Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 4

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---4

ஆஷிக் அன்று தன் கடந்த கால நினைவில் வேறு வெளிவேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே ஸ்ரீதரின் மூலம் தன் வேலையை முடித்துக் கொண்டான். அவன் ரொம்ப நாள் கழித்து அன்று தான் எந்த வேலையும் இல்லாமல் சாயந்திரம் தோட்டத்தில் அமர்ந்து இருந்தான்.

அப்போது அங்கு வந்த கலையரசி “உன்னிடம் நான் கொஞ்சம் பேசவேண்டும். அதற்க்கு உன்னிடம் நேரம் இருக்கிறதா ஆஷிக்.” என்று கேட்ட அன்னையிடம்.

“அம்மா என்னம்மா இது பேச்சி. என்னவோ வெளியாள் மாதிரி அப்பாயின்மண்ட் கேட்கிறீங்க.”

“பின் என்னப்பா செய்கிறது . என் பைய்யன் பெரிய பிஸ்னஸ் மேன் ஆகிட்டான். ஒரு அம்மாவை பார்த்து நான்கு மாதமாகிறது.முதலில் இந்தியாவில் பிஸ்னஸ் செய்யும் போதே உன்னை பார்ப்பது அதிசயமா ஆகிவிட்டது.இப்போது நீ வெளிநாட்டில் வேறு பிஸ்னஸ் பண்ண போக போகிறாய். போகிற போக்க பார்த்தா எனக்கு கொள்ளி போட கூட நீ வருவியோ ...மாட்டியோ யார் கண்டா. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் கண்ணா. நீ எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் ஆருண்யாவுக்கும் உனக்கும் திருமணம் செய்யாத வரை எனக்கு சந்தோஷம் கிடைக்காது. நான் செத்தாலும் என் கட்டையும் வேகாது.” என்ற கலையரசியை பார்த்து.

“ நல்ல நாள் அதுவுமா… சாவு அது இது என்று என்ன பேச்சி பேசுறீங்க அம்மா. நானே திருமணம் விஷயத்தில் ஆருண்யா இப்படி பிடிவாதமா இருப்பா என்று நினைச்சிக் கூட பார்க்க வில்லை.

“அதை பற்றி பேச தான் நான் வந்தேன் ஆஷிக்.”

“என்னம்மா என்ன விஷயம் ஆருண்யா உங்களிடம் ஏதாவது சொன்னாளா…?”

“எங்கிட்டே எதுவும் சொல்லலே கண்ணா.எனக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம். எட்டு வருடத்திற்க்கு முன் ஆருண்யா கொஞ்ச நாள் ரொம்ப சோகமா இருந்தா. நானும் என் அன்ணாவின் பேச்சால் தான் அப்படி இருக்காளோ என்று நினைத்து அதனை பற்றி பேசி அவள் மனதை புண் படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டேன். உன்னிடமும் இதனை பற்றி பேசமுடிய வில்லை. அந்த சமயத்தில் தான் நீ நம் இடத்தில் வீடு கட்டுவதில் தீவிரமா இருந்தாய்.

இந்த நேரத்தில் உன்னிடத்தில் இதனை பற்றி பேசி உனக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்க வேண்டாம் என்று கருதி விட்டு விட்டேன்.மேலும் அவளாகவே சரியாகி விடுவாள் என்று நினைத்தேன்.

இப்போது தான் எனக்கு நியாபகம் வருகிறது.நீ ஆருண்யாவுக்கு இப்போது திருமணம் செய்ய வேண்டாம் என்று கூறியதும் அவள் முகத்தில் அப்படி ஒரு தெளிவு தெரிந்தது. பின் அவள் தன் மேல் படிப்பு பற்றி பேசி அவள் டெல்லி செல்லவும். நானும் படிப்பில் உள்ள ஆசையால் தான் அவள் திருமணம் செய்ய விரும்பவில்லையோ என்று நினைத்து அப்போது விட்டு விட்டேன். ஆனால் இப்போது எனக்கு வேறு மாதிரி சந்தேகம் வருகிறது ஆஷிக்.ஒரு வேளை அவள் யாரையாவது விரும்பி இருப்பாளோ என்று.”

