Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 22.1

Advertisement

இனி என்ன பண்ணி என்னத்துக்கு...ஒரு அப்பாவி பொண்ணோட உயிர் போயிடிச்சே:cry:
 
நதியோட்டம் – 22

நிஷாந்தால் இன்னமும் தான் பார்த்ததை நம்பமுடியவில்லை. அதற்குள் தன் கைவளைவிற்குள் நின்றிருந்த ஹர்ஷிவ்தா மயங்கியதில் தெளிந்தவன் உடனே செயல்பட்டான்.
அவனுக்கு தெரியும். தன்னை விட தீட்சண்யாவின் பிரிவினால் பாதிக்கப்பட போவது ஹர்ஷூ தான் என்று. முதலில் அவளை மீட்டாகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டனர் அவனும், அவனது குடும்பமும்.

பரணி பதட்டமாக ஹர்ஷூவை மடியில் தாங்கியதும் பரமேஷ்வரன் தண்ணீரை கொண்டுவந்து தெளித்தார். இருந்தும் மீளா மயக்கத்திற்கு சென்றது போல மூர்ச்சையாகி கிடப்பவளை எழுப்பமுடியாமல் திண்டாடினார்கள்.
சுதாரித்த பரமேஷ்வரன் உடனே செல்வத்திற்கும், திருவேங்கடத்திற்கும் அழைத்தார். அவர்களிடம் உடனடியாக வீட்டிற்கு வர சொல்லிவிட்டு தோய்ந்துபோய் மகளின் முகத்தை பார்த்துக்கொண்டே அமர்ந்துவிட்டார்.

செல்வம் சரஸ்வதி இருவரும் அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டனர். அதற்குள் நிஷாந்த் அவர்களது மருத்துவர் தேவிகாவிடம் பேசி உடனடியாக தாங்கள் வருவதாக கூறிவிட்டு ஹர்ஷூவை தூக்கி வாசலை நோக்கி விரைந்தான்.
அவனை அனைவரும் பின் தொடர மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே திருவங்கடமும் எதிர்ப்பட அவரும் அவர்களோடே சென்றுவிட்டார்.

ஹாஸ்பிட்டல் வளாகத்திலேயே தேவிகாவிற்கு வீடும் இருப்பதால் அவரும் அந்த நேரத்திற்கு வருவதில் அந்தவிதமான பிரச்சனையும் இல்லாது போனது.
உடனே அனுமதிக்கப்பட்ட ஹர்ஷூவின் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் போக தேவிகாவும் கொஞ்சம் பயந்துதான் போனார்.

ஹர்ஷூவின் இதயத்துடிப்பு திடீரென அதிகமாகவும் திடீரென மிக முறைவாகவும் இருக்க, மயக்கம் தெளியாமலும் இருக்க அனைவருக்குமே உயிரை பிசைந்தது.
பெற்ற மகள் குற்றுயிராக கிடக்க, பெறாத மகளாக நினைத்த தீட்சண்யா நிராதரவாக பிணமாக அங்கே கிடக்க ஐந்த நினைவே பரமேஷ்வரனை அலைகழித்தது.

ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு ஹர்ஷூவின் உடல்நிலையும், இதயத்துடிப்பும் சீராக இருப்பதாகவும், அதிர்ச்சியால் மூளை பாதிக்கப்பட்டு செயல்படவில்லை என்றும் கூறியவர் விரைவில் சரியாகிவிடும் என சொல்லிவிட்டு சென்றார் தேவிகா.
அதை கேட்டு அதிர்ந்த பரமேஷ்வரன் முகத்தில் அடித்துக்கொண்டு அழ அவரது இந்த வேதனையை பொறுக்காமல் பரணியும் அவரை அணைத்துகொண்டு கண்ணீர்விட என் அந்த இடமே மயான சூழ்நிலையில் இருந்தது.

செல்வத்தாலும், திருவேங்கடத்தாலும் பரமேஷ்வரனை தேற்றமுடியவில்லை. பரணியை அணைத்துகொண்ட சரஸ்வதி அவரை ஒரு இடத்தில் அமரவைத்து தானும் துணையாக அமர்ந்துகொண்டார்.
நிஷாந்த் நடந்ததை செல்வத்திற்கும் திருவேங்கடத்திற்கும் நடந்ததை கூறினான். செல்வம் வீட்டிலிருந்து வரும் போதே நிஷாந்தின் மொபைலை பார்த்து எதற்கும் இருக்கட்டுமென கையோடு கொண்டுவந்திருந்தார்.

