Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 19

Advertisement

Admin

Admin
Member




அத்தியாயம்-----19

சாந்தி … தீனதயாளன் பத்மினிக்கு மகளாக அவ்வீட்டுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டனவா…..என்பதனை நம்ப முடியவில்லை.அக்குழந்தையின் தாய் அவர்களிடம் கடைசியாக இனி இவள் உங்கள் மகள் என்பது தான்.பின் அவள் பேச அவள் உடம்பில் உயிர் இல்லை.

பின் தீனதயாளன் சட்டபடி அனைத்து காரியமும் செய்தார்.அக்குழந்தையின் பெயர் கூட அவர்களின் கையில் கொடுக்கும் போது அப்பெண் சொல்ல வில்லை.பத்மினியே அவள் தன் கையில் ஏந்தும் போது தன் மனதில் ஒரு அமைதி நிலவியதால் சாந்தி என்று பெயரிட்டார்.

இப்போது சட்டபடி சாந்தி அவர்களின் மகள்.தீனதயாளனின் உற்றார்கள் உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது இக்குழந்தை உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று கூறியும் அவர்கள் கேட்க வில்லை.

குழந்தை வரம் கேட்டுதான் அவர்கள் கோயிலுக்கு சென்றது.சாமி தரிசனம் முடித்து விட்டு வரும் வழியில் இக்குழந்தை அவர்களுக்கு கிடைத்ததால் அக்கடவுளே தங்களுக்கு இக்குழந்தையை கொடுத்ததாக பத்மினி கருதினார்.

அதனால் எக்காரணத்தை முன்னிட்டும் அக்குழந்தையை இழக்க பத்மினி தயாராக இல்லை.தீனதயாளன் கடைசியாக அப்பெண்மணி தங்களை நம்பி ஒப்படைத்ததாலும்….,மேலும் குழந்தை இல்லாமல் வருந்தும் தன் மனைவிக்காவும் தான் முதலில் அக்குழந்தையை அவர் ஏற்றார்.

ஆனால் நாள் செல்ல...செல்ல….பத்மினியோடு தீனதயாளனுக்கு தான் அக்குழந்தை செல்லமாகா ஆனாது.ஆம் அக்குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பால் தீனதயாளன் உள்ளத்தை கொள்ளை கொன்றாள் என்பது தான் நிஜம்.

பின் தீனதயாளன் தான் தொடங்கும் அனைத்து தொழிலுக்கும் சாந்தி என்று தன் குழந்தை பெயரிலேயே தொடங்கினார்.அவ்வீட்டில் அக்குழந்தை வந்து ஏழு வருடமாகி விட்டிருந்தது.

அவ்வீட்டில் சாந்தி இட்டது தான் சட்டம். வீட்டுக்கு என்ன வண்ணதில் வர்ணம் என்பதிலிருந்து...தோட்டத்தில் என்ன செடி வைப்பது வரை அனைத்தும் அவள் இஷ்டமே…..

ஒரு நாள் பத்மினி “சாந்தி நில்” என்றவாறு அவள் பின்னாடியே….கையில் எண்ணை கிண்ணத்தோடு அலைந்துக் கொண்டிருந்தாள்.அதனை பார்த்த தீனதயாளன் “பத்தூ உனக்கு வயதாகி விட்டது பார்.என் மகளை உன்னால் பிடிக்கவே முடியவில்லை.”என்று கேலி செய்தவாரே தன் மகளிடமும் “சந்து அம்மாவை ஒட விடதே உன் நல்லதுக்கு தான் அம்மா தலையில் எண்ணை தடவுகிறார்கள்.எண்ணை தடவினால் தான் முடி நீளமாக வளரும்.”என்று குழந்தை எது சொன்னால் கேட்பாலோ அவ்வார்தையை கூறினார்.

உடனே குழந்தை ஒடுவதை நிறுத்தி விட்டு “அப்படியாப்பா….எனக்கும் அம்மா மாதிரியே முடி வளருமா….”என்று ஆசையாக கேட்டதுக்கு…. “அம்மா மாதிரி என்ன உன் டீச்சர் மாதிரி அழகாக வளரும்.”என்று கூறி பத்மினியிடம் ஒரு முறைப்பையும் வாங்கிக் கொண்டார்.

