Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter four

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 4

ஐ லவ் யூ தேவி - சரவணன்
என்ற வார்த்தைகளைப் படித்ததும் தேவிக்கு மனசுக்குள் எங்கோ உடைந்தது. ஜிவ்வென்று காற்றில் பறப்பது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் போட்டோவில் இருந்த அவன் முகத்தையே பார்த்தாள். அழகன் தான். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முகம் தான். கைகளால் அவன் தலை முடியை கோதவேண்டும் போல் இருந்தது.
'என்னடி என்ன பேரு?' சரசுவின் குரல் கேட்டதும் தன் மீதே அவளுக்கு ஒரு கோபம் வந்தது. பத்து நிமிடங்களுக்கு முன்பு தான் முதல் முறை பார்த்திருக்கிறோம். பேர் பத்து நொடிகளுக்கு முன்பு தான் தெரிந்திருக்கிறோம். அதற்குள் முடி கோதும் ஆசை வரை போனது வெட்கப்பட வைத்தது.
நோட்டை மூடி விட்டு 'சரவணனாம்டி' என்றாள்.
'எந்த க்ரூப்பாம்?'
சட் என்று நாவு உரைத்தது.
'பி.ஏ. எக்கனாமிக்சாம்'
உள் மனசு பொய் சொல்லாதடி தேவி என்று எச்சரித்தது. எங்கே சரசு நோட்டை வாங்கிப் பார்த்து விடுவாளோ என்று மனது பட பட என்று அடித்தது.
பஸ் நின்றது. மாணவ, மாணவியர் பொத் பொத் என்று சல சலப்புடன் இறங்கினர். காலேஜ் வாசலில் நின்றதும் மற்ற மாணவியர் பேசிக் கொண்டே காலேஜின் பெரிய ஆர்ச் உள்ள நுழைவாயிலில் நுழைந்தனர். சரசுவும், தேவியும் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தனர். மாணவர் கூட்டம் தப் தப் என்று அவர்களைத் தாண்டி விரைய, அவனைக் காணவில்லை.
'என்னடி ஆளக் காணோம்?' இது தேவி.
'தெரியலயே. ரொம்ப நேரம் இங்க நின்னா ஆளுக்காக வெயிட் பண்றோம்னு நினைப்பாங்கடி.'
'சரி. நீ சொன்னபடி காலேஜுக்கு போயி நம்ம கூட படிச்ச பசங்க எவனாவது இருந்தா அவன் கிட்ட சொல்லி எக்கனாமிக்ஸ் க்ரூப்ல குடுக்கச் சொல்லலாம். வாடி போலாம்.'
இருவரும் பெண்கள் கூட்டத்தில் கலந்து உள்ளே நுழைய சிறிது தள்ளி ஒரு பெரிய க்யூ நின்றிருந்தது. மாணவிகள் வரிசையாய் நின்றிருந்தனர்.
ஒரு ரவுடி பெண் போல ஒருத்தி வரும் மாணவிகளை அங்கே துரத்திக் கொண்டிருந்தாள்.
இவர்களைப் பார்த்ததும், 'ஃபர்ஸ்ட் இயரா?' என்றாள்.
இவர்கள் தலையை ஆட்ட, 'ம். அந்த லைன்ல போயி நில்லுங்க.' என்று உருமினாள்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்ட தேவி, 'எதுக்கு?' என்றாள்.
'ஓ மகாராணிக்கு காரணம் சொன்னா தான் போவியளோ? சுரைக்காயிக்கு உப்பு பத்தலியாம். லைன்ல நின்னு கொஞ்சம் அள்ளிப் போட்டுட்டு போங்க.'
அவர்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை. இருந்தும் அந்த லைனில் போயி நின்றார்கள். நின்ற பிறகு தான் தெரிய வந்தது அது ராக்கிங் லைன் என்று.
'என்னடி இது? புக்ல படிச்சிருக்கோம். சினிமால பாத்திருக்கோம். இப்ப நமக்கே நடக்கப் போவுது.'