அதில் இருந்த தீட்சண்யாவின் வீடியோவை தரவிறக்கம் செய்து நிஷாந்த் காட்ட பார்த்ததும் துடித்துவிட்டனர் இருவரும். சரஸ்வதியும் எழுந்துவந்து பார்த்து அழுகை ஆரம்பித்துவிட்டார்.
திருவேங்கடத்தால் தாங்கமுடியவில்லை. தீட்சண்யாவிடம் அந்தளவிற்கு பழக்கம் இல்லைஎன்றாலும் ஹர்ஷூவோடு பரமேஷ்வரனின் இல்லத்தில் பலமுறை பார்த்திருக்கிறார். அவரை பொறுத்தவரை மரியாதை தெரிந்த நல்ல பெண் தீட்சண்யா.
அவர்கள் அதிர்ச்சியில் நிற்க மீண்டும் ஒருமுறை அந்த வீடியோவில் கேட்ட தீட்சண்யாவின் குரல் பரமேஷ்வரனின் உடல் இறுகியது.
முகத்தை அழுந்த துடைத்துகொண்டவர், “டேய் திரு சகுந்தலாவை இங்க காலையில வர சொல்லு. பரணிக்கு துணையா இருக்க சொல்லு. நீயும் நிஷாந்தும் என்னோட ஊட்டிக்கு புறப்படுங்க...”

அவரது குரலில் தெறித்த வெறியில் பயந்துவிட்டார் பரணி.
“வேண்டாங்க. நம்ம பொண்ணு இங்க இப்படி உணர்வில்லாம இருக்கா. இப்போ நீங்க அங்க போகவேண்டாம்...” எங்கே அங்கே போய் பிரச்சனை ஆகிவிடுமோ என அஞ்சினார் பரணி.
“அப்போ ஊட்டியில பிணமா இருக்கிறது யாரு பரணி?...” தன்னுடைய கணவனது குரலா என்னும் அளவிற்கு அப்படி ஒரு ஆக்ரோஷம் தெரிந்தது பரமேஷ்வரனின் குரலில்.

“அவளையும் நான் என்னோட பொண்ணாதான் நினைக்கிறேன் பரணி. அவ பேசினதை கேட்டுமா என்னை தடுக்கற? என் பொண்ணுங்களோட இந்த நிலைமைக்கு காரணமானவங்களை நான் சும்மா விடமாட்டேன் பரணி...” என்றவர்,
“அண்ணா நீங்க இங்க பரணிக்கு துணையா இருங்க என்று சரஸ்வதியை பார்க்க,
“நானும் உங்க கூட வரேன் நிஷாந்த். தீட்சண்யாவை கடைசியா ஒருமுறை பார்க்கனும்...” அழுகையை அடக்கிய குரலில் பரிதாபமாக கேட்டவரை தடுக்க மனமில்லாமல் தங்களோடு அழைத்து சென்றான் நிஷாந்த்.

திருவேங்கடம் தாங்கள் கிளம்பியதும் கோவை கமிஷனருக்கு அழைத்து உதவி கோர அவரும் அனைத்தையும் செய்வதாக கூறி வாக்களித்தார்.
இவர்கள் ஐந்துமணிநேரத்தில் அங்கே செல்வதற்குள் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரிகள் இவர்களது தகவலின் படி அங்கே சென்று பார்மாலிட்டீஸ் அனைத்தையும் ஆரம்பித்திருந்தது.

ஒன்பது மணியளவில் அந்த பங்களாவின் வாசலில் காரை நிறுத்தியதும் நேற்றைய நிகழ்வு அவனது கண்முன் நிழலாடியது. எந்தளவிற்கு பூரித்து நின்றாள் தீட்சண்யா. இன்று அவளை உயிரற்ற உடலாக பார்க்க போகிறோம் என்ற துக்கம் அவனது தொண்டையை கவ்வி அழுகை கூட வரமுடியாமல் செய்தது.

இவர்களை பார்த்த இன்ஸ்பெக்டர் உடனடியாக நெருங்கி பேசியவர் ஒரு கான்ஸ்டபிளை அழைத்து உள்ளே சென்று தீட்சண்யாவை காண்பிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
கமிஷனரிடம் ஏற்கனவே பரமேஷ்வரனும், திருவேங்கடமும் பேசிவிட்டபடியாலும் அந்த வீடியோவை அவருக்கு அனுப்பியதாலும் தீட்சண்யாவின் வாக்குமூலத்திலேயே அனைத்தும் தெரியவர குற்றவாளிகளான ஆகாஷின் பெற்றோரும், தீட்சண்யாவின் குடும்பமும் மஞ்சரியை தவிர்த்து கைது செய்யபட்டிருந்தது.

