Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu - 15.1

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 15 Part 1

வீட்டிற்கு வரும் வரை ஹர்ஷூ வாயே திறக்கவில்லை. அவளுக்கு தெரியும் ஷக்தியின் முகத்திலிருந்த கோவத்தில் வாயடைத்துபோயிருந்தாள். இதுவரை யாரின் கோபமும் தன்னை பாதிக்காமல் இருந்தவளுக்கு முதன் முதலாக தன்னவனது கோவம் பயத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.

எப்படியும் சமாளித்துவிடலாம் என்று கொஞ்சம் நம்பிக்கையோடும் அவன் தன் மேல் கொண்டிருக்கும் காதல் கொடுத்திருந்த இறுமாப்போடும் வருவதை பார்த்துக்கொள்ளலாம் என கொஞ்சம் அசால்ட்டாகவும் இருந்துவிட்டாள்.

ஆனால் அனைத்தையும் தானே தன் வாயால் கெடுத்துக்கொள்ளபோவதை அப்போது உணரவில்லை. அவனது காதல் அவளை காப்பாற்றும் என்று அவள் நினைத்திருக்க அந்த காதலை வைத்தே அவளை கட்டுப்படுத்தி வட்டத்திற்குள் அடைத்து வைக்க போவதை அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

வீடு வந்ததும் இறங்கி உள்ளே சென்றவள் சேகரோடு புருஷோத்தமன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மாடிக்கு சென்று தன்னை கொஞ்சம் சுத்தம் செய்து வேறுடைக்கு மாறி கீழே வரும் போது அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து இவளுக்காக காத்திருந்தனர்.

சேகரிடம் புருஷோத்தமன் அவனது பத்திரிக்கை சம்பந்தமான கேள்விகளை கேட்டுக்கொண்டே இனிமேலாவது அடிக்கடி வீட்டிற்கு வந்துபோக வேண்டும் என கோரிக்கையும் விடுத்துகொண்டார்.

ஆனால் மறந்தும் மூவரும் எப்படி ஒன்றாக வந்தனர் என்றோ, ஹர்ஷூ எங்கே சொல்லாமல் சென்றாள் என்றோ கேட்கவில்லை. அவருக்கு ஷக்தி பேசிய பேச்சுக்கள் இன்னமும் நியாபகத்தில் தான் இருந்தது. அதனால் அமைதியாக இருந்துவிட்டார்.

சேகர் சாப்பிட்டு முடிந்து மேலும் ஒரு அரைமணிநேரம் இருந்து அனைவரிடமும் பேசிவிட்டு ஹர்ஷூவிடம் கொஞ்சம் எச்சரிக்கையும் செய்துவிட்டே கிளம்பினான்.

ஷக்தி வரும் முன் தன்னறைக்கு வந்தவள் மீண்டும் கேமராவை தூக்கிக்கொண்டு உட்கார அவளின் பின்னோடு வந்தவன் கோபத்தின் உச்சிக்கே சென்றான்.

ஆனாலும் அவள் நிமிர்ந்து பார்ப்பதற்கு முன் கொஞ்சம் நிதானமானவன் இதில் அவசரப்படாமல் பொறுமையை கையாள வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டான்.

“என்ன பன்ற ஹர்ஷூ...” அவனது அழுத்தமான அழைப்பில் பதறியவள் வேகமாக அந்த கேமராவை எடுத்து ஷோல்டர் பேக்கினுள் வைத்துவிட்டு,

“ஒண்ணுமில்லை கௌரவ். சும்மா பார்த்திட்டு இருந்தேன்...”

“ஓகே. கொஞ்சம் பேசலாமா? தூக்கம் வந்திடலையே?...” அவனது பேச்சு எதைப்பற்றி இருக்குமென அறிந்தவள் அதை தவிர்க்க,
“ஆமா.... அது.... தூக்கம்...” என பதிலை முழுதாக முடிக்கவிடாமல்,

“வந்தாலும் பரவாயில்லை. இன்னைக்கு பேசியே ஆகனும். புரியுதா?...”

