Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 18

Advertisement

Admin

Admin
Member





பகுதி – 18

மறுநாள் ராஜேஷ் வசந்தனின் வீட்டிற்குச் சென்றபோது ரூபிணியும் ஹாலில்தான் இருந்தாள். ஆனால் அவனைப் பார்த்ததும் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். அதன்பிறகு வந்த நாட்களில் ராஜேஷால் ரூபிணியைப் பார்க்கவே முடியவில்லை.

ரூபிணி சிங்கபூர் கிளம்பும் தினம் ராஜேஷை அழைத்த வசந்தன், அவளை விமானநிலையத்தில் விட்டுவிட்டு வரும்படி சொல்ல... அவனும் சரி என்றான்.

வடிவேல் காரை ஓட்ட... ராஜேஷ் முன் இருக்கையிலும் ரூபிணி பின் இருக்கையிலும் இருந்தபோதிலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.

விமான நிலையம் வந்ததும், வடிவேல் காரில் இருந்த பெட்டியை வெளியே எடுக்க... அதை ராஜேஷ் வாங்கும் முன் கைப்பற்றிய ரூபிணி “no thanks…” என்றவள், அங்கிருந்து விடுவிடுவென நடக்க.... ராஜேஷ் அவள் செல்வதையே வேதனையுடன் பார்த்திருந்தான்.

ரூபிணி சிங்கப்பூரில் இருந்து வந்தபோதும் இப்படித்தான் இருந்தாள். அவள் நடையில் இருந்த மிடுக்கை பார்த்து பணக்காரி என்ற திமிர் என்று நினைத்திருந்தான். ஆனால் மனதில் இருக்கும் வேதனையை வெளியே சொல்லமுடியாமல் இறுகி போய் இருக்கிறாள் என்று பிறகுதான் புரிந்தது.

இப்போது சில நாட்களாகத்தான் அவள் வயதுக்கு ஏற்ற உற்சாகத்துடன் வளைய வந்தாள். ராஜேஷின் பேச்சால் மீண்டும் தன் ஓட்டுக்குள் சுருளும் நத்தையாக மாறிவிட்டாள்.
ராஜேஷ் ரூபிணியைப் பின் தொடர்ந்து உள்ளே செல்ல... அங்கே ரோஸி நின்றிருந்தாள். ரோஸியை அப்போது அங்கே நிச்சயமாக ரூபிணி எதிர்பார்க்கவில்லை..... அவளைப் பார்த்த சந்தோஷத்தில் கண்களில் கண்ணீர் குளம் கட்ட.... பேச முடியாமல் நின்றாள்.

“ஊருக்கு போறேன்னு வந்து சொல்லிக்கக் கூட இல்லை..... நானும் நீ ஊருக்கு போறதுக்கு முன்னாடி கண்டிப்பா வருவேன்னு எதிர்பார்த்து ஏமாந்துட்டேன். மேடம் யாரு பெரிய ஆள் இல்லை....எங்களை எல்லாம் அதுக்குள்ள மறந்தாச்சு...” என்ற ரோஸியை பாய்ந்து கட்டிக்கொண்ட ரூபிணி “உங்களுக்கு என் மேல கோபம்னு நினைச்சேன்கா.... சாரி.” என்றாள்.

“போனாப்போகுது இந்தத் தடவை மன்னிச்சு விடுறேன். நீ எனக்குத் தினமும் போன் பண்ணனும் ஓகே வா...” என்ற ரோஸியிடம் ரூபினி சம்மதமாகத் தலையசைக்க...

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவள் “சரி நான் ஆபீஸ் போகனும். உன்னைப் பார்க்க பிரேக் எடுத்திட்டு வந்தேன். மனசுல அதையும் இதையும் நினைச்சு குழப்பிக்காம சந்தோஷமா போயிட்டு நல்லபடியா படிச்சு முடிச்சு... நல்ல வேலையில சேரனும்.” ரோஸியின் பேச்சு ரூபிணிக்கு மனதில் தன்னம்பிக்கையை விதைத்தது.

ரோஸி சென்றதும் அவள் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர... அவள் அருகில் வந்து அமர்ந்த ராஜேஷ் “சாரி ரூபிணி எனக்குத் தெரியும் நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். என்ன கோபம் இருந்தாலும் கைநீட்டி இருக்கக் கூடாது....அப்படி பேசியும் இருக்கக் கூடாது....” என்றான்.

“நீங்க உண்மைய தான சொன்னீங்க பரவாயில்லை விடுங்க....” ரூபிணி ஒட்டாமல் பதில் சொல்ல...

ராஜேஷுக்கு அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை.... அவள் செல்ல வேண்டிய விமானத்திற்கு அழைப்பு வந்த போது.... மனதில் இருந்த காதலை சொல்லாமலே கலங்கிய கண்களோடு ரூபிணி செல்ல.... அவள் சென்று வெகுநேரம் கழித்தே ராஜேஷ் அங்கிருந்து கிளம்பினான்.

