Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 14.3

Advertisement

Part 3

“டே...ய் சே...க...ர்...” என அழுத்தி கூப்பிட்டதும் தான் உணர்வு வந்து,

“மச்சான் எனக்கு எந்த கல்யாணமும் வேண்டாம்டா...” என ஷக்தி அழைத்த சேகர் வேகத்தில் உளறிக்கொட்ட,

“லூஸாடா நீ? எதுக்காக இப்படி நிக்கிற? நான் கிளம்பறேன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். மூஞ்சியை பாரு? உன் மூஞ்சிக்கு அது ஒண்ணுதான் குறைச்சல். கல்யாணமாம் கல்யாணம். மனுஷனுக்கு ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனை. இதுல உன் தொல்லை வேறையா?...”

ஹர்ஷூ மேல் இருந்த கோவத்தை சேகரிடம் காட்ட, “ஏண்டா பேச மாட்ட? சும்மா இருந்தவன்கிட்ட வந்து கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்னு சொன்னது உன்னோட வொய்ப். அங்க கோவத்தை காட்ட முடியலை. என்கிட்ட எகிற ஆரம்பிக்கிற?...”

“நான் ஒன்னும் சொல்லலை. அவளோட ஸ்கூட்டியை எடுத்துட்டு வந்து வீட்ல விட்டுடு. இந்தா கீ...” சேகரின் பதிலை எதிர்பார்க்காமல் ஹர்ஷூவின் கையிலிருந்த சாவியை பறித்து சேகரை நோக்கி எறிந்துவிட்டு ஷக்தி சல்லென பறந்தேவிட்டான்.

“தலையெழுத்து. இப்படி ஒரு நண்பன்? நான் எவ்வளோ ஸ்டெயிலா பைக்ல சுத்தற ஆளு. என்னை போய் பொட்டப்புள்ளை போல ஸ்கூட்டி ஓட்ட வச்சுட்டானே?...” புலம்பிக்கொண்டே தன்னோடு இங்கே வந்த அலுவலக நண்பனுக்கு அழைத்து சொல்லிவிட்டு ஸ்கூட்டியை எடுத்துகொண்டு ஷக்தியின் வீடுநோக்கி வண்டியை விட்டான்.

ஹோட்டலை விட்டு வந்த சில நிமிஷத்தில் ஆள் அரவமற்ற பகுதியில் யாரோ காரை வழிமறிக்க என்னவென பார்க்க நிறுத்தினான். தூரத்தில் சேகர் வருவதை பார்த்துக்கொண்டே வண்டியை விட்டு இறங்கவும் சேகர் ஷக்தியின் அருகில் வரவும் சரியாக இருந்தது.
வழிமறித்தவனை பார்த்து புருவத்தை சுழித்தபடி, “யார் நீங்க? என்ன வேணும்?...” என ஷக்தி கேட்கவும்,

“ஷக்தி நீ கிளம்பு, நான் சொன்னேன்ல ஹோட்டல்ல...” என முடிக்கும் முன்னே ஷக்திக்கு நியாபகம் வந்துவிட்டது. இவன் கோவையில் ஹர்ஷூவிடம் அடிவாங்கியவன் தானே என நினைக்க, அந்த சிவதாஸ் ஹர்ஷூ அமர்ந்திருந்த பக்கம் சென்றான்.

ஹர்ஷூ அனைத்தையும் காரினுள் அமர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். ஆனால் இறங்கி பேச முற்படவில்லை. ஷக்தியே பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவிட்டாள்.

சிவதாஸ் அவளின் பக்க கதவினை திறக்க முயன்று முடியாமல் அவளை வெளியே வருமாறு அழைக்கவும் ஷக்தியின் பொறுமை பறந்தது.

“யூ டேமிட், நான் சொல்லிட்டே இருக்கேன். திரும்ப என்ன அவளை வெளில வர சொல்ற? உனக்கு என்ன பேசனுமோ அதை என்கிட்ட பேசு...” என்ற ஷக்தியை கண்டுகொள்ளாமல் மீண்டும் ஹர்ஷூவை வெளியில் அழைக்க அவள் இறங்காமல் கண்ணாடியை மட்டும் இறக்கி,

“ப்ச் உனக்கு வாங்கின அடி பத்தாதா? இன்னமும் வாங்கினாதான் சரிப்படுவ போல?. பேசாம வழியை விட்டு தள்ளிப்போ...” எச்சரிக்கும் குரலில் பேசியவளை பார்த்து எள்ளலாக சிரித்த சிவா,

“உனக்கு ரொம்ப தான் துணிச்சல். அன்னைக்கு ஹாஸ்பிட்டல் வந்து நான் வார்ன் பண்ணியும் என்னை தொடர்ந்து வந்து நான் எம்.பி பையன்னு தெரிஞ்சும் என்னை பத்தின ரகசியங்களை சேகரிக்க வந்திருக்க உன்னை பாராட்டணும் தான். ஆனா நான் ஒன்னும் முட்டாள் இல்லை. உன்னை சும்மா விட...”

