Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

meera anjali's En Mannan Engae Endru Sollu - 2

Advertisement

meera anjali

Member
Member
hi sisters and friends

EMEES 2ND UD

padichuttu comments and like pannunga sister snd friends....



என் மன்னன் எங்கே என்று சொல்லு 2

கண்ணன், அம்மா என்னைக்கு நரேன் நிவேதாவுக்கு வரவேற்ப்பு எப்போ வைக்கலாம். ஏன்னா, கல்யாணம் ஆனாதுல இருந்து தொழில் துறை வட்டத்துல என் காதுபட பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனியும் தாமதிச்சா நம்ம குடும்பத்தை பத்தி தான் தப்பா பேசுவாங்க நீங்க என்ன சொல்லுறீங்கம்மா. என இரண்டாவது மகனா கண்ணன் தன் அன்னையிடம் கேட்க.




அங்கமாளிற்கோ, பேரனின் கல்யாணம் தான் சொந்தம் பந்தமின்றி நடந்துவிட்டது வரவேற்ப்பாவது அனைவரின் ஆசியுடன் நடக்க வேண்டும் என அவரும் நினைத்தார். அதனால், மகன் சொல்லுவது போல் வரவேற்ப்பு வைப்பது நல்லது என தோன்றியது.




”சரி கண்ணா, ரிஷப்சன் கொஞ்சம் க்ராண்டா நடக்கனும். நம்ம சொந்தம், பந்தம் எல்லாரையும் அழைக்கனும். அப்புறம் என் மகளையும், முறையா அழைக்கனும்.”




சரிங்கம்மா...



அந்த வீட்டின் மூன்று மருமகள், மற்றும் அங்கம்மாள் – சேனாதிபதியின் மகன்ங்கள். பின் அந்த வீட்டு வாரிசுகள், திருமணமான புது தம்பதியரும் என அனைவரும் வீட்டின் ஹாலில் கூடி இருந்தார்கள்.




“மூத்தமகன், ஹரிராம் அவரின் மனைவியான மாலதி. இரண்டாவது தான் கண்ணன் – காவியா. மூன்றவது மகன் ஜெயராஜன் – சுமதி.”
நரேன் – நிவேதாவுக்கு வரவேற்ப்பு வைக்கனும், எல்லாரையும் அழைக்கனும். முக்கியமா என் மகளையும், மருமகனையும் என் பேரப்பிள்ளைகளையும் அழைக்கனும். வரவேற்ப்பு முடியறவரைக்கும் என் மகளும், மருமகனும் நம்ம வீட்டுல தான் தங்கனும். நம்ம வீட்டு பிள்ளைகளோட கல்யாணம் முறைப்படி இங்க தான் நடக்கனும். நரேன் கல்யாணம் யாருக்கும் தெரியாம முடிஞ்சாலும், வரவேற்ப்புக்கு பெரிய ஹோட்டல் புக் பண்ணுங்க.




வரவேற்ப்புக்கான பத்திரிக்கையை சீக்கிரம் அடிச்சு, எல்லாருக்கு கொடுக்கனும் அதோட பொறுப்பு கண்ணனோட பிஏ மூர்த்தி. நம்ம சொந்தங்களுக்கு மட்டும் நேரில போய் கண்ணனும் காவியாவும் கொடுக்கனும். வரவேற்ப்பு வேலையில கண்ணன் பிசியா இருப்பான் அவன் இடத்துல இருந்து, உன் மகன் சுரேந்தர் தான் நம்ம பேக்ட்ரிய பார்த்துகனும்.




“அம்மா, சுரேன் இப்போ நம்ம காலேஜ் சேர்மேன் ஆனதுல இருந்து அவன் கோவையில தான் இருக்கான். அங்க அவனுக்கு வேலை அதிகமா இருக்குனு சுபா சொல்லிட்டு இருந்தா. இப்போ எப்படி அவன் கண்ணன் பேக்ட்ரிய பார்க்க முடியும். நானும், ஜெய்ராஜூம், கண்ணன் பேக்ட்ரி அப்போ அப்போ விசிட் பண்ணுறோம்.” என்றார் ஹரி




ஓ...ஓ... அப்போ எப்படி நரேன் வரவேற்ப்புக்கு கரெக்டா அவங்க இரண்டு பேரும் வருவாங்க. இப்போ இருந்தே வேலையை கொஞ்சம் ஒதுக்கி வைக்க சொல்லு ஹரி. இது நம்ம வீட்டு ரிஷப்சன், நம்ம வீட்டு ஆளுங்க தான் முன்னாடி இருந்து வரவேற்க்கனும். அது மட்டும் இல்லாம சுரேன் தான் முன்ன நிக்கனும், அவன் தான நரேனுக்கு அண்ணன்.