விஜய் ஜெனியின் திருமணத் தேதியை முடிவு செய்ய இருப்பதால்... அந்த வாரம் கண்டிப்பாக வரும்படி ஆரோக்கியசாமி ஸ்டீபனை குடும்பத்துடன் தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தார்.



ஜெனிக்கு தானே திருமணம் அதனால் அவளைத் தங்களோடு அழைத்துச் செல்ல ஸ்டீபன் தயங்க... “நம்ம வீடு தான சும்மா ஜெனியையும் கூடிட்டு வாங்க. நாம மட்டும் தான். வேற யாரும் வெளி ஆளுங்க இல்லை...” செல்வராணி வற்புறுத்தி அழைக்க.... ஜெனியும் அவர்களோடு சென்றாள்.
மனதில் நிறையக் குழப்பம் வருத்தங்கள் இருந்த போதிலும், விஜயை பார்க்க போகிறோம் என்பது ஜெனிக்கு சந்தோஷத்தையே தந்தது.

விஜய் வாங்கிக் கொடுத்திருந்த புடவையையும் நகைகளையும் அணிந்து வந்தவளை, வரவேற்க விஜய் வீட்டில்தான் இருந்தான். அவனின் பார்வை அவளை ரசனையோடு வருட.... ஜெனி முகம் சிவக்காமல் இருக்கப் பெரிதும் பாடுபட்டாள்.

அவர்கள் சென்ற நேரம் மதிய நேரம் என்பதால்.... இவர்கள் வந்ததும் எல்லோரும் சேர்ந்து உணவு அருந்த சென்றனர். ஆரோக்கியராஜும் ஸ்டீபன்னும் பேசியபடி உணவு அருந்த... விஜய் ஜெனியின் அருகில் உட்கார்ந்து மெல்லிய குரலில் அவளோடு பேசியபடி சாப்பிட்டான்.

“செமையா இருக்க இந்த டிரஸ்ல.... இந்தப் புடவைய நம்ம பர்ஸ்ட் நைட் அன்னைக்குக் கட்கிறியா....” எதோ காபி வேண்டும் என்பது போல் விஜய் சாதாரணமாகக் கேட்க.... அவன் கொடுத்த திடீர் அதிர்ச்சியை வெளிக்காட்ட முடியாமல்.... ஜெனி தலை குனிந்து தீவிரமாகச் சாப்பிடுவது போல் நடிக்க.... அவளின் நிலை உணர்ந்த விஜய் வாய்க்குள் சிரிப்பை அடக்கினான்.

சாப்பிட்டதும் எல்லோரும் ஹாலில் அமர்ந்து திருமணத்தைப் பற்றித் தீவிரமாகப் பேசிகொண்டிருக்க... விஜய் பேச்சில் கவனமாக இருந்தாலும்... ஜெனியை அடிக்கடி பார்வையிடவும் மறக்கவில்லை.... ஜூலை மாதம் ப்ரித்வி ஜெப்ரி இருவருக்கும் வரத்தோதாக இருக்கும் என்று அந்த மாதத்தில் திருமணத் தேதியினை முடிவு செய்தனர்.

மாலை நான்கு மணி ஆனதும் தேவாலையத்தில் அவர்கள் திருமண நாளை பதிவி செய்ய.... ஆரோக்கியராஜும் ஸ்டீபன்னும் கிளம்பி சென்றனர். ஜெனி விஜய்க்குத் தனிமை கொடுக்க நினைத்த செல்வராணி லீனாவோடு வெளியே தோட்டத்தில் சென்று அமர்ந்தார்.

அவர்கள் சென்றதும் சோபாவில் ஜெனியின் அருகில் சென்று அமர்ந்த விஜய் “ஹப்பா... எப்படா இந்த நேரம் வரும்ன்னு இருந்தேன்.” என்றவன், அவள் காதில் அணிந்திருந்த தோடை பார்ப்பது போல் காது மடலை வருட... ஜெனிக்கு உடல் சிலிர்த்தது.

காதில் இருந்து கன்னத்திற்குத் தாவியவன், விரலால் அவள் முகவடிவை அளந்தபடி.... முத்தமிட நெருங்க... அவனின் நோக்கம் புரிந்த ஜெனி, அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்.

“ஒழுங்கா உட்காருங்க அத்தையும் அம்மாவும் வெளியதான் இருக்காங்க. எப்ப வேணா உள்ள வருவாங்க.” ஜெனி எச்சரிக்க.... “நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.” முனங்கியபடி நிமிர்ந்து உட்கார்ந்த விஜய் “அப்ப நான் கேட்டதுக்கு நீ ஒண்ணுமே சொல்லலையே...” என்றபடி கண்சிமிட்ட... அவன் சாப்பிடும் போது சொன்னதை நினைவுபடுத்துகிறான் என்பது புரிந்த ஜெனி விஜயை பார்த்து முறைக்க...

