Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---1

சர்,சர், என்று ஒன்றன் பின் ஒன்றாக ஏழு எட்டு கார்கள் அணிவகுத்து அந்த பொழுது போக்கு இடமான சொர்க்க பூமி முகப்பில் வந்து நின்றன. முதல் பென்ஸ் காரில் இருந்து இறங்கிய ஆஷிக்கை அந்த முகப்பில் கையில் பூங்கொத்துடன் காத்திருந்த ஆஷிக்கின் மனேஜர் ஸ்ரீதரன் ஆஷிக் இறங்கியவுடன் அவர் கையில் கொடுத்து “வெல்கம் சர்.” என்று பணிவுடன் வரவேற்றார்.

அவர் நீட்டிய பூங்கொத்தை பெற்றுக் கொண்டு அதனை அருகில் இருப்பவனிடம் கொடுத்து விட்டு .

“அமைச்சர் வீட்டிலிருந்து கிளம்பி விட்டரா”

“இப்போது தான் போன் செய்தேன் சர்.இன்னும் கிளம்ப வில்லை .”

“சரி அவர் வரும் போது வரட்டும்.மற்றபடி எல்லாம் சரியாக செய்து விட்டாயா…?” என்று கேட்டுக் கொண்டே சொர்க்க பூமி உள்ளே சென்றான். சொர்க்க பூமி என்பது பொழுது போக்குக்கான இடம். அந்த சொர்க்க பூமி உள்ளே நுழைந்து விட்டால் போதும் ஆறு வயதிலிருந்து அறுபது வயது வரை இருப்பவர்கள் அனைவரையும் கவர்ந்து விடும். யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் வெளியே வர தோனாது.

அந்த சொர்க்க பூமி கேளம்பாக்கத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. அதன் உள்ளே அனைத்து பொழுது போக்கு அம்சமும் நிறைந்து இருந்தது.சிறுவர்களுக்கு உண்டான கேம்ஸ்சிலிருந்து டீன் ஏஜ் வயதுக்கு தேவையான மால்,தியேட்டர், மற்றும் ஜிம் என்று ஒரு பக்கமும், மறுபக்கம் ஸ்விம்மிங் புல் மற்றும் பார் வசதியோடு கட்டப்பட்ட ஸ்டார் ஒட்டலும், மற்றொரு பக்கம் அனைத்து வயதினருக்கும் தேவைப்படும் தியான மையமும் இடம் பெற்று இருந்தது.

அந்த சொர்க்க பூமிக்கு பணக்காரர்கள் மட்டும் இல்லாமல் ஒரு தடவை வந்து சென்றால் நடுத்தர வர்க்கமும் தொடர்ந்து வருவார்கள். அந்த அளவுக்கு அனைவரையும் ஈர்க்கும் படி இருந்தது. உள்ளே நுழைந்த அந்த இடத்தின் சொந்தக்காரன் ஆஷிக் அதனை பெருமையுடன் பார்த்தான்.ஆஷிக் தன் மற்ற தொழிலான கட்டுமான தொழில் மற்றும் விளம்பரம் ஏஜென்சியில் கிடைத்த வருமானத்தில் சென்னையில் மூன்று இடத்தில் பெரிய மால் கட்டினான்.

அதில் வரும் வருமானத்தை பார்த்து தான் அவனுக்கு இந்த ஐடியாவே வந்தது. காலை வந்து மாலை சென்றாலே இவ்வளவு லாபம் வருகிறதே வருபவர்களை ஒரு இரண்டு மூன்று நான் தங்கினால் எவ்வளவு லாபம் கிட்டும் என்று கணக்கு போட்டு தான் இந்த சொர்க்க பூமியை கட்டினான்.அவன் கணக்கு பொய்க்க வில்லை.அவன் போட்ட பணத்தில் பாதியை இந்த ஒரு வருடத்திலேயே பார்த்து விட்டான்.எப்போதும் அவன் கவனம் முழுவதும் பணம் பெருக்குவதிலேயே தான் இருக்கும்.

அப்படி பட்ட பணம் கொழிக்கும் சொர்க்க பூமி திறந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. அதனை கொண்டாடவே அமைச்சரை சீப் கெஸ்ட்டாக அழைத்திருந்தான்.

