Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 10

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 10

கடற்கரைக்கு வந்தவுடன் "இப்போ சொல்லுங்க பரத்" என்றாள் நளினா.


"நளின், நான்,அண்ணா ,அப்பா ,அம்மா இது தான் எங்க பாமிலி ,பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் ன்னு கேள்வி பட்டிருக்கியா அது மாதிரி தான் நான்."


"எங்க அப்பா பெரிய பிஸ்னெஸ் மேன் , அருணாச்சலம் இன்டஸ்ட்ரீஸ் ன்னு ஒரு கம்பெனி வச்சு நடத்திட்டு இருந்தாங்க. எங்க அம்மா ஹவுஸ் வய்ப் அம்மாக்கு ஜாதகம் ,ஜோசியம் இதில் எல்லாம் நம்பிக்கை ஜாஸ்தி நளின்".


"என் அண்ணாக்கும் எனக்கும் பைவ் இயர்ஸ் டிப்ரன்ஸ் பட் அண்ணா என் கூட விளையாடியோ... என் கூட சண்டையோ போட்டதே இல்லை." என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போதே பரத்தின் கண்கள் லேசாக கலங்கியது."


நளினா பரத்தின் கையை ஆதரவாக தடவி கொடுத்தாள்.


நளினாவின் கையை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான் பரத்.


“என்னோட ஆறாவது வயசுலேர்ந்தே நான் தனிமையை அனுபவிச்சேன் நளின்.எங்க அப்பாவோட பிஸ்னெஸ் கொஞ்சம் டல்லா இருந்தப்போ.. எங்க அம்மா அவரோட ஜாதகத்தை பார்த்தாங்களாம்... அதுல என்னோட ராசினால தான் இப்படி ஆகுதுன்னு சொல்லிட்டாங்க.. எனக்கு இது எல்லாம் ஒண்ணுமே தெரியாது...அந்த வயசுல அவங்க எல்லாம் காட்டின ஒதுக்கம் எதுவுமே எனக்கு புரியலை.. எப்பவுமே ஒரு தனிமை.”


“நான் செஞ்ச தப்புகளை உரிமையா கண்டிக்கவோ .. எனக்கு கிடைத்த பாராட்டுகளை என்னுடன் சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடவோ யாரும் இல்லை “


“எனக்கு அப்பாவோ இல்லை அண்ணாவோ இப்படி இருந்தது வருத்தமாவே இல்லை நளின். “என் அம்மா என்னிடம் காட்டிய வெறுப்பு என்னை ரொம்ப வருத்தப்பட வைத்தது.”


“ இங்கே படிச்சுட்டு இருந்தேன்.. கொஞ்ச நாள் கழித்து என்னை வேற ஸ்கூல் மாத்தினாங்க அது போர்டிங் ஸ்கூல் ..அங்க என்னால ரொம்ப நாள் இருக்க முடியலை ...மத்த பசங்க என்னிடம் பேசும் போதெல்லாம் எனக்கு அவர்கள் கிண்டல் செய்வது போலவே இருக்கும் அதனால நான் அவர்களை அடித்து விடுவேன்.. இந்த பீகேவியர்ஸ் னால திருப்பியும் ஸ்கூல் மாத்தினாங்க... அங்க தான் எனக்கு அவ்யுக்த் அறிமுகமானான்.”


“அங்கயும் நான் முரட்டுத்தனமா தான் நடந்துக்கிட்டேன்.. பட் நான் நல்லா படிச்சேன். “


“ஒரு நாள் அவ்யுக்த் அவன் அம்மாவோட வந்து என் கிட்ட பேசினான் .. உனக்கு என்ன பிரச்சினை ? ன்னு அவன் அம்மா மூலமா என் கிட்ட கேட்டான்.”


“கௌசிமா கிட்ட என்னால முகத்தை திருப்பிட்டு போக முடியல .. ரொம்ப நாள் கழிச்சு என் அம்மாவே என் கிட்ட பேசினது போல இருந்தது .. கௌசிமா கையை பிடிச்சுட்டு ரொம்ப நேரம் அவங்க கூட பேசிட்டே இருந்தேன்.. இதையெல்லாம் அவ்யுக்த் பார்த்துட்டே இருந்தான் அவன் எதுவுமே பேசல.. கௌசிமா கிளம்பறேன்னு சொன்னவுடனே எனக்கு ரொம்ப கஷ்டம்மா இருந்தது ..இதைப்பார்த்த அவ்யுக்த் ,”அம்மா இன்னிக்கு நான் பரத்தையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் மா “ ன்னு சொன்னான்.. அதுலேர்ந்தே அவன் என்னோட க்ளோஸ் பிரண்டுஆயிட்டான்.”


