அணலில் துளிர்த்த பூந்தளிரே 2
உலகை ஆளும் பரமேஸ்வரனின் பாதியானவளின் முன்னே கைகூப்பியவாறு நின்றிருந்தாள் பெண்ணவள்.. அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் அவளின் வலியை சொல்லியது.. அவளின் பின்னே நின்ற தாட்சாயினிக்கு அவளின் அழுகை வேதனையை தான் தந்தது.. தன் குடும்பத்தால் இந்த சிறு பெண் சிந்திய கண்ணீர் கொஞ்சமல்லவே.
மெதுவாய் தன் கரத்தை உயர்த்தி அவளின் தலையை பாசமாய் தடவி கொடுத்தார்.
அவரின் தொடுகையில் தன் அழுகையை நிறுத்தியவள் புன்னகை முகமாய் அவரின் பக்கம் திரும்பிவள்,
"ஒன்னுமில்லை பாட்டி.." என்றாள் சிரித்தபடி.
அந்த சிரிப்பில் இருந்த வலியை உணர்ந்தவருக்கு அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்து வைத்தார்.
" என்ன பாட்டியும் பேத்தியும் சாமி கும்பிட்டாச்சா போலாமா.." என்று இருவரிடமும் பொதுவாய் கேட்டபடியே அங்கே வந்தார் வர்த்தன்.
" ம்ம் போலாம் தாத்தா.." என்று சிரித்தபடி தலையாட்டியவள் அவரின் தோளில் உரிமையாய் சாய்ந்து கொண்டாள்.
அவளின் தலையை பாசமாய் வருடிக் கொடுத்தவர்,
"மாதும்மா அங்கே பாரு பிரசாதம் வச்சிருக்கேன்.. நீ போய் உன்னோட பிரன்ஸ்க்கு கொடுத்துட்டு வா.." என்று அவளை அனுப்பி வைத்தவர் தன் மனைவியின் புறம் திரும்பி,
"இப்போ எதுக்கு தாட்சா அழற.. அந்த அப்பாவி பொண்ணும் உன்னை பார்த்து அழவா.. அவளை எந்தளவுக்கு சந்தோஷமா பாத்துக்குறோமே அது தான் அந்த பொண்ணுக்கு நாம செய்யற நன்றிக் கடன்.. முதல்ல உன் கண்ணை துடை.. அதோ அங்கே பாரு அந்ந பொண்ணு எவ்வளவு சந்தோஷமா அந்த மீன்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கா.. ஆனா நீ பழசை நினைச்சி அந்த பொண்ணை அழ வைக்கு பாக்குற.. வேணாம் தாட்சா வா போலாம்.." என்று தன் மனைவியை சமாதானம் செய்து அழைத்து சென்றார் வர்த்தன்.
இங்கே மென்மையாய் சிரித்தபடி குளக்கரை மீன்களுக்கு உணவளித்த கொண்டிருந்த மாதுவின் முகத்தில் திடிரென பயம் சூழ கண்கள் இருட்ட மயங்கி விழப்போனவளை வலிமையான கரம் ஒன்று தாங்கியது வஞ்சியவளை.
அவளின் வதனத்தின் நெருக்கத்தில் ஆடவனின் கோப முகம் தான் தெரிந்தது.
தன் கையில் பூமாலையாய் விழுந்தவளை தாங்கியவனுக்கு ஏதோ சில்லென்று தாக்கிய உணர்வு.. ஆனால் அது கொஞ்ச நேரம் தான்.. சற்று நேரத்தில் தெளிந்தவன் பெண்ணவளை படியில் படுக்க வைக்க போகும் நேரம்,
"டேய் சிபி அவளை விட்றாதடா.. சீக்கிரம் தூக்கிட்டு வா டா.. " என்று படபடத்தபடி ஓடிவந்தனர் தாட்சாயினியும் வர்த்தனும்.
அவர்களை கண்டதும் ப்ச் என்று சலித்துக் கொண்டவன் அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு பெரியவர்களை தாண்டி சென்றான்.
