Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 12.1

Advertisement

நதியோட்டம் – 12

அறிமுகப்படலம் நிறைவுற்றதும் அனைவரும சேர்ந்து ஆட்டம் பாட்டமென பார்ட்டியை கொண்டாடினர். அனைவரிடமும் நட்போடு மிக மிக இயல்பாக உரையாடியவளை பார்த்து நிம்மதியடைந்து விட்டான் ஷக்தி.

அனைவரும் சாப்பிடும் வரை சரியாகத்தான் இருந்தது. பஃபே முறையில் டின்னர் என்பதால் அனைவருமே அந்த ஹாலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு குழுவாக நின்றுகொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.

வந்தவர்களில் ஒருவனது பார்வை மட்டுமே தன்னை அடிக்கடி தீண்டி செல்வதை உணர்ந்தவளால் அதன் பின்னும் சாதாரணமாக இருக்க முடியவில்லை. வரும்போது எந்த பிரச்சனையும் செய்யாமல் இருக்க முடிவெடுத்தது போல கட்டுப்பாட்டோடு இருக்க முடியவில்லை.

இன்னும் சில நிமிடங்கள் பொருத்துப்பார்த்தவள் மீண்டும் தன்னையே வட்டமிடும் அவனது வழிசலான பார்வையை தாங்கமுடியாமல் ஷக்தியிடம் கூறியது போல அமைதியாக நிற்கமுடியாமல் வேக நடையோடு அவனை நோக்கி சென்றாள்.
வேறொரு புறம் திரும்பி நின்று பேசிக்கொண்டிருந்த ஷக்தி இதை கவனிக்க தவறினான்.

தன்னை பார்த்தவனை நெருங்கியவள், “மிஸ்டர், உங்க பேர் என்ன?...” அடக்கப்பட்ட கோவக்குரலில் கேட்டதும் அவன் கொஞ்சம் திகைத்துவிட்டான்.

எச்சிலை விழுங்கியவாறு “மேடம் ஷக்தி சார் என்னை உங்களுக்கு அறிமுகம் செய்தாங்களே?...”

“உன்னோட பேர் என்னன்னு கேட்டேன். கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்றியா? இல்லை எல்லோரையும் கூப்பிட்டு வச்சு நடுவில உன்னை நிக்கவச்சு கேட்கட்டுமா?...” அவளது முகத்தில் தெரிந்த ரவுத்திரம் அந்தளவிற்கு பயங்கரமாக இருந்தது.

“சாரி மேடம். என்னோட பேர் சதீஷ். என்னை மன்னிச்சிடுங்க மேடம். சார்க்கிட்ட சொல்லிடாதீங்க...” நடுக்கத்தோடு தன்னை கண்டுகொண்டாளே என்ற பயத்தில் வெலவெலத்து போனான் சதீஷாகப்பட்டவன்.

“இவ்வளோ பயத்தை வச்சிக்கிட்டு எவ்வளோ தைரியமிருந்தா என்னையே நோட்டமிடுவ? அதுவும் உன் ஆபிசர் வொய்ப்னு தெரிஞ்சே? என்ன எதையும் கண்டுக்காம போய்டுவேன்னு நினைச்சியா? உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன். ஜாக்கிரதை.”
“ஐயோ தெரியாம பார்த்துட்டேன் மேடம். சத்தியமா இனி பார்க்கவே மாட்டேன் மேடம். செஞ்ச தப்புக்கு மன்னிப்பையும் கேட்டுடறேன் மேடம். என்னை விட்ருங்க மேடம். ப்ளீஸ்...” காலில் விழாத குறையாக யாரேனும் இதை பார்த்துவிடுவார்களோ என்ற பதட்டத்தோடு மன்னிப்பை கேட்டு மன்றாடினான்.

