Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 9

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் - 9

“ஹாய் டா” என்று சொல்லியபடியே பரத்தின் தோளைத்தட்டினான் அவ்யுக்த்.

“அவ்யுக்த் இது தான் டா நளின்” என்று நளினாவை அறிமுகப்படுத்தினான்.

“ஹலோ நளினா.”

“ஹலோ அவ்யுக்த்.”


“டேய் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் டா அவ்யுக்த்” என்றான் பரத் நளினாவை காதலுடன் பார்த்துக்கொண்டே.

அப்பொழுது நளினாவும் அவனை காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவர்களை மாறி மாறி பார்த்துக்கொண்டே குரலில் கேலியுடன் 'க்ம்ம்ம்' என்று தொண்டையை செருமினான் அவ்யுக்த்.

அந்த சத்தத்தை கேட்ட இருவரும் தங்கள் உலகத்தை விட்டு வெளியே வந்தனர்.

நளினா வெட்கத்துடன் பரத்தைப்பார்த்து தலையை குனிந்துக்கொண்டாள்.

“பரத் அது என்ன சர்ப்ரைஸ்?”

“அதுவா டா இந்த மேடம் அவ்யுக்த் சொல்யுசன்ஸ் கம்பனிக்கு செலக்ட் ஆகி இருகாங்க.”

மிகுந்த சந்தோஷத்துடன் நளினாவின் கையைப்பிடித்து குலுக்கி “கங்ராட்ஸ், வெல்கம் டு அவர் கம்பெனி.” என்றான் அவ்யுக்த்.

“தேங்க்ஸ் அவ்யுக்த்.”என்றாள் நளினா.

“ஹே அவ்யுக்த், நளினா உன் கம்பெனில ஜாயின் பண்றா.., இவ பிரண்டு என் கம்பெனில ஜாயின் பண்றாங்க.. ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம கம்பெனியை ஒரு வழி பண்ணிடுவாங்க இனிமே நாம தான் கேர்புல்லா இருந்துக்கனும்னு நினைக்கிறேன்.”

நளினா சிறு கோபத்துடன் பரத்தின் முதுகில் ஒரு தட்டு தட்டினாள்.

இவற்றை ரசித்துக்கொண்டிருந்த அவ்யுக்த், “டேய் பரதா உன்னை அடித்து திருத்த ஆள் வந்தாச்சு டா. உனக்கு வேணும்டா.. உன் கம்பெனி எப்டியோ தெரியாது பட் நளினா சேர்றதுனால என் கம்பெனி சூப்பரா இருக்கும்.. உன் கம்பெனியும் நளினா பிரண்டு வரதுனால ஒண்ணும் ஆகாது.. உன்னால எதாவது ஆனா தான் ஆகும் டா.” என்றான் அவ்யுக்த்.

“தேங்க்ஸ் அண்ணா இவர் வாயினால் ஏதாவது ஆகுமே தவிர சாஹித்யாவால் ஒண்ணும் ஆகாது.” என்றாள் பரத்தின் மீதுக்கொண்ட ஊடலுடன்.

அவளது 'அண்ணா' என்ற வார்த்தையை தவிர அவன் வேறு எதையுமே கவனிக்கவில்லை.

'நளினா இவன் ஏதாவது வம்பு பண்ணினால் என் கிட்ட சொல்லும்மா இவனை நான் பார்த்துக்கிறேன்'

'டேய் இவளுக்கு உன் சப்போர்ட் எல்லாம் வேண்டாம் டா இவளே என்னை கவனிச்சுடுவா டா .. இப்போ கூட நீ பார்த்தியே' என்றான் பரத்.

பரத்தின் முதுகில் திரும்பவும் ஒன்று கிடைத்தது இப்பொழுது செல்லம்மாக.

'உனக்கு அது தான் டா கரெக்ட் 'என்றபடியே பரத்திற்கு பதில் சொல்லிவிட்டு 'சாரி மா இப்போ எனக்கு அர்ஜென்டா ஒரு வேலை இருக்குமா ... நான் கிளம்பட்டுமா?