அவர்களும் அவனின் பின்னே பதட்டத்துடன் சென்றார்கள்.. அவர்களுக்கு இருந்த பதட்டம் கூட ஆடவனுக்கு கிஞ்சித்தும் இல்லை.
வர்த்தனின் வீட்டின் வந்து நங்கையை படுக்க வைத்தவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க அவனின் பின்னே வந்த தாட்சாவும் வர்த்தனும் பதட்டத்துடன் அவளுக்கு தண்ணீர் தெளித்து அவளின் முகத்தை துடைத்தார்கள்.
பெண்ணவளோ அரை மயக்க நிலையில் படுத்திருக்க அவள் கண் விழித்துவிட்டாள் என்றறிந்ததும் தான் வயதான தம்பதிகள் நிம்மதியாய் மூச்சு விட்டனர்.
வர்த்தன் கோபமாய் சிபியின் பக்கம் திரும்பி,
"இப்போ எதுக்கு இங்கே வந்த.. அது தான் நாங்க வேணாம்னு போயிட்ட இல்லை.. இருக்கற கொஞ்ச நாள்ல எங்களை நிம்மதியா வாழ விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா சிபி.." என்றார் கோபமாய்.
அதை கேட்டவனுக்கு ஆத்திரம் எழ, "தாத்தா.." என்றான் அழுத்தமாய்.
"என்ன டா தாத்தா.. உன்னோட தாத்தா பாட்டிங்கன்ற நினைப்பு இருக்கா.. அப்படி இருந்தா இந்த சின்ன பொண்ணை இப்படி கலங்கடிச்சி வச்சிருப்பியா டா.." என்றார் ஆதங்கம் தாளாமல்.
" தாத்தா கேவலம் இவளுக்காக என்னை விட்டு குடுத்துட்டீங்க இல்லை.. உங்க ரெண்டு பேருக்கும் என்னை விட இவ முக்கியமா போயிட்டாளா பாட்டி.. நான் அனாதை மாறி எங்கேயோ இருக்கேன்.. ஆனா இவ உங்களோட இருக்கா.. இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க பாக்கலாம்.. நான் உங்களுக்கு முக்கியம் இல்லையே.. இவ ஏன் என்னை கண்டு பயப்படனும்.. அப்போ ஏதோ இவகிட்ட தப்பு இருக்கு இல்லை.. அதெல்லாம் உங்களுக்கு தெரியாது இல்லை.. நான் இவகிட்ட பேசக்கூடாது இல்லை..
இவ பெரிய ராணி மாறி இங்கே இருக்கனும்.. ஆனா நான் அனாதையா இருக்கனும் இல்லை.." என்றான் ஆவேசமாய்.
"ஏய் சிபி என்ன பேசுற நீ.. எங்களுக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும் டா.. உனக்காக இவளையோ.. இல்லை இவளுக்காக உன்னையோ நாங்க இழக்க முடியாது சிபி... அதை முதல்ல புரிஞ்சிக்கோ டா.." என்றார் தாட்சாயினி.
" நோ பாட்டி உங்களுக்கு யாரு முக்கியம்னு நீங்க தான் தீர்மானிக்கனும்.. அது நானா இதோ இவளா.. இவ தான் வேணும்னா இனி எப்பவும் நான் உங்களோட பேரனா சொந்தம் கொண்டாட மாட்டேன்.. முடிவு உங்க கையில.." என்றவன் படுத்திருந்தவளை வெறுப்பாய் பார்த்து விட்டு சென்றான்.
அவன் சென்ற திசையை பார்த்தவர்களுக்கு மனம் நிலையில்லாமல் தவித்தது.. உதிர சொந்தமா..? இல்லை உயிர் சொந்தமா..? என எதை சொந்தம் கொண்டாட என்று திக்கு தெரியாமல் திண்டாடி போகின்றனர் சில நேரம் ஆடவனின் பைத்தியக்காரத்தனமான பிடிவாதத்தால்.
