Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 17.1

Advertisement

நதியோட்டம் – 17 (1)

பரமேஷ்வரன் செல்வமும் சகோதரர்களாக இருந்தாலும் திருமணம் என ஆனா பின்பு அவரவருக்கான தனி தொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு அதில் காலூன்றி நின்றனர்.
பரமேஷ்வரனின் டெக்ஸ்டைல்ஸ் தொழில் நன்றாக சூடுபிடித்து அவரை உச்சத்தில் நிறுத்தியது. அதில் செல்வத்திற்கு தான் அளவில்லாத சந்தோஷம்.
தன்னுடைய தம்பி இப்படி அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் வளர்ந்திருப்பதை கண்டு பூரித்துப்போனார். அதுவும் ஹர்ஷூ பிறந்த நேரம் என சொல்லி சொல்லி அனைவருமே அவளை கொண்டாடினர்.
தான் ஆரம்பித்த சூப்பர் மார்க்கெட் தன்னை அந்தளவிற்கு உயர்த்தவில்லை என்றாலும் கையை கடிக்காமல் முதலுக்கு மோசமில்லாமல் ஓரளவிற்கு கணிசமான லாபத்தை கொடுத்துகொண்டிருந்தது செல்வத்திற்கு.
செல்வத்தையும் பரமேஷ்வரனையும் பார்க்கும் எவரும் பரமேஷ்வரன் தான் செல்வத்தின் அண்ணன் என சொல்லும் அளவிற்கு ஒரு முரட்டு தோற்றம் அவருக்கு. அதனாலேயே நிஷாந்த் குழந்தையிலிருந்தே அவரை பெரியப்பா என அழைத்து பழகிவிட்டான்.
செல்வம் பார்ப்பதற்கு சுவாயமாகவும் அமைதியான தோற்றத்தோடு கொஞ்சம் மெலிந்த உடல்வாகோடு இருப்பதனால் அவரை பரமேஷ்வரனின் தம்பியாக தான் நினைக்க தோன்றும்.
ஆனால் அவரது உருவம் தான் அப்படியே தவிர பாரமேஷ்வரனே கொஞ்சம் அடங்கிபோகும் அளவிற்கு செல்வத்தின் பேச்சில் ஆளுமை இருக்கும்.
நிஷாந்த் பரமேஸ்வரனை பெரியப்பா என்று அழைப்பதால் ஹர்ஷூ செல்வத்தை சித்தப்பா சித்தி என அழைக்க பெரியவர்களும் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர்.
ஹர்ஷூவை விட ஒன்றரை வயது மூத்தவனான நிஷாந்த் அவளை அதிகளவு அக்கறையோடும் பாசத்தோடும் பார்த்துக்கொண்டான். ஹர்ஷூவிற்கு தன் தந்தையின் வார்த்தையை கூட மீறமுடியும். ஆனால் செல்வத்தின் பார்வையை கூட அவளால் மறுக்கமுடியாது. அதனாலேயே அவரிடத்தில் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாள்.
நிஷாந்தும் ஹர்ஷூவும் ஒரே பள்ளியில் தான் படித்தனர். எப்போதும் நிஷூ நிஷூ என குட்டிபோட்ட பூனை போல அவனோடே சுற்றி திரியும் ஹர்ஷூ, அவளை எப்போதும் தன்னோடே இருத்திக்கொள்ளும் நிஷாந்த் இருவரது ஒட்டுதலை பார்த்து பெற்றவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
அவன் பன்னிரெண்டாம் வகுப்பிலும், ஹர்ஷூ பதினொன்றாம் வகுப்பிலும் இருந்தனர். நிஷாந்திற்கு அன்று பன்னிரெண்டாம் வகுப்பிற்கான ஹால்டிக்கட் குடுத்த நாள். அன்றிலிருந்து ஸ்டடிஸ் ஹாலிடேய்ஸ் அறிவிக்கவும் நிஷாந்த் ஹர்ஷூவிற்காக காத்திருந்து அவளையும் அழைத்துகொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
எப்போதும் சலசலத்துக்கொண்டே வரும் ஹர்ஷூ அன்று வீட்டிற்கு வரும் வரை ஒரு வார்த்தை கூட நிஷாந்திடம் பேசவில்லை. அவளது கோவமும் வருத்தமும் புரியாதவனா?
இதில் தான் செய்ய என்ன இருக்கிறது என எண்ணி அமைதியாக இருந்தான். அவனுமே பேச்சுக்கொடுக்கவில்லை.