“வேண்டாம்பா….எனக்கு அம்மா மாதிரி தான். முடி வேண்டும்.”என்று கூறி தன் அன்னையின் கழுத்தை வந்து இருக்கி கட்டிக் கொண்டாள்.அவளுக்கு எப்போதும் தன் அம்மா,அப்பா,தான் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள்.

உடனே பத்மினி ”பார்த்தீங்களா...உங்களுக்கு அவள் டீச்சர் முடிதான் பிடிக்கும்.ஆனால் என் குழந்தைக்கு எல்லா… வகையிலும் என்னை தான் பிடிக்கும் என்று கூறி ..”தன் கழுத்தில் உள்ள குழந்தையின் கையில் முத்தமிட்டு அவள் தலைக்கும் எண்ணை தேய்த்து எழுந்தாள்…. எழுந்தவுடன் கால் தரையில் படாமல் ஏதோ அந்தரத்தில் கால் வைத்தது போல் தடுமாற்றமாக இருந்தது.உடனே பக்கத்தில் உள்ள ஷோப்பாவின் கைய்பிடியை பிடித்தாவாறு தடுமாறி நின்றால்.

இதனை முதலில் பார்த்த சாந்தி “அப்பா...அம்மா”என்று கூறியவாறு தன் அன்னையின் அருகில் சென்று அம்மாவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.தீனதயாளனும் “பத்தூ...பத்தூ ..”என்று கையைபிடித்தவாறு மெல்ல ஷோபாவில் அமரவைத்து… “லஷ்மி அம்மா...லஷ்மி அம்மா...சீக்கிரம் தண்ணி கொண்டாங்கா”என்று பதட்டத்துடன் அழைத்தார்.

தீனதயாளனின் அழைப்புக்கு லஷ்மி வருவதற்க்குள் சாந்தியே ஒடி சென்று தண்ணி எடுத்து வந்து தன் தந்தையிடம் தந்தாள்.தீனதயாளன் தண்ணியை பத்மினியின் வாயில் புகட்டி “பத்தூ என்னம்மா செய்து உடம்புக்கு”என்று கேட்டதற்க்கு “ஒன்றும் இல்லைங்கே… இன்று வெள்ளிக்கிழமை விரதம் .அதனால் மயக்கமா இருக்கும்”என்று கூறி பயத்துடன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சாந்தியை அழைத்து…..

“ஒன்றும் இல்லைடா செல்லம் அம்மாவுக்கு பயப்படாதே”என்று குழந்தைக்கு ஆறுதல் அளித்தாள். அதற்க்கு சாந்தி “அம்மா இனிமே நீங்க விரதம் இருக்க வேண்டாம். நான் இருக்கிறேன்.நான் இப்போது பெரிய பெண்தானே….. ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன்.பாருங்கள் உங்கள் உயரம் வருவதற்க்கு இன்னும் கொஞ்சம் தான் இருக்கிறது”என்ற தன் மகளை பத்மினி தீனதயாளன் இருவரும் ஒன்றாக அணைத்துக் கொண்டார்கள்.

தீனதயாளன் தன் மனைவியிடம் “பத்தூ நம் பெண் நிஜமாகவே வளர்ந்து விட்டாள்.”என்று பெருமை பட்டதற்க்கு…..சாந்தி “அப்பா என்னப்பா டாக்டர் மாமாவை கூப்பிடாமல் என்ன பேசிட்டு இருக்கீங்க”என்ற தன் மகளின் அதட்டலுக்கு “நான் அப்போதே நீ வளர்ந்து விட்டதாக உன் அம்மாவிடம் கூறிக் கொண்டிருக்கும் போது போனில் சொல்லிட்டேமா….ஆனால் பாவம் என்னன்னா…..அவர் வீடு கொஞ்சம் தொலைவில் இருப்பதால் ஒரு கால் மணிநேரம் ஆகும்.”என்று தன் மகளிடம் பணிவாக சொல்லி கேலி செய்தார்.

இவர்கள் பேசுவதற்க்கும் அவர்களின் குடும்ப டாக்டர் சேகர் வருவதற்க்கும் சரியாக இருந்தது.”என்னம்மா….விரதம் இருந்து மயக்கம் வந்ததாமே…..இப்போது என்ன வேண்டும். என்று நீங்கள் விரதம் இருக்கிறீர்கள்….?கணவன்… குழந்தை ….செல்வம் …என்று எது இல்லைன்னு கடவுளிடம் மணு போடுகிறாய்.என்று கூறியவாறு பத்மினியின் நாடி பிடித்து பார்த்தார்.

