Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 23

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 23

முதலில் சூரியா, பின்பு சிவா.
சம்யுக்தா மயங்கி விட்டாள்.
'என்னடா என்ன ஆச்சு? செத்துட்டாளா?'
ட்ரைவர் கேட்க, சூரியா 'ப்ச். அதெல்லாம் இல்ல. லேசா மயங்கி இருக்கிறா. நீ போ.' என்றான்.
ட் ரைவர் கிழிந்து போன நாராய் இருந்த சம்யுக்தாவை மேலும் ரணப்படுத்தப் போக சூரியா சிவாவைக் கூட்டிக் கொண்டு காப்ரியேல் பக்கம் வந்தான்.
காப்ரியேல் மண்டையில் ரத்தம் வழிய வாயில் கோழை ஒழுக கண்கள் மூடி மயங்கி இருந்தான்.
'இப்ப தான் போத தெளியுது. என்னடா பண்ணலாம் இப்ப?'
'இவங்க போலீசுக்கு போயிட்டாங்கன்னா?'
'பேசாம கொன்னுடலாமா?'
'வேண்டாம்டா. எப்படியும் மாட்டிப்போம்.'
'ஒண்ணு பண்ணலாம். ரெண்டு பேரையும் கொஞ்சம் சிதச்சி வீசிருவோம். குணம் ஆகவே ஒரு மாசம் ஆயிரும். அப்புறம் இந்த கருப்பனோட ஏன் அவ இந்த அர்த்த ராத்திரியில வெளில போனான்னு நியூஸ் வந்தா இவ கல்யாணம் நடக்காதுன்னு அவங்க வீட்ல இந்த விஷயத்த பெருசு பண்ண மாட்டாங்க. எத்தன பண்ணி இருக்கோம்? ஏதாவது வெளில வந்துதா என்ன?'
'சரி.. அவன் முடிச்சிட்டானான்னு பாரு.'
சூரியா ட் ரைவர் பக்கம் பார்க்க அவன் சோர்ந்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தான். சம்யுக்தாவின் கால்கள் மட்டும் சீட்டின் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
'முடிச்சிட்டான். சூப்பர் பிகர் இல்ல.'
'கொஞ்சம் உணர்வோட இருந்தா நல்லா இருக்கும்.' சொல்லிக்கொண்டே வந்தான் ட்ரைவர்.
'தண்ணி தெளிச்சி எழுப்பி விடவா?'
'ஐயோ. டிப்போ போணும்.'
'சரி. ரெண்டு பேரையும் தூக்கி பக்கத்துல இருக்கற பள்ளத்துல வீசிரலாம்.'
'வேண்டாம். ட்ரைவர் நீ பஸ்ஸ எடு. போகற ஸ்பீடுல எங்கயாவது வீசிரலாம். கொஞ்சம் அடி படும். ஒரு ரெண்டு மாசம் எந்திருக்க மாட்டாங்க. அப்படியே ஆக்சிடெண்ட் கேசாயிரும்.'
'ஓ.கே.'
ட்ரைவர் வண்டியை எடுக்க, ரோட்டில் ஆளரவமே இல்லை. சம்யுக்தாவின் மொபைலில் வரிசையாய் சம்பதா, அம்மா, கோபிகா மற்ற நண்பர்கள் புகைப்படங்கள் அவர்கள் அழைப்பதை உணர்த்தின.
ஆனால் அவளோ கிழிந்த ஆடைகளோடு அங்கங்கே குதறப்பட்ட சிதைந்த ஓவியமாய் வாய் பிளந்து கால்கள் சீட்டை விட்டு கீழே ஒரு மாதிரி மடிந்திருக்க மயக்கமாய் இருந்தாள்.
வண்டி ஸ்பீடாய் நகர, சூரியாவும், சிவாவும் காப்ரியெலின் பக்கம் வந்து அவனைத் தூக்கினார்கள்.
'என்னடா இந்த கணம் கனக்குறான்.'
தம் பிடித்து பின்வாசல் படிக்கு அவனை தர தர என்று இழுத்து படியில் இருந்து ரோட்டில் வீசினார்கள். அவன் தட் என்று இருட்டில் காணாமல் போனான்.
பின்னர் சம்யுக்தாவின் அருகில் வந்தார்கள். அவள் மொபைலை எடுத்து ஜன்னல் வழியே விட்டெறிந்தார்கள். பின்னர் அவளை அள்ளி முன் வாசல் அருகில் வந்து படியில் இருந்து தள்ளினார்கள். அவள் எதிர்பாராத விதமாய் ஒரு மரத்தில் பட்டு கீழே சொத் என்று விழுந்தாள்.
மூவரும் நிம்மதியாய் வண்டியில் பயணமானார்கள்.
அங்கே...
மயக்கத்தில் இருந்த காப்ரியேல் காற்று பட்டு ரோட்டில் தட் என்று விழவும் லேசாய் சுய நினைவு வந்தான். பின் மண்டை வீங்கி ரத்தம் உறைந்து இருந்தது. ரோட்டில் ஒரு பக்கமாய் விழுந்ததில் இடது காலும் இடது கையும் சிராய்ப்பெடுத்து வலி உயிர் பின்னியது.
சிரமப்பட்டு மெல்ல எழுந்தான்.
சம்யுக்தாவின் நினைவு வர ஜிவ் என்று உயிர் வரை திகில் படர முழுவதும் விழித்துக் கொண்டான்.
