Hi Praveen!
கடைசி நாலு எபில இருந்துதான் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன், நான் முதல்ல இருந்து படிச்சு வரதுக்குள்ள கதை முடிஞ்சு போச்சு., ரொம்ப ரொம்ப ரொம்ப பொருத்தமான தலைப்பு, பொன்மாலை நேரங்களே,
படிச்சு முடிக்கும் போது ஒரு இதமான மன நிலை!! பொன்மாலையாக்கும் பொழுதுகள்!!
லவா குஷான்னு இரண்டு ட்வின்ஸ், ஆனாலும் குஷாவுக்கே நிறைய இடம் போல தோணினது, இந்தியா பாக் போல நம்ம குஷா மொட்டு சண்டை சூப்பரோ சூப்பர, அவங்க சேர்ந்தது இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம், சீக்கிரமே முடிஞ்ச உணர்வு எனக்கு,
லவா மொட்டுக்கிட்ட காட்டுற அனு(!!) ஹாஹா சரணை. அக்கறை எல்லாமே செம, அவளுக்காக குஷா கிட்டவே மல்லுக்கு நிக்கிறது எல்லாமே super bonding.
ஆனாலும் இந்த குஷாவுக்குக் கொழுப்பு ஜாஸ்தி, பிடிச்சிருக்குன்னு சொன்னா தேய்ஞ்சிடுவியாடா? திமிர் பிடிச்சவன், ப்ளடி ராஸ்கல் ஆனாலும் அவனைப் பிடிக்குதே
லவா கிட்ட காட்டுற மொட்டுவோட ராஜ ராஜேஸ்வரம் கோபுரம் embroidery, மொட்டுவோட global warming advice, என்று நிறைய இடங்கள் பிடிச்சது, 90S kid போலவே நீங்க சில இடங்களில் எனக்குத் தெரிஞ்சது, not a kid anymore too,
மொட்டுன்ற பெயரே செம அழகு, ஆர்வலன், ஆழியன் அது கூட அழகே!!
ரொம்பவே ஒரு இதமான, mind disturb ஆகாத, mental peace கெடாத ஒரு cousin rivalry, வைச்சு அழகா ரசிக்கும்படி கொண்டு போயிருந்தீங்க கதையை, you have perfectly balanced this genre !! நான் உங்களோட கதை படிக்கிறது இதான் முதல் முறை, and it was neatly penned.
ஆனாலும் man of the match, ரகுப்பாதான், ரகுவோட maturity and ஜானும்மாவோட புரிதல் சூப்பரோ சூப்பர்.
write many more!! All the best praveen!!
ஒரு கோரிக்கை, post மட்டும் கொஞ்சம் sentences, paragraph கு இடைவெளி விட்டுப் போடுங்க, இல்லையா admin ட கேட்டு link அஹ் போட்டா படிக்க வசதியா இருக்கும், அதுதான் எனக்கு இந்த கதையில மிகப்பெரிய குறை, ப்ளீஸ்
❤❤❤❤