ஹர்ஷூவை அவளது வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டுக்கு சென்றதும் சரஸ்வதியிடம் பேசிக்கொண்டே ஹால்டிக்கெட்டை தேட அது அவனது கண்களில் சிக்காமல் அல்லாட வைத்தது.
முதலில் பதட்டமானவன் பின் பள்ளியில் இருந்து பைக்கில் வரும் போது ஹர்ஷூவிடம் தனது பேக்கை கொடுத்திருந்தது நியாபகத்திற்கு வர வேகமாக உடையை மாற்றிக்கொண்டு அங்கே விரைந்தான்.
அவளை சுவாதீனமாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு மைசூர் போண்டாவை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளருகே சென்றமர்ந்த நிஷாந்த் அவளின் தட்டிலிருந்து தானும் ஒரு போண்டாவை எடுத்துக்கொண்டே,
“ஹரி என்னோட ஹால்டிக்கட் எடுத்துட்டுவா...” என்றவனை அலட்சியமாக பார்த்தவள்,
“ஹால் டிக்கெட்? அப்டினா?...” என இமைகொட்டி அப்பாவி போல விழிக்க அதை கண்டு நிஷாந்த் முறைக்க,
“அது எதுக்கு நிஷூ உனக்கு?...” என்றவளது பேச்சில் கடுப்பானவன்,
“எதுக்கு கேட்பாங்க?. அது எவ்வளோ முக்கியம்னு தெரிஞ்சிட்டே நீ இப்படி பேசறது நல்லா இல்லை சொல்லிட்டேன். போ போய் எடுத்திட்டு வா...”
பிடிவாதமாக பேசியவனை முறைத்தவள், “அப்போ நான் சொல்றதை கேளு. நான் ஹால்டிக்கட் தருவேன்...” என்று பேரம் பேச என்னவென்பது போலபார்த்தான்.
“நான் ஹால்டிக்கட் தரனும்னா நீ இந்த எக்ஸாம்ல பெயில் ஆகனும்...” தடாலடியாக கூற,
“லூசு மாதிரி உளறாத. இதுக்கு நீ எனக்கு ஹால்டிக்கட் தராமலேயே இருக்கலாம்...” என எரிச்சல் கலந்த குரலில் கூற கொஞ்சம் தணிவான குரலில் பேச ஆரம்பத்தாள் ஹர்ஷூ.
“நிஷூ நீயே யோசிச்சு பாரேன். நீ இந்த எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி காலேஜ் போய்ட்டா நான் தனியா ஸ்கூல்ல என்ன செய்வேன்? உன் ஹரி பாவமில்ல. நீ பெயில் ஆகிட்டா நாம ரெண்டு பேரும் சேர்ந்து ப்ளஸ் டூ ஒண்ணா எழுதி பாஸ் ஆகிடலாம். சேர்ந்தே காலேஜ் போகலாம்...”
“நல்லா இருக்குடி உன் திட்டம். கொழுப்பெடுத்த ராஸ்கல். அவனை இப்படியெல்லாமா நீ ஆட்டிப்படைப்ப?...” என கோவத்தில் பொருமிய பரணியை பார்த்த ஹர்ஷூ திடுக்கிட்டு கொஞ்சம் பின்வாங்க,
“பரணிம்மா ப்ளீஸ் திட்டாதீங்க அவளை. அவ புரியாம பேசறா. சின்ன பிள்ளை தானே?...” என ஹர்ஷூக்கு வக்காலத்து வாங்கி பேச,
“நீயெல்லாம் திருந்த மாட்டடா.. எப்டி அவ சொல்றதை செய்யலாம்னு முடிவு பண்ணிட்டியா என்ன?...” என நிஷாந்தை ஆட்சேபித்தவரை கண்டு தலை கவிழ்ந்தான்.
ஹர்ஷூவின் புறம் திரும்பி,“ உனக்கு வேற தனியா சொல்லனுமா? போய் அவனோட ஹால்டிக்கட் எடுத்துட்டு வா. போ...” என்று ஹர்ஷூவிற்கு அதட்டல் போட முணுமுணுத்துகொண்டே அங்கேயே நின்றாள்.
“ஹர்ஷூ, இப்போ நீயா போய் எடுத்துட்டு வரபோறயா? இல்லை நான் உன் சித்தப்பாவுக்கு போன் செய்யவா?...” இந்த அழுத்தமான வார்த்தைக்கு மதிப்பிருந்தது.
நொடியில் மாடிக்கு சென்று நிஷாந்திடம் ஹால்டிக்கட்டை சேர்ப்பித்துவிட்டு சோபாவில் உம்மென முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.
பரணி அவளை முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட நிஷாந்த் அவளை கெஞ்சி கொஞ்சி கொஞ்சம் சமாதானம் செய்தான். ஓரளவிற்கு மனம் மாறியவள் பழையபடி அவனிடம் பழகவில்லை என்றாலும் முகசுணக்கத்தை மறைக்கமுடியவில்லை.
