Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 23 (2) Final

Advertisement

காதல் தம்பதியின்
காலம் மாற்றமும்
கனவு தடுமாற்றமும்
காதலும் நம்பிக்கையும்
கைகொடுக்கும்
குடும்பத்தின் தைரியமும்
காலம் கடந்தாலும்
கனவை நனவாக்கலாம்
கணவன் துணை கொண்டு...
👏🏻👏🏻💕💕👍🏻👍🏻💐🤩🤩🤩❤️❤️😀😀😘😘
தந்தையின் ஆசையை
தாயின் உணர்வுகளை
அண்ணனின் ஆதரவும்
அண்ணியின் தோழமையும்
மாமனார் மாமியாரின்
உடல்நிலையும்
உறவுகளை சரிசமமாக நடத்தும் பண்பும்
கணவனுக்கு துணையாக
பிள்ளைகளின் வளர்ப்பு
அனைத்துமாக
வானதி......அருமை....
பெண்ணின் பரிணாமம்
பெருமையே.....
பாடமாக சொல்லித்தரும்
கதை..... அற்புதம்.....
நன்றிகளும் வாழ்த்துக்களும் 👏🏻👏🏻👏🏻💐💐💐🤩🤩🤩🤩
அருமையா வார்த்தைகள கோர்த்துருக்கீங்க sis. 🥳💐
 
அருமையான கதை
வானதி புருசன் மீது அளப்பறிய
காதல்
ஆனா அதையும் தாண்டி
குடும்ப சவால்களினால்
உண்டாகும் பிரச்சனைகள்
அதை எப்படி சமாளிக்கிறானு
சொல்லியிருந்தது
ஒவ்வொரு பெண்ணுக்கும்
தேவையான அறிவுரைனு தோனுது

அம்மா பாக்கியம் இவர்
மாதிரி அம்மா மாமியார்
எல்லாம் கிடைச்சா
குடும்பத்துல பிரச்சினையே இல்லை
அண்ணன் மாதவன் துணை
வானதி யின் இன்னொரு பலம்
அண்ணி அர்ச்சனாவின் குணம்
ரொம்ப பொறாமை பிடிச்சவளோனு
நினைக்க வச்சு அப்படியில்லை
நல்ல தோழி போல தான்
காமிக்கிறா
ரெண்டு பேரும் பேசும்
விசயங்கள் வானதியின்
பதில்கள்
அருமை

மாமியார் தாமரைமருமகளை
பிடிக்காம பழகி நமக்கு.
எரிச்சல் குடுத்து
தீடிருனு நம்ப முடியாத மாற்றம்
தருவாங்க பாருங்க
வானதி அதிர்ச்சி ஆனாலோ
என்னமோ எனக்கு நம்பவே முடியல

மாமனார் தெளிவா
சொத்து பிரிச்சது நல்லா இருக்கு
மதியழகி கொஞ்சம் நாத்தனார்
குணம் இருந்தாலும்
பரவாயில்லை நல்லவனு சொல்லலாம்

குழந்தைகள் நேத்ரன் எத்தனை
பக்குவம் புரிதல் பிள்ளை
மனச அள்ளிட்டான்
ஹரிணி நட்ச்சத்திராவும் அழகு

வானதி அப்பா பெருமைபட்டு இருப்பார் எங்க இருந்தாலும்
மகள் சாதனையை பார்த்து

இளங்கோ ஒரு மூத்த மகனா
சகோதரனா‍ மச்சினனா
தகப்பனா மருமகனா
எல்லா இடங்களிலும் பொறுப்பா
பொறுமையா போனது அருமை

மனைவி விசயத்தில் அவள்
மனச புரிஞ்சு காதலையும்
கண்டிப்பையும்
அவள் கனவுக்கு உறுதுணையாக
இருந்து சாதிக்க வச்ச
காதல் துணைவன்