அவனது பேச்சில் தெறித்த கனலில் இன்னைக்கு இவன் ஒரு முடிவோடத்தான் இருக்கான் போல என்று கப்சிப் என அமர்ந்தாள்.

“நேரடியா கேட்கறேன். எதுக்காக நீ அந்த சிவா விஷயத்துல தலையிடற? ஊர்ல ப்ருத்வி கல்யாணத்தையும் இப்படித்தான் கெடுத்துவிட்ட. இப்போ அடுத்த பலியா?...” அவனது இந்த பேச்சில் சுர்ரென்று கோவம் எழுந்தாலும்,

“ப்ளீஸ் கௌரவ். நாம இதை பத்தி பேசினா பிரச்சனை தான் வரும். நான் இப்படித்தான்னு தெரிஞ்சு தானே கல்யாணம் செய்துக்கிட்டீங்க? இப்போ இதெல்லாம் உங்களுக்கு குறையா தெரியுதா?...”
இது என்ன பேச்சு என்பது போல முறைத்து பார்த்தவனது விழிகளில் ஹர்ஷூ பேசிய பேச்சின் பிடித்தமின்மை அப்பட்டமாக தெரிந்தது.

“சம்பந்தமில்லாம பேசாத ஹர்ஷூ. நான் என்ன கேட்கறேன்? நீ என்ன பதில் சொல்ற? குறைன்னு நான் சொன்னேனா? நீயா கற்பனை பண்ணி பேசாத. நான் உன்னோட பாதுகாப்புக்கும், எந்த ஆபத்திலும் நீ சிக்கிட கூடாதுன்னும் தான் சொல்றேன்...”

“எனக்கு ஆபத்து வரும்னு யார் சொன்னா? அந்த பொறுக்கியால என்னை என்ன பண்ணிட முடியும்? அப்படியே ஏதாவது என்கிட்ட வாலாட்டினா அவனை உண்டில்லைன்னு ஆக்கிடுவேன்...” அசால்ட்டாக தனக்கு இது ஒரு பெரிய விஷயமா என்பது போல் இருந்தது அவளது பதில்.
ஷக்திக்கு அவளது புரிந்துகொள்ளா தன்மையில் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக எழும்ப ஆரம்பித்தது. ஆனாலும் அப்போது திடீரென மூளையில் பளிச்சிட்ட யோசனைக்கு ஹர்ஷூவின் பதில் தனக்கு சாதகமாக தான் வரும் என நம்பினான்.

“ஓகே ஹர்ஷூ, நாம இதை பத்தி பேச வேண்டாம். உனக்கு இந்த டிடெக்டிவ் வொர்க் பிடிச்சிருக்குன்னா சொல்லு. சேகர்கிட்ட விசாரிச்சு நான் நல்ல டிடெக்டிவ் ஏஜென்சி பார்த்து சொல்றேன். நீ அங்க ஜாயின் பண்ணி பாதுகாப்போட வேலையை பாரேன்...”

இது சரிவராதுதான். சாத்தியமில்லாததுதான். ஆனாலும் அவனை பொருத்தமட்டும் இப்போதைக்கு ஹர்ஷூவை அந்த சிவதாஸ் பிரச்சனையிலிருந்து ஒதுக்கிவைக்க வேண்டும். அதற்காக அவளின் சிந்தனைகளை திசைதிருப்பும் விதமாக பேச ஆரம்பித்தான். அந்தோ பரிதாபம். ஹர்ஷூவிடமா?

“எனக்கு அப்படி யார்க்கிட்டயும், யாரின் கீழேயும் வேலை பார்க்கிறது பிடிக்காது. நான் என்ன செய்யனும்னு அடுத்தவங்க முடிவு செய்ய கூடாது. எனக்கு சரின்னு தோணுவதை தான் நான் செய்வேன். என்னை கன்ட்ரோல் பன்றதெல்லாம் நடக்காத விஷயம். ம்ஹூம். ஐ டோன்ட் லைக் திஸ் கௌரவ்...”

