Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 5.1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----5

சித்தார்த் தன் உதவியாளனை போனின் மூலம் அழைத்து “என்ன பிராபகர் எல்லா ஏற்பாடும் செய்து விட்டாயா...?” என்று கேட்டதற்க்கு அந்த பக்கத்தில் இருந்த பிரபாகர் .

“எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன் சார். நான் உங்கள் பங்களாவின் வெளியில் தான் வண்டியோடு இருக்கிறேன் சார்.” என்றதற்க்கு .

“சரி நான் இப்போது வருகிறேன்.” என்று கூறி தன் தங்கையை பார்த்தான்.

அன்றும் பரினிதா ரோஸ் நிற புள்ஸ்கட்டிலும் கருப்பு நிறத்தில் டாப்பும் அணிந்துக் கொண்டு புன்னகையுடம் தன் அண்ணன் எதிரில் தன் ஸ்கட்டை இரு பக்கமும் பிடித்துக் கொண்டு விரித்து ஒரு சுற்று சுத்தி காண்பித்து.

“எப்படி இருக்கிறது அண்ணா.” அவளுக்கு அந்த ட்ரஸ் பார்ப்பதற்க்கு அழககா இருந்தாலும் பார்க்க சின்ன பெண் போல் தோன்றுவதால்.

“ குட்டிம்மா நீ ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வரலாம் இல்லையா …” என்றதற்க்கு உடனே பரினிதாவின் முகம் வாட்டத்திற்க்கு சென்றது.

“ஏன் அண்ணா இது எனக்கு நல்ல இல்லையா…?” என்ற தங்கையின் வருத்தமான கேள்விக்கு உடனே.

“சேச்சே உனக்கு இந்த ட்ரஸ் நல்லா இருக்குடா. என்ன ஒன்னு கொஞ்சம் வயது கம்மியா தெறிகிறது. அதனால் தான் உன்னை ஜீன் போட சொன்னேன்.” என்ற சித்தார்த்தின் வார்த்தையில் சிரித்துக் கொண்டே பரினிதா

“ அண்ணா நீங்கள் மட்டும் என்னவாம். இப்போ உங்களை பார்த்தால் எந்த காலேஜ் படிக்கிறீங்கன்னு தான் கேட்பாங்க . கலெக்டர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க.”

ஆம் பரினிதா சொல்வது சரியே சித்தார்த் எப்போது தோன்றுவதை விட இன்று இன்னும் இளமையுடன் காணப்பட்டான். அதற்க்கு காரணம் அவன் தன் வேலையின் பொருட்டு எப்போதும் கோட் சூட்டில் தான் இருப்பான்.

இன்று தன் தங்கையுடன் செல்வதால் ஜீனும் டீசர்ட்டும் போட்டிருந்தான். இந்த உடை அவனை இன்னும் இளமையுடன் காட்டியது. தன் தங்கையின் பேச்சிக்கு புன்னகைத்துக் கொண்டே

“உன்னுடன் வருவதால் தான் நான் இந்த ட்ரஸையே போட்டேன்.இல்லை என்றால் உன்னை என் பெண்ணா என்று கேட்டு விடுவார்களே…”

சித்தார்த்தின் பேச்சிக்கு “ அண்ணா “ என்று சிணுன்கிக் கொண்டே தன் அண்ணனின் கைய் பற்றி தன் பங்களாவின் வாசலில் காத்துக் கொண்டிருந்த அந்த ஏஸி பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்.

சித்தார்தோ ஏறாமல் தன் பி.ஏ விடம் “பிராபகர் நீ வரவேண்டாம்.இது ஆபிஸ் விஷயம் கிடையாது.இது என் சொந்த விஷயம் .அதனால் நீ வரவேண்டாம் பிரபாகர்.” என்ற சித்தார்த்தின் வார்த்தையை கேட்காமல் சித்தார்த்தின் மேல் உள்ள அக்கரையால் பிரபாகரும் சித்தார்த்துடன் உடன் சென்றார்.

சித்தார்த்தின் பங்களாவில் இருந்து கிளம்பிய பஸ் ஆசிரமத்துக்கு சென்று அங்கு ஆஸ்ரமத்து குழந்தகளை ஏற்றிக் கொண்டது.ஆஸ்ரமத்து நிர்வாகியும் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு தன் ஆஸ்ரமத்தில் இருந்து இரண்டு பெண்களைகளையும், இரண்டு ஆண்களையும் அனுப்பி வைத்தார்.

ஆஸ்ரமத்தில் இருந்து பஸ் புறப்பட்டதும் பரினிதா அந்த குழந்தைகளுடன் பிஸியாகி விட,சித்தார்த்தோ அதனை புன்னகையுடன் பார்த்திருந்தான். பின் சித்தார்த்தின் பி.ஏ பிரபாகரின் குரலில் தன் தங்கையிடம் இருந்து பார்வையை திருப்பி “என்ன சொன்னீங்க பிராபகர்.”

