Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter three

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 3

போனில் யாரென்று கேட்ட சம்யுக்தாவிற்கு பதில் ஏதும் பேசாமல் மொபைலை அவளுக்குக் குடுத்த அம்மாவை செல்லமாய் முறைத்த சம்யுக்தா போனில் யார் நம்பர் என்று கவனித்த பின்னர் 'ஹலோ அங்கிள்' என்றாள்.
'சம்யுக்தா! நல்லபடியா ஸ்கூலிங் முடிச்சாச்சி. இன்னிலேருந்து காலேஜ். நல்லபடியா படிச்சு வெளிய வரணும். ஆல் தெ பெஸ்ட்.'
'தாங்க்ஸ் அங்கிள்.'
'சம்பதாட்ட குடும்மா'
அவள் போனை சம்பதாவிடம் நீட்டி பாலு அங்கிள் என்றாள்.
அவள் சந்தோஷமாய் போனை வாங்கிப் பேசினாள். பாலு அங்கிள் வசந்தியுடன் வேலை செய்பவர். இவர்களுக்கு குடும்ப நண்பர். ஆனாலும் சம்பதாவின், சம்யுக்தாவின் போன் நம்பர்கள் அவரிடம் கிடையாது. இவர்களது வளர்ச்சியை சிறு வயது முதலே பார்த்து வருபவர். அவர் தோளில் உட்கார்ந்திருந்த நியாபகம் இருவருக்கும் இருக்கிறது. ஆறாம் வகுப்பு வந்ததில் இருந்து தொடாமலே பேசுவார். பர்த்டேவுக்கு கிப்ட் வாங்கித் தருவார். அம்மாவுக்கு கௌரவ ஆலோசகர். சந்தோஷம் என்றாலும், துக்கம் என்றாலும் வசந்தி அவரிடம் பகிர்ந்து கொள்வார். பாலு அங்கிளின் மனைவி பூரணியும் நல்ல கேரக்டர். இவர்கள் அங்கே போனால் நன்கு கவனித்துக் கொள்வார். கம்பெனி விஷயமாய் வசந்தி வெளியூர் போகும்போது பாலுவும் அவரது மகனும் அவர்கள் வீட்டில் இருக்க, பூரணி இவர்கள் வீட்டில் வந்து ஸ்டே பண்ணுவார்.
சம்பதா அங்கிளுடன் பேசி விட்டு அம்மாவிடம் போன் தர, அம்மா சிறிது பேசி விட்டு வைத்து விட்டார்.
செல்போனை எடுத்துக் கொண்டு ஐடி கார்ட் அணிந்து கொண்டு ஆளுக்கொரு பொம்மை குஞ்சலம் ஜிப்பில் கொண்ட பேருக்கு ஒரு நோட்டும் காட்ரிட்ஜ் பேனாவும் உடைய பேக்கை எடுத்து முதுகில் கொண்டார்கள்.
ஒரே குரலில் அம்மாவிடம் 'வரோம்மா' என்று சொல்லி விட்டு சிவப்பு நிற புதுமாடல் பைக்கில் ஏறி சம்யுக்தா ஸ்டார்ட் செய்ய விர்ரென்று கிளம்பினார்கள். அவர்கள் செல்வதைப் பார்த்த வசந்தி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு ஆபிஸ் கிளம்ப தயாரானாள்.
காலேஜ் வந்த இரட்டையர் வண்டி நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு காலேஜில் நுழைந்தனர். பட்டாம்பூச்சிகள் போல் மாணவ மாணவியர் வளாகம் முழுவதும் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர். வித விதமான மாணவியர். முக்காவாசி பேர் சுடிதார். மீதி பேர் ஜீன்ஸ் டீ ஷர்ட். இல்லாவிட்டால் சோளியும் முட்டிக்கு கீழ் வரும் பாவாடையும் அணிந்திருந்தனர். மேக்கப் பாக்சைத் தொடாத மாணவியரை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு நவ நாகரிக மங்கையர். பெரும்பாலான மாணவிகள் தங்கத்தை தவிர்த்து பெரிய காதணிகளாகவும், பெரிய மாலைகளாகவும் கையில் ஒரே ஒரு வளையலும் ஒரு காப்பும் போட்டிருந்தனர்.
