Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 17.2

Advertisement

Episode 17(2)

எப்போதும் தன்னை பற்றி மட்டுமே பேசும் நிஷாந்த் இன்று இன்னொரு பெண் பற்றி பேச அதுவும் வாய் ஓயாமல் பேசுவதை கேட்டு ஆச்சர்யம் அடைந்தாள். ஆனால் அதில் துளியும் பொறாமை எண்ணம் தோன்றவே இல்லை ஹர்ஷூவிற்கு.
அவளுக்கு தெரியும் நிஷாந்தை பற்றி. அவன் ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு உயர்ந்த விதமாக பேசுகிறான் என்றால் அவள் நிச்சயம் மதிக்கப்பட வேண்டியவள் என நினைத்தாள் ஹர்ஷூ.
அந்த வாரத்தில் இடையில் ஒருநாள் கல்லூரிக்கு சென்றவள் பாதியிலேயே லீவ் சொல்லிவிட்டு நிஷாந்த் படிக்கும் கல்லூரிக்கு மதிய இடைவேளையின் பொழுது வந்துவிட்டாள்.
நிஷாந்த் இங்கே சேரும் அன்று வந்து ஏற்கனவே இந்த கல்லூரியையும் அவனது வகுப்பையும் பார்த்திருந்தபடியால் வேகமாக அவனை தேடி விரைந்தாள்.
யாரோ தன்னை அழைப்பதை போல தெரிய திரும்பினால் ஒரு மரத்தடியில் ஐவர் கூட்டமொன்று தன்னை கை நீட்டி வா என அழைக்க அவர்களை நோக்கி சென்றாள்.
“உன் பேரென்ன?...” ஹர்ஷூ அவர்களின் அருகில் வந்ததுமே அவர்கள் கேட்ட கேள்வியே அதிகாரமாக தெரிய இவளுக்கு கோவம் சுறுசுறுவென ஏறியது.
“என்னோட பேர் எதுக்கு நீங்க தெரிஞ்சுக்கனும்?...” ஆனாலும் மரியாதையாகவே கேட்ட இவளது எதிர்கேள்வியில் திகைத்த அவர்கள்,
“ஹேய் உன்னை இந்த காலேஜ்ல இன்னைக்குதான் பார்க்கிறோம். புதுசா இருக்கன்னு கேட்டா, எவ்வளோ திமிரா பதில் சொல்ற?...” என அதில் ஒருவன் எகிற,
“அதெப்டி கரெக்ட்டா சொல்றீங்க? நான் புதுசுன்னு?...” அவளது கேள்வியின் உள்குத்தை அறியாத மற்றொருவன்,
“ஹ, எங்களை யாருன்னு நினச்சே? எங்களுக்கு இந்த காலேஜ்ல படிக்கிற எல்லா பொண்ணுங்க ஜாதகம் முதற்கொண்டு அத்துப்படி...” என பெருமை பீற்ற,
“அப்போ நீங்க எல்லாரும் படிக்க வரலை. இங்க படிக்கிற பொண்ணுங்க ஜாதகத்தை தெரிஞ்சிக்க இவ்வளோ செலவு பண்ணி உங்க பேரன்ட்ஸ் உங்களை இங்க அனுப்பிருக்காங்க அப்டித்தானே?...”
அவளது கேள்வியில் அவர்களது பெருமை அடிபட்டு அசிங்கப்பட்டு போக அதை பொறுக்கமுடியாமல்,
“எங்களையே கலாய்க்கிறியா? யாரை தேடி இங்க வந்த? உன் பேரை சொல்லாம இங்க இருந்து நீ ஒரு அடி எடுத்துவைக்க முடியாது...” என ஒருவன் வழி மறித்து நிற்க,
“இப்போ என்ன என்னோட பேர் தானே? நயன்தாரா...” அவளது கேலி புரிந்தவன்,
“உனக்கு, உன் மூஞ்சிக்கெல்லாம் இந்த பேர் சுத்தமா செட் ஆகலை...”
“அதை பத்தி நீ ஏன் கவலை படற? உனக்கு கூடதான் இந்த காலேஜ் ஸ்டூடன்ட் பேஸ் செட் ஆகலை. ரோட்ல இஸ்திரி போடறவனை போல இருக்கிற. நான் எதாச்சும் உன்னை அப்டி சொன்னேனா?...” என பதிலுக்கு அவனது மூக்கை உடைத்தவள்,
“ச்சீ தள்ளு, நல்ல விஷயத்துக்கு போகும் போது நந்தியாட்டம் நின்னுக்கிட்டு...” என அசால்ட்டாக தன்னுடைய பேக்கை வைத்து வழிமறித்து நின்றவனை ஒரே தள்ளு தள்ளிவிட்டு நடக்க அந்த மாணவர்கள் அவளை விடக்கூடாதென கோவத்தோடு பின்தொடர,
