Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi---4

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
யாமினியின் பிறந்த நாள்...வழக்கமாக ஜெயராம்-சிவசங்கரி தம்பதி பிள்ளைகள் பிறந்த நாள் விழாவை ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதுதான் வழக்கம்...ஆனால் இன்று??திட்டமே வேறு...

‘’ஜெயா!! ஈவினிங் சீக்கிரமா வந்துடுங்க’’---சிவசங்கரி..

‘’ஓகே..சிவா..ஆசிரமத்துக்கு போறதுக்குத்தான..’’

‘’இல்ல ஜெயா...ஒரு சேஞ்ச்! இன்னிக்கு நாம போகல...ஆசிரமந்தான் நம்ம வீட்டுக்கு வருது ‘’

‘’இஸ் இட் ?வொய்’’

‘’ம்.....என்னவோ தோணுச்சு...ஆசிரமத்துக்குள்ளதான அடைஞ்சு கிடக்கறாங்க....அந்த பசங்களை இங்க கூட்டிட்டு வந்து ட்ரீட் குடுத்தா,

அவங்களை இன்னும் அதிகமா சந்தோசப்படுத்த முடியும்னு இப்டி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன்’’

‘’நல்ல ஐடியாதான்...பட்,இதுக்கு ஆசிரமத்துல ஒத்துக்கிட்டாங்களா?’’

‘’உடனே ஓத்துக்கலை...ரொம்ப யோசிச்சாங்க...அது வழக்கமில்லையேம்மா அப்டின்னாங்க...ஆனா,பசங்களுக்கு நம்மளைத்

தெரியும்ல..வரோம் வரோம்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க....அப்றம் வீடு எங்க இருக்கு...எப்டி பசங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்க

அப்டின்னு டீடைல்ஸ் கேட்டாங்க..சொன்னேன்...கடைசியில,ஒத்துகிட்டாங்க..பட்,ஆசிரமத்லேர்ந்து ஒரு கேர் டேகர் பிள்ளைங்க கூட

வருவோம்னு சொன்னாங்க...தாராளமா வாங்கனுட்டேன்’’

சிரித்துக் கொண்டான் ஜெயராம்...சிவசங்கரியா கொக்கா?

‘’நினைத்ததை முடிப்பவன் நான் நான் நான் ‘’

‘’என்னாச்சு ஜெயா....சம்பந்தமில்லாம பாட்டு””
‘’இல்ல சிவா..நீ பாட வேண்டிய பாட்டு...நீ பாடறதா நினைச்சு நான் பாடிட்டு இருக்கேன்’’

வெட்கத்துடன் சிரித்தாள் சிவா...

‘’இந்த புன்னகை என்ன விலை?’’

‘’அஞ்சாயிரம்’’ என்றாள் சிவா-

‘’கொஞ்சம் அதிகமா தெரியுதே’’


‘’தெரியும்...தெரியும்...ரெண்டு குட்டிய போட்டாச்சுல்ல...அப்டித்தான் தோணும்...நான் கேட்டது ஈவினிங் செலவுக்கு’’

‘’கையில இல்ல.... ஏடீஎம்ல எடுத்து சுந்தர்கிட்ட குடுத்தனு ப்பறேன்...இப்ப டிபன் எடுத்து வையீ’’
டேபிளில் அமர்ந்தான்...

