Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paaithodu 9.1

Advertisement

தடையில்லை நதியே பாய்ந்தோடு

நதியோட்டம் – 9

ஷக்தி, ஹர்ஷூ வருவதற்குள் திருவேங்கடம் சகுந்தலா தம்பதியோடு சேர்ந்து பூட்டிக்கிடந்த தனது சொந்த ஒழுங்குபடுத்தும் முயற்சியில் இருந்தார் புருஷோத்தமன். இரண்டு வருடங்களாக பூட்டிக்கிடந்த வீட்டிற்கு இன்றுதான் உயிர் வந்தது போல இருந்தது. உதவிக்கு வந்திருந்த ஷக்தியின் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு வந்திருந்த பொருட்களில் அத்தியாவசியமான பொருட்களை தவிர்த்து மற்றவற்றை தனியொரு அறையில் பத்திரமாக வைத்துவிட்டு ஆசுவாசமாக அமர்ந்தனர்.

“ஏண்டா சோமா, இப்படி ஒரு வீட்டை ஆசையா கட்டிட்டு என்னனுடா நீயும் ஷக்தியும் அந்த சின்ன அப்பார்ட்மென்ட்ல போய் இருக்கீங்க?...” திருவேங்கடத்தின் பேச்சில் கொஞ்சம் ஆற்றாமையும் இருந்தது.

“ஆமாண்ணே, அவர் சொல்றதும் சரிதான். துர்கா வாழ்ந்த வீட்ட இப்டி பூட்டி போட்டுட்டு போக உங்களுக்கு கஷ்டமா இல்லையா?... நல்ல வேலை இப்போதாவது இங்க வந்து இருக்கனும்னு நினைச்சீங்களே, அதுவே போதும்...” என்றார் சகுந்தலா.

“இல்லைம்மா சகுந்தலா, வாரம் இரண்டு நாள் வந்து நம்ம அன்னம்மாவையும், சுப்பையாவையும் வச்சு சுத்தம் பண்ணி விளக்கேத்திட்டு தான் போவேன். சுப்பையா கூட பின்னால இருக்கிற தோட்டத்தை தினமும் வந்து சுத்தம் செஞ்சு தண்ணீர் பாய்ச்சிட்டுதான் போவான். இங்க இருக்கிற பூ, காய்கறிகள்னு எல்லாத்தையும் சுப்பையாவே எடுத்துக்க சொல்லிட்டேன். துர்கா போட்டு வச்சது. அதை அப்டியே விட்டுட கூடாதுல...”

“ஹ்ம், இத்தனை வருஷமா அவளோட இந்த வீட்ல ரொம்ப சந்தோஷமா இருந்தோம்டா திரு. திடீர்னு எங்களை விட்டு போனதும் இந்த வீட்ல இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அவ இல்லாத நிதர்சனம் என்னையும் என் பையனையும் கொல்லாம கொன்னுட்டு இருந்துச்சு. எங்களால அந்த வலியை தாங்கிக்க முடியலை. அதான் ஷக்தி ஆபீஸ் பக்கத்திலையே ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கி அங்க போய்ட்டோம்...” என கண்கலங்க கூறியவர்,

“இனிமே எனக்கு என்னடா, என் மருமக வந்துட்டா. இந்த வீட்ல போன சந்தோஷத்தை மீட்டெடுக்க அவ இருக்கா. என் பையனும் நிம்மதியா இருப்பான். அவனோட மகிழ்ச்சிதான் என்னோட நிம்மதி. என்னோட பேரன், பேத்திகள் இங்கே தான் உருவாகனும், இங்கதான் வளரனும். கண்ணுக்கு தெரியாட்டிலும் துர்கா இங்க இருக்கிற மூச்சுக்காத்துல கூட கலந்து தான் இருக்கா. இனிமே நான் தனியா இருக்க வேண்டாம்லடா...” என தளுதளுப்பாக கூறியவரின் கண்களை நீர் நிறைக்க அதை மறைக்க கண்களை மூடிக்கொண்டார்.