ஹர்ஷூ “ஹேய் தியா செல்லம். ஐ லவ் யூ டா...” என்று எதிரே வந்துகொண்டிருந்த தீட்சண்யாவை கட்டிக்கொள்ள தீட்சண்யா முதலில் கொஞ்சம் அதிர்ந்துபோனாள்.
ஹர்ஷூ தீட்சண்யாவை ஏற்கனவே நிஷாந்த் காட்டிய போட்டோவில் பார்த்திருப்பதால் அவளுக்கு அடையாளம் காண்பதில் சிரமமில்லாமல் போனது.
தீட்சண்யாவும் ஹர்ஷூவை பார்த்திருக்கிறாள் தான். ஆனாலும் இப்படி திடீரென வந்து ஹர்ஷூ கட்டிப்பிடிப்பாள் என எதிர்பார்க்காதவள் முதலில் திகைத்துவிட்டாள்.
ஹர்ஷூவின் மேல் அடங்கா கோவத்தோடு நெருங்கிய மாணவர்கள், “தீட்சண்யா இந்த பொண்ணு உனக்கு வேண்டியவளா? வாய் ரொம்ப ஜாஸ்தி போல?. சொல்லி வை. உனக்காக விட்டுட்டு போறோம்...”
அவர்கள் என்னவோ பெரிய மனதோடு தன்னை பாவம் பார்த்து விட்டுவிட்டு செல்வது போல பேச அதை பொறுக்காத ஹர்ஷூ,
“ஹலோ சீனியர்ஸ். கொஞ்சம் நில்லுங்க. அதென்ன அவளுக்காக விட்டுட்டு போறது? நான் பேசினது மட்டும் தான் தப்பா? நீங்க என்னை கலாய்க்கனும்னு நினச்சது தப்பில்லையா? அப்டி பேசினா வாய் நீளம்னு சொல்லுவீங்களா?...”
“புதுசா ஒரு பொண்ணு காலேஜ்க்கு வருதே. அது யாருன்னு கேட்டு அவளுக்கு உதவி செய்வோம்னு தோணலை. உங்களோட சீனியர் கொடியை புதுசா வந்தவங்க கிட்டதான் பறக்க விடுவீங்களோ?...”
“ஹலோ நீ இங்க வரவும் உன்னை யாருன்னு தெரிஞ்சிக்க தானே உன்னோட பெயரை கேட்டோம். சொல்லியிருந்தா ஹெல்ப் செஞ்சிருப்போம்ல...” என தங்கள் பக்கம் நியாயம் போல பேச,
“யாரு நீங்க ஹெல்ப் செய்ய கேட்டீங்களாக்கும்? நீங்க என்னோட பேரை கேட்டதே என்ன ஒரு தோரணைல? அது உதவி செய்யறதை போலவா இருந்தது. நீங்க எனக்கிட்ட அதிகாரமா பேசினீங்க. நானும் பதிலுக்கு பேசினேன். தட்ஸ் ஆல்...” தீட்சண்யா அவளை அடக்க பார்க்க அவளோ விடாமல் சீறினாள்.
“ஹர்ஷூ. இப்போ என்னோட வரபோறியா இல்லையா?...” என வார்த்தையில் அழுத்தத்தை கூட்டி அவளை தன் புறம் திருப்ப ஏனோ தீட்சண்யா பேச்சை மீறமுடியாமல் அடங்கிபோனாள்.
அந்த மாணவர்களிடம் சொல்லிக்கொண்டு ஹர்ஷூவை தன்னோடு இழுத்துக்கொண்டு தன் க்ளாஸ்ரூம் நோக்கி செல்ல அங்கே நிஷாந்த் டேபிள் மேலே ஏறி அமர்ந்துகொண்டு தன் நண்பனோடு அரட்டையில் ஈடுபட்டிருந்தான்.
“டேய் நிஷா...” என ஹர்ஷூ அலறிய அலறலில் திடுக்கிட்டு திரும்ப அங்கே இவளை பார்த்து அதுவும் தீட்சண்யாவோடு பார்த்து அதிர்ந்துபோனான்.
இவ எங்கே இங்க? என யோசிக்கும் போதே அவளது நிஷா என்ற அழைப்பும் கருத்தில் பட வேண்டுமென்றே அழைத்திருக்கிறாள் கிராதகி என கோவத்தோடு அவளை முறைத்தான்.
“அடேய் நிஷா, நீ என்னமோ படிச்சு பெரியாளாகி சித்தப்பாக்கு சிங்கப்பூர்ல டீலக்ஸ் பிளாட் வாங்கி தருவான்னு கனவு கண்டுட்டு இருக்காரு அந்த மனுஷன். நீ என்னடான்னா சிங்கிள் ரூம் பிளாட் கூட வாங்கி தரமாட்ட போல?...”
மீண்டும் மீண்டும் நிஷா என விளிக்க அந்த ரூமில் இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து கொல்லென்று சிரித்தனர். அதில் கடுப்பானவன்,