‘’இட்லிதானா...ஸ்பெஷல் எதுவுமில்லையா?’’
‘’எல்லாம் ஈவ்னிங்க்தான்...வயிறை பிரீயா வச்சுக்கங்க’’

அதற்கு மேல் பேச முடியுமா....ருசியை மறந்து பசிக்கு சாப்பிட்டு எழுந்தான்...மாலையில் மனைவி சொன்னது போலவே, சற்று முன்னதாகவே சுந்தரையும் அழைத்துக் கொண்டு ஜெயராம் வீடு வந்து சேர்ந்த பொழுது,ஏறத்தாழ முப்பது சிறுவர் சிறுமியர் வீட்டில் இருந்தனர்...வீடு

நிறைந்து காணப்பட்டது.....சில பிள்ளைகள்,யாமினியுடன் சேர்ந்து கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க,யுவனுடன் சில சிறுவர்கள்

வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்...ஏனைய சிறுவர்கள் தோட்டத்தில் இருக்க,ஜெயராம் கண்களாலேயே மனைவியைத்

தேடினான்...பார்க்க முடியவில்லை...சில சிறுவர்களை அழைத்து ,அவர்களது குடும்ப சூழ்நிலை குறித்து கேட்டறிந்தான்..சிலருக்கு அப்பா

இல்லை...சிலருக்கு இருக்கும் அப்பா பொறுப்பானவராக இல்லை...இந்த பிஞ்சுகள் செய்த பாவமென்ன?யார் கையிலோ எப்படி எப்படியோ வளர்க்கிறார்கள்...சில சிறு குழந்தைகள்,மிரண்ட விழிகளுடன்,எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல்.சுவர் ஓரமாய்

அமர்ந்திருந்தார்கள்...பெரிய வீடும்,ஆடம்பரப் பொருட்களும்,ஆர்ப்பாட்டமான பேச்சும் சிரிப்பும்,எதுவும் அவர்களை

பாதிக்கவில்லை...உன்னுடைய வசந்தத்திலே ஒன்றுமில்லை ரசிப்பதற்கு என்பது போல் இருந்தனர்...பாவம்...அவர்கள் மனதில் என்ன

காயமோ...என்ன போராட்டமோ?






பெருமூச்சுடன் எழுந்து பாத்ரூம் சென்றான் ஜெயராம்...முகம் கைகால் கழுவி,உடை மாற்றி,தானும் தயாரானான்...ஆறுமணி

ஆனதும்,,,விருந்தாளிகள் மொட்டை மாடிக்கு செல்லும்படி அறிவிக்கப்பட்டது...எல்லாம் கூச்சலுடன்,முண்டியடித்துக் கொண்டு ஓடியது..சிறிது

நேரத்தில்,வெள்ளம் வடிந்த கரையாய் ,தெரிந்த வீட்டில்,சிவா தென்பட்டாள்...

‘’ஜெயா...ஜம்முன்னு ரெடியாயிட்டீங்க....ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்ல..’’ என்றாள்..

‘’சொல்லும்மா...அதுக்குத்தான சீக்கிரம் வந்திருக்கேன்...என்ன செய்யனும்?’’

‘’மொட்டை மாடியில வச்சித்தான் பர்த்டே செலிபரேசன்’’
‘’ஏன்’’

‘’இன்னிக்கு பௌர்ணமியில்ல...மொட்டை மாடியில வச்சி சாப்ட்டா ஏகாந்தமாயிருக்கும்...பிள்ளைங்களும்,ரசிப்பாங்கள்ல ..அதான்’’

‘’ஓகே...என்னவெல்லாம் ரெடி பண்ணியிருக்கே’’
‘’குலோப்ஜாமூன்,பிரெட் ஆம்லெட்,ஸ்பிரிங் ரோல்ஸ்....கடைசியில ஜிகர்தண்டா—கூலிங் அதிகமில்லாம’’

‘’சூபர்..பேப்பர் பிளேட்ஸ் ,கப் எல்லாம்’’
‘’எல்லாம் ரெடி...குடிக்க தண்ணீ,கை துடைக்க டிஸ்யு பேப்பர் இதெல்லாம் கூட எடுத்து வச்சிட்டேன்’’

‘’வெரி குட் ....இப்ப இது எல்லாத்தையும் மொட்டை மாடிக்கு ஷிப்ட் பண்ணனும்...அவ்வளவுதானே...ஒகே...சுந்தர் ஒரு கை பிடி...’’
அனைத்து பொருட்களும் நிமிடத்தில்,மொட்டை மாடிக்கு இடம் மாறியது...அனைவரும்,அனைத்தும்.மொட்டை மாடிக்கு வந்து குழுமியாகி விட்டது...