“ஒ ….இப்போது புரிந்து விட்டது என்ன வேண்டி விரதம் இருந்தீர்கள் என்று.ஆசைக்கு பெண் இருக்கிறால்,ஆஸ்த்திக்கு ஆண் வேண்டும் என்று விரதம் இருந்தீர்களா….”என்று அக்குடும்ப டாக்டரும் அவர்களின் நண்பருமனா…..சேகர் தீனதயாளனிடம் கை கொடுத்தார்.

முதலில் அவர் சொல்ல வருவதை புரிந்துக் கொள்வதற்க்கே...ஒரு நிமிடம் தேவைப்பட்டது.புரிந்ததும் கணவன், மனைவி, இருவரும் ஒருவருக்குள் ஒருவர் பார்த்து கொண்டனர்.

அவர்களின் குடும்ப டாக்டர் சேகர் தான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்லியிருக்கோம்.ஆனால் அதற்க்கு மகிழாமல் என்ன இது ரியாக்க்ஷன் என்று வியந்து போனார்.ஏன் என்றால் அவருக்கு அவர்கள் குடும்பத்தை பற்றி நன்கு தெரியும்.அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்காததும்.அதற்க்கு கோயில் கோயிலாக சென்று வந்ததும். சாந்தி அவர்களுக்கு எப்படி கிடைத்தாள் என்பதும்.

அப்படி இருக்கும் போது தான் கூறிய விஷயம் அவர்களுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும்.என்ற யோசனையுடன் தீனதயாளனை பார்த்தார்.தீனதயாளனும் அப்போது சேகரை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

டாக்டர் கூறியதை புரிந்துக் கொள்ளதா சாந்தி பயந்து டாக்டரிடம் “மாமா அம்மாவுக்கு ஒன்றும் இல்லையே… நீங்க என்ன ஒன்றும் ஒழுங்காவே….சொல்லலே அப்பாவும் அம்மாவும் ஒன்றும் பேசாமல் இருக்காங்க….? என்று பயந்தவாறு கேட்டாள்.

சாந்தியின் பயத்தை தான் முதலில் போக்க வேண்டும் என்று கருதிய தீனதயாளன் “சந்துக்குட்டி அம்மாவுக்கு ஒன்றும் இல்லேடா….கொஞ்சம் வீக்கா இருக்காங்களா...அவ்வளவுதான். ரெஸ்ட்டு எடுத்தா போதும். நீ போய் படிமா என்று தன் மகளை அவ்விடத்தில் இருந்து அகற்ற முற்பட்டார்.

அப்பாவின் பேச்சை கேட்ட சாந்தி “அப்பா இனிமேல் நான் அம்மாவை தொந்தரவே...பண்ண மாட்டேன்.லஷ்மியம்மா கொடுப்பதையே நான் அடம் பண்ணாமல் சாப்பிடுகிறேன்.நானே எண்ணை தேய்த்து குளிக்கிறேன் “என்று தன்னால் தான் அம்மா வீக்கா ஆகிவிட்டார்களோ…என்று பயந்து கூறினாள்.

அவளின் பயத்தை பார்த்த தீனதயாளன் “செல்லம் நான் தான் சொல்ரேன் இல்லே….அம்மாவுக்கு ஒன்றும் இல்லை. நீ போம்மா என்று அனுப்பி வைத்தார்.

டாக்டர் சேகருக்கு ஒன்றும் புரியவில்லை.சாந்திக்கு ஒன்றும் சிறு குழந்தை இல்லை. அவளுக்கு ஒரு தம்பியோ...தங்கையோ….வரப்போகிறது என்று சொன்னால் புரிந்தும் கொள்வாள்…. சந்தோஷமும்…. படுவாள்.அதனை விட்டு இவர்கள் என்ன ?என்னவோ சொல்கிறார்களே….என்று குழம்பி போனார்.

சாந்தி அவ்விடத்தை விட்டு அகன்றதும்.தீனதயாளன் சேகரை பார்த்து” இந்த குழந்தை எங்களுக்கு வேண்டாம்.”என்று கூறினார்.தீனதயாளன் சொல்வதை கேட்ட சேகர் பத்மினியை பார்த்தார்.பத்மினியும் சேகரின் பார்வையை புரிந்துக் கொண்டு “அது தான் அவரே சொல்கிறாரே….அப்புறம் ஏன்? அண்ணா என்னை பார்க்கிறீங்க “என்று தீனதயாளன் கூறியதையே பத்மினியும் கூறினாள்.

