Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 16

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 16
“மீ.ரா..!! மீர்ரா..!! ப்ளீஸ் அ..அ.வளை விட்டுடு விக்.கி!!” என்று ஏதேதோ முனகிய சமர்த்தை தோளை தொட்டு எழுப்பினான் கோவிந்த்.

“என்ன ஆச்சு கோவிந்த்? மீரா எங்க? மாமி, மாமா வந்தாச்சா?” என்று கேட்ட சமர்த்தை கவலையுடன் பார்த்தான் கோவிந்த்.

செவிலியர் அறைகதவை தட்டிய ஒலியில் விழித்திருந்த சமர்த்திடம் அலைபேசியில் வந்திருந்த தகவல்களை காண்பித்திருந்தான் கோவிந்த்.. அதைப் படித்தவுடன் சில நிமிடங்களில் மறுபடியும் உறக்கத்தை தழுவினான் சமர்த்.

சமர்த் தூங்கியதை கோவிந்த் கவனித்திருக்கவில்லை..

ஐந்து பத்து நிமிடங்களுக்குள், அளிக்கப்பட்ட மருந்துகளின் விளைவால் ஒருவித மயக்கம் கலந்த தூக்கத்திற்கு சென்றிருந்தான் சமர்த்.. அதற்குள்ளாகவே மீராவை குறித்து ஏதோ கெட்ட கனவு கண்டு புலம்பியது, கோவிந்திற்கு கவலையாகவே இருந்தது..

“சமீர் எதுக்குடா மீரா மீரா ன்னு கத்தின, இதுல அவளை விட்டுடுன்னு வேற? என்ன கனா எதாச்சும் கண்டியா? இல்ல, உடம்புக்கு ஏதானும் பண்றதாடா?” என்று சமர்த்திடம் கவலையுடன் வினவினான் கோவிந்த்.

“தங் காட்..!! அது கனவு..!! அந்த விக்கி சமீரா கழுத்துல கத்தி வச்சிருக்கிற மாதிரி கனவு வந்துடுத்து கோவிந்த்.. நாம எல்லாம் ‘மீரா, மீரா’ ன்னு கத்தற மாதிரி வேற இருந்தது அந்த கனவுல.. அதான் நான் நிஜமாவே கத்திட்டேன் போல இருக்கு.. சரிடா அவா எல்லாம் எங்க? நேக்கு அவா எல்லாம் வந்த மாதிரி இருந்ததே..!! அதுவும் கனவா..!!”

“இன்னும் அவா வரலடா.. வர்ற நாழி ஆயிடுத்து..!! இரு மீராக்கு மெசேஜ் பண்றேன்.. எல்லாத்தையும் மனசுல போட்டுண்டு உழப்பிண்டே இருந்தியோன்னோ..! அதான் கனா வந்துடுத்து.. வொர்ரி பண்ணாத சமர்த்..!” என்று கூறிய கோவிந்திற்கு ஒரு சிறு தலையசைப்பை பதிலாக தந்தான் சமர்த்.

தன் சுமி மாமி மீராவை உற்றுப் பார்த்தது எல்லாம் நிஜம் போலவே இருந்தது என்று சமர்த்திற்கு தோன்றியது..

“சமர்த்தா..!! அவா எல்லாம் கீழ வந்துட்டா.. இப்போ தான் மீரா மெசேஜ் அனுப்பினா..” என்றான் கோவிந்த்.

“நீ கீழ போறியா கோவிந்த்?”

“உன்ன தனியா விட்டுட்டு வெளிய போகக்கூடாதுன்னு மேடம் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டு இருக்காங்க..!”

“மீராவா அப்படி சொன்னா?”

“மை மம்மி, உன் ‘சுமி மாமி’ மேடம் தான் டா அப்படி சொன்னா..! மீரா என் கிட்ட பேசறதே அதிசயம்.. எப்போப் பார்த்தாலும் ‘மிஸ்டர்..மிஸ்டர்’ ன்னு தான் என்னை கூப்பிடறா..நேக்கு பிடிக்கவே இல்ல..”

“ஹா..ஹ.” என்று சிரிக்க முயன்ற சமர்த்திற்கு வலியின் மிகுதியால் சிரிப்பே வரவில்லை..

கதவு தட்டும் ஒலியும், ‘ஓபன் தி டோர்’ என்ற மெசேஜும் ஒரு சேர வந்ததால் கோவிந்த் கதவை திறந்தான்.

மாமி சுமி மற்றும் மாமா கிருஷ்ணனுடன் உள்ளே வந்த மீராவையேப் பார்த்தான் சமர்த்..