ஆனால் அவர் வருவதற்க்கு நேரமாகும் என்று தெரிந்தும், அதனை சட்டை செய்யாமல் விழா ஆராம்பிக்கும் ஏற்பாட்டை பார்க்கும் படி தன் மனேஜர் ஸ்ரீதரிடம் சொல்லி விட்டான்.அவன் எப்பவும் அப்படி தான் யாருக்கும் அடி பணிந்து போகமாட்டான்.அவனின் இந்த திமிர் தனம் அவன் பிறப்பால் வந்ததா...இல்லை இந்த எட்டு வருட சொந்த உழைப்பால் யாரையும் எதிர் பார்க்காமல் இந்த அளவுக்கு முன்னேறியதால் வந்ததா என்று தெரியவில்லை.

ஆனால் மொத்தத்தில் யாருக்கும் அடங்காதவன்.அவன் தொழில் வட்டாரத்தில் அவனை கர்வி, திமிர் பிடித்தவன் யாருக்கும் அடங்காதவன் என்ற பேச்சே அடிபடும். ஆனால் இந்த பேச்சி எல்லாம் அவன் மறைவில் தான் நடக்கும். எதிரில் தொழிலில் பழம் தின்று கொட்டையை துப்பியவர்கள் கூட அவனிடம் பவ்யமாக தான் பேசுவார்கள்.

மற்றவர்கள் அவனிடம் பவ்யமாக நடந்துக் கொள்வதற்க்கு அவனிடம் இருக்கும் பணம் ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் ஒருவனை ஒழிக்க வேண்டும் என்று அவன் நினைத்து விட்டால் அதனை செய்து முடிக்காமல் அவன் ஓயமாட்டான்.

ஆஷிக்குக்கு வயது இருபத்தி எட்டு தான். இருந்தாலும் பார்ப்பதற்க்கு முப்பதின் ஆராம்பத்தில் இருப்பது போல் காணப்படுவான். எதற்க்கும் தலை வணங்காத அவன் தன் அதிகபடியான உயரத்தால் தலைகுனியும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

ஆம் மற்றவர்கள் அவனிடம் பேசும் போது இவனை அண்ணாந்து பார்த்து தான் பேசுவார்கள் இவன் அவர்களிடம் தலை குனிந்து தான் பேசுவான்.அவனின் அதிகபடியான உழைப்பு அவன் உடல் வலிமையிலேயே காணப்படும்.மாநிறத்தில் மூக்கு முழி லட்சணமாக இருந்தாலும் அவன் எப்போதும் ஒரு கடினத்துடனே இருப்பதால் பெண்கள் இவனிடம் நெருங்குவது கிடையாது.

சில சமயம் இவனின் பணம் செல்வாக்குக்கு பார்த்து நெருங்கும் பெண்களை இவன் நெருங்க விட்டதும் கிடையாது. இவனின் வயது கூடி தெரிவதற்க்கு இவனின் இந்த குணநலன்களே காரணம்.ஒரு சமயம் சிரித்தால் வயது குறைந்து காணப்படுமா என்று தெரியவில்லை. ஏன் என்றால் அவன் மனம் விட்டு சிரித்தே யாரும் பார்த்தது கிடையாது.

பிஸ்னஸ் பேச்சி முடிந்து அந்த பேச்சில் பங்கு பெற்றவர்கள் விடை பெறும் போது கூட தன் இதழை லேசாக தான் விரிப்பான். அந்த பிஸ்னஸில் எவ்வளவு லாபம் பார்த்தாலும் அவன் செயலில் எந்த மாறு பாடும் இருக்காது.அப்படி திமிர் குணம் படைத்த ஆஷிக் தன் சொர்க்க பூமியின் ஒரு வருடம் நிறைவு விழாவை கொண்டாடி முடிக்கும் தருவாயில் தான் அவன் சீப் கெஸ்ட்டாக அழைத்த அமைச்சர் வந்து சேர்ந்தார்.

விழா முடியும் தருவாயில் இருப்பதை பார்த்த அமைச்சர் ஆஷிக்கிடம் .