ஷக்தி திரும்பி ஹர்ஷூவை பார்த்து இதையும் என்னிடமிருந்து மறைத்துவிட்டாயே என்பது போல நோக்க அவனது விழிகளை சந்திக்க தயங்கினாள் ஹர்ஷூ.

“என் வழியில நீதான் இப்போ குறுக்கே வர. நான் வளவளன்னு பேச வரலை. என்னோட கல்யாண விஷயத்துல நீ தலையிடாதே. பேசாம ஒதுங்கிபோய்டறது தான் உனக்கு நல்லது. இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்...”

இப்போது ஷக்தி உள்ளே நுழைந்தான். “சோ நீ அந்த பொண்ணை நிச்சயம் செய்ய வந்த இடத்தில்தான் ஹர்ஷூக்கு ப்ரப்போஸ் பண்ணிருக்க. அடியும் வாங்கியிருக்க. அப்டித்தானே?...” சேகர் ஷக்தியை தடுக்க,

“அதையும் உங்ககிட்ட சொல்லிட்டாளா உன் பொண்டாட்டி. அன்னைக்கு என்னை அடிச்சதுக்கு இனிமே தான் அனுபவிக்க போறா. ஆமா அவளுக்கென்ன போற இடத்தில எல்லாம் ஒருத்தனை அடிக்கிறது. அன்னைக்கும் ஹோட்டல்ல ஒருத்தனை பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கினா...”

ராபர்ட்டை அடித்ததை இவன் பார்த்தானா? என்பதுபோல் ஷக்தியும் ஹர்ஷூவும் பார்க்க, அவர்களை புரிந்துகொண்ட பாவனையில்,
“பார்த்தேன். பார்த்தேன். அவ அடிச்சதையும் நீ அவளை அணைவா பிடிச்சுருந்ததையும் பார்த்தேன். நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப்னும் தெரிஞ்சுக்கிட்டேன். அன்னைக்கு நைட்டே உன் வொய்ப் கிட்ட எச்சரிக்கையும் செஞ்சேன். ஹ்ம் அப்போவும் அவளோட அந்த திமிர் அடங்கலை. அவ அலட்சியம் என்னை என் ஆத்திரத்தை இன்னமும் சீண்டிவிட்டுடுச்சு...”

கோவத்தில் சிவதாஸின் சட்டையை பிடித்து உலுக்கிவிட்டான் ஷக்தி. “யூ ராஸ்கல், என் முன்னாடியே என்னோட மனைவியை மரியாதையில்லாம பேச உனக்கு எவ்வளோ தைரியம். நீ எம்.பி பையன்னா என்ன கொம்பா?...”

ஷக்தியின் இந்த ஆவேசத்தில் கொஞ்சம் மிரண்டுதான் போனான் சிவா. ஆனாலும், “அச்சச்சச்சோ உனக்கு கோவம் வேற வருதா? ஆனா எனக்கு உன்னை பார்த்தா பரிதாபம் தான் வருது மிஸ்டர். உனக்கு கல்யாணம் செய்துக்கு பொண்ணே கிடைக்காமலா இவளை கட்டிக்கிட்ட?...” சிவாவின் கழுத்தை பிடித்தேவிட்டான் ஷக்தி. ஹர்ஷூவும் காரிலிருந்து இறங்கி ஷக்தியை பிடித்துக்கொண்டாள்.

“உன்னையெல்லாம் சும்மா விடகூடாதுடா. நீ ஒரு தேர்ட்ரேட் பொறுக்கி. உனக்கு எல்லாம் எங்களை பத்தி பேச என்னடா தகுதி இருக்கு? இப்போ எடுத்திருக்கிற வீடியோ ஆதாரமே போதும் உன் அப்பாக்கிட்ட உன்னை வெளிச்சம் போட்டு காட்ட...” என்ற ஷக்தியின் பேச்சில் சிவாவிற்கு குலை நடுங்கியது. பயத்தில் வெளிறிய முகமே அவனின் நிலையை பறைசாற்றியது அனைவருக்கும்.