வானதி இளங்கோ சிஏ
ரொம்ப அருமை 😍 💐👍
 
அருமையான கதை 💖 💖 💖 💖 💖.
ஒரு பொண்ணோட கண்ணால வாழ்க்கைல ஏற்படற மனம் உடல் நிலை பாதிப்பு அதனால வர்ற ஏற்றதாழ்வுகளை அருமையா சொன்னீங்க ஜீ.
இந்த காலகட்டத்தை கடந்து வருவதற்கு எத்தனை குடும்பத்துல பொண்ணுங்களுக்கு ஆதரவுக்கரம் குடுக்கறாங்க உறவுகள்.
அன்றாட வாழ்வில் நடைபெறும் பிரச்சினை களை எதார்த்தத்தோட அருமையா தந்தீர்கள் ரைட்டர் ஜீ.
 
போன கமெண்ட்லயே சொன்ன மாதிரி ஜஸ்ட் கதை தானேனு என்னால கடந்து போக முடியல. அதுனால தான் அவ்வளவு பெரிய கமெண்ட் 🙂 அந்த கமெண்ட்டோட contextல மீதி கதைய பத்தி எனக்கு தோணுறத சொல்றேன். முக்கியமா கதையில இருக்கிற நாத்தனார் அண்ணி உறவ பத்தின கருத்துகள் இது.


இங்க அர்ச்சனாவோட பொறாமை, புலம்பல், டென்ஷன் இதுக்கும் வானதிக்கும் எந்த சம்மந்தமுமில்ல, அது மொத்தமா அவுங்க தனிப்பட்ட பிரச்சனை அப்படிங்கிற மாதிரி வர்றத ஏத்துக்க முடியலனு ஏற்கனவே சொல்லியிருந்தேன். ரெண்டுபேர் சைட்லயும் இருக்கிற நிறைகுறைகளை பேசியிருக்கலாம் என்பது என் கருத்து.


வானதி பிறந்த வீட்டுல எப்படியோ, அப்படி தான் அர்ச்சனாவுக்கும் அவுங்க வீடுனு சொல்ல அர்ச்சனாவோட அண்ணியும், தம்பி பொண்டாட்டியும் பத்தின பேச்சு வந்த மாதிரி இருந்தது. அர்ச்சனா பேசுன டயலாக் எல்லாம் வானதி சார்பா கொடுக்கப்பட்ட ஜஸ்டிஃபிகேஷன் போல தெரிஞ்சது. ஆனா அதுலயும் பணம், வசதியில இருக்கிற வித்தியாசம் தான் பிரச்சனைனு சொல்றாங்க.


பெத்தவுங்க மகளுக்கும் மகனுக்கும் சரிசமமா சொத்து கொடுக்கணும்கிறது சரி. இது ரொம்ப வருஷம் போராடி பெற்ற உரிமை. அது இந்த காலத்துல இயல்பாகியிருக்கிறத நிச்சயம் வரவேற்கணும். ஆனா இங்க பிரச்சனை சொத்து, பணம் பத்தி மட்டும் இல்ல.


நாத்தனாரும் அண்ணியும் தினசரி வாழ்க்கையில ஒரே வீட்டுல நடமாடுற நிலைமை இருக்கும் போது ரெண்டு பேர்ல யாருக்கு அதிக அட்வான்டேஜ் இருக்கு அப்படிங்கிறது தான். இது உணர்வு சம்மந்தப்பட்டது.


ஒருகாலத்துலயும் மகள் இடத்தை மருமகளுக்கு கொடுக்க மாட்டாங்க நம்ம அம்மா. இது நமக்கும் தெரியும். இது தான் பிறந்த வீட்டுல நமக்கு இருக்கிற நம்பிக்கையே!


இன்னைக்கு சூழ்நிலைல அம்மா வீட்டுக்கு பக்கத்துல தனிக்குடித்தனம் போறது இயல்பு தான். வேலைக்கு போற பொண்ணுங்களுக்கு மாமியார் சப்போர்ட் இல்லனா பிள்ளைங்கள வளர்த்து கொடுக்க அம்மா தயவு தேவைப்படுது. ஆனா, அதே வீட்டுல நம்ம அண்ணன் குடும்பமும் இருக்காங்கனும் போது முடிஞ்ச அளவுக்கு நம்மளால அவுங்களுக்குள்ள பிரச்சனை வராம பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கு.