“ஹ...ர்...ஷூ...” என அவளது பெயரை கடித்து துப்ப,
“சரி சரி விடு நிஷா. இதெல்லாம் காலேஜ்ல சகஜம்...” என அவன் அமர்ந்திருந்த டேபிளில் ஏறி அமர்ந்தவள் அங்கிருந்தவர்களை பார்த்து,
“ஹாய் ப்ரெண்ட்ஸ், நான் ஹர்ஷூ. ஹர்ஷிவ்தாவர்ஷினி. நிஷாவோட சிஸ்டர். பை த பை இன்னொரு முக்கியமான விஷயமும் சொல்லிடறேன்...” என்னவென அனைவரும் பார்க்க நிஷாந்திற்கு தான் கலவரமாக இருந்தது.
“இனிமே யாரும் நிஷாவுக்கு ப்ரபோஸ் பண்ணவோ அவனை சைட் அடிக்கவோ கூடாது. அவனுக்கு ஆல்ரெடி நான் ஆள் செலெக்ட் பண்ணிட்டேன். அதனால் இனிமே நீங்க பாசமலர் மட்டும் தான் பாடனும். நான் அதுக்கொண்ணும் அப்ஜெக்ட் பண்ணவே மாட்டேன்...”
நிஷாந்தின் தலையில் குண்டை போட்டே விட்டாள். அவளது படபட பேச்சில் அனைவரும் அசந்து போய் பார்க்க, அவளது அலப்பறையில் தீட்சண்யாவால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“ஹர்ஷூ உன்னை யாரு இங்க வர சொன்னா? முதல்ல கீழே இறங்கு. வா வீட்டுக்கு போகலாம்...” என அழைக்க அவனை அவள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
“ஹேய் ஹர்ஷூ, முதல்ல நீ டெஸ்க் விட்டு கீழே இறங்கு. வா நாம கேண்டின் போய் பேசலாம். வா நிஷாந்த்...”என அனைவரையம் அழைத்துக்கொண்டு அங்கே சென்றவள் கேண்டீனில் ஓரமாக உள்ள ஒரு மேஜையில் சேர்களை இழுத்துபோட்டு அமர்ந்தாள்.
நிஷாந்திற்கோ, “தான் சொல்லியும் கேட்காதவள் தீட்சண்யா சொன்னதும் கேட்டுக்கொண்டாளே. இப்படி அனைவரின் முன்னாலும் நிஷா நிஷாவென ஏலம் விட்டுவிட்டு எப்படி உட்கார்ந்திருக்கிறாள் பார்...” என ஹர்ஷூவை கருவிக்கொண்டே நிஷாந்தும் அமர்ந்தான்.
அவளோ எதையும் கண்டுகொள்ளாமல் தீட்சண்யாவை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். ஹர்ஷூவிற்கு அவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.
தீட்சண்யாவை பற்றி தெரியாத எவரும் அவள் மிடில் கிளாஸ் குடும்பம் என நிச்சயம் சொல்லமுடியாத அளவிற்கு அப்படி ஒரு ராஜகளையில் அசரடிக்கும் அழகோடு மிளிர்ந்தாள்.
இந்த அளவில்லா அழகு அவளுக்கு கம்பீரம் கொடுத்ததா? இல்லை அந்த கம்பீரத்தால் அவள் இவ்வளவு அழகாக தெரிகிறாளா? என பிரித்தறியா வண்ணம் இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சின.
இப்படி தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஹர்ஷூவின் முன் சொடுக்கிட்ட தீட்சண்யா,
“என்னாச்சு ஹர்ஷூ? ஏன் அப்படி பார்க்கிற?...” என சிரிப்போடு வினவ,
“தியா நீ பேசாம என்னோட நிஷூவை லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கோயேன்...” என கொஞ்சமும் தயக்கமில்லாமல் கூற அதிர்ந்துபோய் பார்த்தனர் நிஷாந்தும், தீட்சண்யாவும்.
அப்போதே ஹர்ஷூவின் பேச்சை கேட்டிருக்க வேண்டுமோ என நினைத்து நினைத்து நிஷாந்த் குற்றவுணர்ச்சியில் தூக்கமிழந்து தவித்த நாட்களோ ஏராளம்.
ஆகாஷ் மட்டும் அவர்களுக்கிடையில் வராமல் இருந்திருந்தால் ?????

நதி பாயும்...
Nice
 
Top