மாணவர்கள் கார்களிலும், வித விதமான பைக்குகளிலும் வலம் வந்தனர். தலை அலங்காரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தந்திருந்தனர். செவென்ஸ், பாக்ஸ், மஷ்ரூம் இது போக கொண்டை போட்டும், சுருட்டை முடிக்காரர்கள் புஷ் என்று முடி வளர்த்தும் தங்கள் வித்தியாசத்தை முடியில் காட்ட முயற்சித்தனர். கையில், கழுத்தில் இரும்பு வளையங்கள், ஒரு காதில் வித விதமாய் கம்மல்கள் சிலர் புருவங்களில் கூட வளையங்கள் அணிந்திருந்தனர். கைகளின் புஜங்கள், மணிக்கட்டு, கழுத்தின் கீழ் பகுதி என்று வித வித டாட்டூக்கள்.
தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா என்று எண்ணும் அளவுக்கு நிறைய வட இந்தியர்கள், அண்டை மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.
'ஹே சம்பதா, சம்யுக்தா'
இவர்களுடன் படித்த மாணவிகள் கும்பல் ஒன்று அவர்களை நோக்கி நகர்ந்து 'ஹை' சொன்னது.
இவர்களும் ஒவ்வொருத்திக்கும் 'ஹை' சொல்லி விட்டு யார் யார் என்ன என்ன குரூப்பில் சேர்ந்திருக்கிறார்கள் என்று கேட்டு விட்டு அந்த அந்த குரூப் இருக்கும் திசை நோக்கி பிரிந்தார்கள். சம்யுக்தா ஆங்கில இலக்கியமும், சம்பதா தமிழ் இலக்கியமும் எடுத்திருந்தார்கள். இருவரும் லஞ்ச் டைமில் கேண்டீனில் சந்திப்பதாகக் கூறி விட்டு அவரவர் வகுப்பிற்கு சென்றனர். இது வரை ஒரே க்ளாஸில் படித்த அவ்விருவர் வெவ்வேறு வகுப்பில் படிப்பது இதுவே முதன்முறை.
சம்யுக்தா தனது பள்ளி நண்பியான கோபிகாவுடன் ஆங்கில இலக்கிய வகுப்பறையில் நுழைந்தாள்.
மாணவர்களே இல்லை. கிட்டத்தட்ட இருபது மாணவியர் அமர்ந்திருந்து செல் போனை கையில் வைத்துக் கொண்டு வாய் ஓயாது பேசிக் கொண்டிருந்தனர். சம்யுக்தாவும், கோபிகாவும் முதல் பெஞ்சில் போய் அமர்ந்தனர். அங்கு அமர்ந்து செல் போனைப் பார்த்துக் கொண்டிருந்த வட இந்தியப் பெண்கள் இருவர் இவர்கள் பக்கம் திரும்பி ஒரு செயற்கையான 'ஹை' சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பார்க்காமல் செல்லில் ஆழ்ந்தனர்.
சிறிது நேரத்தில் ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்த இரு நீக்ரோ மாணவர்கள் சுருட்டை முடியுடன் உள் நுழைந்து மாணவியர் ஒரு புறமாய் அமர்ந்திருப்பதைக் கண்டு அடுத்த புறத்தில் இரண்டாவது பெஞ்சில் போய் அமர்ந்தனர். சிறிது நேரம் கழித்து பேண்ட் ஷர்ட் அணிந்து இன் பண்ணி ஷூ போட்டிருந்த ஒருவன் வந்து முதல் பெஞ்சில் அமர்ந்தான்.
அவன் வரவும், அம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் உள்ளே நுழைந்து போடியத்தின் அருகில் சென்று மைக்கைப் பிடித்து 'குட் மார்னிங் எவ்ரிபடி. ஐம் யுவர் ஹெச் ஓ டி தியாகு.' எனவே எல்லோரும் எழுந்து 'குட் மார்னிங் சார்' என்றனர்.