'ஆமாம்டி. காலைல இருந்தே எல்லாம் இப்படி ஒரு மாதிரியாத் தான் நடக்குது.'
லைனில் வரும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு அக்டிவிடி. செய்துவிட்டால் போக வேண்டியது தான். நடுவில் நின்றிருந்த ஜீன்ஸ் போட்ட மாணவி ஒவ்வொருத்தரையும் ஏவிக் கொண்டிருந்தாள். வழக்கமான தரையில் நீச்சலடி, பாட்டு பாடு, அனா ஆவன்னா தலகீழா சொல்லு, ஒத்த காலில டான்ஸ் ஆடு, ஒரு மொக்க ஜோக் சொல்லு என்று அதகளப் படுத்தினார்கள்.
இவர்களின் டர்ன் வந்தது.
சரசுவிடம்வந்து முன்னால போ என்றாள் ஒரு குண்டுப் பெண்.
'எந்த குரூப்?'
'பி.ஏ.லிட்ரேச்சர்'
'தமிழா இங்கிலீஷா?'
'தமிழ், இங்கிலீஷ் ரெண்டு பேப்பருமே இருக்கு.'
'இதப் பாருடி. உண்மையாவே சொல்றாளா இல்ல நம்மள ராக்கிங் பண்றாளானு தெரியலயே!'
சரசு சர சரவென்று தலை ஆட்டினாள்.
'அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. பர்ஸ்ட் இயர்ல இருக்கற ஆறு பேப்பரும் தெரியுங்க. மானுவல் படிச்சோம். தமிழ், ஆங்கிலம், தொல்காப்பியம், நன்னூல்..'
'நிறுத்து. டீ. இதுங்க தமிழ் இலக்கியம் க்ரூப்.'
அனைவரும் கொல் என்று சிரித்தனர். ஒரு நான்கு பெண்கள் நின்றிருந்தனர். ஒருத்தி மட்டும் ஜீன்ஸ், டீ ஷர்ட். ரெண்டு பேரு சுடிதார். ஒருத்தி சேலை.
'சரி இதுங்களுக்கு என்ன குடுக்கலாம்?'
சரசுவை நோக்கினாள் சேலை.
'ஒன் பேரென்ன?'
'சரசு'
'ஓ மை காட். பஞ்சாங்கப் பேர் எல்லாம் வச்சுகிட்டு. இருபதாம் செஞ்சுரியிலும் சரசு, லக்ஷ்மின்னுட்டு.'
'எம் பேர் என்னனு தெரியுமா?'
'சொன்னாத் தானே தெரியும்?'
'என்னது?' முறைத்தாள் சுடிதார் ஒருத்தி.
அவசர அவசரமாக பதில் சொன்னாள் சரசு.
'ஒங்க பேரென்னனு தெரிஞ்சுக்கலாமா?'
'குட்.' மற்றொரு சுடிதார் முகம் மலர்ந்தது.
'எம் பேரு நளினா.'சேலை உரைத்தது.
'அவ பேரு நந்தினி' 'அவ பேரு மாலினி' ரெண்டு சுடிதாரும் முறைத்தன.
'அவ பேரு ஷீபா' ஜீன்ஸ் எரிச்சலுடன் அவளைப் பார்த்து திட்டியது.
'ஏ நளின். அவ நம்மள ராக்கிங் பண்றாளா இல்ல நாம அவள ராக்கிங் பண்றோமா?'
'சரி. நீ சொல்லு ஷீபா. இவள என்ன பண்ணலாம்.'
'ம்ம்ம். லிட்ரேச்சர் இல்ல. ஒரு பலான ஜோக் சொல்லு விட்றோம்.'
'பலான ஜோக்கா?'
'அதான். அந்த மாதிரி ஜோக்கு.'
சரசுவுக்கு புரிந்தது. எத்தனை ஜோக்குகள் திருட்டுத் தனமாய் படித்திருப்போம். ஆனால் எல்லோர் முன்னால் சொல்ல கூச்சமாய் இருந்தது. ஆனால் மத்த தண்டனைகளை விட இது சுலபம் தான்.
'என்ன யோசிக்கிற?' உருமினாள் நந்தினி.