“சமீர், இப்போ எப்படிடா இருக்கு?” என்று சுமித்ரா கேட்டார்.

“வலி இருக்கு மாமி.. பட் கொஞ்சம் பரவாயில்லை..”

“நல்லவேளை சமீர், இந்த மீராப் பொண்ணு ஒன்னோட(உன்னோட) இருந்தது.. பெருமாள் தான் காப்பாத்தினார்..” என்று கிருஷ்ணன் புலம்பினார்..

“நீங்க சொல்றது வாஸ்தவம் தான் மாமா, மீரா தான் நேக்கு ஹெல்ப் பண்ணினா..” என்ற சமர்த், தன்னைப் பெற்றவர்களின் சுகங்களையும், மாமா கண்ணனையும் விசாரித்து கேட்டு தெரிந்துக்கொண்டான்..

“சரி சரி கொஞ்ச நாழி தூங்கு சமீர்..” என்ற கோவிந்த் மீராவிடம் திரும்பி, “மீரா விக்கி ஆட்கள் எல்லாரும் போயாச்சா?” என்று கேட்டான்.

“சாரி மிஸ்டர்..! அந்த விக்கி நம்ம கலெக்டர் சாரை தேடி வரல.. ஏன் வந்தான்னு தெரில.. யாரைப் பார்க்க வந்தான் ன்னு ஒண்ணுமே புரியல..! பட் தேர்ட் ப்ளோர்க்கு போயிட்டு கிளம்பிட்டான்.. அந்த விக்கியைப் பார்த்ததும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.. உங்க கிட்டயும் தப்பான தகவல கொடுத்துட்டேன் சாரி மிஸ்டர்..!!”

“ஹே மீரா பொண்ணு..!! இவன எதுக்கு நீ இவ்வளோ மரியாதையா கூப்பிடற? அவ்வளவெல்லாம் இவன் வொர்த் கிடையாது..! இவன நீ கோவிந்தான்னே அழைச்சுடு.. என்ன கோவிந்தா நான் சொல்றது சரி தானே..!!” என்று சுமி கோவிந்திடம் வம்பு செய்தார்..

“ம்மா..!!” என்று பல்லைக்கடித்தான் கோவிந்த்.

அவர்களைப் பார்த்து மெளனமாக சிரித்தாள் சமீரா.. மலர்ந்திருந்த அவளின் முகத்தைப் பரவசத்துடன் பார்த்திருந்தான் சமர்த்..

“ம்மா..! நாம அப்பறமா பேசலாமே..! சமர்த் இப்போ தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்.. காயம் பெரிசா இல்லைன்னாலும், ஊசி போட்டுனுட்டு மீராவும் டயர்டா இருப்பா.!. அவளும் தூங்கட்டுமே..! நீயும் சித்த நாழி ரெஸ்ட் எடுத்துக்கோ.. வெளிச்சம் வந்ததும் ஆத்துக்கு போலாம்.” என்று முடிக்கும்போது, அந்த அறைக்குள் செவிலியர் வந்தார்.

“ஏன்மா, கதவ எவ்வளவு நேரம் தான் தட்டுறது? உங்க வீடு இல்லை இது.. டைம்க்கு பேஷன்ட்டை செக் செய்யறது தான் எங்க டியுட்டியே.. இனிமே கதவுக்கு தாள் போடாதீங்க..” என்று சொன்னவர் சமர்த்தை பரிசோதித்து விட்டு சென்றார்.

கிருஷ்ணன் மற்றும் சுமி கோவிந்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தனர்.. அங்கிருந்த நாற்காலியில் சமீரா அமர்ந்திருந்தாள்..

எல்லோரும் இருக்கும்போது படுப்பதற்கு அன்ஈசியாக பீல் செய்தாள் சமீரா.. அதனால் கோவிந்திடம் திரும்பி, “நான் கிளம்பறேன்..!” என்றாள்.

“இந்த டைம்ல ஏன் மீரா போகணும்?” என்றான் கோவிந்த்..

“கோவிந்தா..! என்னையும், மீராவையும் நம்ம ஆத்துல விட்டுட்டு வாடா.. நான் போய் ஸ்நானம் பண்ணி, தளிகையை ஆரம்பிச்சுடறேன்..” என்ற சுமித்ரா, “மீரா..! நேக்கு இந்த ஊருல ஒண்ணுமே தெரியாது.. சமீர் ஆத்துக்கு திரும்பி வரவரைக்கும் நேக்கு ஒத்தாசையா இருப்பியா?” என்று கேட்டார்.