“அம்மா உங்களுக்கு இந்த சந்தேகமே வேண்டாம். அவள் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் போது மூன்று வருடத்திற்க்கு முன்னே கேட்டு விட்டேன். உனக்கு யாரின் மேல் விருப்பம் இருந்தால் தைரியமாக சொல் .நான் அவனையே உனக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறேன் என்று. ஆனால் அதுவும் இல்லை என்று கூறிவிட்டாள்.”

“ஆஷிக் உனக்கு பணம் சம்பாதிக்க தெரிஞ்ச அளவுக்கு மனச பத்தி தெரிஞ்சிக்க தெரியவில்லை. ஒரு வேளை நம் ஆருண்யா மட்டும் விரும்பி அந்த பைய்யன் விரும்பாமல் இருந்து இருக்கலாம். இல்லை என்றால் இருவரும் விரும்பி ஏதாவது ஒரு காரணத்துக்காக அது கைய் கூடாமல் போயிருக்கலாம்.அது தான் எட்டு வருடத்திற்க்கு முன் அவள் சோகமாக இருந்தாலோ, என்னவோ.

நாம் தான் அப்போது ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் என்று விட்டு விட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது ஆஷிக். அதனால் எப்படியாவது இந்த தடவை ஏதாவது காரணத்தை சொல்லி இங்கு வர வைய். இல்லை என்றால் நாமாவது டெல்லி சென்று அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வரவேண்டும். இனி மேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது.

எவ்வளவு தான் சமுகத்தில் நாம் உயர்ந்து இருந்தாலும் ஒரு விசேஷத்திற்க்கு செல்லும் போது இன்னுமா உன் பெண்ணுக்கு திருமணம் செய்ய வில்லை என்று கேட்கும் போது என்னால் பதில் சொல்ல முடியவில்லை.என்ன பணம் இருந்து என்ன பிரயோஜனம் ஒரு பெண்ணுக்கு கண் குளிர ஒரு நல்லது செய்து பார்க்க முடியவில்லையே…” என்று தன் அன்னையின் பேச்சை கேட்ட ஆஷிக்குக்கோ…

ஒரு சமயம் அம்மா சொல்வது போல் இருக்குமோ...அதனால் தான் அன்று நீ யாரைவாது விரும்பினால் சொல் நான் திருமணம் செய்து வைத்து விடுகிறேன் என்று கேட்டதற்க்கு விரக்தியாக சிரித்தாலோ ...நாம் அந்த சிரிப்பை கூட காதல் பற்றி சொன்னதால் வந்த சிரிப்பு என்று தவறாக நினைத்து விட்டோமோ…. என்று தன் யோசனையின் முடிவில் கண்டிப்பாக அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

தன் அன்னையிடமும் “அம்மா நான் நான்கு மாதம் கழித்து இன்று தான் வெளிநாட்டிலிருந்து வந்தேன். அதனால் இப்போது நாம் டெல்லி செல்ல முடியாது. ஆருண்யா கண்டிப்பாக இப்போது கூப்பிட்டால் வரமாட்டாள். அதனால் நான் இங்கு வேலையை ஒழுங்கு படுத்தி விட்டு வருவதற்க்கு ஒரு வாரம் ஆகும். அதனால் கண்டிப்பாக அடுத்த வாரம் நாம் டெல்லிக்கு போகலாம் அம்மா.

எனக்கும் நீங்க சொல்வதை கேட்டவுடன் சந்தேகம் ஏற்பட்டு விட்டது.ஆனால் ஒன்று நீங்கள் நினைப்பது போல் இருந்தால் அந்த பைய்யனை ஒரு வழி செய்யாமல் நான் விட மாட்டேன்.” என்று ஆவேசத்துடன் கத்தினான்.

