Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paiinthodu 20.1

Advertisement

இந்த மாதிரி பெத்தவங்க இருக்க
பிள்ளைகள் என்ன தான் சொல்ல முடியும்
ஆகாஷ் எல்லாம் தெளிவாக தான் இருக்கான்
 
நதியோட்டம் – 20

தீட்சண்யாவின் அதிர்ந்த நிலையை கண்டு தனக்கு சாதகமாக பேச ஆரம்பித்தார் சுசீலா.
“நான் சொல்றதை கேளு தீட்சண்யா. அம்மா உன்னோட நல்லதுக்குதான் எதையும் செய்யுவேன். சொல்லுவேன். உனக்கும் உன்னோட சேர்ந்து எங்களுக்கும் ஒரு வளமான எதிர்காலம் வரும் போது அதை தக்க வச்சிக்கறதுதான் புத்திசாலித்தனம்...”

ஒரு பத்து நாட்களுக்கு முன்பே அவருக்கு தினகரின் நண்பனின் மூலமாக ஆகாஷிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை அறிந்து அவனிடம் போனில் கோவமாகத்தான் முதலில் பேசினார் சுசீலா.
ஆனால் அதையுமே அவன் வியாபாரமாக பேசிவிட்டதில் முதலில் யோசித்தாலும் பின்னால் அவன் கூறிய வார்த்தையில் கொஞ்சம் சமாதானம் ஆகினார்.

அதுவும் தினகரை கைக்குள் வைத்துக்கொண்ட ஆகாஷ் ஷைலஜாவை குடிகாரி என்றும் அவளால் குடும்பத்திற்கு பெரிய அவப்பெயர் என்றும் கூறியவன் பரிதாபப்பட்டு தான் அவளை தங்கள் வீட்டில் வைத்திருப்பதாகவும் மூளை சலவை செய்ய அதை அப்படியே நம்பியவர் கண்முன் தங்களது கஷ்ட ஜீவனம் இனியும் இல்லை என எண்ணினார் சுசீலா.
அவரை பொறுத்தவரை ஆகாஷை போல ஒரு உத்தமன் இல்லை. அவன் தங்களை இரட்சிக்க வந்தவனாக பார்க்கும் அளவிற்கு ஆகாஷ் அவர்களை மாற்றியிருந்தான். ஏற்கனவே பேராசைக்காரர். வாய்ப்பு கிடைத்ததும் சொல்லவா வேண்டும்.

அதற்கு ஒரு பங்கம் அதுவும் தன் மகளாலேயே தனது திட்டங்கள் அனைத்தும் நொடியில் சீட்டுக்கட்டுபோல சரிவதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை அவரால். எப்படியாவது தீட்சண்யாவின் மனதை மாற்றிவிடவேண்டும் என துடித்தார்.

“இங்க பாரு தீட்சு. அந்த பொண்ணை மாப்பிள்ளைக்கு சுத்தமா பிடிக்கலை. ஆனாலும் கட்டிக்கிட்ட பாவத்துக்கு பரிதாபப்பட்டு இப்போ கவனிக்கிறாங்க. எவ்வளோ நல்ல மனசு இருக்கனும் அவங்களுக்கு...”
“உனக்கு கொஞ்சம் சாமர்த்தியம் இருந்தா போதும். உன்னோட புருஷனை நீ கைக்குள்ள போட்டுக்கலாம். அதுக்கப்பறமா அந்த பொண்ணை எங்கையாவது அநாதை ஆசரமத்துல சேர்த்துவிட்டுட்டு நீ இந்த வீட்டை மகாராணியாட்டம் ஆட்சி பண்ணலாம்...”

நிராதரவான ஷைலஜா தீட்சண்யாவின் கண்முன்னால் தோன்றி மறைந்தாள். தன் தாய் பேச பேச அவளது எண்ணம் வலுபெற்றது.
“உன்னோட அழகு மேல நம்பிக்கை வை. உன்னை தவிர வேற எதையும் உன் புருஷனை நினைக்க வைக்காதே. அதுக்கப்பறமா பாரேன். புத்திசாலியா இரு. உன்னால நினச்சா முடியாதது எதுவும் இல்லை...” என பேச அதில் அருவருத்து போனாள் தீட்சண்யா.
“ச்சீ நீயெல்லாம் ஒரு அம்மா. அம்மான்ற வார்த்தைக்கே களங்கம் செய்ற. பெத்த பொண்ணுகிட்ட இப்படி பேச உனக்கு அசிங்கமா இல்லை...” என மஞ்சரி தாயிடம் வெடித்துவிட்டு கைகளை காற்றில் துழாவியபடி தீட்சண்யாவை தேடியவள்,

“அக்கா என்னையும் உன்னோட கூட்டிட்டு போய்டுக்கா. இங்க இருந்தா எனக்கும் ஒரு விலையை பேசி வித்துடுவாங்க ஆனா எனக்காக நீ இங்க இருக்காத....” என அழுதுகொண்டே கூறியவள்,
“உண்மையிலேயே இந்த வீட்ல இருக்கிறவங்க நல்லவங்களா இருந்தா எதுக்காக இந்த விஷயங்களை நம்மக்கிட்ட இருந்து மறைக்கனும்? கல்யாணத்துக்கு முன்னாலயே சொல்லியிருக்கனுமே? திட்டம் போட்டு ஏமாத்திருக்காங்க...”