“இல்லே சார் நாம் இப்போ போகும் சொர்க்கபூமியின் ஒனர் உங்களை பார்க்கனும் என்று அவரின் மனேஜர் அப்பாயின்மண்ட் கேட்டு இருக்கிறார். காரணம் கேட்டதுக்கு பர்சனர் என்று சொன்னார்.அதனால் தான் நான் உடனே கொடுக்காமல் உங்களிடம் கேட்டு கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன் சார்.”

“அவரின் பெயர் என்ன...?”

“ஆஷிக் சார்.”

அந்த பெயரை கேட்டதும் ஒரு நிமிடம் அவராக இருக்குமோ என்று யோசித்தான். பின் இருக்காது.இவர் சொல்லும் ஆஷிக் பணக்காரன். ஆனால் என் வேண்டாம் மனமே வேண்டாம் இது தவறு.அவளுக்கு கண்டிப்பாக திருமணம் நடந்து இருக்கும் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் குழந்தைகள் கூட இருக்கலாம். இப்போது அவளை மனதால் நினைப்பது கூட பாவம்.என்று தன் அறிவு எடுத்துரைத்தாலும் மனது கேட்காமல் திரும்ப திரும்ப கடைசியாக அவன் பார்த்த அவள் கலங்கிய முகமே கண் முன் வந்த அவனை இம்சித்தது.

தான் சொன்னதுக்கு சித்தார்த்திடம் பதில் இல்லாமல் போக “சார்” என்று திரும்ப அழைத்தார்.

அவர் குரலுக்கு சித்தார்த் பதில் அளிக்கும் முன் “ என்ன அங்கிள் இங்க வந்தும் ஆபிஸ் பேச்சி தானா…? இன்று ஒரு நாள் அதனை எல்லாம் மூட்டை கட்டி போடுங்க.” என்ற பரினிதாவின் வார்த்தைக்கு கட்டு பட்டு தன் வாயைய் மூடிக் கொண்டார்.

ஏன் என்றால் பிரபாகர் இந்த மூன்று மாதமாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.சித்தார்த் தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை. அவரே தன் தங்கை சொல்லுக்கு கட்டு படும் போது நாம் அவர் கீழ் வேலை பார்ப்பவன் நாமும் கொஞ்சம் அடங்கி தான் ஆக வேண்டும் என்று முடிவுடன் அதற்க்கு மேல் ஒன்றும் பேசவில்லை.

இதனை பார்த்த பரினிதா “அங்கிள் நான் உங்களை ஆபிஸ் விஷயம் தான் பேச வேண்டாம் என்று சொன்னேன். பேசவே வேண்டாம் என்று சொல்ல வில்லை.இப்படி நீங்கள் பேசாமல் வந்தால் எங்களுக்கு போர் அடிக்கும் தானே…” என்ற பரினிதாவின் பேச்சில் பிரபாகர் பாவமாக சித்தார்த்தை பார்த்தார்.

அதனை பார்த்த சித்தார்த் “குட்டிம்மா பாவம் அவரை விட்டு விடு. உன் விளையாட்டுக்கு தான் நான் இருக்கிறேன் இல்லையா…? அவர் என் பாதுகாப்புக்கு வந்து இருக்கிறார் .” என்று கூறி சித்தார்த் பிரபாகரை காப்பாற்றுவதாக நினைத்து அப்படி கூறினார்.

ஆனால் பரினிதாவோ “உங்கள் பாதுகாப்புக்கா.இவர் எப்படி உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும். ஏதாவது ஆபத்து வந்தால் எப்படி உங்களை காப்பாற்றுவார்.இவர் நடப்பதற்க்கே கஷ்டபடுகிறார் அப்படி இருக்கும் போது” என்பதற்க்கு மேல் பேச விடமால் தடுத்த சித்தார்த்.

“குட்டிம்மா பெரியவங்களை அப்படி சொல்லக் கூடாதுடா” என்ற அண்ணனின் வார்த்தைக்கு கட்டு பட்டு அதற்க்கு மேல் அவரை பற்றி எதுவும் பேசாமல் அக்குழந்தைகளுடன் குழந்தையாக ஐய்கியமானள்.

சித்தார்த் தன் பி.ஏ விடம் “சாரி சார் .” என்றதற்கு .

“பரவாயில்லை சார்.”

என்று வெளியில் சொன்னாலும் உள்ளுக்குள் நாம் வந்தது தவறோ இன்னும் போவதற்க்குள் இந்த பெண்ணிடம் எவ்வளவு பல்பு வாங்க போகிறோம் என்று தெரியவில்லையே என்று மனதுக்குள் நொந்து போனார்.