ஏன்னா, நமக்கு பிறந்த வீடு ஒரு சப்போர்ட் சிஸ்டம். அங்கேயே நம்ம வாழ்றது இல்ல.


இது நான் பிறந்து வளர்ந்த வீடு, எங்க அம்மா எனக்கு ஹெல்ப் பண்றாங்க, இதுல அண்ணிக்கு என்ன பிரச்சனைனு மேலோட்டமா கடந்துபோக முடியாது.


ரொம்ப நெருக்கமான மாமியார் மருமகள் லைஃப்ல கூட, லீவுக்குனு வீட்டுக்கு நாத்தனார் வந்துட்டு போனதுக்கப்புறம் ஒரு ஜெர்க் இருக்கும். அது தான் அந்த உறவுகளுக்குள்ள இருக்கிற இயல்பு. அதை தவிர்க்க முடியாது. இதுல தினசரி வாழ்க்கையில நாத்தனாரும், அண்ணியும் ஒரே வீட்டுல புழங்கிற நிலைமை இருக்குனா, யாருக்கு அதிக சலுகை, உரிமை, moral support கிடைக்கும்னு நமக்கே தெரியும். இது தான் நாத்தனார் privilege. இந்த privilegeஐ நம்ம எந்தளவுக்கு யூஸ் பண்றோம்ங்கிறது ரொம்ப முக்கியம்.


பக்கத்துல தான் அண்ணன் இருக்கான். என்ன உதவினாலும் வந்து நிப்பாங்கிறது நமக்கு நிறைய நிம்மதியும், தைரியமும் கொடுக்கும். இன்னைக்கு இருக்கிற சூழ்நிலைல ஒருத்தர் நமக்காக நேரம் செலவிடுறது தான் பெரிய விஷயம். ஆனா, எங்க அண்ணனுக்கும் குடும்பம் இருக்கு, கமிட்மெண்ட்ஸ் இருக்கு, அதுக்கு அப்புறம் தான் அவனுக்கு நானும் என் குடும்பமும்னு உணர்றது தான் உண்மையான பாசம்.


வானதி மதியழகி மாதிரி சொத்துக்கு ஆசைப்படல, அம்மாக்கிட்ட அண்ணிய பத்தி குறை சொல்றதில்ல, அனாவசியமா அடுத்தவுங்க விஷயத்துல தலையிடுறது இல்ல, அர்ச்சனா மாதிரி மனசுல இருக்கிறத அப்படியே பேசி யாரையும் ஹர்ட் பண்றதில்ல. அதெல்லாம் சூப்பர் குவாலிட்டி. ஆனா, இதுனால மட்டுமே அவுங்களுக்கு பிறந்த வீட்டுல இருக்கிற privilege சரினு சொல்ல முடியாது.


எவ்வளவு நல்லவங்க, சமமான வசதி படைச்சவுங்களா இருந்தாலும் இந்த நாத்தனார், அண்ணி dynamics எப்பவும் மாறாது. பிரண்ட்ஸ் மாதிரி பழகினாலும், அது நார்மல் பிரண்ட்ஷிப்பா இருக்காது. இது தான் இயல்புனு உணர்ந்து அந்த எல்லைக்குள்ள உறவ அமைச்சிக்கிறது தான் பிராக்டிகல்.