'என்ன ஆச்சு சம்யுக்தாவுக்கு?'
'சம்யு மை ஏஞ்செல்!'
'ஜீசஸ்... அவ எங்க?'
மனதிற்குள் கேள்விப் பந்துகள் குதிக்க மெல்ல ரோட்டில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான்.
ரோடே பே என்று இருந்தது.
மெல்ல நடக்கலாம். பக்கத்தில் ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் இருந்தால் கம்ப்ளைண்ட் செய்யலாம். சம்யுக்தா அந்த பஸ்ஸில் தான் இருப்பாள்.
பாவிகள்! அவள் என்னுடன் வந்து இப்படி மாட்டிக் கொண்டாளே! இப்படி உடம்பு வச்சிருந்தும் அந்த சமயத்தில் ஒன்றும் செய்ய முடிய வில்லையே'
கண்களில் நீர் வழிய கால்கள் இழுத்துக் கொண்டு மெல்ல ரோட்டின் ஓரமாய் நடந்தான்.
நாயுருவி கால்களை கொஞ்சம் உருவ கால்களை உதறினான். வலி! வலி! வலி!
அனத்திக் கொண்டே மெல்ல மெல்ல நடந்தான்.
போன் இருக்கிறதா என்று பாண்ட் பாக்கெட்டைத் துழாவினான். இருந்தது. சட் என்று எடுத்து அதை ஆன் செய்து சம்யுக்தாவின் நம்பருக்கு அழைத்தான்.
என்கேஜ்ட் டோன் கேட்டது.
பாவிகள் போனையும் பறித்துக் கொண்டார்கள் போல் இருக்கிறதே.
யாராவது வருகிறார்களா என்று ரோட்டை மறுபடியும் பார்த்தான்.
ஒரு சுடுகுஞ்சை காணோம்.
திரும்பவும் சம்யுக்தாவிற்கு போன் அடிக்க இந்த சமயம் ரிங் போனது.
ஆனால் எடுக்க வில்லை.
நடந்து கொண்டே மீண்டும் முயற்சித்தான். திடீரென்று பக்கத்தில் சம்யுக்தாவின் ரிங் டோன் கேட்கவே சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தான். பக்கத்தில் இருந்த புதர் நடுவே சிறிய வெளிச்சம் தந்து மொபைல் தான் அங்கே தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தியது.
புதரைக் கை விட்டு துழாவவும் அங்கு ஒளிந்திருந்த முயல் ஒன்று தப் தப் என்று வெளியே ஓடியது.
மொபைலை எடுத்தான். எடுத்த அடுத்த நொடி சம்பதா அழைத்தாள்.
சட் என்று அட்டெண்ட் பண்ணினான்.
'ஏய் சம்யு! எத்தன கால் பண்ணேன். ஏன் எடுக்கல. அம்மா ஒன்ன கூப்பிட்டு கூப்பிட்டு சடஞ்சு போயிட்டா. ப்ரஷர் ஏற ஆரம்பிச்சிருச்சி. நான் உண்மைய சொல்லிட்டேன். இடிஞ்சு போய் உட்காந்திருக்கா. எங்கடி போய் தொலஞ்ச? லாஸ்ட் நாள்னு கொண்டாட போயிட்டியா?'
'ச..ம்...ப..தா...'
ஒவ்வொரு வார்த்தையாய் காப்ரியேல் அழைக்க சம்பதா அதிர்ந்தாள்.
'காப்ரியேல். சம்யு எங்க? போன அவட்ட குடு.'
'அவள..அவள தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன்.'
'என்னது? தேடிகிட்டு இருக்கியா?'
'ஆ...மா..ம். நாங்க பஸ்ல வரும்போது..'
காப்ரியேல் திக்கி திணறி நடந்ததை சொல்லச் சொல்ல மறுபுறம் 'ஐயோ என் பொண்ணு' என்று அம்மாவின் அழுகைக் குரலும், 'சம்யூஊ' என்று சம்பதா கதறும் குரலும் கேட்டது.
'சம்பதா! அழாத. நான் என் லொகேஷன் ஷேர் பண்றேன். ப்ரண்ட்ச கூப்பிட்டு இந்த லோகேஷனுக்கு வா.'
காப்ரியேல் லொகேஷனை சம்பதாவின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி விட்டு அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்று நினைத்து பக்கத்தில் தெரிந்த மரத்தின் அடியில் உட்காரப் போனான்.
காலில் ஏதோ இடறவே மொபைல் டார்ச்சை ஆன் பண்ணிப் பார்த்தான்.
முழுவதும் உறிஞ்சி எடுத்த கரும்புச் சக்கையைப் போல அங்கங்கே கிழிந்து தொங்கும் துணிகளுடனும் ஆங்காங்கே ரத்தச் சிதறல்களுடனும் வாயில் தொங்கும் துப்பட்டாவுடனும் கண் மூடி சிதைந்திருந்தாள் சம்யுக்தா.
'சம்யூஉ..........' என்ற காப்ரியேலின் அலறல் அந்த பிராந்தியத்தையே உலுக்கியது.

(தொடரும்)
 
Top