சேகர் கோபத்தோடு “தீனா உங்க இரண்டு பேருக்கும் பைத்தியம் ஏதாவது பிடிச்சிடிச்சா…புரிஞ்சுதான் பேசுறிங்களா…உங்களுக்கு கல்யாணமாகி பதினொன்று வருடத்துக்கு பிறகு உதித்த குழந்தையை கலைக்க சொல்ல எப்படி மனது வந்தது.இரு...இரு...பத்மினிக்கு வயது சென்று விட்டதோ…. அதனால், பிரச்சினை ஏதாவது ஆக போகிறது என்று பயப்படுகிறீர்கள் என்றால்… கவலை வேண்டாம். பத்மினியின் உடல் நிலையைப் பற்றி உங்கள் குடும்ப டாக்டரா எனக்கு நன்கு தெரியும் நார்மல் டெலிவரியாக்குவது என் பொறுப்பு”என்று ஒரு டாக்டராக மட்டும் அல்லாமல் அக்குடும்பத்தின் நண்பராகவும் பேசினார்.

டாக்டரின் பேச்சை கேட்ட பத்மினி “அவர் என் உடல் நிலைக்காக இக்குழந்தை வேண்டாம் என்று கூறவில்லை அண்ணா.சாந்தியின் மனநிலைக்கா தான் வேண்டாம் என்கிறார்.” என்று பத்மினி கூறியதை கேட்ட டாக்டர்.

“ஏன் அவள் முன்பே இதைப்பற்றி ஏதாவது சொன்னாலா….”என்றதற்க்கு ,தீனதயளான் “சே...சே...இல்லை.குழந்தை என்று இப்போது நீ சொல்லி தான் எங்களுக்கே தெரியும்.பிறகு எப்படி இது பற்றி முன்பே பேச போகிறோம்.அதுவும் குழந்தையான அவளிடம்.”என்ற தீனதயாளனின் விளக்கத்தில் டாக்டர் குழம்பி தான் போனார்.

“கணவன் மனைவி இரண்டு பேரும் என்ன குழப்பாமல் என்னான்னு விளக்கமா...எங்கிட்டே சொல்றீங்களா…அதுவும் கருச்சிதைவு என்பது சாதரணம் விஷயம் இல்லை. ஒரு பிரசவத்தோடு கருச்சிதைவு தான் ஆபத்தானது.”என்று ஒரு டாக்டராக தன் கருத்தை கூறினார்.

டாக்டரின் பேச்சை கேட்ட தீனதயாளன் “அப்போ பத்தூக்கு ஏதாவது பிரச்சினை ஆகுமோ”என்று கணவராக பதரினார்.

“அது தான் இப்போ கருச்சிதைவுக்கு என்ன அவசியம் என்று உங்கள் இருவரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.”என்ன விஷயம் சொல்லுங்க கணவன் மனைவி இரண்டு பேரும் ஒன்றாக முடிவு எடுத்து இருக்கீங்கன்னா….சொல்லுங்க என்ன விஷயம்.”ஒரு டாக்டரா என்னிடம் சொல்ல வேண்டாம் நண்பனாக சொல் தீனா என்று ஒரு நல்ல நண்பராக அவர் பதறி கேட்டார்.

அக்குழந்தை கலைக்க அவருக்கு விருப்பம் இல்லை.இப்போது ஏதோ காரணத்திற்க்காக கலைத்து விட்டு பின் வருந்த கூடாது என்று கருதினார்.தீனதயாளன் அருகில் உள்ள தண்ணியை எடுத்து குடித்து விட்டு…

“எனக்கு மட்டும் குழந்தையை கலைக்க விருப்பமா….?”என்று பேசிக்கொண்டே தன் மனைவியை பார்த்தார்.மனைவியின் முகத்தில் உள்ள எல்லை இல்லா சோகத்தை பார்த்த தீனதயாளன்.தன் மனைவி முகத்தை பார்ப்பதை தவிர்த்து சேகரிடம் தன் பேச்சை தொடர்ந்தார்.