“இது தான் வேண்டாம் என்று சொல்வது. இது நீ செய்யும் பிஸ்னஸ் கிடையாது.ஒரு சமயம் அது மாதிரி இருந்தாலும் நாம் பொறுமையாக தான் கைய்யாள வேண்டும்.” என்ற அன்னையுடன் சரி என்று தலையசைத்து விட்டு தன் அறைக்குள் சென்ற ஆஷிக் தன் தங்கையை பற்றி தீவிரமாக யோசிக்க ஆராம்பித்தான்.

நாம் இனி மேல் இப்படி அவள் போக்கில் விட்டு விடகூடாது.அவள் சொல்ல வில்லை என்றாலும் நமுக்கு எப்போதும் செய்து கொடுக்கும் டிடக்டிவிடம் சொல்லி எட்டு வருடத்திற்க்கு முன் ஆருண்யா படித்த காலேஜில் இருந்து விசாரிக்க சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் அன்று உறங்கினான்.

ஆஷிக் மறுநாள் காலை தன் அலுவகத்தில் டேபிள் முன் இருந்த சித்தார்த்தின் குடும்ப விவரத்தை படித்துக் கொண்டே “இதில் போட்ட எதுவும் இல்லையே ஸ்ரீதர்.”

“சாரி சார்.நான் அதை சொல்ல மறந்து விட்டேன்.ஆனால் அந்த கலெக்டரோட போட்ட ஒரு பேப்பரில் இருக்கு சார்.” என்று கூறிக் கொண்டே அந்த செய்திதாளை ஸ்ரீதர் தேடிக் கொண்டிருக்கும் போது ஆஷிக் மேலும் சித்தார்த்தின் குடும்ப விவரத்தை படித்தான்.

படிக்க படிக்க அவனுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது.இந்த காலத்தில் சேவை செய்வதற்க்கு என்றே யாராவது கலெக்டருக்கு படிப்பார்களா...அதுவும் சித்தார்த்தின் தாத்தா பாட்டியை பற்றி படிக்க படிக்க அவனுக்கு வியப்பு கூடியது.

சித்தார்த்தின் பாட்டி இந்த வயதிலும் ஊரில் உள்ள மில்லை திறம்பட நடத்துவது நினைத்து அவனுக்கு பெருமையாக தான் இருந்தது.அவனுக்கும் தன் தங்கை தன் அன்னையைய் பிஸினஸில் பங்கு பெரும் மாறு எவ்வளவோ சொல்லியும் அதனை கேட்காதது அவனுக்கு வருத்தம் தான்.

அவன் நினைத்த மாதிரி ஒரு பெண்மணி இப்படி தங்கள் குடும்ப தொழிலை திறம்பட நடத்துவதை படித்ததும் அவனுக்கு பாராட்ட தான் தோன்றியது.ஆஷிக் எப்போதும் அப்படி தான் திறமை யாரிடம் இருந்தாலும் அவன் பாராட்டி விடுவான். அது அவன் எதிரியா இருந்தாலும் அப்படி தான்.

அதில் சித்தார்த்தின் அப்பா,அம்மா, தாத்தா எட்டு வருடமுன் விபத்தில் இறந்ததை பற்றி படிக்க அவனுக்கே மனதுக்குள் ஒரு சங்கடம் எழ தான் செய்தது. ஏன் என்றால் அந்த டிடக்டிவ் சித்தார்த்தின் தாத்தா பற்றி அவ்வளவு விரிவாக அறிக்கை கொடுத்து இருந்தார்.அதில் ஊருக்கு அவர் செய்த நல்ல விஷயத்தை படிக்க படிக்க வியப்பின் உச்சிக்கே சென்று விட்டான் என்று தான் கூறவேண்டும்.பின் அதில் சித்தார்த்தின் காதலும் பின் முறிவும் போட்டு ப்ராக்கெட்டில் அந்த பெண் பற்றி விவரம் தெரியவில்லை.