யாமினி பட்டு பாவாடை சட்டை போட்டு,நீளமான பின்னலில்,பூச்சூடி,தேவையான நகைகளும் அணிந்திருந்தாள்...பவுர்ணமி நிலவில்,அதன் மஞ்சள் ஒளியில், தேவதையாக மின்னினாள் யாமினி...

அனைவரும் வட்டமாய் நிற்க, பிறந்த நாள் விழா தொடங்கியது...ஒரு டீபாயில் ,யாமினியின் வயதை குறிக்கும் வண்ணம் பதினான்கு விளக்குகள் தயாராக வைக்கப்பட்டிருந்தது...பதி மூன்று விளக்குகளை,மற்ற சிறுமிகள் ஏற்ற,யாமினி பதினான்காவது விளக்கை ஏற்றினாள்...அனைவரும் கை தட்டி பிறந்த நாள் பாட்டு பாடினர்...
‘’நீண்ட நீண்ட காலம் நீ
நீடு வாழ வேண்டும்..
வானம் தீண்டும் தூரம் நீ
வளர்ந்து வாழ வேண்டும்..
அன்பு வேண்டும்..
அறிவு வேண்டும்..
பண்பு வேண்டும்,,பரிவு வேண்டும்..
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்...
எடுத்துக் காட்டு ஆக வேண்டும்...
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவு தாளில் எழுத வேண்டும்..
சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நான் சொல்லி...
வாழ்த்துகிறோம்...
பிறந்த நாள் வாழ்த்துகள்...இனிய
பிறந்த நாள் வாழ்த்துகள்...’’

பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து ராகத்தோடு பாட,..தொன்மை தமிழின், தூய ஆசீர்வாதத்தில் நெகிழ்ந்து விட்டாள் யாமினி...ஜெயராம்

மகளை ஆசீர்வதித்து கைக்கடிகாரமொன்று பரிசளித்தான்...ஆசிரமத்தின் சார்பாக,இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது...சுந்தர் சிறிய கைப்பை ஒன்று தந்தான்...தொடர்ந்து அனைவருக்கும்,பேரீச்சம் பழமும்,கடலை மிட்டாயும் வழங்கப்பட்டது...சிறுமிகளில் ஒருத்தி,உணர்ச்சி

வசப்பட்டு,யாரும் சொல்லாமலே தானாகவே பாடத்தொடங்கி விட்டாள்...

‘’அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே ....
அதி ரூபன் தோன்றினானே..
வைக்கொலின் மீதோரு
வைரமாய்..வைரமாய்
வந்தவன் மின்னினானே ‘’ என்று சிலாகித்து பாடினாள்
...உண்மையில் நல்ல குரல்...

அனைவரும் கைதட்டி அவளை உற்சாகப்படுத்த...ஜெயராம் அவளுக்கு பணம் பரிசளித்தான்..வெயில் மங்கி மஞ்சளை தெளித்தாற் போலிருந்த வானமும்,வேகமாக ஓடிய மேகங்களும்,இரவு நெருங்கியதால் ஏற்பட்ட குளுமையும்,பசுமையான செடி கொடிகளின்,தலையசைப்பும்,கையில்,பிடித்தமான திண்பண்டங்களும்,பிள்ளைகளை ஆனந்தத்தின் உச்சிக்கே அழைத்து சென்றன...மனம் போன போக்கில் விளையாடினார்கள்..
..அத்தனை பேர் ,அதுவும்,கள்ளம் கபடம் அறியாத இளையோர் கூடியிருப்பதால்,எனர்ஜி லெவல் அதிகமாகியிருக்க,அதோடு வான் காந்த சக்தியும் சேர்ந்து கொள்ள,காரணத்தோடும்,காரணமின்றியும் கூட, சிரித்து மகிழ்ந்தனர்..பிள்ளைகள் பேப்பர் தட்டுகளில் தரப்பட்ட உணவுகளை,கையில் எடுத்து பார்த்து ரசித்து,ஆசையுடன் உண்ணத்தொடங்கினர் ....இந்த காட்சியை நுணுக்கமாய் கவனித்த,சிவசங்கரிக்கு கண்களில் நீர் திரண்டது..யாரும் கவனியாதவாறு துடைத்துக் கொண்டாள்...

