Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-27

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்---27
ரவிவர்மா-தாமரை,துருவன்-நந்தினி திருமண நாள் வந்தே விட்டது...நந்தினி தாமரை இருவரும் மெரூன் கலர் பட்டு,பச்சை கலர் வொர்க் செய்த கிராண்ட் பிளவுஸ் ,அதற்கேற்ற அணிகலன்கள்,ஜடை அலங்காரம் ஆகியவை செய்திருந்தனர்..ஆண்கள் இருவரும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து இருந்தனர்...உறவினர்கள்,நண்பர்கள் இவர்களுடன்,இயற்கை உணவக வாடிக்கையாளர்களும் வந்திருந்தனர்.

...ஜெயராம்தான் வீடியோ மற்றும் ஃபோட்டோ....சுந்தரையும் ரமேஷையும் உதவிக்கு வைத்துக்
கொண்டு,வேலை செய்து கொண்டிருந்தான்
.....உள்ளூரிலேயே குடியேறி விட்ட விஜயகுமார்-ஷோபனா தம்பதி ,சிவசங்கரி ,ராஜம்,பிள்ளைகள் என அனைவரும் ஆஜர்...ரவி வர்மா முழுக்கை சட்டை அணிந்து இருந்ததால்,பார்ப்பதற்க்கு வித்தியாசமாக எதுவும் தெரிய வில்லை...செயற்கை கை உடலோடு நான்கு பொருந்தி விட்டதால்,இப்பொழுது கைகளை சிரமமின்றி அவனால் இயக்க முடிகிறது

...அலங்கார பூஷிதையாக அமர்ந்திருந்த மகளிடம் இருந்து சரஸ்வதி கண்களை எடுக்கவேயில்லை...இது அவளது வாழ்நாள் கனவு....தன்னருகில் கணவன் நிற்பதாய் ,மானசீகமாக கற்பனை செய்து கொண்டாள்....என் வாழ்வில் நான் கண்ட துன்பங்களை கழித்து,நான் காணாத இன்பங்கள் என் மகள்களுக்கு வசமாக வேண்டும்,,,எனக்கு பெருமை சேர்த்து, என் வாழ்வை அர்த்தப்படுத்திய என் மகள் வாழ்வாங்கு வாழ வேண்டும்....என்று அவள் மனம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.

...கெட்டி
மேளத்துடன் இரண்டு மாங்கல்ய தாரணங்கள் இனிதே முடிந்தது...அனைவரும் வாழ்க மணமக்கள் என கோஷமிட்டனர்....ராகவேந்த்ரா வேகமாக மணவறை ஏறி,மக்கள்,மணமக்கள் நால்வரையும் கை கொள்ளாமல் கட்டிக் கொண்டார்....தன் கடமை மட்டுமல்லாது,தம்பி கடமையையும் ஒரு சேர ,நிறைவேற்றியதில் மட்டற்ற மன நிறைவு அவருக்கு...பெற்றவர்கள் ஆசீர்வாதம் செய்ததும்...மனமக்களுக்கு பாலும் பழமும் வழங்கப்பட்டது...தொடர்ந்து விருந்தினார்க்கு பசும்பாலில் தயார் செய்யப்பட்ட மோர் அருந்த கிடைத்தது....மோரை ருசி பார்த்து ‘’சபாஷ்’’ சொன்ன உணவக வாடிக்கையாளர் ஒருவர்,ஆர்வக் கோளாறில் ,மதியம் என்ன மெனு என்று கேட்க,ஷோபனா ஒப்பித்தாள்...

‘’அவல் இனிப்பு கலவை,வெண்டைக்காய் ஃப்ரை,கேரட் பசும் பொரியல்,பூசனிக்கா கூட்டு,வெள்ளரி -வெங்காயப் பச்சடி,கேரட்-பீட்ரூட் கீர்,இளநீர் பாயாசம்,நுங்கு,மாதுளை ஜூஸ்,ப்ரூட் சாலட்,அவல் தயிர் சாதம்...’’ என்று ஷோபனா மூச்சு வாங்க,

‘’இவ்வளவும் அடுப்பில்லாமலா’’
‘’அடுப்பா! எங்களுக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே கெட்ட வார்த்தை அடுப்பு....நோ ஆயில்....நோ பாயில்...’’ என்றாள் ஷோபனா பெருமையாக...

மணமக்களுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை....பொருத்தமாய் ஒலித்தது பாட்டு....

‘’இல்லம் சங்கீதம்...அதில்
ராகம் சம்சாரம்...
அவன் நாயகன் பாவம்...
பிள்ளை சிருங்கார கீதம்...
லக்ஷ்மி வந்தாளாம்...
வீட்டில் தீபம் வைத்தாளாம்...
கண்ணே!பிள்ளை ஒன்று கையில் கொண்டு வா..
கண்ணா..கொள்ளை இன்பம் அள்ளிக்கொண்டு வா..
வாழ்க்கை கீதை சொல்லும்
பாதை அல்லவோ!
வாழ்க மணமக்கள்...வாழ்க வளமுடன்..
(முற்றும்)




 
Top