'ஓகேண்ணா நீங்க கிளம்புங்க'

'பரத் நீ இப்போ வரியா டா?

'இல்லை மச்சான் நாங்க கொஞ்சநேரம் பீச்ல உட்கார்ந்து பேசிட்டு கிளம்பறோம் ..நீ வேணும்னா கிளம்பு '

'ஓகே டா பாய் நளினா பாய் மா திஸ் இஸ் மை கார்டு அண்ட் திஸ் ஒன் இஸ் மை பர்சனல் நம்பர் மா .. நீ எப்ப வேணும்னாலும் கால் பண்ணலாம்' என்று சொல்லியபடியே அவனுடைய விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான்.

'நீ உன் நம்பரை அப்றமா எனக்கு எஸ் எம் எஸ் பண்ணுமா பாய் ' என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினான் அவ்யுக்த்.

பரத் அவ்யுக்த் சென்ற திசையையே உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் தலையில் லேசாக தட்டியவாறே .. ' என்ன எம்.டி.க்கு ஒரே சிரிப்பா இருக்கு? ' என்றாள்.

'இல்ல நளின் இன்னிக்கு காலைல சஹிக்கிட்ட பேசினதுக்கு அப்புறம் என் நம்பர் அவங்கக்கிட்ட கொடுக்கலை .. அவங்க நம்பரையும் வாங்கிக்கலை இப்போ நான் இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க ?... நான் அவ்யுக்த் அளவுக்கு ஸ்ருட் இல்லன்னாலும் போன் நம்பர் கொடுத்து வாங்கிக்கிற அளவுக்கு ஸ்ருட் தான்.. எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு ' என்றான்.

'சாஹித்யாவும் ஸ்ருட் தான் பரத் .. இப்போ அவ கிட்ட உங்க நம்பர் இருக்கும்..நீங்க இங்க வரேன்னு சொன்னவுடனையே கண்டிப்பா நம்பர் கலெக்ட் பண்ணி இருப்பா.. இப்போ நான் வேணும்னா அவகிட்ட கேக்கட்டுமா?' .

'இல்ல வேண்டாம் ஏன் தெரியுமா அவங்க இப்படி இருக்காங்க? ஏன்னா அவங்க இன்னும் காதல்ல விழல அதான்'

சிரித்துக்கொண்டே நளினாவும் பரத்தும் தங்கள் செல் நம்பரை அடுத்தவருக்கு கொடுத்து கொண்டனர்.

ஏதோ ஏதோ பேசியவாறே கடற்கரையை அடைந்தனர்.


அவ்யுக்த் காரில் சென்றுக்கொண்டிருந்தான் அவன் மனதில் நேற்று வீடு விஷயமாக ராகவனிடம் பேசியது நினைவில் வந்தது.

'சார் நான் அவ்யுக்த் ..அவ்யுக்த் சொல்யுசன்ஸ் கம்பெனி எம்.டி.'

'அடடே நல்ல விஷயம் ப்பா அந்த கம்பெனியை பத்தி நான் கேள்வி பட்டிருக்கேன் வளர்ந்து வரும் சாப்ட்வர் கம்பெனில உங்க கம்பெனி தான் பர்ஸ்ட் ன்னு கேள்வி பட்டிருக்கேன்.. வாழ்த்துக்கள் அவ்யுக்த் '

'தேங்க்ஸ் சார் இப்போ உங்க வீட்டை பத்தி பேசலாமா?' நீங்க ப்ரீயா?'

'இன்னும் ஒரு தேர்ட்டி மினிட்ஸ் கழிச்சு தான் சார் நான் ஆபீஸ் கிளம்புவேன் ..இப்போ நாம பேசலாம் சார்' என்றார் ராகவன்.

