நைஸ் கமெண்ட் சிஸ்சரண்யா சிஸ் உங்களோட ஏழாவது அறிவை கசக்கி பிழிந்து இதுக்காகவே நாலு பேர் கொண்ட நாலு ஸ்பெஷல் டீம் எல்லாம் ஃபார்ம் பண்ணி மொத்த அரைவேக்காடுகளையும் ஒன்னா திரட்டி இந்த கதைக்குள்ள கொண்டு வந்திருக்கீங்க
அழகர் குடும்பம் அரைகுறையாக பேச
அதை சாந்தா அரைகுறையா கேட்க
அதை கதிர் கிட்ட அரைகுறையா சொல்ல
அதை அரைகுறை மயிலு கேட்டு கல்யாணம் ஏற்பாடு செய்ய
கல்யாணத்தை பத்தி சாந்தா அழகர் வீட்டில் அரைகுறையா சொல்ல
அதை பத்தி அரைகுறையாக அழகர் குடும்பம் பேச
அதை அரைகுறையா அழகர் கேட்க
அரைகுறையா ஒரு திட்டம் போட
அரைகுறையா லஷ்மி கிட்ட சம்மதம் கேட்க
அந்த அரைகுறை லஷ்மி அரைகுறையாக கேட்டுட்டு சம்மதம் சொல்ல
அரைகுறையா ஒரு கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு
இந்த சாந்தா ஒழுங்கா வீட்டுக்குள்ள போயிருந்தா ஒரு ரூபாய் வெற்றிலை ஒரு ரூபாய் பாக்கு வச்சு சிம்பிளா பேசி முடிச்சிருக்கலாம் இப்போ உலகப் போர் அளவுக்கு உள்ளூர் போர் வந்திடுச்சு
லஷ்மி மாமா என்று கூப்பிட்டுட்டா அழகர் கவனிச்சானா