“அந்த பயம் இருக்கட்டும். பாக்கனும்னு நினைக்க கூட கூடாது. அப்டி பார்த்த உன் கண்ணு ரெண்டையும் நோண்டி இதே ஹோட்டல்ல குடுத்து பொரிச்சு உன்னையே சாப்பிடவும் வச்சிடுவேன். என்னைன்னு இல்லை இனி எந்த பொண்ணையும் நீ இப்டி பார்க்க கூடாது. நான் சொன்னதை செய்யற ஜாதி. புரியுதா?...” என மிரட்டும் போதே அங்கே உமாமகேஷ்வரனும் ஷக்தியும் வந்து சேர ஹர்ஷிவ்தா கணவனை தீயாக முறைத்துவிட்டு அந்த ஹாலை விட்டு அங்கிருந்த கார்டனுக்குள் சென்று அமர்ந்தாள்.

சதீஷின் பயந்த முகத்தை பார்த்ததுமே என்ன நடந்திருக்கும் என ஷக்தியாலும் மகேஷ்வரனாலும் யூகிக்க முடிந்தது. சதீஷ் பற்றி ஆபீசிலேயே அறிந்ததுதான் அவர்களுக்கு. பெண்களிடம் எப்போதும் கொஞ்சம் வழிந்துகொண்டும் அவர்களை சைட் அடித்துக்கொண்டும் மட்டுமே தன் பொழுதுகளை சந்தோஷமாக போக்கியவன். அதற்கு மேல் எப்போது அவனது எல்லையை தாண்டமாட்டான்.

இங்கே ஹர்ஷுவிடமும் அதையே செய்தது ஷக்திக்கு கடும் சினத்தை எழுப்பியது. தானே அவனை பார்ட்டிக்கு அழைத்துவிட்டு கடிந்துகொள்ளவும் விரும்பவில்லை. இது அனைவருக்கும் தெரியவைக்கவும் பிடித்தமில்லை.

ஆனாலும் அவனுக்கு தக்க பதிலை ஹர்ஷூவே சொல்லியிருப்பாள் என அவனுக்குமே நிச்சயம் தான்.
இப்போது அவனுக்கு ஹர்ஷூவை எப்படியாவது சமாதானம் செய்தே ஆகவேண்டும். ஆனால் இருக்கிற கோவத்திற்கு மேலும் பிரச்சனையை பெரிதாக்கிவிடுவாளோ என எண்ணாமலும் இருக்கமுடியவில்லை. சமாளிக்கலாம் என்று தன்னை தேற்றிக்கொண்டே அவளிடம் நெருங்கினான்.

செல்லும் முன்னே சதீஷை நோக்கி எச்சரிக்கும் பார்வை ஒன்றை விடுத்துவிட்டே சென்றான். அவனுக்கு அவன் கவலை மலையேறி இருக்கும் மாரியாத்தாவை என்ன சொல்லி தரையிறங்க வைப்பானோ? சும்மாவே பின்னி பெடலேடுப்பாள். இன்றைக்கு தனக்கு நேரமே சரியில்லை என நொந்துகொண்டே சென்றான்.

ஷக்தி அவ்விடம் அகன்றதும் பேயை கண்டது போல நடுநடுங்கி போய் நின்றிருந்த சதீஷை உலுக்கினான் உமாமகேஷ்வரன்.
“என்ன காரியம்டா பண்ணித்தொலைச்ச? அதுவும் யார்க்கிட்ட?...” கோவத்தோடு கேட்டவனை பரிதாபமாக பார்த்த சதீஷ்,

“மச்சான், நான் மேடம் இப்படின்னு எதிர்பார்க்கலைடா. சும்மா ரெண்டு பார்வை பார்த்தேன். அவ்வளோதான்...”
“ரெண்டு பார்வையா? கூட ரெண்டு தடவை பார்த்திருந்தா என்னாகிருக்கும்?...”
“என்னாகிருக்கும்டா? அதான் நீங்கலாம் இருக்கீங்களே?...”

“ம்ம் நாங்க இருப்போம். ஆனா நீ இருக்கனுமே? இன்னும் கொஞ்சம் பார்த்திருந்தா செத்திருப்படா. அதுதான் இங்க நாங்க பார்த்திருப்போம். ஆளு தெரியாம விளையாடாத. புரிஞ்சதா?...”

