Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 6

Advertisement

Super mam
அத்தியாயம்: 6

இருவாரம் கழித்து அன்று தான் சாஹித்யா தன் பெற்றோருடன் ஊர் திரும்பி இருந்தாள்.நாளை மறுநாள் அவளுக்கு எ.பி சிஸ்டம்ஸ்ல் இன்டர்வியூ நடக்க இருக்கிறது.
தன் தோழி நளினாவிற்கு அவ்யுக்த் சொல்யுசன்ஸ்னில் வேலை கிடைத்து விட்டது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மிகவும் சந்தோஷமாகவே அவளை வாழ்த்தினாள். அந்த வருத்தம் கூட தன் தோழியுடன் ஒரே கம்பெனியில் ஜாயின் பண்ண முடியாததற்கு தான்.

இதையெல்லாம் நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்த சஹி தன் அம்மாவின் “ஏங்க இங்க கொஞ்சம் வாங்களேன்.” என்ற குரலில் தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

“என்னம்மா எதுக்கு அப்பாவ கூப்பிடறிங்க?”

“அவர கூப்பிட்டா நீ எதுக்கு வர? அவர ஒண்ணும் கொடுமை படுத்தமாட்டேன் ..போய் அவர வர சொல்லு.”

“அம்மா உனக்கு மாமியார் கொடுமை இல்லை... பட் அப்பாக்கு மனைவி கொடுமை இருக்கே..” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்றுவிட்டாள்.

“சஹி ஏன் மா இப்படி ஓடிவர உங்க அம்மா என்ன சொன்னா?”

“அஸ்யூசுவல் பா அம்மாகிட்ட வம்பு பண்ணிட்டு ஓடி வந்துட்டேன். இன்னிக்கும் உங்களுக்கு பாட்டு இருக்கு போய் வாங்கிகோங்க ,போங்க அம்மா கூப்பிடறாங்க..” என்று சொல்லியபடியே தன் தந்தையின் தோளைப்பிடித்து உள்ளே தள்ளினாள் சஹி.

“சரி சஹி நான் உள்ள போறேன், உனக்கு நாளைக்கு தான இன்டர்வ்யூ அதுக்கு ப்ரிப்பர் பண்ணிட்டியா?”

“ம்ம் பண்ணிட்டேன் பா.”

“அப்படினா வெளில போகலாமா? உன் கூட கொஞ்சம் பேசணும்.”

“ஸ்யூர் பா போகலாம்.. என்ன விஷயம் பா?”

“அதை வெளில போகும்போது சொல்றேன், சரியா?”

“ம்ம் சரிப்பா.” என்று சொல்லிக்கொண்டே அவள் தன் அறைக்கு சென்றாள்.

“ஹே ஜம் ஜம் , எதுக்கு என்னை கூப்பிட்ட?”

பங்கஜம் தலையில் அடித்துக்கொண்டே, “ஆரம்பிச்சிட்டிங்களா? ரெண்டு வாரம் உங்க தொந்தரவு இல்லாம நிம்மதியா இருந்தேன்.”

“ஜம் ஜம், விஷயத்தை சொல்லு அப்பறம் கோபப்படலாம்.”

“நாளைக்கு சஹிக்கு இன்டர்வ்யூ இருக்கில்ல.”

“ஆமாம் இப்போ அது தான் உன் பிரச்சினையா?”

“ஐயோ! ஏங்க இப்போ நான் சொல்றத கேக்கறிங்களா?”

“நீ சொல்லு ஜம் ஜம்.”

“இங்க பாருங்க இது தான் அவ அட்டென்ட் பண்ற கடைசி இன்டர்வ்யூவா இருக்கணும்.. இதுல செலக்ட் ஆனாலும் சரி, ஆகாட்டாலும் சரி வேற கம்பெனி இன்டர்வ்யூ அட்டென்ட் பண்ண கூடாது.. இதை நான் சொன்னேன்னு உங்க பொண்ணு கிட்ட சொல்லிடுங்க.”

“இத தான் நேத்து முழுக்க ட்ரைன்ல எங்க கிட்ட சொல்லிட்டே வந்தியே..”

“இங்க பாருங்க உங்க பொண்ணு கிட்ட நீங்க இன்னொரு தரம் சொன்னா குறைஞ்சு போய்ட மாட்டிங்க.. போய் சொல்லுங்க.. அதே மாதிரி சீக்கிரம் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும்.. அதையும் பாருங்க.. சரியா?” என்று சொல்லியபடியே கிச்சனுக்குள் சென்றாள்.

“அப்பா நான் ரெடி போகலாமா?”

“ம் நானும் ரெடி தான் மா, பங்கஜம் நாங்க வெளில போயிட்டு வரோம் கதவ தாழ் போட்டுக்க..” என்றார் ராகவன் .

“சரி ..சரி.. போயிட்டு வாங்க.. நான் சொன்னதை மறக்காம அவகிட சொல்லுங்க..” என்று சொல்லிவிட்டு கதவை தாளிட்டு உள்ளே சென்றாள்.

“என்னப்பா அம்மா என்ன சொன்னாங்க?”

“நேத்து ட்ரைன்ல சொன்னது தான் சஹி, இந்த கம்பெனி இன்டர்வியூ மட்டும் தான் நீ அட்டென்ட் பண்ணனும்ன்னு சொன்னா இல்ல.. அது தான் மா வேற ஒண்ணும் இல்லை, இப்போ நான் பேச வந்தது வேற விஷயம் மா.”