“சாரி மேடம்..! உங்களுக்கு ஹெல்ப் செய்ய என்னால முடியல.. ரொம்ப சாரி மேடம்.. நான் ஈவ்னிங் வந்து கலெக்டர் சாரைப் பார்க்கிறேன்..” என்ற சமீராவின் குரலில் நிறைய வருத்தம் இருந்தது..
 
சமர்த்தின் குடும்பத்தினருடன் சற்று தள்ளியிருப்பதையே நல்லது என்று நினைத்திருந்தவளுக்கு, அவர்கள் கேட்கும் உதவியைக் கூட செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் நிறைய இருந்தது.

சமர்த் சமீராவை கவலையுடன் பார்ப்பதைப் புரிந்துக்கொண்ட சுமித்ரா, “நீயும் என் பொண்ணு மாதிரி தான் மீரா.. யாரோ உன்னை துரத்திண்டு இருக்கறச்ச, இப்படி தனியா கிளம்பறேன்னு சொன்னா, எங்களுக்கு அனுப்ப மனசு வருமா? நீயே சொல்லு மீரா! பத்திரிகை துறைல இருக்கிறவாளுக்கு இந்த மாதிரி இடைஞ்சல் வரும்ன்னு நேக்கு புரியறது தான்.. ஆனா, நான் இந்த கோயம்பத்தூர்ல இருக்கறவரைக்குமாவது நோக்கு துணையா இருக்கேனே..! அதனால இப்போ எந்த மறு பேச்சும் பேசாம, என்னோட கிளம்பி ஆத்துக்கு வர்ற வழியப்பாரு..” என்று சொன்னவர் சமீராவின் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

“அது வந்து மேடம்..எனக்கு எந்த பய” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த சமீராவை தடுத்த சுமி, “மீராம்மா இப்போ நோ பேச்சு.. நாம இப்போ ஆத்துக்கு கிளம்பறோம்..!” என்று கூறி முடித்தார்.

இவர்களையே ஆ!! வென்று பார்த்துக்கொண்டிருந்தான் கோவிந்த். எப்பொழுதுமே தன்னிடம் பேசும்போது காட்டும் எதிர்ப்பை, தன் அன்னையிடம் காட்டாது அமைதியாக இருந்த மீராவையே அதிசயமாகப் பார்த்திருந்தான் கோவிந்த்.

கோவிந்தின் தோளை தொட்டு தட்டிய சுமி, “ஏண்டாப்பா கோவிந்தா!! கிளம்பற ஐடியா இருக்கோன்னோ!” என்று கேட்க, அதற்கு “போலாம் மா!” என்று பல்லைக் கடித்துக் கொண்டே விடையளித்தான் கோவிந்த்.

“சமர்த்க்கு என்ன ஆகாரம் கொடுக்கலாம்ன்னு கேட்டுண்டு வா கோவிந்தா..!!”

“ம்மா! வா மா போற வழில கேட்டுண்ட்றலாம்.. ப்பா! நீ படுத்துக்கோ, சமர்த் தூங்கிடுவான்னு நினைக்கிறேன்.. இவாள ஆத்துல விட்டுட்டு வரச்ச, நோக்கு காபி எடுத்துண்டு வரேன்..” என்றான் கோவிந்த்..

“மாமி நேக்கும் உங்க காபி வேணும்.. சேர்த்தே கொடுத்துவிடுங்கோ.. உங்க கையால காபி சாப்ட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு..” என்று சமர்த் சுமியிடம் கேட்டான்.

“நோக்கும் சேர்த்து கொடுத்து விடறேன்.. ஆனா சிஸ்டர் கிட்ட கேட்டுட்டு சாப்டு சமீர்.. கிளம்பட்டுமா சமீர்.?” என்றார் சுமித்ரா.

“சரி மாமி.!”

சமர்த்திடம் ஒரு சிறு தலையசைப்பில் விடைபெற்ற சமீரா, கிருஷ்ணனிடம் புன்னகைத்து விடைபெற்றாள்..

செல்லும் சமீராவை பார்த்திருந்த சமர்த்தின் கண்கள் சற்று சோர்வுடன் தாமாகவே மூடிக்கொண்டன.

அடுத்த பத்து நிமிடங்களில் சுமித்ரா, கோவிந்த் மற்றும் சமீராவுடன் வீட்டிற்குள் நுழைந்தார்..

அங்கிருந்த படுக்கை அறையில் சமீராவை படுக்க சொன்ன சுமித்ரா, அவருடைய கைபேசி மட்டும் பொருட்களை அங்கேயே அழகாக அடுக்கி வைத்தார்.