அடுத்து அவர் காலேஜ் ரூல்சையும் டிப்பார்ட்மெண்ட் ரூல்சையும் ஆங்கிலத்தில் பிச்சு உதற அவரின் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அசந்து போயினர் அனைவரும்.
அங்கே தமிழ் இலக்கியத்திலும் ஆண்கள் வரவே இல்லை. ஹெச் ஓ டி வந்து தன்னை 'என் பெயர் வரதராசன்.உங்களது துறைத் தலைவர். தமிழ் மெல்ல இனி சாகும் என்றார் பாரதி...' என்று இலக்கிய உரையாற்றும்போது 'ஐயா உள்ளே வரலாமா?' என்று ஒரு குரல் கேட்டது. வேஷ்டி சட்டையும் நெற்றியில் நீறும் அணிந்து ஜோல்னா பை சகிதம் ஒரு வாலிபன் காணப்பட்டான். வரதராசன் அவனைப் பார்க்க, 'ஐயா, மன்னிக்கவும். துறையைத் தேடி கண்டிபிடிக்க சிறிது தாமதமாகி விட்டது.' என்றான்.
மலர்ந்த வரதராசன், 'நல்ல வேளை நம் குலத்தை காக்க நீங்கள் வந்து விட்டீர்கள். இல்லை என்றால் தமிழ் இலக்கியம் மகளிர் மட்டும் என்று பதாகை வைக்க வேண்டி இருக்கும்.' என மாணவியர் கூட்டம் மெல்ல நகைத்தது.
அவன் உள்ளே வந்து மாணவர் பெஞ்சில் அமர, வரதராசன் உரையைத் தொடர்ந்தார்.
லஞ்ச் டைமில் கேண்டீனில் கோபிகாவுடன் நுழைந்த சம்யுக்தா சம்பதாவைத் தேடினாள். அப்போது அவள் அருகில் வந்த ஆப்ரிக்க நீக்ரோ மாணவர்கள் 'ஹை' என்றனர். சம்யுக்தாவும், கோபிகாவும் 'ஹை' என்க, 'ஷால் வி சிட் ஹியர்?' என்றனர். மறுக்க இயலாது சம்பதா வரும் வரை இருக்கலாமே என்று நால்வர் அமரும் டைனிங் டேபிளில் நால்வரும் அமர்ந்தனர். சம்யுக்தா இப்போது தான் அவர்களைக் கூர்ந்து கவனித்தாள்.
நெடிய உயரம். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கருப்பு. ஒல்லியான தேகம். பெரிய நாசி துவாரங்கள். மீசை தெரியாதவாறு ஒரு மீசை. சுருட்டை முடி இண்டோர் தாவரமாய் வளர்க்கும் கள்ளி சைசில் கொத்து கொத்தாய். மஞ்சள் கண்கள். பெரிய தடித்த உதடுகள். இவர்கள் சிகரெட் பிடித்தால் நிகோடின் கரை கண்டிப்பாய் உதட்டில் தெரியாது. நினைத்து மெல்ல மனதில் சிரித்துக் கொண்டாள் சம்யுக்தா.
'மை நேம் இஸ் காப்ரியல் அண்ட் ஹி இஸ் டென்சில். வீ ஆர் ப்ரம் நைஜீரியா.' என்று சொல்லியவாறு கை நீட்டினான் காப்ரியல். சம்யுக்தாவும், கோபிகாவும் கை கூப்பினர். முகம் சுருங்கிய காப்ரியல் ஒரு முறை டென்சிலைப் பார்த்து 'இண்டியன் கஸ்டம்ஸ்' என்று விட்டு மீண்டும் அவர்களைப் பார்த்தான்.
'யூ டூ ஆர் வெரி ப்யூட்டிபுல் இன் அவர் க்ளாஸ். எஸ்பிஸியல்லி யூ' என்று சம்யுக்தாவை கை காட்டின காப்ரியல் 'ஷால் வி ஹாவ் அ டேட்?' என்றான்.
சம்யுக்தாவின் முகம் அதிர்ச்சியில் சுருங்கியது.

(தொடரும்)
 
Nice epi.
Nigeria la irrunthu India vantha karyam ennavo?
Thudakkame dating la aarambikuthu.
Avanmar randu ennamum twins ah?
Yaar antha tamizh thurai pazham?
 
Nice epi
நைஜீரியால. இருந்து படிக்க வந்தியா இல்ல டேட்டிங்கு வந்தியா நாயே வந்தமா படிச்சமா போணம்மனு இருக்கணும்
 
Top