அதை பார்த்த திருவேங்கடமும் சகுந்தலாவும் வருத்தம் மேலிட அவருக்கு தனிமை கொடுத்து நகர்ந்து சென்றனர். அவர்களுக்கு புருஷோத்தமனை புரிந்து ஹர்ஷிவ்தா நடந்துகொள்வாளா? என்ற கவலை தோன்ற ஆரம்பித்து விட்டது. இனி எல்லாம் துர்கா தான் கடவுளாக இருந்து வழிநடத்த வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

புருஷோத்தமன் துர்கா இருவரும் நண்பர்களின் துணையோடு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவராக இருந்த போதும் காதலித்ததால் மட்டுமே அவர்களின் திருமணம் மறுக்கப்பட்டது. குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி நண்பர்களின் மூலமாக வாழ்க்கையில் இணைந்தவர்களுக்கு திருவேங்கடமும் பரமேஷ்வரனும் தான் பக்கபலமாக இருந்தார்கள்.

அதிலும் திருவேங்கடம் துர்காவை தன் உடன்பிறந்த தங்கையாக பாவித்து அனைத்திலும் தன்னுடைய அண்ணன் என்ற ஸ்தானத்தை விட்டுகொடுக்காமல் உறுதுணையாக இருந்தார். சென்னையில் வேலையில் இருந்த புருஷோத்தமனுக்கு சொந்தம் அனைத்தும் தன் நண்பர்களது குடும்பம் என்றானது. காலப்போக்கில் பரமேஷ்வரன் தன்னுடைய தொழிலை விரிவு படுத்துவதில் முனைப்பாக இருந்ததால் போக்குவரத்து குறைந்து போனது.

ஆனாலும் தொலைபேசி வழியாக தொடர்பில் தான் இருந்தனர். துர்காவின் மரணத்திற்கு பிறகு மீண்டும் சென்னை வந்த பரமேஷ்வரனுக்கு ஷக்தியை பார்த்ததுமே பிடித்துவிட்டது. அந்த சூழ்நிலையில் எதுவும் பேசாமல் அதன் பின்னர் தான் புருஷோத்தமனிடம் கல்யாண விஷயமாக பேசினார். ஷக்திக்கு அப்போதைக்கு திருமணத்தில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லை என்றானதும் மனதில் சிறிய ஏமாற்றம் எழுந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அதோடு விட்டுவிட்டார்.

துர்காவின் மரணத்திற்கு வந்திருந்த அவரது சொந்தங்கள் கூட ஏதோ கடமைக்காக வந்தது போல இருந்துவிட்டு சென்றதும் வீடே வெறிச்சோடியது. துக்கம் தொண்டையடைக்க அப்படியே இருக்க மனமில்லாமல் இடம் மாறினால் பரவாயில்லை என்ற எண்ணம் எழ சொந்த வீட்டை பூட்டிவிட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும் அப்பார்ட்மென்ட்க்கு குடி போயினர் புருஷோத்தமனும் ஷக்தியும். இதோ இரண்டு வருடங்களுக்கு பின் மீண்டும் சொந்த வீட்டிற்கே திரும்பிவிட்டனர்.

ஷக்திக்கு திருவேங்கடத்தின் மேலும் அவரின் குடும்பத்தின் மேலும் இருந்த ஒட்டுதல் பரமேஷ்வரனிடம் இருந்ததில்லை. அவரின் மேல் மரியாதை இருந்தாலும் எப்போதும் திருவேங்கடத்தை மட்டுமே உரிமைப்பட்டவராக எண்ணுவான். அதனால் கோவை வந்தாலும் பரமேஷ்வரனின் வீட்டிற்கு கூட செல்லமாட்டான். அதனாலேயே ஹர்ஷிவ்தாவை பார்க்கும் வாய்ப்பும் அவனுக்கு இல்லாது போய்விட்டது.

பழைய நினைவுகளில் உழன்றுகொண்டிருந்த புருஷோத்தமன் கேட்டிற்கு வெளியே கார் சத்தம் கேட்டதும் நனவிற்கு வந்தவர், “அம்மா சகுந்தலா, அவங்க வந்தாச்சு. ஆரத்தி எடுத்துட்டு வாம்மா. டேய் திரு வாடா நீ...” என அழைத்துக்கொண்டே வாசலை நோக்கி விரைந்தார்.

ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்து வரவும் சகுந்தலா பூஜை அறையிலும் அதை ஒட்டி இருந்த சுவற்றில் சிறிய மாடம் போல அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்த துர்காவின் படத்திலும் விளக்கேற்ற சொன்னார். சொன்னதையெல்லாம் கிளிப்பிள்ளை போல தவறாமல் செய்த ஹர்ஷிவ்தாவை எண்ணி பூரித்துபோனார் சகுந்தலா.

மற்றவர்கள் மெச்சுதலான பார்வை பார்த்தாலும் திருவேங்கடம் மட்டும் ஆராய்ச்சிப்பார்வை தான் பார்த்தார். ஹர்ஷிவ்தா எதையோ யோசித்து கொண்டிருப்பதை உணர்ந்தவர் என்னவாக இருக்கும் என யோசிக்க தவறிவிட்டார்.

வீட்டிற்குள் வந்த ஹர்ஷிவ்தாவிற்கு ஷக்தியின் வீடு தன் வீட்டளவு பெரியது இல்லை என்றாலும் இந்த வீடு ஹர்ஷூவிற்கு நிரம்பவுமே பிடித்துப்போனது. நிஷாந்தோடு ஷக்தியை அழைத்துகொண்டு வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.

முன் பக்கம் பெரிய ஹாலும் இரண்டு படுக்கை அறைகளும், சமையலறையும், பூஜை அறையும் கீழ் பகுதியை நிறைத்திருக்க, மாடியில் இரண்டு படுக்கை அறைகளும் என கச்சிதமான விசாலமாக இருந்த அந்த வீட்டினை திருப்தியுடன் பார்த்தாள்.

அமைதியாக ஹர்ஷிவ்தாவையே நோட்டம் விட்டுகொண்டிருந்த திருவேங்கடத்தை பார்த்த புருஷோத்தமன் அவரை வெளியில் அழைத்து வந்து, “என் மருமகளுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்டா திரு. அவ விளையாட்டுதனமா பின் விளைவுகளை யோசிக்காம இப்படி செஞ்சுட்டா. ஹர்ஷூ மட்டும் ப்ருத்வி கல்யாணத்தை தடுக்கலைன்னா இந்நேரம் அவனும் குடும்பஸ்தன் ஆகிருப்பான்...” குற்றவுணர்ச்சியில் புருஷோத்தமனின் குரல் கரகரத்தது.

“நீ வேறடா சோமா, அவளாவது விளையாடுறதாவது. என்ன செய்தா என்னவெல்லாம் நடக்கும்னு எல்லாம் யோசிச்சுதான் செய்தா...” என்றவரை புரியாமல் பார்க்க,

“முதல்ல ஏற்பாடு செஞ்ச சம்பந்தத்தை நிறுத்தவும் அப்போ எதுக்காக இப்படி செய்தான்னு காரணம் எனக்கு தெரியலை. நான் கூட நினச்சேன் ஒருவேளை ஹர்ஷூ ப்ருத்வியை விரும்பறாளோன்னு. அதுக்காகத்தான் அவனோட கல்யாணத்தை நிறுத்தினா போலன்னு. ஏனா அந்த பொண்ணு வீட்டுக்காரங்க கூட என்ன காரணம்னு சொல்லாம சம்பந்தம் வேண்டாம்னு மட்டும் சொல்லிட்டு போய்ட்டாங்க...”

“சகுந்தலாவோட கலந்து பேசி ப்ருத்விக்கிட்ட ஹர்ஷூவை கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு கேட்டதும் அவனும் ஒன்னும் அப்ஜெக்ட் பண்ணலை. அதனால நாங்களும் போய் பேசலாமேன்னு போனோம். அன்னைக்கு ஒரு ஆட்டம் ஆடினா பாரு உன் மருமக. ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன். அன்னைக்கு அவளை பத்தி மட்டுமில்லை, எனக்கே தெரியாத ப்ருத்வி பத்தின விஷயங்களும் அன்னைக்கு தான் தெரிஞ்சது. அவனை நான் வளர்த்தது தப்போன்னு ஒரு அப்பாவா அன்னைக்கு தலைகுனிஞ்சு நின்னேன்...” திருவேங்கடத்தின் உணர்வுகளை புரிந்தது போல அவரை ஆறுதலாக தட்டிகொடுத்தார்.

