Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 14

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 14

பரத்தும் நளினாவும் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

நாளை எந்த ஹோட்டல்க்கு லஞ்ச்க்கு செல்லலாம் என்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

“பட்டாசு,உனக்கு என்ன கிப்ட் வேணும்?”

“நான் எது கேட்டாலும் தருவீங்களா?”

“ஹே!நளின்,என்னடா இங்க வந்து இப்படி கேட்கற?கார்ல வரும்போதே சொல்லியிருந்தா நீ கேட்காததையும் சேர்த்து கொடுத்திருப்பேனே.” என்றான் கண்களில் காதல் பொங்க.

“ஷ்ஷு ! பரத் இது பப்ளிக் பிளேஸ் ..ரோட் சைடு ரோமியோ !கொஞ்சம் அடக்கி வாசிங்க, நான் கேட்க வந்தது வேற விஷயம.”

“நளின் எப்ப பாரு என்னை அடக்கறத விட்டுட்டு நீயும் என்னை மாதிரியே பேசி பழகேன்.”

“பரத் போதும் விளையாட்டு.”

“சரி நளின், என்ன இவ்ளோ சீரியஸா பேசற?”

“சொல்றேன் ,இப்போ நீங்க சொல்லுங்க நான் எது கேட்டாலும் தருவீங்களா?”

“கண்டிப்பா, நளின் .”

“தேங்க்ஸ் பரத், இப்போ நான் கேட்க போறத வச்சு நீங்க கோப படக்கூடாது.”

“என்ன நளின், பில்ட்அப் எல்லாம் பலமா இருக்கு?”

“பரத் ,நீங்க இப்போ உங்க பாமிலிக்கு கால் பண்ணனும்.”

மனதில் தோன்றிய வெறுப்புடன் நளினாவை பார்த்தான் பரத்.

“பரத், ப்ளீஸ் நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அப்பறமா பேசுங்க.”

பரத் ஒன்றும் பேசாமல் கண்களை ஒருதரம் இருக்க மூடி பின் திறந்து முகத்தை வேறுப்பக்கம் திருப்பிக்கொண்டான்.

அவனது மௌனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு,”பரத் நான் இப்போ சொல்றது உங்களுக்கு கோபமாகவும், வெறுப்பாகவும் இருக்கும்ன்னு எனக்கு புரியுது ஆனா நிதானமா நான் சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.”

“என்னத்த யோசிக்கணும் , உனக்கு நான் ஏற்கனவே எல்லாம் சொல்லியிருக்கேன் இன்னும் அவங்க மேல கோபம் இருக்குன்னு ..அதை தெரிஞ்சும் நீ இப்படி பேசற ,இதுல நான் யோசிக்கணுமாம்.”

பரத்தின் குரலில் கோபம் இருந்தாலும் அவன் குரலை உசத்தவில்லை சன்னமான குரலிலேயே மிகவும் அழுத்தமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“பரத் நான் இன்னும் சொல்லி முடிக்கலை.”

அவன் அவளை திரும்பி கூட பார்க்காமல் அமர்ந்திருந்தான்.

“நான் என் அக்கா கிட்ட நம்ம விஷயத்தை எல்லாம் சொல்லிவிட்டேன்.. என் அக்கா மூலம் என் அப்பா அம்மாக்கும் நம் விஷயம் தெரியும். நாளைக்கு அவர்கள் உங்க பரென்ட்ஸ் கிட்ட பேசனுமாம்.” என்று நிறுத்தி அவனை பார்த்தாள்.
இப்பொழுது நிமிர்ந்து அவளை பார்த்தான் பரத். “இப்போ எதுக்கு உன் பரென்ட்ஸ் அவங்க கிட்ட பேசணும் ?”
“என் பரென்ட்ஸ்” என்று சொல்லகூட முடியாதவனை ரொம்ப கஷ்டப்படுத்துகிறோமோ என்று வருத்தப்பட்டாள்.

“இது என்ன கேள்வி பரத்? எதுக்கு பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா?”

“என்னை கல்யாணம் செய்துக்க என் கிட்ட பேசினா போதும்ன்னு நான் நினைக்கிறேன்.. உன் பரென்ட்ஸ் கூட என் கிட்ட பேச வேண்டாம் ...நானே இப்போவே வந்து பேசறேன்.”

“பரத் நான் இன்னும் பேசி முடிக்கலை...இங்க பாருங்க என் வீட்டுல நம்ம காதலை எதிர்க்கலை பட் நீங்க உங்க பரென்ட்ஸ் கூட பேசறது கூட இல்லங்கற விஷயம் அவங்களை உறுத்துது , அப்பா என் கிட்ட இன்னிக்கு மார்னிங் என்னிடம் பேசியது இது தான் .” என்று தன் தந்தை கூட பேசியதை பகிர்ந்துக்கொண்டாள்.