“என்ன ஆஷிக் தம்பி நீயே கொண்டாடி முடிப்பதற்க்கு என்னை ஏன் சீப் கெஸ்டாக அழைத்தாய்.”

அமைச்சரிடமும் தன் பேசும் முறையை மாற்றமல் “உங்களுக்கு கொடுத்த அழைப்பிதழில் எத்தனை மணிக்கு விழா ஆராம்பம் என்று போட்டு இருந்தது.”

அந்த அமைச்சர் தன் மனதுக்குள் ஒரு அமைச்சரிடம் பேசுவது போலவா பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டே அவன் கேட்ட கேள்விக்கு “எட்டரை மணி என்று போட்டு இருந்தது. காலையில் கொஞ்சம் அவசரமான வேலை வந்து விட்டது.அது தான் கொஞ்சம் நேரம் சென்று விட்டது.” என்ற அந்த அமைச்சரின் பேச்சிக்கு .

“கொஞ்சம் நேரம் ஆகவில்லை.இரண்டு மணி நேரம் அதிகம் சென்று விட்டது.தேர்தல் சமயத்திலும், என் வேலையை செய்து முடித்து கொடுப்பதற்க்கும் என்னிடம் பணம் வாங்கும் உங்களுக்கே வேலை இருக்கும் போது உங்களுக்கு பணம் கொடுக்கும் எனக்கு எவ்வளவு வேலை காத்துக் கொண்டு இருக்கும்.” என்று கூறி என்னிடம் பணம் வாங்கும் உனக்கெல்லாம் என்னால் காத்திருக்க முடியாது என்று மறைமுகமாக கூறி செல்லும் அவனையே அந்த அமைச்சர் வெறித்து பார்த்திருந்தார்.

அதனை பார்த்த அந்த அமைச்சரின் அல்லக்கை ஒருவன் “என்ன தலைவா உங்க கிட்டயே ராங்கா பேசிட்டு போறான்.நீங்க ஊன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க முடிச்சிடலாம்.” என்ற அவன் பேச்சிக்கு அந்த அமைச்சர் பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்.

அருகில் யாரும் இல்லை என்ற பிறகே ஒரு ஆசுவாசத்துடன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அடக்கிய குரலில் “எங்கே இருந்துக் கொண்டு யாரை பற்றி பேசுகிறாய். உன் பேச்சி மட்டும் அவன் கேட்டு இருந்தால் உன்னை மட்டும் அல்லாமல் என்னையும் ஒழித்து கட்டியிருப்பான்.அவனின் செல்வாக்கு தெரியாமல் பேசுகிறாய்.முதலில் நாம் இங்கு இருந்து அவனிடம் சொல்லி விட்டு கிளம்புவோம்.” என்று கூறிக் கொண்டே அந்த அமைச்சர் ஆஷிக்கை நோக்கி சென்றார்.

தன் மேனஜர் ஸ்ரீதரிடம் பேசிக் கொண்டு இருந்த ஆஷிக் தன் அருகில் வரும் அமைச்சரை பார்த்ததும் ஸ்ரீதரிடம் கண் அசைவில் போகும் படி சொல்லி விட்டு அமைச்சரிடம் என்ன என்பது போல் பார்த்தான்.

அவன் பார்வையை புரிந்துக் கொண்ட அமைச்சர் “சரி ஆஷிக் தம்பி விழா எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சீ.” என்று கூறிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தார்.

பின் “என்ன தம்பி உங்கள் வீட்டிலிருந்து ஒருத்தரும் வரவில்லையா…? உங்களுடைய அம்மா சென்னையில் உங்களுடன் தானே இருக்கிறார்.அப்புறம் உங்க கூட பிறந்த இரட்டை பிறவியான சகோதரியாவது டெல்லியில் இருக்கிறார்.

ஆனாலும் இந்த விழாவுக்கு அவரும் வந்து இருக்கலாம்.உங்களுடைய இந்த சாதனை சாதரண விஷயமா பல ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இந்த சொர்க்க பூமி மற்றவர்களுக்கு சொர்க்கமாக காணப்படுகிறது என்றால், உங்களுக்கு பணம் கொட்டும் பூமி அல்லவா….இதில் வரும் வருமானமே வருடத்திற்க்கு பல கோடியைய் எட்டி விடுமே.

