Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 18.2

Advertisement

AshrafHameedaT

Administrator
Part 2

அவளது வேகத்தை பார்த்த தீட்சண்யா, “இவளை என்னதான் பன்றது நிஷாந்த்?...” என சலித்துக்கொள்ள,
“அது தெரிஞ்சா எப்போவோ அவளை நாங்க கண்ட்ரோல் பண்ணியிருக்க மாட்டோமா? என்னவோ இப்போ நீ சொல்றதை கொஞ்சம் கேட்டு நடக்கறா? கொஞ்சமாவது உன்னோட பேச்சு அவளை கண்ட்ரோல் பண்ணுது. இப்போ என்ன பிரச்சனையோ?...” என பேசிக்கொண்டே ஹர்ஷூவை நெருங்க அவளோ யோசனையோடு அந்த புதியவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
தீட்சண்யா, “என்னாச்சு ஹர்ஷூ?...” அப்புதியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹர்ஷூவை உலுக்க,
“நான் பதில் சொல்றேனே தீட்சண்யா...” என தானே முன்வந்து பேசவும் அவனை ஆராயும் பார்வை பார்க்க,
“நீங்க என்ன சொல்ல போறீங்க மிஸ்டர்?...” இரு பெண்களையும் பின் தள்ளி நிஷாந்த் முன் வந்து நின்றான்.
“ஐயம் பத்ரிநாத். என்னோட ஊர் ஊட்டி. அங்க எங்களுக்கு ஒரு டீ எஸ்டேட் இருக்கு. அதை நான் ரன் பண்ணிட்டு இருக்கேன். தீட்சண்யாவை பார்க்கத்தான் இங்க வந்தேன்...” என நிஷாந்திடம் தன்னைபற்றின இன்னும் சில விபரங்களை கூறிக்கொண்டே நட்புக்கரம் நீட்ட அதை ஏற்காமல்,
“எங்க தீட்சண்யாவை நீங்க ஏன் பார்க்கனும்? அதுவும் ஊட்டில இருந்து வந்திருக்கேன்னு சொல்றீங்க?...” சந்தேகமாகவே கேட்டான் நிஷாந்த்.
இப்படி ஒரு உயரத்தில் இருப்பவன் மிகவும் சாதாரணமான மிடில்கிளாஸ் பெண்ணை பார்க்க வந்திருக்கிறான் என்றால் யாருக்காகினும் சந்தேகம் எழத்தானே செய்யும்.
அதை உணர்ந்து கொண்டவன் போல பத்ரிநாத் அவர்களை பார்த்து புன்னகை சிந்திவிட்டு,
“கல்யாணம் செய்யனும்னா கட்டிக்க போற பொண்ணை பார்க்க வேண்டமா நிஷாந்த்?...” அமைதியாக ஆனால் தீட்சண்யாவை காதலோடு பார்த்துக்கொண்டே நிஷாந்திடம் கேட்டுவைத்தான் பத்ரிநாத்.
மூவரும் உட்சபட்ச அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றனர். நொடியில் சுதாரித்த தீட்சண்யா,
“வாட்? கம் அகைன்? கட்டிக்க போற பொண்ணா? நீங்க வேற யாரோன்னு நினச்சு எனக்கிட்ட பேசறீங்கன்னு நினைக்கிறேன் மிஸ்டர்...”
அவளது பொறுமையான பேச்சை ரசித்த பத்ரி, “ஆள் மாறினா உங்க பெயர், உங்க ப்ரெண்ட்ஸ் பெயர் எல்லாம் எனக்கெப்படி தெரியும் தீட்சண்யா?...” அவளது பெயரை ஒருவித சொந்தத்தோடு அழுத்தமாக கூற திகைத்துத்தான் போனாள் தீட்சண்யா.
அதற்கு மேல் பொறுமை இல்லாத ஹர்ஷூ ஏதோ பேச வாயெடுக்க அவளோ தடுத்தவன்,
“குழம்ப வேண்டாம். நானே தெளிவா சொல்லிடறேன். நான் உங்களை இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே பார்த்திருக்கேன் தீட்சண்யா. எனக்கு ரொம்ப பிடிச்சது. என்னோட விருப்பத்தையும், காதலையும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லலாம்னு நினச்சேன்...”
பேசிக்கொண்டிருந்தவனை இடையிட்டு நிறுத்தியவள்,