“சரிம்மா... நான் அவங்க இரண்டு பேர்கிட்ட பேசி வேலையை முடிச்சுட்டு வரசொல்லுறேன்.”



நம்ம ஜவுளிக்கடையில இருந்து வீட்டுக்கு பட்டு புடவை கொண்டுவரச்சொல்லிடு ஜெயராஜ். அப்புறம் ஹரி நம்ம நகை கடையில இருந்து நகையும் கொண்டுவரச்சொல்லிடு, முக்கியமா வைரம் கொண்டு வரச்சொல்லிடு.




மாலதி நீதான் என் மகளுக்கும், என் பேத்திக்கும் புடவையும், நகையையும் செலக்ட் பண்ணனும்.



“சரிங்க அத்தை”



சுமதி நீ புது மருமகளுக்கு நீ நகை மட்டும் செலக்ட் பண்ணு.


“சரிங்க அத்தை”



காவியா நீயும், கண்ணனும் வரவேற்ப்பு வேலை இருக்கும் அதனால தான் உன்னை இதுல உள்ள இழுக்கலைம்மா.




“ சரிங்க அத்தை” என மிகவும் மரியாதையாக அவரின் கேள்விக்கு பதில் சொல்லினர் மருமகள்கள்



அம்மாடி புது பொண்ணு நிவி, உனக்கு எந்த வேலையும் இல்லம்மா, நீ நல்லா ரெஸ்ட் எடுக்கனும். போக போக உனக்கு இந்த வீட்டு பழக்கம், வழக்கம் எல்லாம் சொல்லிகொடுக்குறேன்.




‘சரிங்க பாட்டி’




நரேன் நீ கொஞ்ச நாள் உன் தம்பி சந்தோஷ்கூட தங்கனும்.



“சரிங்க பாட்டி”



நிவி நீ சாரிகா கூட தங்கும்மா, வரவேற்ப்பு வரைக்கும் தான் சரியாம்மா.



‘சரிங்க பாட்டி’



மிதுனா, “பாட்டி எங்களுக்கு மட்டும் ஷாப்பிங்க் நாங்களே பண்ணிகிறோம். பெரியவங்க நீங்க எல்லாரும் ஒரே மாதிரி புடவை எடுப்பீங்க, அதுமாதிரி நாங்களும் ஒரே மாதிரி ட்ரெஸ் எடுக்கனும்”.




”சரி, நம்ம மாலதி நடத்துற பொடிக்ல உங்களோட ஷாப்பிங்க் இருக்கனும். வெளி இடத்துல எல்லாம் நீங்க ஷாப்பிங்க செய்யகூடாது.”




“ஓகே பாட்டி... தாங்க்யூ பாட்டி”. என்றாள் உற்ச்சாகத்துடன் அவளுடன் சேர்ந்து சாரிகவையும், இழுத்துகொண்டு சென்றாள்.





இப்படியாக ஆளூக்கு ஒரு வேலையை பகிர்ந்தார் அங்கம்மாள். சேனாதிபதி மனைவியின் ஒவ்வொருக்கும் கொடுக்கும் வேலையும், பரம்பரையாகவும், முறையாகவும் நடக்க வேண்டும் என மருமகளுகளுக்கு சொல்லிகொடுக்கும் விதமும் அவருக்கு பிரமிப்பாக இருந்தது.




அனைவருக்கும் வேலைகொடுத்துவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு தன் மூக்கு கண்ணாடியை இறக்கி அதை துடைத்து போட்டுகொண்டே கணவரை ஏறிட்டுப்பார்த்தார் அங்கம்மாள்.



என்ன அப்படி பார்க்குறீங்க...



