Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-26

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-26
அன்று சோபனாவுக்கு பிறந்த நாள்....சும்மா விட்டு விடுவாளா சிவசங்கரி.....மினி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...அன்று விடுமுறை நாள் என்பதும் பல விதங்களில் சௌகரியமாகப் போயிற்று....

சோபனாவுக்கு விஜயகுமார் புடவை எடுத்திருந்தான்...சிவசங்கரி ஆன்லைனில் ஒரு ரெடிமேட் சுடிதார் வரவழைத்து இருந்தாள்...ஜெயராம்,விஜயகுமார்,பிள்ளைகள்,சுற்றி நிற்க,கேக் கட் பண்ணத்தொடங்கினாள் ஷோபனா....பிள்ளைகள் பிறந்த நாள் பாட்டு பாடினார்கள்....ஷோபனா முதல் துண்டு கேக்கை சிவசங்கரிக்கு கொடுத்தாள்...பிறகு கணவனுக்கு,யாமினி,யுவனுக்கு ஊட்டி விட்டாள்...சிவசங்கரி ஒரு கேக் துண்டு எடுத்து கணவனுக்கு வாயில் தந்தாள்...

‘’பர்த்டே அன்னிக்குத்தான் ஹஸ்பண்டுக்கு ஊட்டி விடணும்னு சட்டமா என்ன’’ என்று தானே விளக்கமும் தந்தாள்...
‘’தாராளமா....யாருக்கா வேண்டாம்னா’’----ஷோபனா...
பிள்ளைகள் சோபனாவுக்கு கிஃப்ட் தர,விஜயகுமார் மனைவிக்கு ஹேண்ட்பேக் ஒன்று பரிசளித்தான்....
‘’என்ன ஒரு கிஃப்ட் தானா’’ ---சிவசங்கரி..
‘’ஆமா’’
‘’இன்னொரு கிஃப்ட்டும் நீங்க அவளுக்கு தரனும்ல’’
‘’எதுக்கு’’
‘’உங்களை அப்பாவா ஆக்கியிருக்காள்ல’’

‘’அப்பிடியா’’ என் அவன் மனைவியைப் பார்க்க அவள்
சிரிப்புதான் ‘’ஆமா’’என்றாள்....
‘’ஷோபனா அக்காவுக்கு குட்டி பாப்பா பிறக்கப்போகுது’’
‘’ஓ ‘’ வென சந்தோசக் கூச்சல்....
‘’ஷோபனா....எப்ப....நீ என்கிட்ட சொல்லவேயில்ல’’ என்று விஜயகுமார் பாவமாய்க் கேட்க,,,,,,

‘’சாரி விஜய்....இந்த விஷயத்தை முதல்ல சங்கரி அக்காகிட்ட சொல்லனும்கிறதுக்காத்தான் உங்க கிட்ட கூட சொல்லல...நேத்துதான் கன்ஃபார்ம் ஆச்சு....!என்னோட பிறந்த நாள் பரிசா,காலையிலதான் அக்காகிட்ட சொன்னேன்...அவங்கதானே கோர்ட் வாசலை மிதிச்ச ,என்னோட வாழ்க்கையை மீட்டெடுத்து வந்து ,என் கையில சேர்த்தாங்க...என்னைப் பெறாத என்னோட தாய்க்கிட்டதான.நான் தாயாகப் போறதை சொல்லணும்...!அதுதானே நியாயம்..!’’ குரல் தழு தழுக்க ஷோபனா சொல்லவும்,சிவசங்கரி மகிழ்வில் கண் கலங்கி விட்டாள்....மனைவியை நினைத்து நெகிழ்வில் கண்கலங்கினான் ஜெயராம்....சிலருக்கு மனைவி ஒரு வரமாய் வந்து அமைவதுண்டு..ஆனால் எனக்கு,வரமே உருவெடுத்து மனைவியாய் வந்து வாய்த்திருக்கிறது ...மானசீகமாய் இறைவனுக்கு நன்றி சொன்னான் ஜெயராம்..

.விஜயகுமாருக்கு வாயடைத்து போயிற்று....என்ன சொல்வதென்றே தெரியவில்லை...நன்றி என்றெல்லாம் சொன்னால் அசிங்கமாகப் போய்விடும்....சட்டென்று ஜெயராம்-சிவசங்கரி தம்பதியின் காலில் விழுந்தான் விஜயகுமார்...ஜெயராம் அவனை தூக்கி நிறுத்தி தோளோடு சேர்த்து அனைத்து வாழ்த்துகள் சொன்னான்.

‘’எங்களைப் போல.ஆசைக்கு ஒரு பொண்ணும்,ஆஸ்திக்கு ஒரு ஆணும் பெத்து ,சிறப்பா இருங்க’’
‘’ஏன் அத்தான் உங்களுக்கு,இப்பிடி ஒரு கஞ்சத்தனம்’’
‘’ஏம்மா’’
‘’நான் ஒரு அஞ்சாறு பெத்துக்கலாம்னு .இருக்கேன்.....சப்புன்னு ரெண்டோட முடிக்கறீங்க’’
அனைவருக்கும் சிரிப்பு தாளவில்லை...