அதுவும் உன் சகோதரிக்கு கணவன் பிள்ளை என்ற பிக்கல் பிடுங்கலும் இல்லாத பட்சத்தில் தன் சகோதரனின் வெற்றியைய் கொண்டாடமல் அந்த மாதவருமானம் வரும் அந்த ரிப்போர்ட்டர் வேலை அவருக்கு என்ன அவ்வளவு முக்கியமோ எனக்கு தெரியவில்லை.” என்று கூறி ஆஷிக்கின் வீக் பாயின்டான அவன் குடும்ப விவரத்தை கூறினார்.

ஆஷிக் என்ன தான் தேர்தல் சமையத்தில் பணம் கொடுத்தாலும் தன் அடியாட்களின் முன் தன்னை அவமதிப்பாக பேசியதில் பொருத்துக் கொள்ளதா அமைச்சர் தன் கோபத்தை நேரிடையாக காமிக்காமல் இப்படி பேசி ஆஷிக் மனதை புண்படுத்த எண்ணினார்.

ஆனால் ஆஷிக் அவர் நினைத்தற்க்கு எதிர் பதமாக தன் வருத்தத்தை முகத்தில் காட்டாமல் அந்த அமைச்சரிடம் “ என்ன செய்வது உங்களை போல் தொகுதிக்கு ஒன்றை சின்ன வீடாக வைத்திருந்தால் என் அம்மாவும், சகோதரியும், வரவில்லை என்றாலும் அவர்களை ஒருத்தரை அழைத்து வந்து இருக்கலாம் எனக்கு அதற்க்கும் வழியில்லாமல் போயிற்று .பணம் சேர்க்க தெரிந்த எனக்கு கண்ட கழிச்சடைகளை சேர்க்க தெரியவில்லை.” என்ற அவனின் நேரிடையான பேச்சில் அந்த அமைச்சர் தான் வாய் மூடும் படி ஆயிற்று.

ஆஷிக் தன் வருத்தத்தையும் மற்றவர்களிடம் காட்ட மாட்டான். தன் சந்தோஷத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளமாட்டான்.அவனை வருத்தம் கொள்ளும் படி யாராவது பேசினால் பேசியவர்களின் மனது தான் ரணம் படும்.அதனால் அவனை பற்றி தெரிந்த யாரும் அவனிடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.அவனை பற்றி தெரிந்தும் அவன் குடும்பத்தை பற்றி பேசிய அந்த அமைச்சர் தன்னையே நொந்துக் கொண்டார்.

பின் அந்த அமைச்சர் தன் பேச்சை மாற்றும் பொருட்டு “சரி தம்பி விழா முடிந்து விட்டது அல்லவா நான் கிளம்பட்டுமா…?” என்று கேட்டதற்க்கு.

“உங்களிடம் முக்கியமான விஷயம் பேசவேண்டும். கொஞ்சம் இருங்கள் முக்கியமானவர்களை அனுப்பி விட்டு வருகிறேன்.” என்று அமைச்சரிடம் கூறிக் கொண்டே அவரின் பதிலை எதிர் பாராமல் விரைந்து சென்றான்.

அந்த அமைச்சர் மனதுக்குள் நான் அமைச்சர் என்னை காக்கா வைத்து விட்டு எந்த முக்கியமானவர்களை வழி அனுப்ப சென்று இருக்கிறான் என்று அவர் நொந்து தான் போனார்.

ஆஷிக் சென்ற இடத்தில் அந்த சொர்க்க பூமியின் அனைத்து உழியர்களும் சேர்ந்து இருந்தனர். அங்கு இருந்த தன் மனேஜரிடம் “என்ன ஸ்ரீதர் அனைத்து உழியர்களும் இருக்காங்களா…?” என்று ஸ்ரீதரிடம் கேட்டுக் கொண்டே அங்கு குழுவி இருந்த தன் உழியர்களை பார்த்து.