”ரொம்ப அழகாக நம்ம குடும்பத்தை வழி நடத்துற. நம்மக்கு பின்னாடியும் நம்ம பிள்ளைகளும், மருமகளுங்களும் வழிநடத்துறதுக்கு முன் உதாரணமா நீ இருக்கனும் மனைவியின் கையில் கை வைத்தபடி பேசினார்.” அவர் பெருமையுடன் சொல்ல
”எல்லாரும் ஒற்றுமையா இருப்பாங்க, ஆனா என் மகளையும், மருமகனையும் நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு. நரேன் கல்யாணம் ஏன் அப்படி நடந்ததுனு மருமகன் கேட்கும் போது கண்ணன் எதிர்த்து பேசுனதுக்கு இளா கோவம் பட்டது இன்னும் கண்ணவிட்டு போகலை. அதான் நானா, நம்ம மகன்கிட்ட நரேன் ரிஷப்சன் பத்தி வழிய போய் பேசல”. கணவருக்கு புரியும்படி கூறினார் அங்கம்மாள்




’தெரியும் அங்கு, ஆனா இளவுக்கு, சாரிகாவுக்கு நம்ம கல்யாணம் பண்ணி வைக்கனும் நாம ஏற்கனவே பேசியது தான். எங்க இளா, அப்பாவை அவமான படுத்தினதுக்காக கல்யாணம் வேண்டானு சொல்லிடுவான் எனக்கு பயமா போச்சு. நம்ம பேத்திய தான் சுரேன்க்கு முடிக்க முடியலை நம்ம பேரன் ஆச்சும் நம்ம குடும்பத்துல நெருங்கி இருக்கனும்.’




இப்போ இருக்குற மாதிரி நம்ம குடும்பம் எப்போவும் ஒத்துமையா இருக்குங்க. கண்ணனை பத்தி உங்களுக்கு தெரியாது முன் கோவக்காரன். நரேன் ரிஷப்சன் முடிஞ்ச கையோடு, சுரேனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கனும். என்றார் அங்கம்மாள்



பெரியவர்கள், தங்கள் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்ய. கடவுள் சிரித்துகொண்டே அவர்களின் நினைப்பை மாற்றி எழுதிகொண்டிருந்தான்.





வேதா நீ எப்போவும் காருல தான வருவ, இன்னைக்கு ஏன் பைக்கல வந்துருக்க. அவங்க யாரு உன் சொந்தமா. ராஜேஷ் கேட்க.
விஜய், என் அப்பாவோட பார்ட்னர் பையன் எப்போவும் எங்க வீட்டுகு பைல் கொடுக்க வருவான். இன்னைக்கு என் கார் மக்கர் ஆகிருச்சு. அவன் ட்ராப் பண்ணுறேனு சொன்னான் நானும் அவன் கூட வந்தேன்.
எதுக்கு டி என்னை சீக்கிரம் காலேஜ் வரசொன்ன. வந்த உன்னை ஆள காணோம், அப்படி எதுக்கு என்னை சீக்கிரம் வரசொன்ன காரணம் சொல்லு.




"இல்ல டி ப்ரஜன் மீட் பண்ணலாம் நினைச்சு வந்தேன். ஆனா அவன் கடைசி நேரத்துல மீட் பண்ண முடியாதுனு சொல்லிட்டான். அவனை மீட் பண்ணறதா இருந்தா உன்னை துணைக்கு கூப்பிட்டு போகலாம் நினைச்சேன்".




நீ மீட் பண்ணுறதுக்கு நான் விளக்கு பிடிக்கனுமா. போடி... இனி உன் போன் வந்தா நான் எடுக்கமாட்டேன்.



ஆமா... உன் போன் வந்தா அனி எடுக்கமாட்டா, ஆனா சேர்மேன் போன் வந்தா மட்டும் அவ அட்டென் பண்ணுவா ஆமல அனி. என ராஜேஷ் லெட்டர் கொடுத்ததை பார்த்துவிட்டோம் என்ற ரிதியில் பேசினான்




நீங்க எல்லாம் நினைக்குற மாதிரி அந்த லெட்டர் எனக்கு தான். ஆனா, அவங்க நினைக்குற மாதிரி எங்க கல்யாணம் நடக்காதுனு எனக்கு தெரியும்.




ஏன் அனி அப்படி சொல்லுற, சுரேன் உன்னை காதலிக்குறது எப்போ இருந்து.




‘நான் வயசுக்கு வந்து, எனக்கு முறைப்பையனா எல்லா சடங்கும் செஞ்சு என் கழுத்துல மாலை போட்டு “இன்னையில இருந்து நீ தான் என் மனைவி, நான் தான் உன் கணவன்” சொல்லாம சொல்லிட்டு போனார்.