விசாரிக்க வேண்டும் என்றால் சொல்லுங்கள் என்று போட்டு இருந்தது.ஆஷிக்குக்கு அப்பெண்ணை பற்றிய விவரம் வேண்டாம் என்று விட்டு விட்டான். ஒரு சமயம் சித்தார்த் எந்த காலேஜ் படித்தான் என்று கவனித்து இருந்தால் அவன் விசாரிக்க சொல்லி இருப்பானோ…என்னவோ…

கடைசியில் சித்தார்த்தின் தங்கை பற்றிய விவரங்கள் இருந்தது.அதனை ஊன்றி படிக்க ஆராம்பித்தான். ஏன் என்றால் சித்தார்த்தின் நேர்மையை வளைக்க அவன் தேர்ந்தெடுத்த துருப்பு சீட்டு தான் சித்தார்த்தின் தங்கை.

சித்தார்த்தின் பாட்டியை பற்றி படித்தவன் அவர் தொழிலை திறம்பட நடத்துவதை படித்ததும் தன் செயலுக்கு அவரை பயன் படுத்துவது ஆபாத்து என்று தோன்றியது.அதுவும் இல்லாமல் ஒரு வயதான பெண்மணியை கடத்தினால் இருக்கும் பயத்தை விட இளம் பெண்ணை கடத்தினால் இருக்கும் பயம் அதிகம் என்று கருதியதால் சித்தார்த்தின் தங்கையை பற்றி கவனமுடன் படித்தான்.

முதலில் சாதரணமாக படித்துக் கொண்டு வந்தவன் போக போக அதில் இருப்பதை பார்த்து அவனுக்கு தன்னாலேயே சிரிப்பு ஏற்பட்டது.அப்போது தான் சித்தார்த்தின் புகைபடம் வந்த செய்திதாளை கண்டுபிடித்து வந்த ஸ்ரீதர் ஆஷிக்கின் புன்னகை முகத்தை பார்த்து வியந்து போனான்.

பின் என்ன அவனும் இந்த ஆஷிக்கிடம் ஏழுவருடமாக மனேஜராக இருக்கிறான். பிஸ்னஸில் வரும் லாபத்தை பார்த்து அவனுக்கே மகிழ்வாக இருக்கும் போது அதனின் சொந்தகாரனோ யாருக்கோ வந்த விருந்து என்று இருந்தால் அவனுக்கு எப்படி இருக்கும் .

அப்படி பட்டவன் அதில் என்ன இருக்கிறது என்று புன்னகை செய்கிறார் என்று வியந்து போனான். ஆனாலும் அதற்க்கு உண்டான காரணத்தை ஆஷிக்கிடம் கேட்காது சித்தார்த் வந்த செய்திதாளை அவன் முன் வைத்தான்.

ஸ்ரீதர் எப்போதும் ஆஷிக் சொன்ன வேலையைய் மட்டும் தான் செய்வார். இந்த ஏழுவருடத்தில் ஆஷிக் பற்றி ஸ்ரீதர் தெரிந்துக் கொண்ட விஷயத்தில் ஒன்று ஆஷிக்குக்கு யாரும் தன்னிடம் அதிக படி உரிமை எடுத்துக் கொண்டு பழகுவது பிடிக்காது என்பது.

அதனால் எதுவும் கேட்காது செய்தி தாளை அவன் முன் வைத்தான்.ஸ்ரீதருக்கு மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.ஸ்ரீதர் கேட்காமலேயே ஆஷிக்குக்கே முன் வந்து சித்தார்த்தின் தங்கை பற்றி அதில் போட்டு இருந்ததை சிரிப்புடன் அவனிடம் கூறினான்.