ஒரு மணி நேரத்தில் அவர்களின் பஸ் சொர்க்கபூமி வாசலில் நின்றது.சித்தார்தே ஒரு நிமிடம் அசந்து தான் போனான் அதனின் அழகை பார்த்து.சித்தார்த மனதுக்குள் இதனை கட்டியவன் பணம் படைத்தவன் மட்டும் இல்லை நல்ல ரசனை உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

சித்தார்த்தின் பி.ஏ பஸ் நின்றதும் ஒடி சென்று யாரிடமோ ஏதே பேசி விட்டு இவரிடம் ஒடி வந்து “வாங்க சார் நம்மை அந்த வழியாக போக சொன்னார்கள்.” என்றதற்க்கு.

பரினிதா “ஏன் நாம் வேறு வழியில் போக வேண்டும். அண்ணா நாம் எல்லோருடன் போனால் தான் நல்ல இருக்கும் அண்ணா.” என்றதற்க்கு சித்தார்த் எந்த மறுப்பும் சொல்லாமல் தன் பி. ஏ விடம்.

“பிரபாகர் நாம் மத்தவங்களோடையே போகலாம். எனக்கும் அது தான் பிடித்து இருக்கிறது.” என்றதற்க்கு.

“சார் உங்களின் பாதுகாப்பு.”

“அதற்க்கு அவசியம் இல்லை பிரபாகர். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போவது என்றாலும் போங்கள்.” என்றதற்க்கு.

“இல்லை சார் நான் உங்களுடனே இருக்கிறேன்.” என்று கூறி பிராபகர் சித்தார்த் உடன் சென்றார்,

சித்தார்த் தன் பி.ஏ விடம் சொல்லி சொர்க்கபூமி செல்வதற்க்கு ஏற்பாடு செய்திருந்ததான். அவன் பி.ஏ. வும் சித்தார்த்தின் பெயர் சொல்லாமல் ஆஸ்ரமத்து குழந்தைகளுடன் ஒரு வி.ஐ.பி என்று தான் சொல்லி இருந்தாரே தவிர. அந்த வி.ஐ.பி. கலெக்டர் என்று குறிப்பிடவில்லை.

ஏன் என்றால் பிரபாகர் இந்த சொர்க்கபூமி செல்வதற்க்கு ஏற்பாடு செய்யும் முதல் நாள் தான் ஆஷிக்கின் மனேஜர் சித்தார்த்தை சந்திக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.ஆஷிக் பற்றி சித்தார்த்துக்கு தெரியவில்லை என்றாலும் பிரபாகருக்கு நன்கு தெரியும்.

சித்தார்த் தான் சென்னையில் பொறுப்பு ஏற்று மூன்று மாதமாகிறது. ஆனால் பிரபாகர் அந்த கலெக்டர் ஆபிஸில் பன்னிரண்டு வருடமாக இருப்பதால் ஆஷிக் பற்றியும் அவனின் அரசியல் பின் பலத்தையும் நன்கு தெரியும் என்ற காரணத்தால் தான் சித்தார்த்தின் பெயரை சொல்லாமல் ஒரு வி.ஐ.பி என்று சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்.

முதலில் பிரபாகர் சித்தார்த் சொர்க்கபூமி செல்வதை தடுக்க தான் எண்ணினார். உடனே இந்த ஏற்பாடு செய்வதே அவர் தங்கைக்காக அதனால் நாம் சொன்னாலும் அவர் கேட்க மாட்டார் என்று கருதியே அவரிடம் ஆஷிக் பற்றி ஒன்றும் சொல்லாமல் சித்தார்த்தின் உடன் செல்ல முடிவு செய்தார்.

அவருக்கு இந்த மூன்று மாதங்களில் சித்தார்த் மேல் ஒரு மதிப்பே ஏற்பட்டு இருந்தது. அவரும் எத்தனையோ கலெக்டரிடம் பி.ஏ. வாக வேலை பார்த்திருக்கிறார். ஆனால் சித்தார்த் மாதிரி நேர்மையான கலெக்டரிடம் வேலை பார்ப்பது இதுவே முதல் முறை.அதனால் சித்தார்தை இந்த சொர்க்கபூமியை விட்டு செல்லும் வரை அவருடனே இருக்க கருதி தான் சித்தார்த் தடுத்தும் அவருடன் வந்தார்.

சித்தார்த்திடம் பஸ்சில் வரும் போது ஆஷிக் பற்றி பேசியது கூட ஆஷிக்கின் மனேஜர் பர்சனல் என்று சொன்னதால் ஒரு சமயம் சித்தார்துக்கு தெரியுமோ என்ற காரணத்துக்காக தான் கேட்டார்.

ஆனால் சித்தார்த் தெரியாது என்று சொன்னதும் இது வேறு விஷயம் என்று முடிவு செய்து இந்த இடத்தை விட்டு போகும் வரை சித்தார்த்தை விட்டு எங்கும் போக கூடாது என்று முடிவுக்கு வந்தார்.
 
Top