அரை மயக்க நிலையிலும் வஞ்சியின் நெஞ்சமதில் அழுத்தமாய் விழுந்தது அவனின் வார்த்தைகள்.
அவளின் மனம் போரட்டமாய் மாறியது.. அவளின் மனதில் ஓடிக் கொண்டிருந்த ஒரே விஷயம் தன்னால் இந்த குடும்பம் பிரியக் கூடாது என்பது தான்.
மனதை கல்லாக்கி கொண்டவள் வயதான பெரியவர்கள் தன்னால் நிம்மதியிழந்து தவிக்கக் கூடாது என்ற நிலையில் அவர்களை விட்டு விலகுவதில் தவறில்லை என்று முடிவு செய்தவள் சற்று நிம்மதியாய் உணர்ந்தாள்.
இங்கே தன் அறைக்கு வந்தவன் தன் உள்ளங்கையை ஒரு முறை அழுத்திப் பார்த்துக் கொண்டான்.
கரடு முரடான கரங்களுக்குள் இன்று ஒரு பூவை ஏந்திய உணர்வு.. பாசம் நேசத்தை உணராதவனுக்கு இந்த உணர்வு புதிதாய் இருந்தது.. ஆனாலும் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமையை அவள் தட்டி பறித்தது தவறு தானே என்று மனம் முரண்டியது.
ஏனோ அவள் மேல் கோபம் கொள்ளும் சமயம் எல்லாம் அவனின் உள்ளுணர்வு அவளின் நினைவையே தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.. அதன் காரணம் விளங்காமல் தான் ஆடவன் சில நேரத்தில் தவித்து துடித்து போகிறான்.
முதன் முதலில் அவளை பார்த்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் பதிந்து போனது.
சிபியின் தந்தை மணிவேலன் பெரிய பணக்காரர்.. ஊரில் மதிப்பு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அதுவும் வர்த்தன் குழுமத்தின் ஒற்றை வாரிசு.. அவரின் மனைவி தேவனா.. ஒரு கிறிஸ்துவர்.. இருவரும் அந்த காலத்திலேயே காதல் கலப்பு திருமணம்.. மற்ற காதலர்களை போல் ஊரை விட்டு ஓடிப் போகாமல் வர்த்தனே மனமுவந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
அதன் பலனாக தேவனாவும் வீட்டிற்கேத்த மருமகளாய் வளைய வந்தார். மணிவேலன் தேவனா காதல் பரிசு தான் சிபி..
சிபி பிறந்த பனிரெண்டு வருடத்திலே தேவனாவும் மணிவேலனும் ஒரு கார் விபத்தில் இறந்து போக சிபி தாத்தா பாட்டியின் பொறுப்பில் வந்தான்.
தாய் தந்தையை இழந்து தனிமையில் இருந்த சிபிக்கு ஆறுதலாய் இருந்தது தாட்சாயனியும் வர்த்தனும் தான்.. ஆறு மாதம் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் பேரனை பார்த்துக் கொண்டவர்களின் கரங்களில் வந்து சேர்ந்தாள் மூன்று வயது மாந்தளிர்.
பள்ளி முடித்து வந்த சிபியின் பார்வையில் விழுந்தாள் ஒரு மூலையில் அமர்ந்தபடி இருந்த மாந்தளிர்.. பார்ப்பதற்கே பாவமாய் இருந்தவளின் முன்னே அமர்ந்த தாட்சாயினி அவளுக்கு உணவை ஊட்ட முயல அந்த சிறு மொட்டோ அந்த உணவை வாங்காமல் பயத்துடன் அவர்களை பார்த்திருந்தாள்.
அவளை கண்ட சிபிக்கு ஏனோ முதல் பார்வையிலே அவளை பிடிக்காமல் போனது.