வானதிக்கு ஆரம்பத்துல பிள்ளைங்கள பார்த்துக்க ஆள் இல்ல. பாக்கியம் தான் சப்போர்ட் பண்றாங்க. ஓகே. ஆபிஸ்க்கும் போயிட்டு வீட்டு வேலையும் செய்றது ரொம்ப கஷ்டம். முக்கியமா சாயந்திரம் களைச்சு போய் வரும்போது மறுபடியும் ரெடி ஸ்டார்ட்னு டின்னர் வேலைய ஆரம்பிக்கணுங்கிறது பெரிய ஸ்டரெஸ். வசதி இருக்குங்கிற போது அந்த தினசரி டென்ஷன தவிர்க்க வானதி முன்னமே தீவிரமா தேடி வீட்டுல சமையலுக்கு, மேற்படி வேலைக்குனு ஆள் ஏற்பாடு செஞ்சிருக்கலாம். முடிஞ்ச அளவுக்கு பிறந்த வீட்டு மேல இருக்கிற டிப்பெண்டன்சிய குறைச்சிருக்கலாம். பிள்ளைங்கள பார்த்துக்கற பாக்கியத்துக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்கும், அர்ச்சனாவோட பொறாமையையும் கேட்டுட்டிருக்க வேண்டாம். இப்ப மாமனார் மாமியார் வந்ததுக்கு அப்புறம் அவுங்க லைஃப்ல நிறைய சேஞ்சஸ் வந்திருக்கு. ஒருவேளை தனிக்குடித்தனமாவே இருந்திருந்தா, இது நடந்திருக்குமா தெரியல.


மாதவனுக்கு ஆரம்பத்துல இளங்கோ அளவுக்கு வேலையில முன்னேற்றம் வரல. அதுதான் அர்ச்சனாவோட பொறாமைக்கு காரணம்னு வருது கதையில. இந்த சூழ்நிலைல தங்கச்சி புருஷன் ஒரு luxury டிரிப் பேக்கேஜ் கிஃப்டா கொடுத்தா, அது இளங்கோவோட அன்பாவே இருந்தாலும் அதை மாதவனால முழுமனசா ஏத்துக்க முடியுமானு தெரியல. யாரா இருந்தாலும் அவுங்க ஈகோ அடிபடும்.


அடுத்து அதுக்கு சமமாவோ, அதை விட அதிகமாவோ மாதவன் செய்ய தான் வேணும். இளங்கோ, வானதி ஆசைப்படலனாலும் ஒரு அண்ணனா இருந்து யோசிச்சா நிச்சயம் செய்வார். அர்ச்சனா இப்படிப்பட்ட கொடுக்கல் வாங்கல விரும்புறது அவுங்க சுயநலம்னா, அவுங்க குணத்த பத்தி தெரிஞ்சும் இந்த கொடுக்கல் வாங்கல தொடர்றது தப்பு. அது மாதவனுக்கு தான் நெருக்கடி.


கிளைமாக்ஸ்ல அவருக்கு பிரமோஷன் வந்தது மகிழ்ச்சி. ஆனா, மேல சொன்னது அதுக்கு முன்னாடி இருந்த சூழ்நிலைய பத்தி. இந்த கதைய பொறுத்தவரைக்கும் எல்லாரும் அப்பர் மிடில் கிளாஸ். அப்பவே இவ்வளவு பிரச்சனை வருது. பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்கிற சராசரி மிடில் கிளாஸ் வாழ்க்கையில இது இன்னும் சிக்கல்.



இளங்கோ, வானதி லைஃப்ல பணம் ஒரு பெரிய பொருட்டு இல்ல. அவுங்களும் அதுக்கு ஆசைப்படல. அந்த குணாதியசியம் அருமை. ஆனா, நேரமும் அதுக்கு இணையா முக்கியம்னு புரிஞ்சிக்கணும்.



ஒரு இடத்துல ஹரிணி கிஃப்ட் வேணாம் மாமா, நேர்ல வாங்கனு சொன்னது ரொம்ப பிடிச்சது. இளங்கோ அன்றாட வாழ்க்கைல குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கினாலே போதும், பாதி பிரச்சனை தீரும் என்பது என் கருத்து.