ஹர்ஷூவின் இந்த செயலை பரமேஷ்வரனிடம் பரணி கூற அவரோ சிறுபெண், வளர வளர சரியாகிவிடுவாள் என பரணியை சமாளித்தார்.
அவரால் ஹர்ஷூவை என்றுமே கடிந்துகொள்ளவோ கண்டிப்பு காட்டவோ முடியாது. அந்தளவிற்கு உயிரையே வைத்திருந்தார். அவரது இந்த மகள் பாசம் தான் பின்னொரு நாளில் அவளுக்காக எதுவும் செய்ய அவரை எந்த எல்லைக்கும் செல்ல தூண்டியது.
ஹர்ஷூ மீண்டும் மீண்டும் நிஷாந்திடம் வம்பு வளர்க்க பஞ்சாயத்து செல்வத்தின் பார்வைக்கு சென்றது. அதன் பின்னே கொஞ்சம் அடக்கி வாசித்தாள் ஹர்ஷூ.
ஒருவழியாக நிஷாந்தும் கல்லூரியில் அடியெடுத்து வைக்க ஹர்ஷூ தான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் கொதித்துகொண்டிருந்தாள்.
அந்த வருடத்தை நெட்டித்தள்ளி நிஷாந்த் படிக்கும் கல்லூரியிலேயே தான் தானும் சேர்வேன் என பிடிவாதத்தோடு நிற்க பரமேஷ்வரன் மறுபேச்சின்றி ஹர்ஷூவின் பேச்சை ஆமோதித்து அவளது விருப்பத்தை நிறைவேற்றினார்.
பரணி ஹர்ஷூ பேஷன்டிஸைனிங் படிக்கவேண்டும் என நினைக்க, அவளோ மேனேஜ்மென்ட் கோர்ஸ் தான் எடுப்பேன் என அதிலும் பிடிவாதமாக இருந்தாள். இவள் அந்த கல்லூரியில் செய்த அழிச்சாட்டியத்தால் கல்லூரியே அல்லோலகப்பட்டது. இதனால் விழிபிதுங்கியது என்னவோ நிஷாந்திற்கு தான்.
அதன் பின் இரண்டு வருடங்கள் வீட்டில் எந்தவிதமான போராட்டமும் இன்றி ஹர்ஷூவின் அடாவடி அந்த கல்லூரியில் பிரபலம் ஆனது. அதுவும் நிஷாந்த் MBA படிக்க வேறு கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் வரை.
அந்த விஷயம் தெரிந்து ஒரு ஆட்டம் ஆட ஹர்ஷூவிற்கு வாய்ப்பளிக்காமல் செல்வமே முன் வந்து தான் தான் நிஷாந்தை மேலே படிக்க வேறு கல்லூரிக்கு விண்ணப்பிக்க செய்தேன் என்று ஒரே போட்டாக போட்டு நிஷாந்தை காப்பாற்றிவிட்டார்.
இனி அங்கே ஹர்ஷூவின் மறுப்பிற்கு எங்கே மதிப்பு? அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பழைய கதையே தொடர்ந்தது. அவள் ஒரு கல்லூரிக்கும் நிஷாந்த் ஒரு கல்லூரிக்கும் என.
ஆனாலும் அவளை அப்படி அமைதியாக இருக்க விடாமல் நிஷாந்த் தன்னையறியாமல் பேச ஆரம்பித்தான். தீட்சண்யாவை பற்றி.
தீட்சண்யா, சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் டெயிலர் கடை வைத்திருக்கும் நடேசனுக்கும், சுசீலாவிற்கும் பிறந்த மூத்த பெண். இவளுக்கு கீழே தம்பி தினகரும், பார்வையற்ற தங்கை மஞ்சரியும்.
தன்னுடன் MBA பயிலும் மாணவி என்றும் இப்போதைக்கு தன்னுடைய தோழி என்றும் அவளை பற்றி கூற கூற ஹர்ஷூவிற்கு அவளை பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் அதிகரித்தது.
முதலில் கூட அசுவாரசியமாகவே தீட்சண்யா பற்றி கேட்டுகொண்டவள் நாளடைவில் சுவாரசியமாக கேட்க ஆரம்பித்தாள்.
தீட்சண்யா தன் படிப்பு திறமையால் அந்த கல்லூரியில் சலுகை கட்டணத்திலும், பேங்க் லோனிலும் இப்போது படித்துகொண்டிருப்பவள்.
அவளது அறிவு இன்னும் பட்டை தீட்டப்படவேண்டிய வைரம் என்னும் அளவிற்கு அப்படி ஒரு குணாதிசயமுள்ள பெண் என்று சில்லாகித்து நிஷாந்த் கூற அவளை பார்க்க சரியான திட்டமும் தீட்டிவிட்டாள் ஹர்ஷூ.
Nice
 

Advertisement

Top