“போதும். எனக்கு இதெல்லாம் ஒத்துவராது...” தன்னை உணர்த்திவிடும் நோக்கில் தீட்சண்யா அவசரமாக கூற,
“நான் இன்னும் சொல்லி முடிக்கலை தீட்சண்யா...” என அழுத்தமாக சொல்லியவன்,
“ஓகே, என்னோட காதல் கதையை நான் நம்ம கல்யாணத்துக்கு பின்னால சொல்றேன். இப்போ நேராவே விஷயத்துக்கு வரேன்...” என்றவன் தங்களை சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்த ஹர்ஷூவையும், நிஷாந்தையும் ஒரு பார்வை பார்க்க,
“அவங்களும் என்னோட தான் இருப்பாங்க...”என தீட்சண்யா கூறவும் ஹர்ஷூ பத்ரியை கெத்தாக பார்த்தாள்.
“நான் ஒன்னும் உங்களோட தனியா பேசனும்னு சொல்லலையே...” பத்ரியின் பதிலில் நொடியில் ஹர்ஷூவின் முகம் கூம்பிவிட்டது.
உனக்கிது தேவையா என்பது போல நிஷாந்த் ஹர்ஷூவை அடக்கும் பாரவி பார்க்க பத்ரி ஹர்ஷூவை பார்த்து சிநேகமாக சிரித்தான்.
“உங்க ப்ரெண்ட்ஸ் இனிமே எனக்கும் ப்ரெண்ட்ஸ் தான் தீட்சண்யா. அவங்களும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்தான். தெரியவும் சந்தோஷப்படுவாங்களே...”
“நாளைக்கு ஈவ்னிங் நமக்கு உங்க வீட்ல நிச்சயதார்த்தம். உங்களோட பேரண்ட்ஸ்கிட்ட எங்க வீட்டாளுங்க எல்லாம் பேசிட்டாங்க. பொண்ணு பார்த்து, பேசி நிச்சயத்துக்கு நாள் குறிச்சுன்னு அதுக்கு எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்னு நான் நேரடியாவே நிச்சயதார்த்தம் செஞ்சிடலாம்னு சொல்லிட்டேன்...”
“ஆனாலும் உங்கக்கிட்ட என்னோட காதலை சொல்லிடணும்னு தான் இங்க வந்தேன். நீங்க என்னை லவ் பண்ணி மேரேஜ் செய்தாலும் சரி. உங்க பேரன்ட்ஸ் பார்த்த பையன்னு நினச்சு கல்யாணம் செய்தாலும் சரி. எனக்கு நீங்க என்னோட மனைவியா வந்தா போதும்...”
அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நின்றிருந்தவளுக்கு கொஞ்சம் மெதுவாகத்தான் பத்ரி கூறியதன் பொருள் விளங்க அவனை மெல்ல ஏறிட்டு பார்த்தாள்.
கையை கட்டிகொண்டு தன்னையே நேர் பார்வை பார்த்துக்கொண்டு நிற்பவனிடம் வேறென்ன பேச என முதன் முதலாக தடுமாறினாள் தீட்சண்யா.
இதுவரை யாரிடமும் உணராத ஒரு உணர்வு தன்னை தாக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து அதை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளிக்க ஆரம்பித்தாள்.
இது அவளது சுபாவம் இல்லை. எதையும் ஆராய்ந்து செயல்படுபவள் செயல்படுத்துபவள் இப்போது சிந்திக்கும் திறனை செயலிழக்க செய்யும் அவனது பார்வை ஜாலங்களில் மூழ்க ஆரம்பித்தாள்.
பத்ரியின் அதிகப்படியான வழிசல் இல்லாத பேச்சும், கண்களை பார்த்து தனது விருப்பத்தை தன்னிடம் சொன்ன இந்த விதமும் அவளை பெரிதும் ஈர்த்தது.
பெற்றோர்களே முடிவு செய்துவிட்டார்களே என நினைத்த நேரம் ஏனோ அவளுக்கும் அந்த நொடி அவனை பிடித்துத்தான் இருந்ததோ என்னும் அளவிற்கு அவளது முகம் வெட்கத்தை பூசியது.
ஆனாலும் வாய்விட்டு அவள் எதையும் சொல்லவில்லை. சொல்லவேண்டும் என பத்ரியும் எண்ணவில்லை. அவளது முகத்தில் பரவிய உணர்வுகளே சொல்லிவிட்டதே அவனுக்கான பதிலை.