'தங்யூ சார், வீடு எவ்ளோ ஸ்கொயர் பீட் அப்புறம் விலை பத்தி எல்லாம் பேப்பர்லே பார்த்தேன் .. சார் நீங்க எதுக்காக வீட்டை விற்க்கிறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? எதுக்கு கேக்கறேன்னா என் அம்மா நிறையவே சகுணம் பார்ப்பாங்க ...வீடு பார்க்க வந்த இடத்துல யாரையும் டிஸ்டர்ப் பண்ணிட கூடாதில்லை அதான் சார் தப்பாநினைச்சிக்காம சொல்லுங்க சார் '


'இதுல என்ன இருக்கு தம்பி .. எனக்கு பிஸ்னஸ் பண்ண பணம் தேவை சிட்டிகுள்ள ஒரு பிளாட் வாங்கணும் அப்புறம் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண இப்படின்னு நல்ல விஷயத்துக்காக தான் தம்பி வீடு விக்கறேன் '

'சார் தங்யூ வெரி மச் , நீங்க எப்போ ப்ரீன்னு சொல்லுங்க சார் .. நான் என் பரன்ட்ஸ கூட்டிட்டு வரேன்'.

'நீங்க நாளைக்கு ஈவ்னிங் ஆப்டர் சிக்ஸ் எப்ப வேணும்னாலும் வாங்க தம்பி வீக் என்ட்ஸ்ல என்னோட பிஸ்னஸ் பத்தி அலையரதுன்னால நான் இருக்க மாட்டேன்.

'ஓகே சார் நான் கரெக்டா எத்தனை மணிக்கு வரேன்னு கால் பண்றேன் சார்'


'சரி தம்பி நீங்க வாங்க நாளைக்கு பார்க்கலாம்'.

'சார் நீங்க பேப்பர்லே கொடுத்த டிசைன் ரொம்ப அழகா இருந்துச்சு சார் இன்பாக்ட் அந்த அட் காகவே கூட வீட்டை வாங்கலாம்னு தோணிச்சு சார் அவ்ளோ அழகா இருந்தது '.

'அது என் ஐடியா இல்லப்பா என் பொண்ணோடது .. அவ எது செஞ்சாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும் அதே சமயத்தில் ரசிக்கும் படியாகவும் இருக்கும் ' என்று தன் மகளை பற்றி புகழ்ந்து தள்ளினார்.


'ஓகே சார் நாளைக்கு நேரில் பார்க்கலாம்' என்று உடனே அந்த பேச்சை கட் செய்தான் .

அதையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த அவ்யுக்த் மனதினுள் 'நேற்றே அவர் பெண்ணை பத்தி ரொம்ப பெருமையாக அறுத்துக்கொண்டிருந்தார் ..இன்று நேரில் என்ன சொல்ல போறாரோ? அய்யோ! ' என்று சொல்லிக்கொண்டான்.

சொல்லும்போதே அவன் மனதினில் பேப்பரில் பார்த்த அட் தோன்றியது.

இரண்டு பக்கமும் பூந்தோட்டம் நடுவினிலே வீடு போல் அமைத்திருந்தது மிக அழகாக இருந்தது அவை எல்லாவற்றையும் விட பூந்தோட்டமும் வீடும் வார்த்தைகளினாலேயே வரையப்பட்டிருந்தது.. அந்த வார்த்தைகளும் தெளிவாகவும் நேர்த்தியுடனும்.. எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தது தான் அவன் கண்களை கவர்ந்தது .அதன் நிறங்களை பார்த்தால் ஒரு நிஜ வீட்டை போட்டோ எடுத்து போட்டது போல் அவ்வளவு நேர்த்தியுடன் இருந்தது.

இதையெல்லாம் யோசித்துக்கொண்டே வந்த அவ்யுக்த் , 'ராகவன் சார் ரொம்ப ஓவராக புகழ்ந்தாலும் .. அவள் ரசனையை பாராட்டி தான் ஆகவேண்டும் ' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.


முதன் முதலாக ஒரு பெண்ணின் ரசனையை ரசித்து பாராட்டினான்.

அவ்யுக்தின் பாராட்டை நேரில் பெற்று கொள்வாளா சஹி?
 
Top