'சொல்றேன்.'
'சொல்லு.'
'ரெண்டு கேர்ள்ஸ் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாங்க காலேஜ் போறதுக்கு. பஸ் ஸ்டாப் வந்ததும் ஒருத்திக்கு ரெக்கார்ட் நோட் வீட்ல விட்டுட்டு வந்தது நியாபகம் வந்தது. அன்னைக்கு கண்டிப்பா ரெக்கார்ட் நோட் எடுத்துட்டு போகணும். அவ ஒடனே தன் பிரண்ட் கிட்ட தன் மணி பர்ஸை குடுத்து இத பத்திரமா வச்சுக்க. நான் வீட்ல போய் ரெக்கார்ட் நோட் எடுத்துட்டு வரேன் அப்படின்னு சொன்னா. அவட்ட இருந்து வாங்கின மணி பர்ச தான் எப்பவும் மணி பர்ஸ் வைக்கற ப்ளவுசுக்குள்ல இன்னொரு பக்கம் வச்சா அந்த பிரண்ட். அடிக்கடி ப்ளவுச செக் பண்ணிட்டே இருந்தா. பக்கத்துல இதயே பாத்துட்டு நின்ன வாலிபன் ஒருத்தன் என்ன அடிக்கடி பாத்துட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?'
அந்த நால்வர் அணியும் வரிசையில் பின்னால் நின்றிருந்த மாணவியர் கூட்டமும் என்ன என்பது போல் பார்க்க தொடர்ந்தாள் சரசு.
'ரெண்டும் பத்திரமா இருக்கான்னு செக் பண்றேன்' அப்படின்னாளாம்.
கூட்டம் கொல் என்று சிரித்தது.
நந்தினி 'சரியான ஆளு தான் நீ' என்று சொல்லி விட்டு 'சரி நீ போலாம்' அடுத்து வா' என்றாள்.
தேவி முன் வந்து நின்றாள். அவள் தேவியைப் பார்க்க 'இவளுக்கு நான் பனிஷ்மெண்ட் குடுக்கிறேன்' என்றாள் ஷீபா.
'ஓ.கே.' என்று ஒதுங்கிக் கொண்டாள் நந்தினி.
'ஒம் பேரென்ன?'
'தேவி'
எந்த குரூப்?'
தமிழ் லிட்ரேச்சர்.
'சரி. அந்த மரத்துக்கு கீழ ப்ளூ சர்ட், ப்ளாக் பாண்ட் போட்டுட்டு நிக்கிறாம்ல ஒருத்தன். அவன் கிட்ட போயி ஐ லவ் யூ சொல்லிட்டு வா.' என்றாள்.
தேவி ஷாக் ஆனாள். பதற்றமான உதடுகளுடன், 'வேற ஏதாவது பனிஷ்மெண்ட் கிடைக்குமா?' என்றாள்.
'நோ. இது தான். இது வேணாம்னா தாவணிய கழட்டி இடுப்புல சுத்திகிட்டு காலேஜ ஒரு ரவுண்ட் வரணும்'
தேவி 'ஐயோ' என்றாள். 'மொத உள்ளதே போதும்' என்றாள்.
மெதுவாய் படபடப்புடன் அந்த ப்ளூ சரி, ப்ளாக் பாண்ட் அணிந்திருந்தவனை நேருங்கினாள். அவன் அவளுக்கு முதுகுப் புறம் காட்டிக் கொண்டு ஏதோ புத்தகத்தை நின்றபடி வாசித்துக் கொண்டிருந்தான்.
என்ன நினைச்சாலும் பரவால்ல. ராக்கிங்னு சொன்னா ஒண்ணும் சொல்ல மாட்டான். கடவுளே! நீ தான் காப்பாத்தணும்.
'எக்ஸ்க்யூஸ் மி' என்றாள்.
அவன் திரும்ப அவள் அதிர்ந்தாள்.
ச..ர..வ..ண..ன்.
அவள் உதடுகள் அனிச்சையாய் 'ஐ லவ் யூ' என்றன.

(தொடரும்)
 
Top