“சொல்லுங்கப்பா.”

“உங்க மாமாவும், நானும் பிஸ்னஸ் பண்ணலாம்னு இருக்கோம்.”

“எப்போ எடுத்த முடிவு பா?, என் கிட்ட சொல்லவே இல்லையே?”

ஐஷு கல்யாணத்துக்கு போய் இருந்தோம்ல்ல அப்போ தான் மா மாமா என் கிட்ட பேசினார்.. என்னால அங்க ப்ரீயா உன் கிட்ட பேச முடியல.. அதான் இன்னிக்கு இங்க வந்தவுடனேயே பேசறேன்.”

“புரியுதுப்பா, அம்மாக்கு தெரியுமா?”

“ம்ம் தெரியும் மா, இப்போ அது மட்டும் விஷயம் இல்லை டா பிஸ்னஸ்க்கு போட பணம் வேணும் இல்ல அதைப்பத்தி தான் மா உன் கிட்ட பேச வந்தேன்.”

“சொல்லுங்கப்பா என்ன பிஸ்னஸ் எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணனும்?, அதுக்கு என்ன பண்ணப்போறிங்க?”

“ரெண்டு மூணு பிஸ்னஸ்க்கு உங்க மாமா ஐடியா கொடுத்தாங்கம்மா, அதுல எனக்கு பிடிச்சது ரெஸ்ட்டாரென்ட் அண்ட் ஷாப்பிங் மால் மா.”

“அப்பா ஹோட்டல் நடத்தறது சாதாரண விஷயம் இல்லை, பட் ஷாப்பிங் மால்னா நீங்க கடைய ரென்ட்க்கு விடலாம்.. சோ பார்த்துக்கறது ஈசின்னு எனக்கு தோணுது பா.”

“கரெக்ட் மா, நானும் இதை தான் முடிவு பண்ணி இருக்கேன் மா இன்னும் மாமா கிட்ட பேசல,... மாமாகிட்ட லேன்ட் இருக்கு மா அது தான் அவரோட இன்வெஸ்ட்மென்ட் மா.”

“சரிப்பா, அங்க பில்டிங்க்ஸ் கட்ட அதை ஏசி பண்ண எல்லாத்துக்கும் நீங்க இன்வெஸ்ட் செய்யணும் இல்ல பா, என்ன முடிவு எடுத்திருக்கிங்க?”

“கரெக்ட் சஹி, பிப்டி டு சிக்ஸ்ட்டி லக்ஸ் தேவை படும்னு நினைக்கிறேன் அதுக்கு நம்ம வீட்ட வித்துடலாம்னு இருக்கேன்.. வித்துட்டு பிஸ்னஸ்ல இன்வெஸ்ட் பண்ணிட்டு சிட்டிகுள்ள ஒரு பிளாட் வாங்கலாம்னு இருக்கேன் நீ என்னமா சொல்ற?”

“நான் சொல்றது இருக்கட்டும் அம்மா என்ன சொல்றாங்க?”

“அம்மாக்கு இதுல சம்மதம் தான் சஹி. ஆனா கொஞ்சம் பயப்படறா.. பொண்ண கல்யாணத்துக்கு வச்சிக்கிட்டு இருக்கோம்னு புலம்பறா, அதுக்கு தான் உன்னை வேற இன்டர்வியூ அட்டென்ட் பன்னவேண்டம்னு சொல்றா சீக்கிரம்மா உனக்கு மாப்பிள்ளை பார்க்கனும்னு சொல்றா.. ஒரு விதத்துல அம்மா சொல்றதும் கரெக்ட் தான் சஹி.. பட் எனக்கு பிஸ்னஸ் பண்ணவும் ஆசை இருக்கு மா.”

“அப்பா விடுங்க பா, இப்போ என் கல்யாணத்துக்கு அவசரம் இல்ல, நீங்க மாமாவோட சேர்ந்து பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணுங்க... எனக்கும் இந்த கம்பெனில கண்டிப்பா வேலை கிடைக்கும்.”

“சரி டா சஹி, நான் நாளைக்கு பேப்பர்ல நம்ம வீட்ட பத்தி அட் கொடுக்கறேன் டா.. இதுல உனக்கு சம்மதம் தான?”

“அப்பா உங்க ‘பங்கு’ க்கு தெரியும் இல்லை?”

“ம்ம்ம் தெரியும் சஹி.”

“அப்பறம் என்ன, இப்போ அம்மாக்கு போன் பண்ணி சொல்லிட்டு கிளம்புங்க.... இப்பவே அட் கொடுத்திட்டு வரலாம்.” என்றாள் சஹி.

இருவரும் பங்கஜத்திடம் சொல்லிவிட்டு, பேப்பரில் அட் கொடுக்க கிளம்பி சென்றார்கள்.

மறுநாள் சஹி இன்டர்வ்யூக்கு சென்றிருந்த சமயம் ராகவனுக்கு ஒரு போன் வந்தது.

“ஹலோ நான் ராகவன் பேசறேன், நீங்க?” என்றார்.

“ஹலோ சார் குட்மார்னிங் திஸ் இஸ் அவ்யுக்த் , இன்னிக்கு பேப்பர்ல அட் பார்த்தேன் அதைப்பத்தி இப்போ பேச முடியுமா?” என்றான் அவ்யுக்த்.
 
Top