“ஐயோ ! பயமாயிருக்கே...” பயந்தவன் போல் நடித்தவன் “எனக்கு ஸ்கர்ட் டாப்ன்னா கூட ஓகே.... ஏன் சுடிதார்ல கூடச் சூப்பரா இருக்க...பேசாம பர்ஸ்ட் நைட் அன்னைக்கு எனக்கு எல்லா டிரஸ்ம் போட்டு காட்டிடு....” எதோ இன்று அவர்கள் இருவருக்கும் முதலிரவு போல் அவன் பேச....

“நான் என்ன பேஷன் பரேட் நடத்துறதா....” ஜெனி முறைத்துக்கொண்டே கேட்க..... “வேண்டாம் அப்புறம் அதுக்கே டைம் எல்லாம் போய்டும்.” விஜயின் குரல் குழைய.... அடுத்து அவன் பேசும்முன், அவன் வாயை தன் கையால் மூடிய ஜெனி “கொஞ்சம் அடங்குங்க...” என்றவள், எழுந்து சென்று அவனுக்கு வாங்கி வந்த பரிசுகளை எடுத்து வந்து கொடுக்க....

முதல்முறையாக அவள் அவனுக்குக் கொடுக்கும் பரிசு என்பதால்.... விஜய் அதை ஆர்வமுடன் பிரித்தான். அவன் உடைகளை எடுத்து பார்க்க... “உங்களுக்குப் பிடிச்சிருக்கா...” ஜெனி அவனுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்ற தவிப்புடன் கேட்க... “சூப்பரா இருக்கு டா....தேங்க்ஸ்.” என்றவன் அவளை அணைத்துக்கொள்ள.... அவனிடம் இருந்து விலகியவள், அவன் வலது கையில் அவளே ப்ரேஸ்லெட் அணிவித்தாள்.

அதில் அவர்கள் இருவரின் பெயரின் முதல் எழுத்துக்களான VJ என்பதைப் பார்த்ததும், விஜய்க்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஜெனியை பார்த்து கண்சிமிட்டியவன் “நீயே டிரஸ்ம் போட்டு விடுறியா...” என்றதும், ஜெனி அவனுக்கு நன்றாக நாலு அடிவைத்தாள்.

“நீ என்னைக்குப் போட்டு விடுறியோ.... அன்னைக்குத் தான் அந்த டிரஸ் போட்டுப்பேன்.” விஜய் விடாமல் அவளை வம்பிழுக்க.... ஜெனி அடக்க முடியாமல் வாய்விட்டு சிரிக்க.... விஜய் அதை ரசித்தான்.

“இரு செல்பி...” எடுப்போம் என்றதும், அதுவரை நன்றாக இருந்த ஜெனி “ஒன்னும் வேண்டாம்.” என்றவள், சட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட்டாள். எங்கே அவன் சகோதரர்களுக்கு அனுப்பிவிடுவானோ என்று அவளுக்குப் பயம். புனிதாவிடம் யாரு திட்டு வாங்குவது என்று நினைத்தவள், தோட்டத்தில் இருந்த இருவரின் அம்மாக்களோடு சென்று அமர்ந்துகொண்டாள்.


விஜய் மறைவாக நின்றுகொண்டு ஜெனியை ஜாடை செய்து அழைக்க... அவள் வர மறுத்தாள். ப்ளீஸ் வா...போட்டோ எடுக்கலை... என்பது போல் அவன் ஜாடை செய்ய.... ஜெனி எழுந்து அவனிடம் சென்றாள்.

“ஏன் உனக்குச் செல்பி எடுக்கப் பிடிக்கலை....” விஜய் ஜெனியின் தோளில் கைபோட்டபடி கேட்க.... புனிதா அவளது அக்கா மட்டுமென்றால்... அவள் சொன்னதைச் சொல்லிவிடுவாள். ஆனால் அவனுக்கு அண்ணியும் ஆயிற்றே... அதனால் அவனிடம் விட்டுக்கொடுக்க முடியாமல்... என்ன சொல்வது என்று அவள் திணறும் வேளையில் ஆரோக்கியராஜும், ஸ்டீபன்னும் வந்துவிட... இவர்கள் பேச்சு மேலும் தொடர முடியாமல் அதோடு நின்றது.
 
:love: :love: :love:

ஏண்டா எப்போவோ வரும் முதல் இரவுக்கு இப்போவே planனா???
முதலில் கல்யாணத்தை முடிடா........
அதுவும் அந்த Fashion parade :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ராஜேஷ் அவன் தனி ட்ராக் ல போறான்......
ரூபிணி வேற கோபத்தில் போறாளே........
mediator ரோஸி அக்கா வந்தாச்சு.....
இனி அவளே பார்த்துப்பா.......
 
Last edited:
அருமையான பதிவு
ரூபிணி காதல் ஜெயிக்குமா
 
Top