அப்போ இருந்த வயசுல அவரோட பீலிங்க்ஸ் எனக்கு புரியலை. நானும் அதை மறந்துட்டேன், அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது அவரோட மனைவியா நான் இப்போ வரைக்கு அவரோட மனசுல வாழ்ந்துட்டு இருக்கேன்.




அடிப்பாவி... அப்போ கல்யாணம் முடிஞ்சதா. எங்ககிட்ட சொல்லாம எப்போ கல்யாணம் செய்தீங்க. வேதா, இவ நம்மகிட்ட இன்னும் பாதிய மறைக்குறா நீ விடாத என்னனு கேளு. ராஜேஷ் வேதாவை தூண்டிவிட.



எல்லாம் நல்லபடியா நடந்தா நான் உங்ககிட்ட மறைக்காம சொல்லுறேன் இப்போ நான் கிளம்புரேன். அனி எழுந்துகொள்ள



அவளை மறைத்தவாறு நின்ற ராஜேஷ் ‘ என்ன சேர்மேன் உன்னை பார்க்க வரச்சொன்னாரா. இல்லை வெளிய கூப்பிட்டு போகப்போறா.’



“இரண்டும் இல்லை, என் மாமா மகன் ரிஷப்சனுக்கு எனக்கு ட்ரெஸ் எடுத்துருக்காங்க அதை கொடுக்க தான் என்னை அவரோட ஆஃபீஸ்க்கு வரசொல்லிருக்காங்க.” என அவனை தள்ளிவிட்டு சுரேனை பார்க்க அவனது பெர்சனல் அறைக்கு சென்றாள்



ராஜ், நம்ம அனி கண்ணுல ஒரு சோகம் தெரியுது நீ கவனிச்சியா.
ஆமா, அது என்னனு நாம கேட்டுருவோம்னு தான் அவ பயந்திட்டு அவளோட அத்தான பார்க்க போறா.




இப்போதான சொல்லிருக்கா அவளோட காதல, ஆனா அதுக்கு முன்னாடி அவங்களுக்குள்ள ஏதோ நடந்திருக்கு அது என்னனு அவ சொன்னா தான் தெரியும்.


இருவரும் தோழியின் கண்ணில் இருக்கும் சோகத்தை கண்டுபிடிக்க முயல்வார்களா?




சரிங்கப்பா, நானும் சுபாவும் ஒன்னா ஊருக்கு வந்திருவோம். கார்ல தான் வரோம்ப்பா, நான் தான் கார் ஓட்டிட்டு வருவேன்ப்பா. தந்தையின் கேள்விக்கும், அவரின் சொல்லுக்கும் கட்டுபட்டவன் போல் பதில் அளித்துகொண்டிருந்தான். வெளியில் அனித்ரா அவனுக்காக காத்திருப்பது அவனுக்கு தெரிந்தது அவளின் நிழல் மூலம். அவள் காதில் விழுமாறு ‘ அப்பா, தாராவையும் சேர்த்தே நாங்க கூப்பிட்டு வரோம்ப்பா’ என அவன் கேட்க. ஹரி என்ன பதில் சொன்னாரோ, சரிப்பா. நாங்க பத்திரமா வரோம், எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க. பேசிவிட்டு செல்பேசியை வைத்தான்





”தாரா உள்ள வா... அவன் அழைக்க”, அவள் வந்தவுடன்,. ‘எந்த தைரியத்துல என்ன உங்களோட கூப்பிட்டு போக, மாமாகிட்ட பேசுறீங்க.’



ஏன்... நீ என் வருங்கால மனைவினு தைரியம் தான் உனக்கு தெரியாத என்ன. அவளை அழுத்தமாக பார்த்துகொண்டே பதில் சொல்ல
அவளோ, அவனின் பார்வையில் எரிச்சல் கொண்டு, ‘ எதுக்கு வரச்சொன்னீங்க சொல்லுங்க’




நரேனோட ரிஷப்சனுக்கு நீ போடவேண்டிய ட்ரெஸ் கொடுக்க தான் கூப்பிட்டேன், அப்புறம் அன்னைக்கு நீ போட வேண்டிய டைமண்ட் செட், அப்புறம் என்கூட சேர்ந்து நீயும் வரவேற்க்குற இடத்துல நிக்கனும்.



