Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 21.2

Advertisement

AshrafHameedaT

Administrator
Part 2

தன்னை விட்டுவிடுமாறும், காப்பாற்றுமாரும் அவன் மன்றாடியதில் உள்ளம் உவகை கொள்ளவில்லை. நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை அமைய வேண்டும்? என அதுவரை அடைக்கப்பட்டிருந்த கண்ணீர் அருவியாக கொட்ட ஆரம்பித்தது.

“ஏன் ஹர்ஷூ எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை? என்னை பெத்தவங்களே காசுக்காக என்னை வித்துட்டாங்க ஹர்ஷூ...” என ஆரம்பித்தவள் இங்கு வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் சொல்லிமுடித்தாள்.
அவளது வேதனை, கண்ணீர், ஏமாற்றம், தன் குடும்பத்தினரின் துரோகம், சரியான நேரத்தில் மங்களத்தின் உதவி என அனைத்தும் அவ பேச பேச ஏற்கனவே செட் செய்து வைத்திருந்த மொபைலில் வீடியோவாக ரெகார்ட் ஆனது.

“தாலி கட்டினா அதுக்கு உண்மையா இருக்கனும்ன்ற விதி பொண்ணுக்கு மட்டும் தானா? இந்த உலகத்துல பொண்ணுங்களுக்கு மட்டும் தானா கற்பு பத்தின நெறிமுறைகளை சொல்லி வளர்த்தாங்களா? ஆண்களுக்கு இல்லையா?...”
“பொண்ணுங்க இப்படி வளரனும், அப்படி இருக்கனும்ன்ற நீதிகளை சொல்லி பாடம் எடுக்கிறவங்க வாழ்க்கையை நிர்ணயிக்கிற உரிமையை பெண்களுக்கு மட்டும் ஏன் தருவதில்லை ஹர்ஷூ? என்னோட பெத்தவங்க கைல நம்பிக்கையோட ஒப்படைச்ச என்னோட வாழ்க்கையை பாரு?...”

“எங்கம்மா சொல்றாங்க, ஆம்பளை தப்பே பண்ணிட்டு வந்தாலும் அது எல்லாமே பொண்ணுங்களால தான்னு. அது ஏன் தவறுகள் எல்லாமே பொண்ணையே சேரும்?. அப்படி எந்த மரபுல சொல்லிருக்காங்க? ஏன் அப்படி ஒன்றை சித்தரிச்சு வச்சு அதன் படி வாழ்க்கையை நடத்துறாங்க?...”
“பொண்ணுங்களுக்கே உண்டான அருமைகளை, பெருமைகளை போற்றாமல் அவங்களை கட்டுப்பட்டியா கட்டுப்பாட்டுக்குள்ளையே வச்சிருந்து அவங்களை முடக்கப்பார்க்காங்க...”

“வெளி உலகத்தை அறியாத கல்யாண வாழ்க்கை தோத்துபோன பொண்ணுங்க அதை நினச்சே காலம் முழுவதும் கதறி அழனும்னு என்ன விதி?. இப்படியே அழுது அழுது அந்த கண்ணீர்லையே கரைஞ்சு ஒரு கட்டத்துல மொத்தமா தொலைஞ்சும் போயிடறாங்க...”
“இந்த உலகத்துல இப்படி தொலைந்து போன பெண்களில் நானும் இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன். என் கண்முன்னால இருந்த ஒரு அரக்கனை நான் அழிச்சிட்டேன்...”

“ஆண்களோட ஆளுமைக்குள்ள அடங்கிப்போறதுக்கு அவங்களுக்கு எதுக்கு பொண்டாட்டி? அதுக்கு அடிமை போதுமே?...”
“தாலியை அடிமைசாசனமா நினைக்கிற எந்த ஒரு ஆம்பளையும் தன்னை ஆம்பளைன்னு சொல்லிக்கிறதே அவமானம். எல்லாத்துக்கும் பொறுத்து பொறுத்து மொத்தமா முதுகெலும்பே இல்லாம வளைஞ்சு ஒடிஞ்சிடறாங்க...”
“ஆனா என்னை போல இனி எந்த பெண்ணும் ஆகிட கூடாது. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய சிறகுகளை விரித்து வெளி உலகம் போற்ற பறக்கனும். அவங்களுக்குன்னு ஒரு இடத்தை தேடனும். சுயத்தை பதிக்கனும்...”