“ஏண்டா உமா? பார்த்தது ஒரு குத்தமா? அதுக்கு திட்டினதும் இல்லாம அடிக்க வேற செய்வாங்களாமா? இது எந்த ஊரு நியாயம்? அவங்கக்கிட்ட அடியை வாங்கிட்டு நான் சும்மா இருந்திடுவேனா?...”சவடாலாய் பேசியவனை ஏளனமாக பார்த்த உமா இவனுக்கு இது போதாது போல என நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

இவனை இப்படியே விட்டால் இன்னும் ஓவராக பேசி வாங்கித்தான் கட்டுவான் என, “ரொம்பத்தான் உஷ்ணப்படறையே? சும்மா இல்லாம? என்னடா செய்வ? என்ன செய்ய முடியும்? எம்பி பையனே சத்தமில்லாம சரமாரியா அடியை வாங்கிக்கிட்டு வாயை மூடிக்கிட்டு போய்ட்டான் நீ என்னத்தை கிழிப்ப?...” அப்போதாவது அடங்குவான் எனத்தான் சொன்னான்.

“என்னது எம்பி பையனா? இது எப்போடா? என்ன நடந்தது?...” அதிர்ந்து போய் பார்த்தவனை அப்படி வா வழிக்கு என்பதுபோல,
“அந்த கதையை ஏன் கேட்க? நாம எல்லோரும் நரேன் கல்யாணத்துக்கு மருதமலை போய்ருந்தோமே நீ கூட கல்யாணம் முடிஞ்சதும் சென்னை ரிட்டர்ன் ஆகிட்ட. ஆனா நானும் ஷக்தியும் கொஞ்சம் வெளில சுத்திட்டு வரலாமேன்னு போனோம்...” என தொடங்கியவன் அன்று நடந்ததை எல்லாம் சொல்லவும் பீதியாகிவிட்டது சதீஷிற்கு.

“சார் இதையெல்லாம் பார்த்த பின்னாலையும் எப்படி மேடத்தை மேரேஜ் செய்ய முடிஞ்சது? அதுவும் எம்பி பையன் அப்டின்ற பயமே இல்லையா மேடத்துக்கு?...” இப்போது சதீஷ் சொன்ன மேடத்தில் பயமும் வரவழைக்கப்பட்ட மரியாதையும் பொங்கி ததும்பியது.
அதை உணர்ந்துகொண்ட உமா, “அவன் எம்பி பையன் அப்டின்னு அவங்களுக்கு தெரியாது. ஏன் எங்களுக்கே இங்க வந்த பின்னால ஒரு பங்க்ஷன்ல வச்சு தான் பார்த்து தெரிஞ்சிட்டோம்...”
“அதானே பார்த்தேன் தெரிஞ்சிருந்தா நடந்திருக்கிற கதையே வேறையாச்சே?...” எதையோ கண்டுகொண்ட பாவனையில் பேச,
“ஆமா நடந்திருக்கிற கதையே வேற தான். அவனை அப்டியே மேடம் சும்மா விட்ருக்க மாட்டாங்க தான். எல்லார் முன்னாலையும் எம்பி பையனோட இலட்சணத்தை பாருங்கன்னு ஒரு வழி ஆக்கிருப்பாங்க. அப்படி ஒரு துணிச்சலான பொண்ணு அவங்க...” உமா சொல்ல சொல்ல ஆவேன வாயை பிளந்தபடி பார்த்துகொண்டிருந்தான் சதீஷ்.

“இப்போ உன்னையே எடுத்துக்க, சார் தான் உன்னை இன்வைட் செய்திருக்காங்க இந்த பார்ட்டிக்கு. ஆனாலும் நீ செஞ்ச தப்பை அவங்க கண்டுக்காம விட்டாங்களா? இல்லையே. இனிமே புரிஞ்சுப்ப தானே?...” என்றவனுக்கு தலையாட்டமட்டுமே செய்தவன் அவனிடம் சொல்லிகொண்டு கிளம்ப எத்தனிக்க,