”அதெப்படி முடியும் அம்மா, அப்பா, மாமா, அத்தை , பாட்டி தாத்தா எல்லாரும் இருப்பாங்க என்னால முடியாது.” அவள் பின் வாங்க
அப்போ சரி, நான் எல்லாருக்கு சொல்லிடுறேன். இனி உன்கிட்ட பேசுனா வேலைக்கு ஆகாது, உன்னை எல்லாம் ப்ளாக் மெயில் பண்ணா தான் நீ வழிக்கு வருவ. அவன் கையில் செல்பேசியில் அவன் பாட்டிக்கு அழைக்க, ரிங் போய்கொண்டு இருந்த சத்ததை அவளும் கேட்டாள்.



ரிங் நின்றதும் பாட்டி பேச ஆரம்பிக்க, அவளுக்கு தான் கிலி ஆனது.




‘ப்ளீஸ், பேசாத... பாட்டிக்கு தெரிஞ்சா எல்லாருடைய மன நிம்மதியும் போயிரும். பேசாத... போனை கட் பண்ணு... உன்னை கெஞ்சி கேக்குறேன்’. அவள் கெஞ்ச, அவனோ அதை சிரிப்புடன் பாத்துகொண்டிருந்தான்.




“ஹலோ சுரேன்... போன் பண்ணிட்டு ஏன் பேச மாட்டேங்குற. ஹலோ சுரேன், உனக்கு கேக்குதாப்பா.”பாட்டியின் குரலை கேட்டு அவரின் லைனை கட்செய்துவிட்டு




‘குட் அப்போ இந்த ட்ரெஸ் தான் போடனும், வீடுல எடுத்த ட்ரெஸ் போடசொன்ன போடகூடாது. நரேன் ரிஷப்சன்ல மீட் பண்ணலாம், உன்னை ஏர்போர்ட்ல நான் ட்ராப் பண்ணுறேன் ரெடியா இரு சண்டே.’ அவன் சொல்லிவிட்டு அவனின் வேலையை கவனிக்க தொடங்கினான்.
அவளுக்கு தான், நரேன் ரிஷப்சனில் இவன் என்ன செய்ய போகிறான் என்ற பயத்தில் அவள் சென்றால். இவனின் அதிரடி அவளுக்கு தான் ஒவ்வொரு நேரத்திலும் பயத்தை கொடுத்தது.




இளா, உன்னை தேடி சாரிகா வந்திருக்காங்க உள்ள அனுப்பட்டுமா. அவனின் பிஏ வினயன் கேட்க



’இப்போ எதுக்கு நம்மளை தேடி வந்திருக்கா, ஷாப்பிங்க் பண்ண மிதுனா கூட போறேனு சொன்னாளே. பின்ன எதுக்கு என்னை பார்க்க வரனும்.’




ம்ம்... வரச்சொல்லு வினய்




“வாம்மா... எப்படி இருக்க, வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க. பாட்டி, தாத்தா நல்லா இருக்காங்களா”



“எல்லாரும் நல்லா இருக்காங்க, ஆனா நான் நல்லா இல்ல”



”ஏன்மா அப்படி சொல்லுற... சாண்டில் கலர் சுடிதர்ல சூப்பர இருக்க. பார்ல கூட போகமாட்ட ஆனா, உன் முகம் பால் நிறத்துல அழகா இருக்கு, அதுல சின்னதா ஒரு பொட்டு, தலையை கொஞ்சம் வாரி க்ளிப் போட்டு, கீழ லூஸ் ஹேர் விட்டுருக்க... இதுவே உனக்கு நல்லா இருக்கும்மா. நீ ஏன் நல்லா இல்லனு சொல்லுற, நான் வேணா அனிகிட்ட ஹேர்ஸ்டைல் எங்க பண்ணா நல்லா இருக்கும்னு கேட்டு சொல்லவா.” இளா, அவளை சிரிக்க வைக்க அப்படி பேச




“போதும், அழகா இருக்கேனா இல்லையானு கேக்க வரலை.”



“இங்க பாரும்மா... இன்னும் கொஞ்சம் நேரத்துல எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அதுக்கு நான் போகனும். என்ன ஏதுனு நீயே சொல்லும்மா.” பொறுமையை பிடித்துகொண்டு பேச




”நீங்க எனக்காக நேரம் ஒதுக்கி பேசுற நாள் எல்லாம் குறைஞ்சு போச்சு. எப்போ பாரு மீட்டிங்க், சைட் விசிட்னு, நான் போன் பண்ணுற நேரம் சொல்லுறீங்க. எனக்குனு நீங்க எப்போ நேரம் ஒதுக்கி பேசுவீங்க சொல்லுங்க.”




