டு போரா என் புருஷன் உடனே காலி பண்ண சொல்லுன்னு நிக்கிறாரு”அப்போதான் முழித்த வஞ்சி அவர் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனாள்

“அக்கா என்ன பத்தி தெரியாதா உனக்கு”

“உன்ன பத்தி கவலை இல்ல ஆனா புதுசா வந்த பொண்ணு சரில்லை போலவே”

“அக்கா!.......... அது சின்னப் புள்ள வாழ வேண்டியது தரிசா நிக்குது அதைப் போய்”

“அது தான் பிரச்சனை மாலா உனக்கு அந்தப் பொண்ண பத்தி தெரியலாம் ஆனா எங்களுக்கு இப்படிதான் யோசிக்கத் தோனும்”

“என்னக்கா…”

“என்ன கேட்டா அந்தப் பொண்ண பத்தி விடு நீ மட்டும் இரு” அவரது பேச்சில் மாலாவே அதிர்ந்து நிற்க வஞ்சி வாயை மூடி கொண்டு அழுதாள்.

“அக்கா என்ன நம்பி வந்த புள்ள போக்கிடம் இருந்தா அவ ஏன் என்ன நம்பி வரா சொல்லுங்க”

“அதெல்லாம் எங்களுக்குத் தேவை இல்லங்க முதல இடத்தைக் காலி பண்ணுங்க” என்று அவர்கள் மகன் கத்த

“வேலு நான் பேசிக்குறேன் நீ அமைதியா இரு” என்றவர் மாலாவை பார்க்க சிறு பையன் பேசியது கோபத்தைக் கிளற “எனக்கு ஒரு மாசம் அவகாசம் வேணும் காலி பண்ணிக்கிறேன்”

“என்ன மாலா இது”

“என்னக்கா பண்ணுறது நான் வாக்குக் கொடுத்துட்டேன் அந்தப் புள்ளைய தனியா விட முடியாது” என்றவரை பார்த்து “சரி மாலா உனக்காகத் தரேன் பார்” என்றவர் சென்று விட்டார் அவருக்கு மாலாவை விட மனதில்லை நல்ல பெண் என்று.

வஞ்சியைப் பார்த்தவர் எதுவும் நடவாதது போல் “வஞ்சி முகம் அலம்பிட்டு வேலைய பாரு நான் கடைக்குப் போயிட்டு வரேன் நூல் வாங்கனும் கொஞ்சம் நேரமாகும் பிள்ளைகள் முழிக்குறதுக்குள்ள வந்துருவேன் என்ன”

துக்கத்தைத் தொண்டையில் அதக்கியவள் “சரிக்கா” என்று சொல்ல அவளது வலியைக் குரல் மூலம் அறிந்தவள் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார்.

அவர் சென்றதும் சிறுது நேரம் கண் மூடி நின்றவள் ஒரு முடிவாகத் தனது பையைத் தோளில் சுமந்து இரு பிள்ளைகளையும் கைக்கு ஒன்றாகத் தூக்கி கொண்டு உடையவன் வீட்டை நோக்கி நடக்கப் பாதி வழியில் சரசு வந்தவர்.

“என்ன வஞ்சி புள்ள உங்கிட்ட தூங்குச்சா”

அவரது கேள்வியில் ஒரு நிமிடம் நின்றவர் பானுவை அவரிடம் நீட்டி “பார்த்துக்கோங்க” என்று மட்டும் சொன்னவள் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டாள் சரசு ஒன்றும் புரியாமல் குழந்தையை தூக்கி கொண்டு சென்றார்.

தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாக எங்கே செல்ல போகிறோம் என்பதை அறியாமல் ஒரு பேருந்தில் ஏறியவள் சுயம் தொலைத்து வெறித்துக் கொண்டு இருந்தாள்..

நல்ல வேளை அது டவுன் பஸ் என்பதால் தப்பித்தாள் குழந்தை முழித்துப் பாலுக்கு அழுக அப்போது தான் தனது மட தனத்தை உணர்ந்தவள் தவித்துப் போனாள்….
 
Last edited:
அடாடா இவன் இப்படி இருக்கானே
?
அதுக்குள்ளே வந்துட்டாங்களா
வீட்டுக்காரம்மா
?
இவ எதுக்கு இப்ப பிள்ளய
தூக்கிட்டு எங்க போக போறா
??
 
அடாடா இவன் இப்படி இருக்கானே
?
அதுக்குள்ளே வந்துட்டாங்களா
வீட்டுக்காரம்மா
?
இவ எதுக்கு இப்ப பிள்ளய
தூக்கிட்டு எங்க போக போறா
??
அம்புட்டும் லூசு மா
 
Top