“நளினா உங்க அக்கா எல்லா விஷயத்தையும் சொன்னாமா, எனக்கு இதுல சம்மதம் தான் , நான் தேடினா கூட இவ்ளோ நல்ல மாப்பிள்ளை தேடிருப்பேனான்னு சந்தேகம் தான்.ஆனா எனக்கு மாப்பிள்ளையோட பரென்ட்ஸ் கூட பேசணும்.”
அவங்களுக்குள்ள என்ன பிரச்சினையோ அது எனக்கு தேவையில்லை அது அவங்க குடும்ப விஷயம்.உனக்கு தெரிந்திருந்தாலும் என்னிடம் நீ சொல்லவேண்டாம். உங்களுக்குள்ள இருக்கிற பர்சனல் ஸ்பேஸ்லே நுழைய எனக்கு விருப்பம் இல்லை.!!
பட் நான் பொண்ணோட தகப்பன்கிற முறைல அவங்க கிட்ட பேசி தான் ஆகணும். அவங்க உங்க கல்யாணத்தை கூடவே இருந்தும் நடத்திக் கொடுக்கணும். நான் நாளை கடத்த விரும்பலை நாளைக்கே நான் பேசணும் , மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டு சம்பந்தி நம்பர் வாங்கிட்டு வாம்மா.”

“இது தான் பரத் என் அப்பா பேசியது, அவர் சொல்வது ஒரு விதத்தில் நல்லதுக்கு தான் எனக்கு தோணுது பரத்... “டைம் இஸ் எ குட் மெடிசின் “ ன்னு சொல்லுவாங்க ..இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி கோபபட்டுட்டே இருக்க போறீங்க? அவங்க பண்ணினது நான் நியாம்ன்னு சொல்லலை ,ஆனா இப்போ அவங்க பேச ஆரம்பிச்சிருக்கும்போது வெறுப்ப காட்டாம இருக்கலாமே, நீங்களும் அவங்கள மாதிரியே பீகேவ் பண்ணனும்மா? யோசிச்சு பாருங்க..ஒருவேளை அவங்க செஞ்ச தப்ப உணர்ந்திருக்கலாம் இல்லையா ? மன்னிச்சு ஏத்துகிறதும் மனுஷ குணம் தான் பரத்.” என்றபடியே அவனை பார்த்தாள்.

தலையை கோதியபடியே நிமிர்ந்து அமர்ந்தான் பரத்,”நளின் இப்ப உடனே நீ மாறுன்னு சொன்னா என்னால முடியாதுடா நான் பட்ட வலியும், வேதனையும் என்னை உடனே மாறச்செய்யாது , பட் உனக்காக நான் இன்னிக்கு அவங்க கிட்ட நம்ம விஷயத்தை பத்தி பேசறேன்.. நாளைக்கு மாமாவ என் பரென்ட்ஸ் கிட்ட பேச சொல்லு.” என்றபடியே நளினாவின் செல்லுக்கு நம்பரை எஸ் எம் எஸ் செய்தான் பரத்.

“என் பரென்ட்ஸ்” என்பதை அவனை அறியாமலே சொல்லியதை கவனித்து மகிழ்ந்து அதை கவனிக்காத மாதிரி “தேங்க்ஸ் பரத்.” என்றாள்.

“சரி நளின் இப்போவாவது சொல்லு உனக்கு என்ன கிப்ட் வேணும்?”

“இல்லை பரத் நான் இப்போ சொல்லமாட்டேன் , நம்ம கல்யாணம் முடியட்டும் அப்போ கேட்கறேன் .” என்றாள் அவன் மனதை மாற்றும் பொருட்டு.

நளினாவின் குரலில் குழைவை கண்ட பரத் அவளருகே நெருங்கி அமர்ந்துக்கொண்டு ..அவள் கையை பிடித்துகொண்டு “ஹே! பட்டாசு இப்படி எல்லாம் பேசினா நான் எப்படி அமைதியா இருக்கிறது.” என்றபடியே அவள் கையை உதட்டருகே கொண்டு சென்றான்.

ஓரளவு அவன் மனது மாறிவிட்டதை உணர்ந்த நளினா கையை பட்டென்று இழுத்துக்கொண்டு ,”பரத் என்ன சொன்னது எல்லாம் மறந்து போச்சா?” என்றாள்.

“உன்னை என்ன செய்யலாம்? மனுஷனை உசுப்பேத்த வேண்டியது கிட்ட வந்தா கோபபடுவது .. இப்படி இருந்தா என் பாடு திண்டாட்டம் தான் நளின் .. நாளைக்கு உனக்கு கிப்ட் வேண்டாம்னா விடு பட் எனக்கு ரிடர்ன் கிப்ட் கண்டிப்பா வேணும் ..அது இங்கயா இருந்தாலும் சரி” என்று தன் கன்னத்தை காண்பித்தான். “அப்பறம் இங்கன்னாலும் சரி “ தன் இதழை காண்பித்தான்.

அவன் கேட்ட கிப்டைப்பார்த்து சிறிது வெட்கத்துடன் தலை குனிந்தாள் நளினா.