“ஸ்ரீதர் இதில் போட்டு இருப்பதை பாறேன்.பெயர் பரினிதா, வயது 20, படிப்பு பி ஈ (e .c) முன்றாவது வருடம், ஆஷிக் படிக்க ஸ்ரீதருக்கோ இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று மனதில் நினைத்து முடிப்பதற்க்குள் அரியஸ் எட்டு, அவள் பொழுது போக்கு கார்ட்டூன் பார்ப்பது குழந்தைகளுடன் விளையாடுவது. என்று ஆஷிக் சொல்ல பரினிதாவின் எட்டு அரியஸிலேயே ஸ்ரீதருக்கும் சிரிப்பு வந்து விட்டது. ஏனோ ஆஷிக்கின் மனதில் பரினிதாவை பற்றி படித்ததும் ஸ்ரீதர் போட்டோவோடு கேட்டு இருக்கலாம் என்று நினைக்க தோன்றியது. பின் ஸ்ரீதர் காட்டிய செய்திதாளை பார்த்தவன் அதில் இருக்கும் போட்டோவை பார்த்து வியந்து தான் போனான்.

ஒன்று அவன் உருவம் என்றால் மற்றொன்று சித்தார்த்தின் பயோடேட்டாவில் போட்டு இருப்பதை விட வயது குறைந்து போட்டாவில் காணப்பட்டது.பின் தன் மனதுக்குள்ளாகவே ஏன் இருக்காது நம்மை மாதிரி தானே முன்னுக்கு வந்தவன் இல்லையே… அவன் ஜமீன் வாரிசு என்று பின் பலம் இருக்கும் போது அவனுக்கு என்ன நம்மை போல் பணக் கஷ்டம் வந்திருக்க போகிறது. அந்த பணத்தை சம்பாதிக்க நம்மை மாதிரி பல எதிரிகளை அவன் சாமாளித்து இருப்பானா... இல்லை அவர்களை சமாளிக்க போராடி தான் இருப்பானா…அவனுக்கு எந்த கவலையும் இருக்காது. அதனால் தான் அவன் வயது குறைந்து காணப்படுக்கிறான் என்று நினைத்துக் கொண்டான்.

பிறகு சேச்சே என்ன இது எப்போது இருந்து நான் தோற்றத்தை பற்றி எல்லாம் ஆராய தொடங்கி விட்டேன் என்று தன் மனதில் தோன்றிய எண்ணத்தை விரட்டி விட்டு ஸ்ரீதரிடம் “முதலில் அந்த கலெக்டரிடம் ஒரு அப்பாயின்மென்ட் வாங்கு முதலில் பேசி பார்க்கலாம் . நம் வழிக்கு வரவில்லை என்றால் பிறகு பார்க்கலாம்.” என்று கூறிக் கொண்டே கன்செக்க்ஷன் நடக்கும் இடத்திற்க்கு சென்றான்.

இங்கு பரினிதாவோ எதை பற்றியும் கவலை படமால் இன்னும் நான்கு நாட்களில் செல்ல இருக்கும் சொர்க்க பூமியை நினைத்து கனவு காணஆராம்பித்து விட்டாள்.சொர்க்கபூமிக்கு உள் வெளி உணவு பொருள் எதுவும் எடுத்து செல்ல கூடாது என்ற காரணத்தால் ஆஸ்ரமத்து குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவையான மருந்து மட்டுமே வாங்கி வைத்துக் கொண்டாள்.

ஏன் என்றால் பரினிதாவும் ஆஸ்ரமத்து குழந்தைகளும் சனிக்கிழமை சென்று ஞாயிற்று கிழமை தான் வருகிறார்கள். சித்தார்த் மட்டும் அன்றே வந்து விடுவதால் அந்த சொர்க்கபூமிக்கு தன் உதவியாள் மூலம் தன் தங்கைக்கும் ஆஸ்ரமத்து குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாட்டை செய்து விட்டான்.பரினிதாவும் ஆஸ்ரமத்து குழந்தைகளும் ஆவாளோடு எதிர் பார்த்த அந்த சனிக்கிழமையும் வந்தது.
 
Top