“நீங்கள் இல்லை என்றால் என்னால் இந்த சொர்க்க பூமியை திறம்பட நடத்த முடியாது. அதனால் இந்த வெற்றி முதலில் உங்களை தான் சேரும். இந்த வெற்றியை கொண்டாடும் பொருட்டு உங்களுக்கு இரண்டு மாதம் சம்பளத்தை போனஸாக தருகிறேன்.” என்று ஆஷிக் கூறியது தான் தாமதம் அங்கு பலத்த கைய் தட்டல் கேட்டது.

இதனை அங்கு வேலை செய்யும் உழியர்கள் யாரும் எதிர் பார்க்க வில்லை. ஆஷிக் எப்போதும் தன் உழியர்களை பொருளாதரத்தில் கஷ்டப்படும் படி விடமாட்டான். அவர்களிடம் எவ்வளவுக்கு எவ்வளவு வேலை வாங்க முடியுமோ வாங்கி விடுவான். ஆனால் அதற்க்கு ஏற்ற மாதிரி சம்பளமும் வெளியிடத்தில் கொடுப்பதை விட இரு மடங்கு அதிகம் கொடுத்து விடுவான்.

கைய் தட்டல் அடங்கியதும் “இந்த பணம் உங்கள் உழைப்பு. அதனால் எனக்கு இந்த கைய் தட்ட வேண்டாம். அதற்க்கு பதிலாக உங்களிடம் நான் எதிர் பார்ப்பது நான் கொடுக்கும் இந்த பணம் பாருக்கு செல்லாமல் உங்கள் வீட்டுக்கு சென்றால் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.” என்று கூறிவிட்டு.

தன் மேனஜர் தயாராக எடுத்து வைத்த போனஸ் கவரை ஒரு மூன்று பேருக்கு மட்டும் தன் கைய்யால் கொடுத்து விட்டு மற்றதை ஸ்ரீதரிடம் கொடுக்கும் படி சொல்லி விட்டு அமைச்சரை நோக்கி சென்றான்.

இந்த காட்சியைய் அமைச்சரின் அல்லகைய்யன ஒருவன் பார்த்து விட்டு அசந்து தான் போனான். அந்த அல்லக்கைய் வேறு யாரும் அல்ல முதலில் அமைச்சரிடம் தூக்கிடலாமா என்று சொன்னவன் தான். தன் தலைவரை காக்கா சொல்லி விட்டு வேறு யாரை இவன் வழி அனுப்ப செல்கிறான் என்று நினைத்து தான் ஆஷிக்கின் பின் தொடர்ந்தான்.

ஆனால் ஆஷிக்கின் இந்த நடவடிக்கையை பார்த்து பேசாமல் நாமும் இவரிடமே வேலைக்கு சென்று விடலாமா என்று யோசிக்க ஆராம்பித்து விட்டான்.அவன் யோசனையை “ஏலே” என்ற அமைச்சரின் குரல் தடை செய்தது. குரல் வந்த திசையை பார்த்த அவன் ஆஷிக்கும் அமைச்சரும் அந்த சொர்க்க பூமியின் கடைசி பகுதிக்கு செல்வதை பார்த்து அவர்கள் பின் ஒடினான்.

ஆஷிக் அந்த அமைச்சரை அந்த இடத்தின் மறு கோடிக்கு அழைத்து சென்று சொர்க்க பூமியின் மதில் சுவருக்கு அந்த பக்கத்தில் இருக்கும் இடத்தை காண்பித்து.

“ இதுவும் என் இடம் தான். சனி ஞாயிறுகளில் இந்த இடத்துக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு ஒட்டலில் ரூம் கிடைப்பது இல்லை. அதனால் இந்த மதில் சுவரை இடித்து பக்கத்தில் இருக்கும் என் இடத்தில் ஒரு த்ரீ ஸ்டார் வசதி கொண்ட ஒட்டல் கட்டலாம் என்று திட்டம் போட்டு உள்ளேன்.ஆனால் இந்த இரு இடத்திற்க்கு இடையே ஒடும் கால் வாய் தடையாக உள்ளது.அதனை அகற்ற வழி செய்யும் உங்களுக்கு உண்டான பணம் உங்கள் கையில் வந்து சேரும்.” என்று கூறியதற்க்கு .