“இதுக்கு நீ உன்னால முடிஞ்சதை செய்யனும் ஹர்ஷூ. எனக்கு தெரியும். நீ ஒரு நதி போன்றவள். உனக்கு இனியும் நான் அணை போட்டு தடுக்க மாட்டேன். உன் மனதிற்கு சரியென படுவதை செய்...”
“பல தடைகள் வரும். உன்னோட வேகத்திற்கு எந்த தடையையும் உன்னால தகர்த்தெறிய முடியும். நிஷூ உனக்கு எல்லா விதத்திலையும் ஆதரவா துணையா இருப்பான். இன்னொரு தீட்சண்யா இந்த உலகத்துக்கு வேண்டாம்...”

“உனக்கொரு வாழ்க்கை அமையும் போது அதை நீ நல்லா யோசிச்சு உனக்கு அவன் சரியானவனான்னு தெரிஞ்சிக்கிட்டு முடிவெடு. இதை சொல்றதுக்கு ஈஷ்வர் அப்பா என்னை மன்னிக்கனும். ஆனாலும் ஹர்ஷூ எனக்கு முக்கியம்...”
“ஹர்ஷூ என்னுடைய இந்த நிலைமைக்கு காரணமான என் குடும்பத்தையும், இந்த ஆகாஷ் குடும்பத்தையும் சும்மா விடாதே...”
“மஞ்சரியை வச்சு ப்ளாக்மெயில் பன்றாங்கடா. நான் என்னோட அழகாய் காட்டி இவனை மயக்கனுமாம். கைக்குள்ள போட்டுக்கனுமாம். பெத்தவ பொண்ணுக்கிட்ட பேசற பேச்சை பாரு?. செத்துட்டேன் அந்த நிமிஷம்...”

“எனக்கு காவலா நிக்கவேண்டிய என்னோட தம்பி கேவலம் ஒரு பைக் குடுத்துட்டான்றதுக்காக என்னை விலைபேசிட்டான். என்னோட அப்பா எங்க எனக்கிட்ட பேசினா நான் காப்பாத்த சொல்லிடுவேனொன்னு எதையுமே கண்டுக்காம மரம் போல நிக்கிறாரு. இவங்களை எல்லாம் சும்மா விட்டா நாளைக்கு என்னுடைய நிலைமை தான் மஞ்சரிக்கும். அது வேண்டாம்...”
“மஞ்சரியை மட்டும் நல்லபடியா பார்த்துக்கோ ஹர்ஷூ. அவளை ஒரு பாதுகாப்பான இடத்துல சேர்த்துடு. அப்டியே இந்த ஷைலஜா. அந்த பொண்ணை சுயமா சிந்திக்க விடாம குடியின் பிடியில வச்சு அவ மூலமா வர காசை வச்சு பிழைக்கிறான் இந்த தேர்ட் ரேட் பொறுக்கி...”

“எல்லாரையும் போல ஆசாபாசம் நிறைந்த ஒரு உயிருள்ள பொண்ணா பார்க்காம, வெறும் குழந்தையை பெத்துக்கொடுக்கிற மிஷினா நினைச்சிருக்காங்க. விலை பேசகூடியதா தாய்மை?...”
“உன்கிட்ட நிஷூக்கிட்ட எல்லாம் நிறைய பேசணும்னு நினைக்கிறேன் ஹர்ஷூ. ஆனா இதுதான் நான் உன்கிட்ட கடைசியா பேசறது...”

தூக்கமாத்திரைகளை அள்ளி வாயில் கொட்டியவள் தண்ணீரை அருந்திவிட்டு, “நானும் போறேன் ஹர்ஷூ. என்னால் இந்த வாழ்க்கையை இனியும் வாழ முடியாது. போதும். நான் யோசிக்காம தவறா எடுத்த முடிவால என் மேலையே எனக்கு துளியும் மரியாதை இல்லாம போச்சு...”

“இவனோட கவர்ச்சியான பேச்சையும், சிரிப்பையும், காதல்ன்னு கண்மூடித்தனமா நம்பிட்டேனே? எந்த முகத்தை வச்சிக்கிட்டு இந்த உலகத்துல நான் வாழ? அதுவும் இல்லாம நான் உயிரோட இருந்து இந்த பாவிங்க யாரோட முகத்திலையும் முழிச்சிட கூடாதுன்னு நினைக்கிறேன்...”