இது நாள் வரை தான் வீட்டுக்குள் வந்ததும் தன்னை தேடி வரும் தாத்தா பாட்டி இன்று அவளிடம் கெஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருந்தது ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கேற்ப முதல் பார்வையிலே சிபிக்கு அவளை பிடிக்காமல் போனது.
அடுத்த காரணமாய் இத்தனை நாட்களாக அந்த வீட்டின் செல்லப் பேரனாய் இளவரசனாய் வளர்ந்தவனுக்கு இன்று இரண்டாவதாய் போனது சுத்தமாய் பிடிக்கவில்லை.
அதே நேரம் எந்நேரமும் அழுது கொண்டிருக்கும் மழலையை ஏனோ சுத்தமாய் பிடிக்கவில்லை.
அதுவும் தாட்சாயினியும் வர்த்தனும் அவளுக்கு பாதுகாப்பாய் இருக்க பால்ய பருவத்தில் இருக்கும் ஆடவனுக்கு சுத்தமாய் பிடிக்காமல் எதற்கு எடுத்தாலும் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் தாத்தா பாட்டி என அனைவரிடமும் ஒதுங்க ஆரம்பித்தவன் படிப்புக்காக லண்டன் செல்கிறேன் என்று பிடிவாதம் பிடித்தான்.
முதலில் மறுத்த தாட்சாயினியும் வர்த்தனும் சிபியின் உண்ணாவிரத போராட்டத்தால் மனமிரங்கி அவனை வெளிநாடு அனுப்பினார்கள்.
லண்டன் படிக்க சென்றவன் கிட்டதிட்ட எட்டு ஆண்டுகள் கழித்து தான் ஊர் திரும்பினான்.
அதுவும் தங்களது சொந்த கம்பெனியை டேக் ஓவர் செய்து தொழில் செய்ய ஆரம்பித்தவன் தாத்தா பாட்டி இருக்கும் வீட்டிற்கு அதிகம் செல்ல மாட்டான்.
கம்பெனியின் அருகிலே ஒரு பங்களாவை விலைக்கு வாங்கியவன் அங்கேயே தங்கி பல புதிய நிறுவனங்களை நிறுவி அதில் தன்னை மூழ்கடித்து கொண்டான்.
என்றாவது அவனுக்கே தோன்றினாள் தான் தாட்சாயினி வர்த்தனை காண வருவான்.. அதிலும் மாந்தளிர் இல்லாத நேரமாய் பார்த்து தான் வருவான்.. அவர்களை பார்த்து நலன் விசாரித்து விட்டு உடனடியாக சென்றும் விடுவான்.
அப்படி ஒரு முறை வரும் பொழுது தான் மாந்தளிரை கண்டான்.
தங்களது வீட்டிற்கு போகும் பாதையில் காரை ஓட்டி வந்து கொண்டிருவனின் வண்டி திடிரென நின்று விட்டது.. என்ன ஆயிற்று என்று இறங்கி பார்த்தவனின் கண்களில் டயர் பஞ்சர் ஆகியிருந்தது.
அதை பார்த்தவனுக்கு இன்று ஏதோ அவசரத்தில் வண்டியை செக் செய்து எடுத்து வராதது உணர்ந்தது.. வேறு வழி இல்லாமல் நடந்தே தாத்தா வீட்டிற்கு செல்ல வேண்டியது தான் என்ற எண்ணத்தில் நடந்தவன் தனது செகரட்டரி அரவிந்தனுக்கு கால் செய்து வண்டியின் நிலவரத்தை தெரிவித்தவன் தனக்கு வேறு வண்டியை டிரைவருடன் அனுப்புமாறு கூறி விட்டு கட் செய்தவன் கண்களில் அழகான தாமரை குளம் விழுந்தது.
பார்வையை வேறுபுறம் தாண்ட முடியாமல் மெழுகு பொம்மையென சிலையாய் நடனமாடி கொண்டிருந்த பெண் மயிலை கண்டவனின் மனம் எங்கும் பரவசமாகிப்போனது.
அடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே.. கதையோட நிறை குறைகளை சொல்லவும் மக்களே.