“அய்யோ ஆஷிக் தம்பி நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் முடியாது.” என்ற அமைச்சரை ஆஷிக்கும் அப்போது தான் உழியர்களுக்கு போனஸ் கொடுத்து விட்டு வந்த ஸ்ரீதரும் அதிசயமாக பார்த்தனர்.

பணம் என்றால் எந்த செயலையும் செய்ய தயங்காதவர் இப்படி பேசுவது என்றால் என்னவாக இருக்கும் என்று ஆஷிக் மனதில் பல சிந்தனைகள் ஒடிக் கொண்டு இருந்தாலும் வெளியில் “ஏன்” என்ற ஒற்றை வார்த்தையில் கேள்வி எழுப்பினான்.

“ஆஷிக் தம்பி இப்போ முதல் போல நிலமையில்லை . ஒ இப்போ புரியுது.மூன்று மாதம் கழித்து நீங்கள் நேற்று தான் வெளிநாட்டிலிருந்து வந்ததால் இப்போ சென்னையின் நிலமை தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

சென்னைக்கு புதுசா ஒரு கலெக்டர் வந்து இருக்கிறார். அவர் ரொம்ப ஸ்டிட்டு எல்லாம் ப்ராப்பரா இருந்தா தான் செங்ஷனே செய்கிறார்.பைய்யன் இளம் ரத்தம் வேறா நீதி, நேர்மை, என்று ரொம்ப பண்றார் தம்பி.எதிலும் அவரை வளைக்க முடியலை. நான் ஒரு அமைச்சர் என்னையே மதிக்க மாட்டாங்கிறார்.

நான் நேரிடையா போய் இதை செய்து தாறுங்கள் என்று கேட்டால். இதில் இந்த பேப்பர் இல்லை அந்த பேப்பர் இல்லை என்று ஆயிரெத்தெட்டு ரூல்ஸ் நம்மை கிட்டயே சொல்கிறார் தம்பி. எல்லாம் சரியாக இருந்தால் நான் ஏன் அவரிடம் போக போகிறேன். இது அவருக்கு தெரிய வேண்டாம்.இந்த வழியில் நான் பணம் பாத்து மூன்று மாதங்கள் ஆகிறது தம்பி.” என்று நான் ஏன் முடியாது என்று சொன்னேன் என்ற காரணத்தை அமைச்சர் புட்டு புட்டு வைத்ததை கேட்டா ஆஷிக் சிறிது நேரம் பொறுமையுடன் யோசித்து விட்டு.

“ சரி இதை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறியதை கேட்ட அமைச்சர்.

“நான் இவ்வளவு நேரம் சொன்னது எல்லாம் உங்களுக்கு புரிய வில்லையா…? அந்த கலெக்டர் இருக்கிற வரை இது முடியாது. நான் மேல் இடத்தில் அந்த கலெக்கடரின் ட்ரான்பருக்கு ஏற்பாடு செய்து இருக்கிறேன். அதற்க்கு எப்படியும் ஒரு வருடம் பிடிக்கும். நீங்கள் இந்த ஒட்டல் கட்டும் ஐடியாவை ஒரு வருடம் தள்ளி வைத்து தான் ஆக வேண்டும்.” என்று கூறியதை கேட்ட ஆஷிக்.

“உங்களால் முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள்.இதனை நான் நேரிடையாக பார்த்துக் கொள்கிறேன். இது வரை உங்கள் மூலமாக ஏன் செய்தேன் என்றால் என்னால் முடியாது என்பது இல்லை. எனக்கு அதற்க்கு நேரம் இல்லை என்பதே காரணம். பணம் கொடுத்தால் ஈஸியாக முடியும் போது நாம் ஏன் மெனகெட வேண்டும் என்ற காரணத்துக்காக தான் .

இப்போது இந்த வேலையை உங்களால் செய்ய முடியாது என்ற பட்சத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன். அதற்க்காக என் திட்டத்தை ஒரு வருடம் எல்லாம் தள்ளி வைக்க முடியாது.நான் நினைத்ததை நினைத்தவுடன் செய்து முடித்து பழக்க பட்டவன்.”