“நான் செத்தா தான் அவங்களுக்கான சரியான தண்டனை கிடைக்கும்னு நினைக்கிறேன். அது எனக்கு சந்தோசம் தான். எந்த வசதியான வாழ்க்கைக்காக பெத்த பொண்ணுங்களை வியாபாரம் செய்யற அளவுக்கு துணிஞ்சாங்களோ அப்போவே அவங்க என்னை பொறுத்தவரை செத்துட்டாங்க...”

கீழே உயிரற்று கிடந்த ஆகாஷின் சடலத்தை பார்த்தாள். தீட்சண்யா பேச ஆரம்பிக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக அவனது உடலில் ஓடிக்கொண்டிருந்த உயிர் அசைவிலாமல் அடங்கிவிட்டது.
“எனக்கொண்ணும் இல்லை ஹர்ஷூ, மறுபடியும் ப்ராப்தம் இருந்தா உன்னோட ப்ரெண்ட்டா ம்ஹூம் நாம மூணுபேரும் ப்ரெண்ட்ஸாபிறக்கனும். பார்ப்போம் ஹர்ஷூ. ஐ லவ் யூ ஹர்ஷூ...” ஒரு நொடி யோசித்தவள்,

“காதலோடதான் ஐ லவ் யூன்னு சொல்லனும்னு எந்த கோட்பாடும் இல்லையே? நட்பு இருந்தாலும் சொல்லலாம் தானே? ஐ லவ் யூ நிஷூ. பை...” மனதில் இருந்த மொத்தத்தையும் கொட்டியதும் தீட்சண்யா மனம் நிர்மலமாக இருந்தது.
மொபைலை எடுத்து ஹர்ஷூ, நிஷாந்த் இருவருக்கும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிட்டு சென்றதை உறுதிபடுத்திவிட்டு மீண்டும் மெயிலிலும் அனுப்பிவிட்டு வந்து படுத்துவிட்டாள்.
இந்த உலகத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நித்திரைக்குள் சென்று பின் இந்த உலகத்தை விட்டே சென்றாள்.


---------------------------------------------------------------------
கோவையில் செல்வத்தின் வீட்டில் வைத்து விழாவை கொண்டாடுவது என முதலில் முடிவெடுத்துவிட்டு சரஸ்வதி, செல்வம் இருவரும் தூங்கியதும் திருட்டுத்தனமாக பைப் வழியாக வெளியேறி ஹர்ஷூவின் வீட்டிற்குள் வந்துவிட்டனர் நிஷூவும், ஹர்ஷூவும்.

ஹர்ஷூவின் வீட்டில் பார்ட்டி வைத்துகொள்ள சொல்லி ரகசியமாக பரமேஷ்வரன் நிஷாந்திடம் சொல்லியிருந்தார். அதற்காக இரவில் வீடு முழுவதும் அலங்காரத்தை ஆரம்பிக்க முடிக்கும் போது மணி நடு இரவு இரண்டை தொட்டிருந்தது.
ஊரிலிருந்து வந்து தீட்சண்யாவிடம் பேசிய ஹர்ஷூ மாடியில் தனது மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு நிஷாந்த் வீட்டிற்கு சென்றதால் அதை எடுக்கவே இல்லை. நிஷாந்தும் அவனது மொபைலி அவனின் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதால் தீட்சண்யா அனுப்பிய வீடியோ இவர்களது பார்வைக்கு அப்போது வரைக்கும் வரவில்லை.

“நீங்க அலங்காரம் செஞ்சு முடிச்சிட்டா இந்த காபியை குடிக்கலாம்ல...” என சூடான காபியோடு அந்த நேரம் வந்த பரணி தன் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தார்.
“இப்படி தூக்கம் முழிச்சு செய்யறதுக்கு பதிலா இதுக்குன்னு இருக்கிறவங்கக்கிட்ட வேலையை ஒப்படைச்சிட்டு அக்கடான்னு இருக்கவேண்டியது தானே?...”

“என்ன வார்த்தை சொல்லிட்டீங்க சு-ன ப-ன? இதென்ன அடுத்தவங்க செய்யக்கூடிய விசேஷமா?நாமலே எடுத்து செஞ்சா நாளைக்கு சித்தப்பா இதை பார்க்கும் போது எப்படி சந்தோஷப்படுவாரு. அவர் பிள்ளைங்க அவருக்காக செய்யறது...”