“நளின், இப்படி எல்லாம் வெட்கப்பட்டின்னா என்னால கன்ட்ரோல் பண்ணவே முடியாது ..ப்ளீஸ் எனக்காக “ என்றபடியே அவள் கரத்தில் தன் இதழை அழுத்தமாக ஒற்றி எடுத்தான்.

புன்னகையுடன் அவனை பார்த்துக்கொண்டே “பரத் நாளைக்கு எந்த ஹோட்டல்க்கு போகலாம்?” என்றாள்.

“நளின் இந்த ட்ரீட் உனக்கு சஸ்பென்ஸ் சோ நீ வீட்டுல ரெடியா இரு நான் வந்து அழைச்சுட்டு போறேன் , அப்டியே அவ்யுக்த்கும் ,சஹிக்கும் நானே சொல்லிக்கிறேன்.”

“சரி பரத் நான் ரெடியா இருக்கேன்.”

“நளின் உன்னை நானே ட்ராப் பண்றேன் வா..அப்டியே நானே நேரா வந்து மாமா கிட்ட நம்பர் கொடுக்கிறேன் .” என்றான்.

இருவரும் கிளம்பி நளினாவின் வீட்டுக்கு சென்றார்கள்.

சாஹித்யா தன்னுடைய அறையிலிருந்த பால்கனியில் நடந்துக்கொண்டிருந்தாள். “நாளைக்கு ஹோட்டல்க்கு போகலாமா? போனா அவன் கிட்ட தனியே பேசமுடியுமா? அவன் என் எண்ணத்தை சரியா புரிஞ்சுப்பானா? இல்லை என்னை ஹர்ட் செய்யற மாதிரி பேசிவிடுவானோ? என்ன பண்ணலாம்?” என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

“இல்லை எது எப்படி இருந்தாலும் நான் அவனை பார்த்து பேசத்தான் வேண்டும். இப்படியே இருந்தால் நான் கண்டிப்பாக பைத்தியம் ஆகிவிடுவேன். நளினாவிடம் என் கனவை பற்றி சொல்லி.. அதன் பிறகு அவன் மேல் ஏற்ப்பட்ட காதலை பற்றியும் சொல்லி ... அவள் மூலமாக அவ்யுக்திடம் பேசலாமா? சீ! சீ! வேண்டாம் நேரடியாக நானே அவனிடம் பேசுவதை போல் இது இருக்காது.. நானே அவனைப்பார்த்து...” என்று எண்ணும்போதே அவளுக்கு அவனை பார்க்கும் ஆவல் அதிகரித்தது.

உடனே உள்ளே சென்று தன்னுடைய மடிகணினியை எடுத்து உயிர்ப்பித்தாள். உள்ளம் குறுகுறுக்க கூகுளில் “அவ்யுக்த் சொல்யுசன்ஸ்” என்று டைப் செய்தாள். இத்தனை நாள் இந்த எண்ணம் வரவே இல்லையே என்று தன்னையே திட்டிகொண்டாள்.
கூகுள் அவளின் ஆசையை தீர்த்து வைத்தது. அய்வுக்த் சொல்யுசன்சின் ஹோம் பேஜ்க்கு சென்றாள். அங்கு இருந்த அவ்யுக்தின் புகைப்படத்தை பெரிது பண்ணி பார்த்தாள்.

அவ்யுக்த் அழகில் மயங்கி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அலைஅலையாய் படர்ந்த கேசத்தை கைகளால் வருடி கொடுத்தாள். அவள் நிஜத்தில் அவன் கேசத்தை வருடியதை போல் சிலிர்த்தாள்.

நிமிர்ந்து அமர்ந்து அவனின் அழகை ரசித்தாள். கண்களை பார்த்தவுடன், “எதிராளியின் எண்ணத்தை துல்லியமாய் கணக்கிடும் கூர்மையான கண்கள்... நாளைக்கு என்னை பார்த்தவுடனேயே என் எண்ணத்தை கண்டுபிடிப்பாயா?” என்று அந்த புகைபடத்துடன் பேசினாள்.

சீரான நாசி , அதன் கீழே ஆண்மையின் இலக்கணமாக இருந்த அடர்ந்த மீசை, எந்த வித கேட்டபழக்கமும் என்னிடம் இல்லை என்பது போல் இருந்த உதடு என்று ஒவ்வொன்றாய் ரசித்துக்கொண்டிருந்தாள்.

மனதினுள் “நீ இவ்ளோ கம்பீரமா இருக்க உனக்கு நான் ஏத்தவள் தானா?” என்ற கவலை எட்டி பார்த்தது. “எது எப்படி இருந்தாலும் நான் நாளைக்கு உன்னிடம் பேசதான் போகிறேன். உன் நிராகரிப்பை கூட நான் நேரிலேயே பெற்றுக்கொள்கிறேன்.” என்று மனதில் சிறு வலியுடன் முடிவு செய்துக்கொண்டாள்.

மடிகணினியை ஆப் செய்ய மனமில்லாமல் அருகிலேயே வைத்துக்கொண்டு அதை அணைத்தபடியே கண்ணயர்ந்தாள் சாஹித்யா.
 
Super sis
 
Nice
 
Top