“எல்லாம் சரி தம்பி நீங்கள் மட்டும் இதை எப்படி செய்து முடிப்பீர்கள்.”

“நீங்கள் சொன்னதை வைத்து தான்.”

“நான் என்ன சொன்னேன் ஆஷிக் தம்பி.”

“அது தான் இளம் ரத்தம் என்று சொன்னீர்கள் இல்லையா…? இளம் ரத்தத்துக்கு சூடும் அதிகமாக இருக்கும் தேவையும் அதிகமாக இருக்கும். பலகீனம் இல்லாத மனிதனே கிடையாது. அவன் பலகீனம் நம் பலம் அவ்வளவு தான்.”

அனைத்தையும் கேட்ட அந்த அமைச்சர் “தம்பி நான் சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. நீங்கள் பிஸ்னஸ்சுக்கு வந்து எட்டு வருடம் தான் ஆகிறது. நான் பத்து வயதிலிருந்து பல வேலைகளை பார்த்து விட்டு கடைசியாக தான் இந்த அரசியலில் குதித்தேன்.

நானும் அவன் வீக் பாயிண்ட் என்னன்னு ஆராய்ந்து விட்டேன். பணம் கொடுக்கலாம் என்றால். அந்த கலெக்டரே பொள்ளாச்சி பக்கத்தில் பெரிய ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர்.பணம் என்பது அவரிடம் இல்லாதது நம்மிடம் கிடையாது.சரி இது தான் விடு என்று வேறு அந்த மாதிரி பழக்கம் ஏதாவது இருக்கிறதா...என்று பார்த்தால் பைய்யன் இவ்வளவு நல்லவனாக இருந்திருக்க கூடாது.பைய்யன் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை செலுத்தியது கிடையாது போலும்.அதனால் தான் அவனை எதிலும் வலைக்க முடியாது என்று கருதி அவனை மாற்றலுக்கு ஏற்பாடு செய்து விட்டேன்.” என்று அமைச்சர் கூறிய அனைத்தையும் கேட்ட ஆஷிக் அவரிடன் ஒன்றும் பேசாமல் வழி அனுப்பி வைத்தான்.

அமைச்சர் சென்றவுடன் ஆஷிக்கின் மேனஜர் ஸ்ரீதர் “ அவர் சொல்வது சரி தான் சர். நானும் அவரை பற்றி கேள்வி பட்டேன். மிக நேர்மையானவர் என்று நம் தொழிலில் இருப்பவர்கள் எல்லாம் இது தான் சொல்கிறார்கள். முதல் மாதிரி பக்கத்தில் உள்ள புரோம்போக்கு நிலத்தை வலைத்து எதுவும் செய்ய முடிவது இல்லை என்று.” ஸ்ரீதர் கூறியதற்க்கு ஆஷிக்கிடம் எந்த பதிலும் இல்லாததால் தன் பேச்சை நிறுத்தி அவனை பார்த்தார்.

ஸ்ரீதர் தன்னை பார்ப்பதை பார்த்த ஆஷிக் “இப்போதும் சொல்கிறேன். வீக் பாயின்ட் இல்லாத மனிதனே கிடையாது. அவன் இவ்வளவு நல்லவனாக இருந்தால் அவன் பழக்க வழக்கத்தை விசாரிப்பதை விட்டு விட்டு அவன் குடும்ப விவரத்தை சேகரியும்.” என்றதும் ஆஷிக் போகும் வழியை புரிந்துக் கொண்ட ஸ்ரீதர்.

“ சர் நாளை இதில் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால்.”

“நான் முதலில் அவன் குடும்ப விவரத்தை விசாரிக்க தான் சொன்னேன்.இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கூற வில்லை.நாளை இதே நேரத்தில் அவன் குடும்ப விவரம் என் கையில் வந்தாக வேண்டும்.” என்று கூறி விட்டு தன் அடுத்த வேலையை பார்க்க சென்றான்.

அதே நேரத்தில் அந்த கலெக்டரான சித்தார்த் தன் வீக் பாயின்டான தன் தங்கையை எழுப்பிக் கொண்டு இருந்தான்.
 
Top