இவர்கள் வரும் முன்னமே அனைத்தையும் துரிதகதியில் நடத்தியிருந்தனர் கமிஷனரின் காவல்துறை அதிகாரிகள். கைகளில் விலங்கிட்டு ஒரு ஓரத்தில் அமரவைக்கபட்டிருந்தார்கள் அனைவருமே. பரமேஷ்வரன், திருவேங்கடத்தின் செல்வாக்கினால் இது உடனடியாக சாத்தியப்பட்டது.
இன்னொரு மூலையில் மங்களத்தின் மடியில் தலைசாய்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள் மஞ்சரி. மங்களத்திடமும் சாட்சி வாக்குமூலம் பெற்றுவிட்டதால் அவரும் சோர்ந்துபோய் அமர்ந்திருந்தார்.

“மஞ்சு...” நிஷாந்தின் குரலில் துள்ளி எழுந்தவள்,
“நிஷூ அண்ணா, நிஷூ அண்ணா...” என கைகளை துளாவியபடி அவனை தேட அவளின் ஒரு கையை பற்றுக்கொண்டதும் அவனை கட்டிக்கொண்டு கதறினாள் மஞ்சரி.
அவர்களை தேற்றகூட முடியாமல் மற்றவர்களும் கண்கலங்கி நிற்க பரமேஷ்வரனோ மஞ்சரி, நிஷாந்தின் அழுகையில் அவர்கள் விட்ட கண்ணீரில் பொறுமையை இழந்துகொண்டிருந்தார். திருவேங்கடம் தான் நிஷாந்தை அமைதிப்படுத்தினார்.

மஞ்சரி தொய்ந்து போய் விழ அவளை பிடித்து சோபாவில் படுக்கவைத்ததும்,
“இப்படித்தானுங்கைய்யா போலீஸ் வந்து சின்னம்மா இறந்ததை சொன்னதுல இருந்து அழுதுட்டே இருக்குது. நானும் எவ்வளவோ தேற்றி பார்த்துட்டேனுங்க. முடியலை...” என அவரும் கலங்க இதற்கெல்லாம் காரணமானவர்களை வெறித்தார் பரமேஷ்வரன்.
அவரது பார்வையில் அனைவருக்கும் முதுகுத்தண்டு சில்லிட்டது. அந்த பார்வையை தவிர்க்க தலையை குனிந்துகொண்டனர்.

தீட்சண்யாவின் அறையை நெருங்கியதுமே பரமேஷ்வரன் வாயிலோடு நிற்க திருவேங்கடம் தானும் உடன் நின்றுகொண்டார்.
கட்டிலில் தூங்குவது போல கிடந்த தீட்சண்யாவை நெருங்கிய நிஷாந்த் அவளது கன்னத்தை தொட்டு,
“தியா...” அவனது அழைப்பு அவளை சேராது என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அழைத்தான்.

அழைத்துக்கொண்டே இருந்தவன் அவளை அல்லி தன்மீது சாய்த்துகொண்டு,
“ஐ லவ் யூ தியா...” என கதற அவன் பின்னால் நின்றுகொண்டிருந்த சரஸ்வதி ஸ்தம்பித்துவிட்டார்.
நிஷாந்த் தீட்சண்யாவை விரும்பினானா? என குழம்பி நின்றார். அவருக்கென்ன தெரியும்? நிஷாந்த் சொன்னது காதலிலோ ஏன் நட்பிலோ கூட இல்லை. அதையும் தாண்டிய ஒரு ஆத்மார்த்தமான உணர்வில் என்பது அவருக்கு தெரியவில்லை.

அந்த உணர்வை நட்பில் இணைத்த அம்மூவரால் மட்டுமே உணர முடியும் என்பதும் சரஸ்வதியால் புரிந்து கொள்ளமுடியவில்லை. நிஷாந்தின் அழுகையும், தீட்சண்யாவின் நிலையம் அவரது மனதை கூறுபோட்டது.
தன் கண்ணெதிரே கதறி துடிக்கும் தனது மகனுக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாம தவித்து நின்றார் அத்தாய்.

ஆனால் பரமேஷ்வரனால் அப்படி நிற்க முடியவில்லை. நிஷாந்த் தியா என உருக்கும் குரலில் தீட்சண்யாவை அழைக்க ஆரம்பிக்கும் போதே அவர்களை பார்த்தவர் அவனது கதறலில் கட்டுப்பாடுகளை இழந்தார்.
வேகமாக படியிறங்கி கீழே வந்தவர் கைது செய்யப்பட்டிருந்தவர்களை மாற்றி மாற்றி புரட்டி எடுத்துவிட்டார். அதிலும் சுசீலாவும், தினகரையும் அலறி துடிக்கும் படி நொருக்கித்தள்ளிவிட்டார்.

அவரது ஆவேசத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும் காவலர்கள் கூட அவரை தடுக்க நினைக்கவில்லை. அவர்களுக்கு தெரியுமே இந்த ஊரில் ஆகாஷ் செய்த அராஜகத்தை பற்றி.
Nice
 
Top