Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-25

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்—25
தாமரை அம்மா போட்டு தந்த, சப்பாத்தியை நாலு சாப்பிட்டு விட்டு, ஹாலுக்குள்ளேயே குறுக்கும்,மறுக்குமாக நடந்து கொண்டிருந்த போது,ரவிவர்மாவிடமிருந்து தொலை பேசி அழைப்பு...உடனே தன் அறைக்குள் வந்து விட்டாள்...
‘’சொல்லுங்க வர்மா’’
‘’நமக்கு கல்யாணம் ஒரு வழியா ,முடிவாகி தேதியெல்லாம் குறிச்சாச்சு போல’’ என்றான் மகிழ்ச்சி பொங்க...
‘’அதுதான் எப்பவோ முடிவாயிருச்சே....’’
‘’சரிதான்...ஆனா,நடுவுல ஆக்ஸிடெண்ட் ஆனப்ப,ஒரு பிரேக் ஆயிடுச்சில்ல’’
‘’எனக்கு அப்பிடியெல்லாமில்ல....எப்பவும் ஸ்டேடி’’
‘’அது உன்னோட பெருந்தன்மை’’

‘’வர்மா...நாங்கள்லாம் முடிவுன்னு ஒண்ணு எடுத்துட்டா,அப்புறம்,யார் பேச்சையும்,எங்க பேச்சையே கூட கேக்க மாட்டோம்’’
எதிர்தரப்பில் அமைதி..
‘’என்ன வர்மா! எனி பிராபளம்?’’
‘’இப்ப இல்ல...பிராபளம் ஆயிடக் கூடாதுன்னு யோசிக்கிறேன்’’

‘’பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையை ,கடவுள் யாருக்காவது ,உறுதி மொழி பத்திரம் எழுதி குடுத்துருக்காரா வர்மா?’’

‘’வாய்ப்பில்லதான்....ஆனா,ஏற்கனவே,கையில ஒரு பிரச்சினையோட,கல்யாண பந்தத்துக்குள்ள,நுழையணு மான்னு யோசிக்கிறேன்... ஓபனா சொல்லப்போனா,உன்னோட வாழ்க்கையை ரிஸ்க்குல தள்றனோன்னு பயமாயிருக்கு தாமரை’’

‘’ஏன் வர்மா உங்களுக்கு என்ன...?அழகான அறிவான பையன்...சொந்த பிசினஸ் ,கை நிறைய வருமானம்,சொந்த வீடு,கார்,பைக்,நல்ல குடும்பம்....வேறென்ன வேணும்,,,,எதுக்கு இவ்ளோ ஒரு தாழ்வு மனப்பான்மை?’’

‘’எல்லாம் சரிதான்...!உண்மையிலேயே உனக்கு என்னோட கை மேட்டர் ஒரு விஷ்யமாவே தொணலியா?இல்ல,என்னை புண்படுத்தக் கூடாதுன்னு நினைச்சு கவனமா பேசறியா ?’’

எரிச்சலானாள் தாமரை...

‘’நான் உங்களை புண்படுத்தறேனோ இல்லியோ.நீங்க என்னை நல்லா படுத்தறீங்க....இது ஒரு போர் கொஸ்டீன் வர்மா....எனக்கு ஒண்ணு புரியல...கிளியர் பண்ணுங்க....உங்ககிட்ட இருக்கற இவ்ளோ நல்ல விஷ்யங்களை விட்டுட்டு,இல்லாத ஒண்ணைப்பத்தியே சிந்திக்காட்டி என்ன...அதையே எடுத்துப் பேசாட்டா என்ன? வர்மா.....நடந்து முடிஞ்ச எதையும் நம்மால மாத்த முடியாது....ஆனா,இனி வரப்போற காலங்கள்ல ,நாம நினைச்சா பாசிடிவ்வா எத்தனையோ நல்ல விஷயங்களை பண்ணலாம்...பட்,அதுக்கு நீங்களும் கோ ஆப்பேரட் பண்ணனும்...’’
‘’கரெக்ட்டுதான்...நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன்....எனக்காக இல்லாட்டாலும்,உனக்காக கண்டிப்பா நான் மாறியாகனும்....தெரியுது...புரியுது...ஆனா,சமயங்கள்ல,மனசு இப்பிடி சோர்ந்து போயிடுது’’

‘’ தப்பில்ல வர்மா...உடம்பு எப்பிடி டயர்ட் ஆயிடுதோ,அது போல மனசும் சோர்ந்து போறது இயல்புதான்...அடிக்கடி,நாமா பூஸ்ட் பன்னிக்கணும்...’’
‘’சரி..அடுத்த மாசத்துல இருந்துதான் ஒரு பூஸ்ட் பாட்டிலே என் கூட இருக்குமே...உன்னைத்தான் சொல்றேன்...’’
‘’நான் உங்களுக்கு பூஸ்ட் பாட்டிலா?’’
‘’சரி,,,,வேண்டாம்....போதை பாட்டில்னு வச்சிக்கலாமா’’
‘’துரைக்கு ரொமான்சு மூடு வந்துருச்சி போல...நான் மரியாதையா ஃபோனை வச்சிறேன்...காலையில கடையில பார்ப்போம்...சரியா கண்ணா’’ பதிலுக்கு காத்திராமல்,அலைபேசியை கட் செய்து விட்டு,சிரித்துக் கொண்டாள் தாமரை.....குழந்தை மனம் கொண்டவன்...வர்மாவ்ன் மனம் தளர்ந்து விடாமல் ,பார்த்துக் கொள்ள வேண்டியது தனது கடமை என்று நினைத்துக் கொண்டாள் தாமரை....
‘’அலையோடு பிறவாத கடல் இல்லையே...
நிழலோடு நடக்காத உடலில்லையே...
துடிக்காத இமையோடு விழியில்லையே...
துணையோடு சேராத இனமில்லையே...
என் மேனி உனதன்றி எனதில்லையே...’’
பாடலை முணு முணுத்தவாறே தூங்கிப் போனாள் தாமரை...
அவள் வெறும் மேடைப் பேச்சாளர் மட்டுமல்ல...செயற்பாட்டாளரும்கூட...


 
Top