ஹைய்யோ என்றானது ஷக்திக்கு. இவள் அநியாயத்துக்கு என்னோட பொறுமையை சோதிக்கிறாளே? என நொந்துகொண்டான். சரி வேறுவிதமாக பேசலாம் என நினைத்தவன்,

“ஓகே ஹர்ஷூ. லீவ் இட். பேசாம நீயும் நிஷாந்தும் சேர்ந்து ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்சி ஆரம்பிங்களேன். சேகர் ஹெல்ப் பண்ணுவான். நீயும் யாரோட அதிகாரத்தின் கீழேயும் வேலை செய்ய வேண்டாம். உனக்கு ஹெல்ப்க்கு ஆள் வச்சுக்கலாம்...”

இவன் என்ன லூஸா என்பது போன்ற பார்வையை பார்த்தவள், “இதென்ன சாதாரண காரியமா? சின்னபிள்ளைத்தனமா பேசாதீங்க கௌரவ்...”

“யாரு?... நானு?. ஏன் சொல்லமாட்ட?...” என முணுமுணுக்க,

“டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கிறதுன்னா ஒன்னும் சும்மா இல்லை. எல்லாராலும் அதை செஞ்சிடமுடியாது. அதுவுமில்லாம எனக்கு குதிரைக்கு கடிவாளம் கட்டிக்கிட்டது போல ஒரே பாதையில போக விருப்பமில்லை. அது போர் கௌரவ்...” ஷக்திக்கு உஷ்ணம் தலைக்கேறியது. அவளோ அதை கண்டுகொள்ளாமல்,

“இப்போ நீ இருக்கே பாரேன். காலையில எழுந்ததும் ஆபீஸ். ஈவ்னிங் ஆனதும் வீட்டுக்கு வரது. அது என்னால முடியவே முடியாது. ஹர்ஷூ வேற. எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிச்சிருக்கு...”

அவளாக இப்படி பேச வேண்டும் என நினைக்கவில்லை. இப்போது தன்னை ஷக்திக்கு புரிய வைத்துவிடும் எண்ணத்தில் தனக்கு சரி என தோன்றியதை எல்லாம் பேசிவைத்தாள்.

அதில் பொறுமையிழந்த ஷக்தி ஒரு முடிவோடு படாரென எழுந்து நின்று,

“ஹர்ஷூ நீ சிவதாஸ் விஷயத்துல தலையிடக்கூடாது. அந்த கல்யாணம் நடக்குது, நடக்காம போகுது. அதிலிருந்து வெளில வா. நமக்கு இது வேண்டாம். நம்மோட எதிர்காலத்துக்காக தான் சொல்றேன். நம்மோட நிம்மதியும் சந்தோஷமும் சிதைஞ்சு போய்டும்...”

“அவன் பிரச்சனைன்னு இல்லை இனிமே யாரோட பிரச்சனையிலும் நீ சம்பந்தப்படவே கூடாது. நாம நம்மோட வாழக்கையை தான் பார்க்கனும். இதை நீ ரிக்வெஸ்ட்னு நினச்சாலும் சரி, ஆடர்னு நினைச்சாலும் சரி. ஐ டோன்ட் கேர். பட் இந்த விஷயத்துல நான் சொல்றதை நீ கேட்டுத்தான் ஆகனும்...”
 
ண்ணா ஷக்தி கௌரவ் ண்ணா
உங்களுடைய அருமை பொஞ்சாதி ஹர்ஷுவுக்கு நீங்க ஆர்டர் போட்டால் அவிய அதைக் கேட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பங்களாக்கும்
நடக்கிற காரியத்தை சொல்லுங்க,
ஷக்தி ண்ணா
 
Last edited:
Top