“அவ்யுக்த் மட்டும் இல்லன்னா நான் என்ன ஆயிருப்பேன்னே சொல்ல முடியாது நளின். நிச்சயமா இந்த மாதிரி நல்ல பொசிஷனில் இருந்திருக்க மாட்டேன்.”


“பரத், உன் கிட்ட அன்பு காட்டாதவங்கக்கிட்டையும் நீ அன்பு காட்டுடா ,அவங்க எல்லாம் உன்னை திரும்பி பார்க்கிற மாதிரி வாழ்ந்துகாட்டு டா”ன்னு என் கிட்ட அவ்யுக்த் சொல்லிட்டே இருப்பான்.


“இப்பவும் காலேஜ் முடிஞ்சதும் நான் அவன் கம்பெனில வொர்க் பண்றேன்னு தான் சொன்னேன்..பட் அவன் தான் “இல்லைடா உன்னோட ராசி நல்லா இருக்குனு நீ எல்லாருக்கும் தெரியப்படுத்தணும்.. உன்னாலயும் சாதிக்கமுடியும்னு நீருபிக்கணும் அதனால நீயே ஒரு கம்பெனி வச்சு நடத்து”ன்னு சொல்லிட்டான்.


“அதுக்கும் எங்க அப்பா இன்வெஸ்ட் பண்ணல ... என் மேல அவங்களுக்கு அவ்ளோ நம்பிக்கை ... வேணுப்பா தான் கூடவே இருந்து எனக்கு பிஸ்னெஸ் செட் பண்ணிக்கொடுத்தார். இப்ப வரைக்கும் அவ்யுக்த் தான் எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கான்.”


“கௌசிமாவும் வேணுப்பாவும் அவ்யுக்த்க்கு மட்டும் பரன்ட்ஸ் இல்ல எனக்கும் அவங்க தான் .” என்றான் பரத் நெஞ்சில் பொங்கிய பாசத்துடன்.


· “இப்போ உங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க பரத்?”


“அவங்க என் அண்ணா கூட usல இருக்காங்க , இப்போ தான் என் கூட பேசவே ஆரம்பிச்சிருக்காங்க நளின். எனக்கு இன்னும் கோபம் இருக்கு பட் அவங்க பேசும் போது வெளியே காண்பிச்சிக்க மாட்டேன்... இதுவும் எனக்கு அவ்யுக்த் சொல்லிக்கொடுத்தது தான்..”


“என்னை இவ்ளோ குறும்புத்தனமா ஒரு ஜாலியான பெர்சனா மாத்தினது அவ்யுக்த் தான்.. என்னை ஒரு நல்ல மனுஷனா மாத்தினதும் அவன் தான்.. அதனால தான் என் கம்பெனி பேர் a.b.systemsன்னு வச்சேன்.என் அப்பா பேர தான் முன்னால போட்டு இருக்கிறதா எல்லாரும் நினைச்சிட்டு இருக்காங்க பட் அவ்யுக்த் பேர்லே இருக்கிறது யாருக்குமே தெரியாது.”


“இப்போ நீயும் என்னை உரிமையா திட்டறது , என் கூட சண்டை போடறது, அப்புறம் “என்னாச்சு பரத்?” ன்னு அக்கறையா நீ கேட்டது எல்லாமே என் மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு..என்னை சுத்தியும் உறவுகளும் நட்பும் இருக்குன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா நளின்.”


“அய்யோ! இந்த ரோடு சைடு ரோமியோக்கு கூட இப்படி எல்லாம் பேச தெரியுமா?” என்றாள் நளினா.


தன் மனதை மாற்றும் விதமாக அவள் பேச்சை மாற்றியது அவனுக்கு மிக இதமாக இருந்தது. அதனால் நளினாவை அவன் மனதில் பொங்கிய காதலுடன் உற்று நோக்கினான்.


பரத்தின் பார்வையில் காதலை உணர்ந்த நளினா வெட்கத்துடன் தலை குனிந்துக்கொண்டாள்.


“ஹே! பட்டாசு உனக்கு இப்படி எல்லாம் வெட்கப்பட தெரியுமா?”


நளினா அவன் முதுகில் செல்லமாக ஒன்று வைத்துக்கொண்டே “பரத் வேண்டாம் என் கிட்ட வம்பு வச்சுக்காதீங்க.” என்றாள்.


“ஓகே நளின்,நாம இப்போ கிளம்பலாமா?நாளைக்கு மீட் பண்ணலாம்.”


“ஓகே பரத் கிளம்பலாம்”.
அவர்கள் கிளம்பும் சமயம் அருகே ஒரு பாட்டி வந்து நின்றார்.


பாட்டியை பார்த்து பரத் “இது யார்?” என்பது போல் நளினாவைப் பார்த்தான்.நளினா பதில் சொல்லும் முன்னேரே பாட்டியின் குரல் ஒலித்தது.


“ஏண்டிம்மா கொழந்தே நீ நளினா தானே?”