“ப்ச் விடுடா சோமா. அவ கேட்டதிலையும் தப்பில்லைடா. அவளுக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட பெத்த தகப்பனா எனக்கு என் புள்ளையோட மறுபக்கத்தை தெரிஞ்சுக்காம போய்ட்டேனேன்னு வெட்கமா போச்சு. அதுவும் அவளை பொண்ணு கேட்டு போய்ருக்கோம்னு தெரிஞ்சதும் வேப்பிலை இல்லாத குறையா ஆடித்தீர்த்துட்டா. அன்னைக்கு ப்ருத்விக்கும் ஹர்ஷூக்கும் சரியான வாக்குவாதம். யாருக்கு சப்போர்ட் பண்ணணு எங்களுக்கே குழப்பமா போச்சு...”

“அவளையும் என்னோட குழந்தையா தானே வளர்த்தேன். அதுக்காக என்னால என் பையனை அவங்க முன்னால விட்டுகொடுக்கவும் முடியலை. ப்ருத்வி என்னடான்னா அடுத்த பிரச்சனையை கிளப்பினான். அவளோட திமிரை அடக்கவாச்சும் ஹர்ஷூவை எனக்கு கட்டிவைங்கன்னு ரொம்ப பேசினான். முதல் முதலா என் பிள்ளையை அன்னைக்கு நான் கை நீட்டி அடிச்சேன். அதுவும் நம்ம ஹர்ஷூக்காக...” என்றவரை பெருமையாக பார்த்தார் புருஷோத்தமன்.

“அதுக்கப்பறம் எனக்கு பயந்து அதை பத்தி பேசறதை விட்டான். கொஞ்ச நாள் கழிச்சு நானும் அவனுக்கு வேற ஒரு பொண்ணை பார்த்தேன். கல்யாணம் பண்ணி வச்சா அவன் தானா சரியாகிடுவான்னு நினைச்சுதான் கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சேன். அவனுமே சந்தோஷமாதான் இருந்தான். ஆனா உன் மருமக ஊருக்கே பத்திரிக்கை வச்சதுக்கு அப்றமா மேரேஜ்க்கு பத்துநாள் மட்டுமே இருக்கிற நேரத்துல கல்யாணத்தை நிறுத்திட்டா. எனக்கு அதுல ரொம்ப ரொம்ப கோவம்...” திருவேங்கடத்தின் முகம் முழுவதும் வேதனை அப்பிக்கிடந்தது.

“அந்த கோவத்துல தான் பரமு வீட்டுக்கு போய் ரொம்ப திட்டிட்டேன். வீட்டுக்கு வந்து எனக்கு மனசே ஆறலை. என் பிள்ளை செய்யுறது தப்புன்னு தெரியுதுடா. ஆனாலும் பெத்த பாசம் தடுக்குது. என்ன செய்ய? ஆனா ஒண்ணு சோமா, ஹர்ஷூ மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கிறது வரம். அதே நேரம் அவளை கொஞ்சம் கண்ட்ரோல்ல வச்சுக்கோ. எதாச்சும் பிரச்சனையை இழுத்து வச்சிடுவா. கேர்ஃபுல்...” எனவும் புருஷோத்தமனுக்குமே கொஞ்சம் கலக்கம் தான்.

ஹர்ஷிவ்தாவின் வீரதீரத்தை கண்கூடாக கண்டவராகிற்றே. அப்போதும் ஷக்தி சொன்னது போல புது மனிதர்கள், புது இடம் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பில்லை என்று தன்னை தானே சமாதானப்படுத்திகொண்டார்.

ஹர்ஷிவ்தாவை பற்றி அவருக்கு முழுதாக தெரியவில்லை. பிரச்சனைகளை தானே போய் தேடிக்கொள்ளும் ரகம் தான் தன் மருமகள் என்று. அவளால் தான் இன்னும் என்னவெல்லாம் அதிர்ச்சிகளை சந்திக்க போகிறோம் என இப்போது அறியவும் வாய்ப்பில்லாமல் போனது புருஷோத்தமனுக்கு.
Wonderful
 
Nice
 
Top