“இருடா, இப்படி பாதியிலேயே கிளம்பினா என்ன அர்த்தம்? இனி சரியா இரு. எல்லோரும் சேர்ந்தே போகலாம்...” என அவனை உள்ளிழுத்து சென்றான் உமா மகேஷ்வரன்.
கார்டனில் அமர்ந்திருந்தவளிடம் சமாதானம் பேச சென்றவன் சில நொடிகள் ஒன்றும் பேசாது அவளையே பார்த்தபடி நின்றவன் ஒரு பெருமூச்சில் இழுத்துவிட்டு,

“ஹர்ஷூ, அவனோட குணமே அப்படித்தாண்டா. ஆனா தப்பானவன்லாம் கிடையாது. ப்ளீஸ். எனக்குமே அவன் செஞ்சதுல கோவம் தான். ஆனா நாமலே அவனை இன்வைட் பண்ணிட்டு எப்படி அவனிடம் சண்டை போடறது? நாளைக்கு ஆபீஸ்ல அவ்ச்சுக்கறேன். நீ இப்போ உள்ளே வா. எல்லோரும் என்னன்னு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க...” அவளின் தீ பார்வையில் அடங்கிப்போனான்.

“நீ உள்ள போ கௌரவ். இப்போ எது பேசினாலும் கோவத்துல எதாச்சும் சொல்லிடுவேன். வீட்ல போய் பேசிக்கலாம். நானே வந்திடறேன் உள்ள. நீ போய் வந்திருக்கிறவங்களை கவனி. தப்பா எடுத்துக்க போறாங்க. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ். ப்ளீஸ் லீவ் மீ அலோன்...” அடக்கப்பட்ட கோவம் அப்பட்டமாக பேச்சில் தெறித்தது.

அவளது த்வனியில் இப்போது என்னை தனியாக விடேன் என்ற உறுதி தெரிந்தது. அதற்கு மேல் பேச முடியாமல் இந்தளவிற்கேனும் இறங்கி வந்திருக்கிறாளே என்ற நிம்மதியில் சொன்னபடி வந்துவிடுவாள் என உள்ளே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான்.
அங்கிருந்தவர்களிடம் கார்டனை பார்த்துவிட்டு வருவதாக சென்றிருக்கிறாள் என சொல்லி உமாமகேஷ்வரனே சமாளித்துவிட்டான். அவனை ஒரு நன்றிப்பார்வை பார்த்துவிட்டு மற்றவர்களிடம் ஓரளவு இலகுவாக பேச ஆரம்பித்தான்.

சிறிதுநேரத்தில் ஹர்ஷிவ்தா மேலே வருவது தெரியவும் தான் முழுதாக தெளிந்தான். ஆனாலும் சதீஷை பார்க்கும் பார்வையில் ஒரு கோவம் இருந்ததை அவனால் மட்டுமே உணரமுடிந்தது. அதனால் அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

மீண்டும் கண்ணாடி கதவின் வழியாக வந்துவிட்டாளா என மீண்டும் கண்ணாடி கதவை பார்க்க அங்கே யாரோ அவளிடம் வழிமறித்து பேசுவது போல் தெரிந்தது, அதுவும் அந்த நபரின் நடையில் தெரிந்த தடுமாற்றம் கண்டிப்பாக குடித்திருப்பான் என நம்பும்படி இருந்தது. அதனாலேயே என்னவென பார்க்க காரிடரை நோக்கி வேகமாக விரைந்தான்.

அதற்குள் பேசிக்கொண்டிருந்தவனின் கன்னத்தில் தன் தளிர்கரத்தை இடியென இறக்கியேவிட்டாள். அனைவரும் ஷக்தியின் பதட்டமான ஓட்டத்தில் அவன் பின்னோடு சென்றனர்.

தன்னவளை நெருங்கிவிட்டவன் அவளை தன் கரங்களுக்குள் கொண்டுவந்து பார்த்தால்ஷிவ்தாவின் முகம் நெருப்பு ஜுவாலை என கொந்தளித்து கொண்டிருந்தது. வேர்வை குளியலில் நனைந்திருந்த ஹர்ஷூவின் உடலில் நடுக்கத்தை ஷக்தியால் உணரமுடிந்தது.
Nice
 
Top