“கொஞ்ச நாழி படுத்துக்கோ மீரா..! நான் உனக்காக தான் இவ்வளவு சீக்கிரம் இங்கே வந்ததே.. அவா முன்னாடி நீ படுக்கறதுக்கு ரொம்ப சங்கோஜப் பட்டியோன்னோ, அதான் உன்னை இங்க அழைச்சுண்டு வந்தேன்.. எதைப் பத்தியும் கவலைபடாம தூங்கும்மா.. அம்மா பக்கத்துல இருக்கேன் நீ தூங்கு..” என்றார் சுமித்ரா..

சுமித்ராவையே பார்த்திருந்த சமீரா தூக்கத்தை தொலைத்தாள். சமீராவின் கண்களில் தெரிந்த அசதியைப் புரிந்துக்கொண்ட சுமித்ரா, சமீராவின் தலையை தன் மடி மீது வைத்துக்கொண்டார்..

“மீரா உன் கண்ணுல நிறைய தூக்கம் தெரியுது.. ஆனா அதையும் மீறி நீ முழிச்சுக்கணும் ன்னு என்னை உத்துப் பாத்துண்டே இருக்க.. இப்படி தூக்கத்தை கெடுத்துக்கறது உன் உடம்புக்கும் மனசுக்கும் நல்லதில்லை.. நான் மெதுவா பாடறேன் நீ தூங்கு மா..” என்று சொல்லி அவளின் தலையை தடவிக்கொடுத்தார்..

“ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கில னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்”

என்று ராகத்துடன் பாடி முடிக்கையிலேயே சமீரா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

அந்த கண்ணனைப் பெற்றவள் தேவகியாக இருந்தாலும், வளர்த்தது என்னவோ யசோதை தான்.. தவழ்ந்து ஓடியாடி விளையாடி, மண்ணை உண்டு, நண்பர்களுடன் இணைந்து வெண்ணை திருடி, காளிங்கன் மேல் நர்த்தனம் ஆடி, கோபியர்களிடம் கொஞ்சி பேசி, பூதனா போன்ற அரக்கர்களிடமிருந்து அந்த பிருந்தாவனத்தையே பாதுகாத்தது போன்ற எந்த நிகழ்வுகளையுமே தாய் தேவகி அறிந்திருக்கவில்லை.. இவை எல்லாவற்றையும் பெற்றது யசோதா மட்டுமே..

அதேபோல தான் பவித்ராவும்.. குழந்தை மீராவின் வளர்ச்சியை ஒரு வயது வரை மட்டுமே அனுபவித்தவள். அந்த குழந்தை காணாமல் போனதும் இந்த உலகத்தை விட்டே சென்றுவிட்டவள், இன்று சுமித்ராவின் மனதிற்குள் புகுந்தாரோ, என்னவோ..? ஆசை தீர மகளின் தலையை வருடிக்கொடுத்து பாடி தூங்க வைத்தாரோ!!

சுமித்ரா இந்த பாசுரத்தை ஏன் பாடினார் என்று அவருக்கே புரியாத போது அதைப்பற்றி என்ன சொல்வது. சுமித்ராவிற்கும் இவள் பெண் தான்.. சமீரின் மனதை கவர்ந்தவள் தனக்கு பெண் என்ற கண்ணோட்டத்தில் இருக்கும் அவர், தங்கை பவித்ராவின் பெண் தான் இந்த மீரா என்று தெரிந்தால் என்ன செய்வார்? காலம் தான் பதில் சொல்லும்..

இங்கே உறங்கிக்கொண்டிருப்பவளுக்கும் இரண்டு அன்னையர் தாம்.. இப்பொழுது சுமித்ராவையும் சேர்த்து மூன்று அன்னையர் ஆனார்கள்..

பவித்ராவின் பெண்ணாய் பிறந்தவள், பேகத்திற்கு வளர்ப்பு பெண்ணானாள்.. ஆனால் இன்னும் அவளின் பிறப்பின் ரகசியம் அவளுக்கு தெரியவில்லை.. தெரிந்தாலும் அவள் இப்ராஹீமையும், பேகத்தையும் விட்டுக்கொடுப்பாளா என்பதும் சந்தேகமே..

ஆனால் அந்த கிருஷ்ண பரமாத்மா, அவளுக்கு, அவளின் பிறப்பின் ரகசியத்தை, அவள் அறிய செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டபடியால், இன்னும் சில நாட்களில் கோவிந்தின் மூலம் அதை செய்யவும் அவர் திருவுள்ளம் கொண்டிருக்கிறார். அவரை தடுக்க யாரால் தான் முடியும்..

மாயக் கண்ணன் மாயங்கள் பல நடத்தி, சமீராவை அவளின் தந்தை கண்ணனுடன் இணைக்கும் நாள் நெருங்கிவிட்டது..
 
Top