“கல்யாணத்துக்கு பின்னாடி தான் நீ என்கூட இருப்பியம்மா, அப்போ உன்கிட்ட மட்டுமே பேசுறேன். இப்போ இருக்குற வேலை, அப்புறம் பெண்டிங்கல இருக்குற வேலையை எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி முடிச்சா தானே உன்கூட பேசுறதுக்கு இன்னும் அதிக நேரம் கிடைக்கும்.”



“அதெல்லாம் வேண்டாம் எனக்கு, இன்னைக்கு என்கூட நரேன் அண்ணா ரிஷப்சனுக்கு நாமா ஷாப்பிங் போகலாம்.”




“சரி போகலாம் ஆனா, நாளைக்கு போகலாம் இன்னைக்கு ரெண்டு மீட்டிங்க் அட்டென் பண்ணனும். அது ரெண்டுமே எனக்கு முக்கியம்.”என லேப்டாப்பில் மீட்டிங்கில் அவன் செய்துகொடுக்கு ப்ராஜெக்ட்டை பற்றி விரிவாக படித்து பார்த்துகொண்டிருந்தான் சாரிகாவிடம் பதில் கொண்டே



அவள் தான் இறங்கி போகவேண்டியதாயிற்று, “சரி டூமோரோ மார்னிங் ஷார்ப்பா டென்க்கு என்னை வீட்டுக்கு வந்து கூப்பிட்டு போகனும்”



“சரிம்மா... நீ பார்த்து போம்மா, எதுல வந்த நீ”



“மிதுனா கார்ல, வெளிய வெயிட் பண்ணுறா... ம்ம் ஒகே”



கண்மனி், ”என்னங்க எங்க அண்ணன் வீட்டுல ரிஷப்சனுக்கு நம்ம சார்பா என்ன சீர் கொடுக்கலாம்.”




“அதைப்பத்தி எனக்கென்னம்மா தெரியும்... உன் விருப்பம் கண்மனி. நீ என்ன பொருள் வாங்கினாலும் கொஞ்சம் நம்ம அந்தஸ்க்கு ஏத்த மாதிரி வாங்கு.” மனைவியிட பதில் சொல்லிவிட்டு ஆஃபீஸ் ஃபைலில் மூழ்கிவிட்டார்



அப்புறம், என கண்மனி ஆரம்பிக்க.



“இது என் நண்பர், முகேஷ் பையன் பேரு மித்ரன். கொல்கத்தால சப்கலெக்டர், ரொம்ப குணமான பையன் நம்ம அனிக்கு இந்த பையனை பார்க்கலாம்னு நான் நினைக்குறேன்.” நியாபகம் வந்து இளங்கோவன் திடீரென மனைவியிடம் சொல்ல



“சரிங்க, அம்மா, அப்பாகிட்ட நாம அனிக்கு வந்திருக்குற வரன் பத்தி சொல்லலாம் அவங்களோட முடிவு கேட்டுட்டு நாம அடுத்து பார்க்கலாம்”



“சரிம்மா...”



சேனாதிபதி, யோசனையாக இருந்தார் அவர் மனதில் அனித்ராவின் வாழ்க்கை தான் எப்படி அமைய போகுதோ என்று. ஆனால் அவர் யோசனைக்கு முற்று புள்ளி வைப்பது போல், அலைப்பேசி ஒலி அவரை அழைத்தது.



“சொல்லுப்பா”



“…………”


“எப்படி முடியும்னு நீ நினைக்குறப்பா”



“………..”



”சரி, நீ முதல வெளிநாட்டுல இருந்து ஊருக்கு வாப்பா, அடுத்து நான், உன் கல்யாணத்தை பத்தி நானே பேசுறேன்.”



“ரொம்ப தாங்க்ஸ் க்ரான்ப்பா”



”கடவுளே, என் பேரபிள்ளைகளோட வாழ்க்கையை நீ தான் நல்லபடியா அமைச்சுகொடுக்கனும். உன்னை நம்பி இந்த காரியத்துல நான் இறங்குறேன் நீ தான் துணை இருக்கனும்”. அவர் மனதில் நினைத்து உறங்க சென்றார்



தொடரும்………..








 
Very nice.. இந்த ஸ்டோரில கேரக்டர்ஸ்
அதிகமா இருப்பாங்க போல சிஸ்..
 
Top