இது prefinal 2 தானே. So final episodes yet to come- இன்று இரவு- அப்படித்தானே?
அப்படின்னு நம்பி தான் எதிர்பார்த்துட்டு இருக்க்கேன். பிரவீனா-மித்ரன் கல்யாணப்பயணம் smooth-தா இருக்கற மாதிரியே, ஆதிரனுக்கும் அவனோட அப்பா வழி உறவுகளோட especially சாரதா பாட்டியோட எப்படியிருக்கும் relation, அதையெல்லாம் பிரவீனா எப்படி எதிர்கொள்ளறா இதெல்லாம் படிக்க ஆசை.
அதுக்கும் மேல பிரவீனா உறவுல இருக்கற வினை பிடிச்ச மனுஷங்க ஏதாவது தூண்டிவிட்டு, அதிரனிடம் உரிமை கொண்டாட அந்த biological father-ரோட வீட்டுல இருந்து யாரவது ஏதாவது பிரச்சனை செய்யறாங்களா. இதெல்லாமும் படிக்க ஆசை.
Romance கண்ணுல காட்டவே இல்லை தான் ஆனாலும் நம்ம பிரவீணா organza saree கட்டியிருக்கற portrayal ரொம்ப நிறைவாய் இருந்தது. அதுவும் ஆர்த்தி கண்ணுக்கே பிரவீனாவோட அழகு தெரியுதுன்னா கண்டிப்பாக அவளோட அண்ணனுக்கும் தெரிஞ்சுருக்கும். பெருமூச்சு விட்டுட்டு நகர்ந்துட்டானோ.