தாமரை மாற்றம் சுயநலமானது தான். வானதிக்கு டென்ஷன் கொடுக்காத வரைக்கும் ஓகே. இப்படியே இருந்தா நல்லது. பிள்ளைங்கள பத்தி புரிஞ்சு கண்டிக்கிறது குட். இன்னும் மதியழகி மாறல. வானதி சம்பளம் எவ்வளவுன்னு கேட்டு அதுக்கு தகுந்தமாதிரி செலவு வைக்கிறாங்க. வெளிநாட்டுல இருந்துட்டு வானதிய வேலை வாங்குறாங்க. அதை வானதியும் பெருந்தன்மையா செய்றாங்கனு வர்றத ஏத்துக்க முடியல. ஒருத்தர் அனாவசியமான அட்வான்டேஜ் எடுத்துக்கிறத ஏன் அலோவ் பண்ணனும்!



மொத்தத்துல இந்த சொந்தபந்தம் கொஞ்சம் சிக்கலானது. சில விஷயங்கள்ல சரியான இடைவெளியோட இருக்கிறது தான் எப்பவுமே நல்லது. வீட்ல தேவையில்லாத டிராமா, நெகட்டிவிட்டிய தவிர்க்கலாம்.



எனக்கு கதை படிக்கிறதும் அதை பத்தி பிரண்ட்ஸ்கிட்ட டிஸ்கஸ் பண்றதும் ஒரு தெரபி மாதிரி. ஒரு ஆத்மார்த்தமான கதையை படிச்சிட்டு அதை மனசுல அசைப்போட்டபடி இருக்கிறது அலாதி இன்பம். இதே எழுத்தாளரோட ஒரு கதைய படிச்சுட்டு பிரண்ட்ஸ்கிட்ட நிறைய பேசி சில்லாகிச்சிருக்கேன். அவசியம் படிங்கனு தொல்லை பண்ணி அவுங்களையும் படிக்க வைச்சு அப்புறம் அதை பத்தி ஹாப்பியா டிஸ்கஸ் பண்ணியிருக்கோம்.


ஆக, இந்த கமெண்ட்ல சொன்ன கருத்துகள் இந்த கதைய பத்தினது மட்டும் தான். ஒரு வாசகியா எனக்கு தோணின விஷயங்கள். மத்தபடி கதையில படிப்புக்கு கொடுத்த முக்கியத்துவம், இளங்கோவோட புரிதல், ரிசல்ட்ட விட முயற்சி எடுத்தது தான் முக்கியம்னு சொன்னது மாதிரியான பாசிடிவ் விஷயங்கள நான் நிச்சயம் வரேவற்கறேன்🙂


நேரமெடுத்து இந்த கமெண்டை படிச்சதுக்கு நன்றி!
 
Last edited:
தம்பதிகளுக்கிடையே நடுத்தர வயதில் வரும் செகண்ட் இன்னிங்ஸ காதல் ஆழமானது...பொறுப்புகளும் கடமைகளும் சூழ்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் சூழலில் பெண்கள் தங்களோட கனவுகள் என்னனு கிட்டத்தட்ட மறந்தே போய்டுது...வானதி தன்னோட கனவான, அப்பா அம்மா கணவன் எல்லோரோட ஆசையுமான சிஏவை கஷ்டப்பட்டு முடிக்கும் போது நாமளே ஜெயிச்ச ஃபீல்...அதுக்கு உறுதுணையாக அத்தனை பேரும் இருந்ததாலே சாத்தியமாகிற்று....ரிசல்ட் வரமுன்னயே முயற்சி எடுத்து எழுதியற்கு பார்ட்டி வைத்து கொண்டாடியது மனதைத் தொட்டது...நாம் கனவுகளுக்காக எவ்வளவு பறந்து திரிந்தாலும் இளைப்பாறும் இடம் குடும்பம் தான்...இப்படிப்பட்ட குடும்பம் அமைந்தால் நம் கனவுகள் எளிதாக நிறைவேறும்...

அருமையான கதை தேவி மா...வாழ்த்துகள்❤
 
Top