அவளது முகத்தில் தெரிந்த மாற்றம் ஹர்ஷூவிற்கு நன்றாகவே புரிந்துவிட்டது. அவளுக்குமே இதில் சந்தோசம். பத்ரியை பார்த்ததும் மிக நல்லமாதிரியாகத்தான் தெரிந்தது ஹர்ஷூவிற்கும் நிஷாந்திற்கும்.
“டேய் நிஷூ, நம்ம தியா ப்ளாட் போல. பாரேன் அழகி எப்படி முகம் சிவந்து நிக்கிறான்னு? உனக்கு ஆப்பு வச்சிட்டான்டா இந்த பத்ரி. உன்னை நான் எப்படி தாடியோட தேவதாஸ் கெட்டப்ல பார்ப்பேன்? சகிக்காதே? இந்த எமாற்றத்துல இருந்து எப்படிடா உன்னை மீட்க போறேன்?...”
வராத கண்ணீரை துடுத்துகொண்டே மூக்கை சீந்த அதில் கொலைவெறிக்கு ஆளானான் நிஷாந்த்.
“சும்மா இருக்கியா ஹரி. தீட்சண்யா என்ன சொல்றான்னு பார்ப்போமே?...”
“உனக்கு நினைப்பு வேறையா? பாரு, அவ முகத்துல எப்டி ப்ரைட்டா பல்ப் எரியுதுன்னு. அவ உனக்கெல்லாம் ஓகே சொல்லமாட்டா. பேசாம நீ வேற தரை பண்ணு. நானும் ஹெல்ப் பன்றேன்...”
“நீ ஹெல்ப் பன்ற லட்சணம் தான் எனக்கு தெரியுமே?...”
“நீ ஏண்டா இப்போ காண்டாகுற? கம்முன்னு இரு. இல்லைனா சித்தப்பாக்கிட்ட நீ இங்க ஒரு பொண்ணு பின்னால சுத்திட்டு இருக்கன்னு போட்டுகுடுத்து எவளையாச்சும் கை காட்டி உனக்கு கல்யாணம் செய்து வச்சிடுவேன்...”
அவளது எச்சரிப்பில் கொதிநிலைக்கு போனவன் பேச்சை வளர்த்தால் இன்னும் சீறுவாள் என தன்னை அடக்கிக்கொண்டு பத்ரியை பார்க்க அவனும் இவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் உதட்டில் நிறைந்த புன்னகையோடு.
“என்ன நிஷாந்த், ஹர்ஷிவ்தா கவுண்டர்கு பதில் சொல்லமுடியாம திணறிட்டு இருக்கீங்க போல?...” என கேட்டவனிடம் நிஷாந்த் அசடுவழிய,
“அதென்ன எல்லோரையும் வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதையா கூப்பிடறீங்க? முக்கியமா கட்டிக்க போற பொண்ணை கூட. எதுவும் வேண்டுதலா பத்ரி சார்?...”
அவளது இடக்கான கேள்வியை இயல்பாக எதிர்கொண்டவன், “இல்லைங்க அப்டியே பழகிடுச்சு. தீட்சண்யா வந்து என்னை மாத்தட்டும். அவங்களை கல்யாணத்துக்கு பின்னால எப்படி கூப்பிடனும்னு அவங்களே சொல்லுவாங்க தானே எனக்கு...”
அவளை ஊடுருவும் பார்வை பார்த்துக்கொண்டே ஹர்ஷூவிடம் பேச,
“அதுசரி. பொண்ணுக்கு பிடிச்சிருக்கா, இல்லையான்னே கேட்காம நிச்சயதார்த்தம் வரைக்கும் அவளுக்கு தெரியாம ஏற்பாடு செய்துட்டு வந்த நீங்க எங்க தியா சொல்றது போல கூப்பிட போறீங்களாக்கும்?...”
ஹர்ஷூ இதை வேண்டுமென்றே கேட்கவில்லை. ஏனோ அவளுக்கு தியாவிடம் சொல்லாமல் அவளது விருப்பத்தை கேட்காமல் திருமணம் வரை சென்றது வருத்தத்தை கொடுத்தது.
 
பத்ரி அதிரடியாக தியா வாழ்க்கையில் நுழையப் பாக்குறானே...இவன் நல்லவனா? கெட்டவனா ஹேமா?
ஏனோ என் இதயத் துடிப்பு கொஞ்சம் எக்குத்தப்பா எகிறத்தான் செய்கிறது.
 
Last edited:
பத்ரிநாத்-ன்னு புனிதமான பேரை
வைச்சுக்கிட்டு இவ்வளவு பீத்தலான
ஆளா இருக்கானே இந்த ஆகாஷ்?
 
Top