Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana(na)m Purinthom - 12

Advertisement

mibrulz

Active member
Member
அத்தியாயம் 12

நகுல் ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான். நிகில் நித்யாவை பார்க்க அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நிகில் நித்யாவின் பக்கம் வந்து அவள் தோளில் தொட்டான். அந்த தொடுகையில் தன்னை மீட்டு கொண்டாள். தன் கண்களை துடைத்து கொண்டு யாமினியிடம் போகலாமா என்று கேட்டாள். யாமினிக்கு நிகிலை விட்டு போக மனமில்லை என்றாலும் நித்யா வெகுவாக காயபட்டிருக்கிறாள் என்று புரிந்ததால் நிகிலிடம் போய் வருகிறேன் என்று சொல்லி நித்யாவையும் கூட்டிட்டு கிளம்பினாள்.
வீடு வரும் வரை நித்யா பேசவே இல்லை.
வீடு வந்ததும்; "என்னாச்சு நிதூ.. வை ஆர் யூ லுக்கிங்க் ஸோ டல்..? "
நித்யா ஓ..... என்று அழ ஆரம்பித்தாள். யாமினிக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அவளை கட்டிக் கொண்டாள்.
அவளை ஒரு வழியாக சமாளித்து அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
" சாப்பிட்டு தூங்கு நிதூ.. "
"எனக்கு வேண்டாம் யாமி.. நான் தூங்க போறேன்.."
"சொன்னால் கேளு நிதூ..."
யாமினி சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே நித்யா அறைக்குள் புகுந்து கொண்டாள்.
நகுல் அவள் கையை உதறி சென்றது தாங்க முடியவில்லை. அழுது கொண்டே கண்ணயர்ந்தாள்.
யாமினி வீடு பூட்டி தூங்க சென்றாள்.
அசதியில் தூங்கியும் விட்டாள்.
அதிகாலை ஐந்து மணிக்கு நிகிலின் அலைபேசி அழைப்பில் எழுந்தாள் யாமினி.
"சொல்லு நிக்ஸ்.."
"யாமி.. நகுல் இஸ் இன் ஹோஸ்பிடல். ஹி இஸ் ஔட் ஒஃப் டேன்ஜர். பட் ஒப்ஸர்வேஷன்ல இருக்கான்.. ஐ ஜஸ்ட் இன்ஃபோர்ம்ட் யு. இன்றைய கேஸ் நீங்கள் இரண்டு பேரும் பார்த்துக்கங்க." என்று சொல்லி கொண்டே பேசியை அணைத்து விட்டான்.
மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது யாமினிக்கு. நகுலை பற்றி கவலை பட்டாலும் நிகில் அவனுக்கு ஒன்றுமில்லை என்று சொன்னது நிம்மதியை கொடுத்தது.
எழுந்து குளித்து காலை சாப்பாட்டினை பண்ண ஆயத்தமானாள்.
நித்யாவும் எழுந்து குளித்து இவளுக்கு உதவ சமையலறையிற்கு வந்தாள்.
இருவரும் சமையலை முடித்து சாப்பிட்டு ஓஃபிசுக்கு கிளம்பினார்கள்.
தங்கள் கேஸ் லிஸ்டை பார்த்து அவரவர் செல்ல வேண்டிய கோர்ட்டுக்கு சென்றார்கள். ஏனோ யாமினி நித்யாவிடம் நகுல் மருத்துவமனையில் இருப்பதாக சொல்ல மறந்தாள்.

அவள் செய்த சிறு பிழை இவர்களின் நட்பை அழிக்குமா..? பார்ப்போம்....

வேலையின் பளு இரண்டு பேரையும் தாக்க கொஞ்சம் நேரம் ஓய்வெடுக்க கான்டீனுக்கு சென்றனர். யாமினி காஃபி வாங்க சென்ற போது நிகில் நித்யாவை அழைத்தான். நிகில் யாமினிக்கு தான் அழைக்க எண்ணினான் ஆனால் அவளுடைய அலைபேசி அணைத்து வைத்திருந்ததால் இவளை அழைத்தான்.

எடுத்த உடனே
" எங்கடா ரெண்டு பேரும் போனீங்க..? வேலை பளு பென்ட் எடுத்தாச்சு.. "
"யாமிகிட்ட சொன்னேனே.. நௌ நகுல் இஸ் ஔட் ஓஃப் டேஞ்சர்." நிகில் யாமினி இவளிடம் சொல்லி இருப்பாள் என்று எண்ணி சொல்லி விட்டான். நகுலுடன் இவளின் உரவு மாறியிருபாபதை இருவரும் அறியவில்லை.
"என்னாச்சு நகுலுக்கு..?" படபடப்போட கேட்டாள் நித்யா.
 
Top