“ம்ம் ஆமாம் பாட்டி ,நீங்க எப்படி இருக்கீங்க?”


“ம்ம் நான் நன்னா இருக்கேண்டி மா, இது யாரு உன் ஆம்படையானா?”


பாட்டியின் ஆம்படையான் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் முழித்தான் பரத்.


அவனை பார்த்து சிரித்துக்கொண்டே “இல்லை பாட்டி இவர் என் ஆம்படையான் இல்லை “ என்றாள்.


“பின்னே இது யாருடிம்மா? நன்னா மூக்கும் முழியுமா நன்னா இருக்கானே”.


“இது யாருன்னே தெரியல பாட்டி “ என்றாள் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே.


“ஏண்டாப்பா பார்க்க நன்னா இருக்க ,படிச்சவன் மாதிரியும் இருக்க இப்படியா ஒரு பொண்ணு கிட்ட வம்பு செய்வ ?”


“ம்ம் பாருங்க பாட்டி அட்ரஸ் கேட்க வந்த மாதிரி வந்துட்டு இப்படி பேசிட்டே இருக்கார் பாட்டி.“


“நீ ஒண்ணும் பயப்படாதடி கொழந்த ,நான் இருக்கேன்.”


“பாட்டி இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல ,இவ கொழந்தையா? என்றான் பரத்.


பொய் கோபம் காட்டியபடியே “பாட்டி பாருங்க உங்க முன்னாடியே என்னை கிண்டல் பண்றார்” என்றாள் நளினா.


“நீ வாடி கொழந்தே நாம போய்டலாம், துஷ்டனை கண்டால் நாம தான் ஒதுங்கிக்கணும்.”


“இல்லை பாட்டி நீங்க போங்க ,என்னோட பிரண்டு கடைக்கு போயிருக்கா அவ வந்தவுடனே கிளம்பிடுவேன் பாட்டி “ என்றாள் சமாளித்தபடியே.


“ஏண்டிம்மா அவ வர வரைக்கும் நான் வேணும்னா கூட இருக்கவா?”


“இல்லை பாட்டி நீங்க கிளம்புங்க , இவரு ஏதாவது வம்பு பண்ணினா ... பக்கத்துல தான போலீஸ் ஸ்டேஷன் அங்க பிடிச்சு கொடுத்திடறேன் ,நீங்க கிளம்புங்க பாட்டி” என்றாள்.


“அது தான் சரி கொழந்தே ,இவனை சீக்கிரம் அங்க அனுப்பு, டேய் அம்பி இனிமேலாவது பொண் கொழந்தேள் கிட்ட வம்பு பண்ணாதே டா.” என்றபடியே கிளம்பினாள் அந்த பாட்டி.


பாட்டி கிளம்பியதும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள் நளினா.


“ஹே பட்டாசு, இங்க என்ன நடக்குது? நீ என்னமோ என்னை தெரியலைன்னு சொல்ற... அந்த பாட்டி இனிமே இப்படி பண்ணாதேன்னு அட்வைஸ் வேற..அந்த பாட்டி பேசினதுல பாதி வார்த்தைக்கு அர்த்தம் புரியல ..இப்போ இப்படி சிரிக்கிற ... உன்னை “ என்றான் பரத் அவளுடன் சேர்ந்து சிரித்த படியே.


“ஆம்படையான்னா ஹஸ்பண்டுன்னு அர்த்தம் டா மடையா!”


“நான் மடையனா?”என்றபடியே அவள் காதைப்பிடித்து லேசாக திருகினான்.


“பரத் ,அந்த பாட்டி இன்னும் போகலே, இப்போ அவங்களை கூப்பிடவா?”


“அய்யோ! ஆள விடுடா , இப்போ எதுக்குடா உனக்கு என் மேல இந்த கொலவெறி?”


“டேய் அம்பி இந்த கொழந்த சொல்றத கேட்டு நடந்துக்கோடா.. அப்போ தான் உனக்கு நல்லது “ என்று அந்த பாட்டி மாதிரியே சொன்னாள் நளினா.


அவள் சொல்வதை ரசித்துக்கேட்டப்படியே, “நளின், என் மைன்ட் சேஞ் பண்ண தான இப்படி கலாட்டா பண்ணின .. தேங்க்ஸ் டா இப்போ நான் ஜாலியா இருக்கேண்டா .. இப்போ நாம நிஜமாவே கிளம்பலாமா?”


“ம்ம் கிளம்பலாம் பரத் , நான் வீட்டுக்கு போய் சஹிக்கு கால் பண்ணனும்.. இன்னிக்கு அவங்க வீட்டை பார்க்க வராங்க” என்று ஆரம்பித்து அவர்களின் நட்பு.. ஏன் வீட்டை விக்க போறாங்க எல்லாவற்றையும் சுருக்கமாக சொன்னாள் நளினா.
 
Top