‘’தாராளமா பெத்துக்கம்மா....மகளே உன் சமர்த்து..எனக்கென்ன’’
வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம்....எட்டிப் பார்த்தனர்....ஜெயராமின் அம்மா ராஜம்...அனைவரும் போய் வர வேற்று உள்ளே அழைத்து வந்தனர்....தண்ணீர் அருந்திய ராஜம். சோபாவில் அமர்ந்தாள்....
‘’அத்தை..நீங்க யதேச்சையாத்தான் வர்றீங்களா’’
‘’ஆமா கண்ணு..சோபனாவை இங்க விட்டுட்டு போயி மூணு நாலு மாசமாச்சே....ஊருக்கு அழைச்சிட்டு போலாம்னு வந்தேன்....ஷோபனா மாப்ளையும் இருக்காக போல’’

‘’ஆமாத்தை....நிறைய நல்ல விஷயம் நடந்து போச்சு...அதையெல்லாம்,மெதுவா ஆற அமர உங்களுக்கு சொல்றேன்....அதுவும் போக,நீங்க இப்ப சோபனாவை மட்டும் ஊருக்கு கூட்டிட்டு போக முடியாது....அவ இப்போ ரெண்டு ஆளா இருக்காள்ல’’

‘’புருஷன் பொஞ்சாதி சேர்ந்துட்டாகன்னு சொல்லுதியா...நீர் அடிச்சு நீர் விலகுமா....சின்னஞ்சிறுசுக...அப்டித்தான் இருக்கணும்’
‘’அத்தை அப்டிப்பாத்தா மூணு பேரு’’
‘’என்னம்மா சொல்லுத’’
‘’அத்தை உங்க மருமக முழுகாம இருக்கா’’
‘’அடி ஆத்தி! இது எப்போ? எனக்கு தெரியாதே’’ என வாய் பிளக்க...
‘’இன்னிக்குத்தான் உங்க மருமக விஷயத்தை சொன்னா’’

‘’அம்மா..தாயீ...உனக்கு கோடி சரணம்....மாரியம்மா எங்கண்ணன் குடும்பத்தை விளங்க வச்சிட்டாளே’’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள்...வாழ்வின் ஏற்ற தாழ்வான நிகழ்வுகளையெல்லாம்,இறைவனிடம் அர்ப்பணித்து ,தான் ஒரு கருவி மட்டுமே என்பதை புரிந்து கொண்டு வாழும் ,படிக்காத மேதை அவள்...அத்தையின் காலில் விழுந்து எழுந்தார்கள் விஜயகுமார்,ஷோபனா...ராஜம் இருவருக்கும் தனது சுருக்கு பையில் இருந்து விபூதி எடுத்து பூசி விட்டாள்...

‘’ஆயுசோட இருங்கப்பா...உங்க குலம் தழைக்கட்டும்’’
‘’அத்தை உங்க நம்பிக்கையை நான் குறை சொல்லல...ஆனா,எனக்கு முதல்ல அருள் புரிஞ்சது இந்த சங்கரியம்மாதான்....அவங்களே பிளான் பண்ணி,என் வாழ்க்கையை எப்பிடியோ சரி பண்ணிட்டாங்க...கிரேட் சங்கரியக்கா’’என்று ஷோபனா சிவசங்கரியை தன்னோடு சேர்த்து கட்டிக்கொண்டு பாராட்ட....

‘’ஏ புள்ள ஷோபனா!உனக்குத்தான் இது புதுசு.நம்ம ஊருல இல்லாத சொந்த பந்தமா..ஆனா,அவுகள்லாம் உனக்கு சோறு மட்டும்தான் போடுவாக ...எனக்கு என் மருமகளைப் பத்தி தெரியும்‌லா....அதனாலதான உன்னைய இங்க கூட்டியாந்து வந்து விட்டுட்டு போனேன்....என் மருமக லேசுபட்டவ இல்ல...அவ பசிக்கு விருந்து தருவாள்...நோய்க்கு மருந்து தருவாள்ல,,,இந்த ராஜம்மா மருமக சோடை போயிடுவாளா என்ன?’’ என்று உணர்ச்சி மிகுதியில் பேசிக்கொண்டே போக,அனைவருக்கும் சிரிப்பும் வியப்பும் அள்ளிக்கொண்டு போனது.

...மாமியார் மருமகளுக்குள் என்ன ஒரு புரிதல் என்ற ஒரு ஆச்சரியம் ஏற்பட்டது...மன நிறைவுடன் இருந்தவர்கள் வயிற்றை நிறைக்க டைனிங் டேபிள் பக்கமாய் போனார்கள்...போடத்தெரிந்தவர்கள் போட்டால் எல்லாக் கணக்குக்கும் தீர்வு உண்டுதானே....
 
Top