தனக்காக பேசிய தங்கை மஞ்சரியை அணைத்துக்கொண்டவள் விழிகளில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூற வரவில்லை. மொத்தமாக கல்லாக மாறியிருந்தாள்.

கண்ணீர் விடும் நேரமில்லை இது. தன் தங்கையின் தலைக்குமேல் கத்தி தொங்குவதை தீட்சண்யா விரும்பவில்லை.
“மஞ்சு, அழக்கூடாது. அக்கா எது செஞ்சாலும் உன்னோட நல்லதுக்குதான். நீ அமைதியா இரு...” என அவளுக்கு தைரியம் கூற,
“அடி அறிவுகேட்டவளே? உன்னோட அக்காவே சூழ்நிலையை புரிஞ்சி சம்மதிச்சுட்டா. உனக்கேண்டி இவ்வளோ பேச்சு. கெடுத்துவிட்டுடுவ போல?...”என மஞ்சரியை கடிந்துகொண்டார் சுசீலா.

அப்போதும் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்த தீட்சண்யாவின் விழிகளை சந்திக்க மறுத்து வேறோருபுறம் திரும்பிக்கொண்டார். ஆனால் அவரின் முகத்திலேயே தெரிந்தது, அவருக்கும் தீட்சண்யாவின் முடிவில் சந்தோஷம் என்பது.

சலிப்பாக கதவை நோக்கி சென்றவளை பார்த்த சுசீலா, “தீட்சு மாப்பிள்ளைக்கிட்ட சொல்லி நம்ம தினகருக்கு இங்கேயே ஒரு நல்ல வேலை பார்த்துகொடுக்க சொல்லு. இன்னைக்கு நைட்டே பேசிட்டு...” அவரின் பேச்சு காதில் விழாதவாறு சென்றுவிட்டாள்.

அங்கே அவளது வருகையை எதிர்பார்த்ததை போல அங்கே இருந்த மங்களம் பின்னால் இருந்த கடைசி எல்லைக்கு அழைத்துசென்றவர் யாரின் கவனத்தையும் கவராத வண்ணம் மறைவிற்கு சென்றுவிட்டார்.
“என்னம்மா காரியத்தையே கெடுக்க பார்த்தீங்களே? நீங்க பார்த்தது மட்டும் தெரிஞ்சா அந்த இராட்சசன் உங்களோட சேர்த்து என்னையும் கொன்னு புதைச்சிடுவான்...”

“ஏற்கனவே இவனுங்ககிட்ட சிக்கி அந்த பொண்ணு கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருக்கு. உங்களுக்கும் அந்த நிலைமை வரக்கூடாதுன்னு தான் முதல்லையே உங்களை காப்பாத்த நினச்சேன். எப்டியாவது இங்க இருந்து தப்பிச்சு போய்டுங்கம்மா...”
“இவ்வளோ தைரியமா எனக்கிட்ட சொல்றீங்களே? என்னை கூட்டிட்டு வந்து. அதை அவங்க கவனிச்சுட்டாங்கன்னா உங்களுக்குத்தான் கஷ்டம் மங்களம்மா...”
“இப்போ இந்த நேரத்துக்கு யாரும் வெளில வரமாட்டாங்க. அதான் உங்களை இங்க அழைச்சுட்டு வந்தேன்...”

அவரை ஆழ்ந்த பார்வை பார்த்தவள், “எனக்கு ஷைலஜா பத்தி தெரியனும், சொல்றீங்களா? அந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கு?...”
“என்னம்மா நீங்க? இங்க இருந்து முதல்ல கிளம்புங்க. நீங்க இங்க இருக்கிற நேரம் ஆபத்துதான் அதிகம்...”
“சரி. சொல்லுங்க எப்படி நான் தப்பிச்சு போக? வழி சொல்லுங்க...” கைகளை கட்டிக்கொண்டு அவரிடம் கேள்வி கேட்க அவரோ திகைத்து நின்றார்.