சேகரும் தன் பங்கிற்கு, “உன் அப்பாக்கிட்ட மட்டுமில்லை. இந்த ஊர் உலகத்துக்கே காட்டுவோம். அதுக்கப்றம் நீ இப்படி எம்.பி பையன்னு பந்தா காமிச்சிக்கிட்டு ஊர் சுத்த முடியாது. உன்னால உங்கப்பா பதவி இழக்கிறது தான் மிச்சம். பாவம் அந்த நேர்மையான நல்ல மனுஷனுக்கு உன்னை போல ஒரு வுமனைசர் பரதேசி பிள்ளையா பிறந்திருக்கான்...” என உச்சுக்கொட்ட அவனை முறைத்து பார்த்த சிவாவிடம்,

“என்னடா முறைப்பு? இந்த வந்து இப்படி சவால் விடற நீ நாங்க இவ்வளோ நேரமாஹோட்டல்ல தான இருந்தோம். அப்போ எங்கக்கிட்ட வந்து பேசியிருக்க வேண்டியதுதானே? அந்த துணிச்சல் இல்லை? இங்க வந்து சாமியாடுற?...”

“நான் யாருன்னு தெரியுமா? பத்திரிக்கைகாரன். ***** பத்திரிக்கையோட சப் எடிட்டர். நான் நினைச்சா என்ன வேணும்னாலும் செய்ய முடியும். உன்னோட இந்த அசிங்கமான அந்தரங்க வீடியோ எனக்கிட்ட தான் இருக்கு. மவனே வச்சிருக்கேன் உனக்கு...”
அனைவரையும் ஒரு பார்வை பார்த்த சிவதாஸ் மெல்ல தன் காரை நோக்கி சென்று அதை உயிர்ப்பித்தவன் கொஞ்சம் தூரம் நகர்ந்துவிட்டு தன்னை பார்த்து கொண்டிருந்தவர்களை நோக்கி,

“ஏய் ஹர்ஷிவ்தா, நான் யாருன்னு உனக்கு காட்டாம விடமாட்டேன். என்னை திரும்ப திரும்ப நீ அவமானப்படுத்திட்டே இருக்க. அதுக்கான பலன் என்ன ஆகுதுன்னு பாரு...” என கூச்சலிட்டு சவால் விட்டவான் சேகர் அவனை நெருங்கிபிடிக்கும் முன் பறந்துவிட்டான்.

தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஷக்தியின் முகத்தை பார்த்த ஹர்ஷூ திகைத்துபோனாள். அந்தளவிற்கு அவனது முகத்தில் ரவுத்திரம் தாண்டவமாடியது. இப்படி கோவப்பட்டு அவள் பார்த்ததில்லை.

“டேய் நீ முதல்ல காரை எடு. இங்க இருக்கிறது நமக்கு சேஃப் இல்லை. நீ உள்ள உட்காருமா...” என சொல்லிவிட்டு சேகர் ஸ்கூட்டியை எடுத்துகொண்டு முன்னே செல்ல ஹர்ஷூவை ஏற்றிக்கொண்டு ஷக்தியின் கார் பின்தொடர்ந்தது.

ஷக்திக்கும் சேகருக்கும் நிச்சயமாக சிவதாஸ் பிரச்சனையை இப்படியே விட்டுவிடுவான் என்று நம்பிக்கையில்லை. இதை மேலும் வளரவிடாமல் ஹர்ஷூவின் வேகத்திற்கு எப்படி அணைபோட்டு தடுப்பதென்று யோசனையோடே வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தனர்.

ஷக்தி அன்றைய இரவில் ஹர்ஷூவிடம் கொஞ்சம் அமைதியாக புரிந்து கொள்ளும் படி எடுத்து சொல்லலாம் தன் கோவத்தை எப்பாடுபட்டாவது கட்டுப்படுத்த முயல அவனது கோவத்திற்கு தூபம் போடும் விதமாகத்தான் பேசி வைத்தாள் அவனது அருமை மனைவி.

அதனால் ஷக்தியின் கோவம் கரையுடைக்க ஹர்ஷூ எதை நினைத்து பயந்தாளோ அந்த வார்த்தையை கூறி அவளை ஒரே நொடியில் உயிரோடு கொன்றுவிட்டான்.

அதன் விளைவு மறுநாள் ஹர்ஷூவை தேடி ஊரெல்லாம் பைத்தியக்காரன் போல அலைந்து திரிந்து தவித்துபோனான்.
ஹர்ஷூ தனக்கு கிடைக்கவே மாட்டாளோ என்ற அச்சத்தை அவனிடம் தோற்றுவித்தவள் சென்ற இடத்தில் ஆகாஷை பற்றியும் தீட்சண்யா பற்றியும் அறியவேண்டிய சூழ்நிலையை தானே உண்டாக்க போவதை ஷக்தி அப்போது உணரவில்லை?


நதி பாயும்...
Nice
 
Top