அவளது பேச்சை ஆமோதித்தார் பரமேஷ்வரன். நிஷாந்தும். பரணி அவர்களது பேச்சை ரசித்துகொண்டிருக்க,
“நிஷூ நீ பேசாம இங்கயே தூங்கு. காலையில அப்பாம்மாவை இங்க கூப்பிட்டுக்கலாம். இந்நேரத்துக்கு மேல எதுக்கு போய்க்கிட்டு?...” என்ற பரணியின் பேச்சை தட்டாமல் கேட்டவன் ஹர்ஷூவையும் இழுத்துக்கொண்டு மாடியேறினான்.

ஹர்ஷூவின் அறைக்கு பக்கத்து அறை நிஷாந்தினுடையது. இருவரும் தங்கலறைக்குள் புகுந்துகொள்ள ஹர்ஷூ கசகசப்பு போல லேசாக குளியலை போட்டுவிட்டு சார்ஜில் இருந்த மொபைலை உயிர்ப்பித்தவள் அதில் வந்திருந்த மெசேஜ்களை மேலோட்டமாக பார்வையிட்டாள்.

தீட்சண்யா அனுப்பிய வீடியோ எம்பி அதிகமாக இருந்ததால் சிக்னல் கட் ஆகி டவுன்லோட் ஆக காலம் தாழ்த்தியது. காரணம் இல்லாமல் இன்றைக்கு என்று இரவு பத்தரை மணிக்கு அனுப்பியிருக்கிறாளே?

அவள் அனுப்பியிருந்த நேரம் தான் ஹர்ஷூவை குழப்பியது. ஏதோ பிரச்சனை என உள்மனம் எச்சரித்தது.
பொறுமை இழந்தவள் எப்பொழுதும் ஏதாவது முக்கியமானதென்றால் மெயில் தானே அனுப்புவாள்? என நினைத்துக்கொண்டே ஒரு யூகத்தில் சிஸ்டம் ஆண் செய்து மெயிலை செக் செய்ய இருந்தது.

ஏதோ உள்ளம் வேகமாக துடிக்க பயத்தில் நிஷாந்தை சத்தம் கொடுத்து அழைத்துவிட்டு உடனே அதை டவுன்லோட் செய்து வீடியோவை ஓடவிட்டாள்.
நிஷாந்த் வரவும் அந்த வீடியோவில் ஆகாஷ் அறைக்குள் நுழைந்தான். அவனது தள்ளாட்டமான நடையை இவர்களால் உணரமுடிந்தது.

ஹர்ஷூ நிஷாந்தை பதட்டத்தோடு சத்தமாக அழைத்ததும் ஹாலில் அமர்ந்திருந்த பரணியும், பார்மேஷ்வரனும் என்னவென பதறியபடி ஹர்ஷூவின் அறைக்குள் சென்றனர்.
அங்கே ஓடிய வீடியோவை பார்த்து அதிர்ந்துவிட்டனர் என்றால் தீட்சண்யாவின் முடிவு இன்னும் பேரதிர்ச்சியை கொடுத்தது.
நிஷாந்தால் தாங்கமுடியவில்லை.

“தியா...” என அந்த பங்களாவே அதிரும் படி அலற ஹர்ஷூ உணர்வின்றி மயங்கிச்சரிந்தாள்.
தீட்சண்யாவின் முடிவு சரிதானா? அவளது வாழ்க்கையில் தோற்றவள் சபதத்தில் ஜெயித்துவிட்டாள்.
ஆனால் அவளின் மேல் உயிரை வைத்திருக்கும் ஹர்ஷூவின் குடும்பமும், நிஷாந்தும் தீரா வேதனையில் காலம் முழுவதும் துடிக்க அவளே காரணமாகிவிட்டாள்.
இனி ஹர்ஷூவின் நிலை?

நதி பாயும்...
 
ஆகாஷுக்கு இந்த தண்டனை
தேவைதான்
ஆனால் தீட்சண்யா தன்னை
அழித்துக் கொண்டது மனசுக்கு
ரொம்பவும் கஷ்டமாக இருக்கு,
சரண்யா டியர்
 
Last edited:
ரொம்பவும் மனம் கனக்க வைக்கும் பதிவு.... என்ன சொல்ல தெரியவில்லை....:cry::cry::cry::cry:
 

Advertisement

Top