திடீரென்று,கூட்டத்தின் ஒரு பக்கமாய் சலசலப்பு.....அருகில் சென்று பார்த்தால்,அங்கு ஒரு சிறுவனுக்கு,வலிப்பு வந்து,கீழே விழுந்து கிடந்தான்...சிறிது நேரம் முன்பு வரை,சிரித்து விளையாடிக்கொண்டிருந்த பையனா இவன்...பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
..சிவசங்கரி பயத்தில் உறைந்து போய் விட,ஜெயராமுக்கு வியர்த்து ஊற்றியது....செய்வதறியாது விழி பிதுங்கி நின்றான்...அதற்குள்,சுந்தர் சுதாரித்துக் கொண்டான்....கூட்டத்தை விலக்கி,உள்ளே புகுந்து,தரையில்,அமர்ந்து,அந்த சிறுவனை வாரி எடுத்து தன்மடியில் போட்டுக் கொண்டான்
...நாக்கை கடித்து விடாதவாறு,தனது விரல்களை அவன் வாயில் கொடுத்து,அங்கு கிடந்த புத்தகத்தால் விசிறி ஆசுவாசப்படுத்தினான்...அதற்குள் காப்பாளர் அருகில் வந்து,அவனுக்குரிய முதல் உதவியை செய்ய,சிவசங்கரி கீழே ஓடிப்போய்,சூடாக ஹார்லிக்ஸ் போட்டு கொண்டு வந்து தந்தாள்.
..சூடு பறக்க ,அவனது கை கால்களை தேய்த்து விட,சிறிது நேரம் சென்று ,அவன் கண் திறந்ததும் தான்,அனைவருக்கும் மூச்சு வந்தது...வாடிப் போன ஜெயராம்,சிவசங்கரி முகங்களை பார்த்து

‘’மேடம்....நீங்க எதுவும் கில்டியா ஃபீல் பண்ணாதீங்க...அடிக்கடி வர்றதுதான்...ட்ரீட்மெண்ட் குடுத்திட் டுருக்கோம்...வளர வளர சரியாயிரும்னு சொல்லியிருக்காங்க...நரம்புகள் பலவீனமா இருக்கறதால ,அதிக சந்தோஷத்தை அவனால தாங்க முடியல...நோ பிராபளம்....காலையில நார்மலாயிடுவான்..ப்ளீஸ்...நீங்க கண்டிநியூ பண்ணுங்க...’’ என்று காப்பாளர் தேற்றினாள்...
எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்...ஜிகர்தண்டா வழங்கப்பட்டதும், சில பிள்ளைகள்,மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி குடித்தனர்...இரவு சுமார் எட்டு மணி அளவில்,பிள்ளைகள் அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கி ,குரூப் போட்டோ எடுக்கப்பட்டு ,வழியனுப்பி வைத்தனர்.
..இரண்டு வேன் கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...நடக்கும் நதியாய்,பிள்ளைகள்,ஒழுங்கு மாறாமல்,வரிசையாய் செல்வதையே,கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவா....யாமினியின் இவ்வருட,பிறந்தநாள் நிறைவு...நிறைவு..அப்படி ஒரு மன நிறைவு... ..







 
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள் ஸ்ரீதர் டியர்
 
Last edited:
Top