“இப்போது எங்கள் மகளுக்கு பத்து வயதாகிறது.உனக்கே தெரியும் எங்கள் மகள் எங்களுக்கு எப்படி கிடைத்தால் என்று. எங்கள் சொந்தக்காரர்களுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை என்று. இன்னும் இரண்டு மூன்று வருடன் கழித்து எப்படியோ… என் மகளுக்கு விஷயம் தெரிந்து விடும். தெரியபடுத்தாமல் நம்மை சுற்றி இருப்பவர்கள் விட மாட்டார்கள். இப்போது இக்குழந்தை எங்களுக்கு பிறந்தால் கண்டிப்பாக என் உடன் பிறந்தவர்களும், பத்தூவின் உடன் பிறந்தவர்களும், அக்குழந்தையை கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்பது நிச்சயம்.அதுவும் இத்தனை வருடம் கழித்து பிறந்த குழந்தையை சொல்லவே வேண்டாம்.அப்போது என் மகள் சந்துவின் மனநிலை என்ன ஆவாது.கண்டிப்பாக என் குழந்தை இதை தாங்க மாட்டாள் சேகர்.தாங்கிக் கொள்ளவே மாட்டாள்.”என்ற தீனதயாளனின் பேச்சில் உண்மை இருந்தாலும் அப்போதும் சேகருக்கு இக்குழந்தை அழிப்பதில் விருப்பம் இல்லை.

“ஏன் தீனா நாம் சாந்திக்கு மற்றவர்கள் சொல்லி தெரிவதைவிட நாம் இப்போதே இவற்றை பற்றி சாந்தியிடம் பக்குவமாக கூறலாமே….”என்று கூறினார்.எப்படியாவது அக்குழந்தை அழிப்பதை தடுப்பதற்க்காக.

பத்மினி சேகரிடம் “அண்ணா உங்கள் என்ணம் எங்களுக்கு புரிகிறது.எங்கள் பிறக்காத குழந்தைக்காக நீங்கள் பேசுகிறீர்கள்.இப்போது இருக்கும் குழந்தைக்காக நாங்கள் பேசுகிறோம்.எப்படி அண்ணா அவளிடம் போய் நாங்களே …நீ என் சொந்த மகள் இல்லை. என்று கூறுவது.குழந்தையின் மனநிலையை பற்றி டாக்டரான உங்களிடம் நான் கூற தேவையில்லை.இந்த வயதில் தான் அவர்களை நாம் பத்திரமாக அவர்களின் மனநிலையை எந்த வகையிலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று.நான் சாந்தியின் விஷயத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை அண்ணா.நாளை உங்கள் ஹாஸ்பெட்டலுக்கு வரட்டுமா…இல்லை”என்று இழுத்து நிறுத்தினாள்.அப்பேச்சில் இருந்து நாங்கள் எங்கள் எண்ணத்தில் இருந்து சிறிதும் மாறப்போவது இல்லை என்று உறுதி தெரிந்தது.

“இல்லேம்மா என் ஹாஸ்பெட்டலுக்கே வந்துடுங்க உன் உடல் நிலையை பற்றி என் ஹாஸ்பெட்டல் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். வெளியில் போய் வேறு எந்த பிரச்சினையும் வேண்டாம். என்று மனமே…. இல்லாமல் கூறினார்.

“சரி சேகர் அப்போது நாளை காலையில் வந்து விடுகிறோம்.”என்று கூறி முடிக்கும் போது தீனதயாளனின் பேச்சில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது.

பத்மினி தன் கணவரின் கைய் பற்றி அவருக்கும் ஆறுதல் அளித்து அவரின் கைய் தொடுகையின் மூலம் தானும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முனைந்தாள்.அந்த ஆத்மார்த்தமான தம்பதியின் வாரிசு உலகிற்கு வேண்டாம் என்று அவர்கள் முடிவு எடுத்து விட்டார்கள். ஆனால் வருமா…?வராதா…?என்பதனை அந்த கடவுள் தானே… முடிவு எடுக்க வேண்டும் இடையில் நாம் யார்….?


 
:love::love::love:

பிரதாப் வீரன்...... அம்மா அப்பாவின் முடிவையும் மீறி பிறந்தவன்.....
அடுத்தவர்களுக்காக பார்த்தல் வாழமுடியுமா???
பொண்ணு சொல்லுற மாதிரி சொன்னால் புரிஞ்சுக்க மாட்டாளா???
எப்படி கரு நிலைத்தது???
 
Last edited:
Top