“இதை எப்படி யோசிக்காமல் விட்டேன். இவ்வளோ பெரிய வீட்டை சுற்றி காவலுக்கு ஆட்கள் இருக்கும் போது எப்படி தப்பிக்க முடியும்? என கலங்கியவர் இயலாமையோடு தீட்சண்யாவை பார்க்க,

“தெரியலைல? இப்போ இவ்வளோ அக்கறையில சொல்ற நீங்க கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாலாவது, இல்லை எங்களுக்கு நிச்சயம் நடக்கிறதுக்கு முன்னாலாவது, நடந்ததுக்கு பிறகாவது சொல்லியிருக்கனும். இப்போ எல்லாம் கை மீறி நடந்த பின்னால கடைசி நேரத்துல சொல்றீங்களே?...” அடக்கப்பட்ட கோவத்தில் அவரிடம் பேச,

“நிச்சயமா யாராலையும் சொல்லியிருக்க முடியாதும்மா. ஏனா உங்களையும் உங்க வீட்டையும் ஏன் நீங்க படிக்கிற இடத்துலயும் கூட ஆட்களை காவலுக்கு வச்சிருந்தாரு...” இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் இன்றைய நாளில்?
“அதுமட்டுமில்லை? இங்க வந்த பின்னால கூட யாரையுமே உங்ககிட்ட நெருங்க விடலை. உங்களோட யார் பேசறாங்கன்னு கண்கானிச்சுட்டே இருந்தாங்க. அதயும் மீறி யாராலையும் சொல்லமுடியலை. நாங்க என்னதான்ம்மா செய்ய?...”
மங்களம் இந்தளவிற்கு தனக்கு உதவுவதே பெரிது என நினைத்தவள்,

“ஷைலஜா யாருன்னு கேட்டேனே?...”
“அது ஏதோ மராட்டி பொண்ணு. இங்க காலேஜ்ல இருந்து டூர் வந்தப்போ இந்த பாவி கண்ணுல பட்டுடுச்சு. முதல்ல பொண்ணு நல்லா அழகா இருக்குன்னு தான் நெருங்கிருக்காரு. ஆனா அந்த பொண்ணோட அப்பா பத்தியும் அவருக்கு இருக்கிற அளவில்லா சொத்துபத்து பத்தியும் தெரிஞ்சிடுச்சு...”

“அதனால் அந்த பொண்ணை விரும்பறது போல நடிச்சு அந்த பொண்ணோட அப்பாவுக்கு தெரியாம கல்யாணமும் செய்துட்டு வந்துட்டாரு. அந்த பொண்ணோட அப்பாவுக்கு சின்னைய்யாவோட சுயரூபம் தெரிஞ்சதும் அவரோட சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்கும் பொறுப்பை அவரோட நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருத்தர்க்கிட்ட ஒப்படைச்சிட்டு தங்களோட காலத்துக்கு பின்னால சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் மட்டும் மாதா மாதம் தன் பொண்ணோட அக்கவுண்ட்ல போய் சேருமாறு உயில் எழுதி வச்சிருக்காரு...”

“அவரு எழுதினதுக்கும் காரணம் இருக்கு. சின்னையாவுக்கு பெண் சகவாசம் அதிகம். அதனாலதான் அப்படி ஒரு உயில். ஆனா உயில் எழுதினதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட சின்னைய்யா...” என்றவரை இடையிட்ட தீட்சண்யா,
“முதல்ல சின்னைய்யா, அவரு இவருன்னு மரியாதை குடுத்து பேசறதை நிறுத்துங்க மங்களம்மா. கேட்கவே நாராசமா இருக்கு...”
“அப்படியே பழகிடுச்சுங்கம்மா. மாத்த முடியலை...” என்ன செய்ய என்பது போல பரிதாபமாக பார்த்த மங்களத்தை காணும் போது உருகிப்போனது தீட்சண்யாவிற்கு.

அவளது அமைதியை பார்த்துவிட்டு, “சின்னைய்யாவுக்கு அந்த உயில்ல என்ன இருந்ததுன்னு தெரியலை. ஆனா அவர் காதுக்கு வந்த விஷயம் அந்த பொண்ணுமேல எல்லா சொத்தையும் எழுதி வச்சிட்டதா சேதி வந்திருக்கு. ஆனா அது வேணுமின்னே சொல்லப்பட்ட சேதின்னு எல்லாம் கை மீறி போனதுக்கு பின்னாலதான் தெரியும் போல...”

புரியாமல் பார்த்த தீட்சண்யா, “கொஞ்சம் தெளிவா சீக்கிரமா சொல்லுங்க மங்களம்மா...” என ஊக்க அவர் விசும்பிக்கொண்டே,
“சொத்து தான் பொண்ணு பேர்ல வந்திடுச்சேன்னு அதோட அப்பாவையும் அம்மாவையும் ஆள்வச்சு விபத்து போல செஞ்சு கொன்னுட்டாரு. எப்போ அவங்க சாக சொத்து அவர் கைக்கு போகன்னு...” என வாயை மூடிக்கொண்டு நடுக்கத்தோடு கதற இவளுக்குமே ஒரு நொடி உடல் தூக்கிப்போட்டது.

“அந்த நேரம் பார்த்து இவர் இந்த பொண்ணை தேனிலவுன்னு கூட்டிட்டு போய் குடிக்கு அடிமையாக்கிட்டாரு. அப்போதான் இவரு மேல எந்த சந்தேகமும் வராதுன்னு...”
Nice
 
Top