Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi--24

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்---24
ரவிவர்மா.துருவனின் பெற்றோர் தினகரன் லோகாம்பாள் இருவரும் தாமரை வீட்டிற்கு வந்திருந்தனர்...தகவலறிந்து ராகவேந்த்ரா மனைவியுடன் கீழிறங்கி வந்து விட்டார்,,,
‘’பிள்ளைங்க யாருமில்லையே வீட்டுல’’ ஆதங்கப்பட்டாள் சரசு....சம்பந்தி வீட்டார் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டதில் அவளுக்கு கை கால் பதட்டமெடுத்தது...

‘’தேவையில்லம்மா....நாம பெரியவங்க பேசி முடிக்க வேண்டிய விஷயம் தான.....பிள்ளைகளை ஏன் தொந்திரவு பண்ணிக்கிட்டு....அவங்க அவங்களோட வேலையை பார்க்கட்டும்’’ என்றார் தினகரன்...
‘’சரிதான்...நாம முடிவு பண்ணிட்டு விஷயங்களை அவாகிட்ட சொல்லிடலாம்’’
சரசு மோர் கலந்து கொண்டு வந்து தந்தாள்...

‘’நம்ம பிள்ளைகள் உணவகத்துக்கு போனீங்களா.....எப்பிடி இருக்கு?’’ பெருமிதத்துடன் கேட்டார் ராகவேந்த்ரா..

‘’சமீபத்துல போயிட்டு வந்தோம் நாங்க ரெண்டு பேரும் .....பிள்ளைகள் நல்லா டெடிகேசனோட பண்றா....சந்தோஷமா யிருந்தது....யார் ஹெல்ப்பும் வேணாம்னு ,தாங்களே கையை ஊணி கரணம் போட்டு எந்திரிக்கறா..நல்ல விஷயம் தான...’’

‘’ஆமா...ஆமா..நான் கூட முதல்ல, நம்ம ஊருக்கு புது முயற்சி ...எப்பிடி வருமோ,என்ன நடக்குமோன்னு யோசிச்சேன்,,,,,பட்,நின்னு காமிச்சுட்டாங்க...பிஸினஸ் நன்னா வேர் பிடிச்சு வந்துடுத்து....இனி பிக்கப் பண்ணிடுவா’’

‘’கடையில வேலைக்கு சேர்ந்திருக்காளே,ஷோபனா...அவளோட அத்தான் வீடியோ கிராபர்....அவரோட ,கல்யாண வீட்டு ஆர்டர்களுக்கு, நம்ம இயற்கை உணவகத்தையும் அறிமுகப்படுத்தி,நல்ல விதமா எடுத்து சொல்றாராம்...அதுல, பல பேரு புரிஞ்சுண்டு ஆர்வம் காட்டறாளாம்...அதனால,வானவில் இயற்கை உணவகத்துக்கு,இப்ப,விஷேச வீட்டு ஆர்டர்களும் கிடைக்குதாம்....சப்ளை பண்ணத்தான் சிரமமா இருக்குன்னு ,துருவன் சொன்னான்...’’

‘’ஆமாண்ணா....நீங்க சொல்றது வாஸ்தவம்தான்....எங்களுக்கு இன்னும் ரெண்டு கைகள் இருந்தா ,ஏந்தலா இருக்கும் ....வீட்டு வேலையை முடிச்சிட்டு,நீ கூட உதவி பண்ண வாயேன்னு தாமரை சொல்லிண்டு இருந்தா..’’—சரசு...
‘’எப்பிடியோ...தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோட போயிடுத்து....’’-லோகாம்பாள் பெருமூச்சு விட்டாள்...

‘’பிள்ளைகள் ஒத்துமையா இருந்து சாதிச்சி காமிச்சுட்டா’’—விஜயா...

‘’நாம நம்ம பிள்ளைகளுக்கு ஒண்ணுந்தெரியாதுன்னு நினைச்சிண்டு இருக்கோம்...ஆனா,எதிர்பாராத ஒரு கஷ்டம் வரும்போது,நாம பாதை அடைச்சுப் போனாப்புல ,திகைச்சு கை பிசைஞ்சு நின்னுடறோம்...பட்,அவாதான் சமயோசிதமாகவும் திங்க் பண்றா..சரியாவும் திங்க் பண்றா,,,நாமதான் பிள்ளைகளை அண்டர் எஸ்டீமேட் போட்டுடறோம்...சரியான சந்தர்ப்பம் வரும் பொது பிள்ளைங்க தங்களை வெளிப்படுத்திக்கறாங்க...’’ ராகவேந்த்ரா...தினகரனும்,லோகாம்பாளும் ஒப்புக் கொண்டார்கள்....

‘’சரி....மேற்கொண்டு ஆக வேண்டியதை பேசுவமா’’
‘’ஆமா....பிள்ளைகள் விளையாட்டுத்தனமா இருக்காங்க....நாமளும் அப்டி இருக்க முடியாதுல்ல,,,எங்கேஜ் மெண்ட் ஆயாச்சு....கல்யாணம் எப்போ எப்போன்னு கேக்கறவாளுக்கு பதில் சொல்ல முடியலையே’’

‘’கவலையை விடுங்கோ...கல்யாணத்துக்கு தேதி குறிச்சிடலாம்....தை பொறக்கட்டும்’’
‘’இந்த வருஷ பஞ்சாங்கம் இருந்தா குடுங்கோ...இவரே,நன்னா பஞ்சாங்கம் பார்த்து நாள் சொல்லுவார்’’
‘’தோ...தரேனே’’
மணமக்களின் பெயர் ராசி,மாங்கல்ய பொருத்தம்,சாந்தி முகூர்த்தம்,மணப்பெண்களின் வசதியான நாட்கள் ஆகிய பலவற்றையும் அனுசரித்து,தை மாதம் எட்டாம் நாள் திருமணம் செய்வது என முடிவாயிற்று...

‘’கல்யாணம் ரொம்ப பெரிசா பண்ணணும்னு அவசியமில்ல...உங்க சக்திக்கு உட்பட்டு ,என்ன முடியுமோ அதை செய்யுங்க...போதும்...’’
‘’நான் நினைச்சேன்...நீங்க சொல்லிட்டேள்...பெருமை யடிச்சுண்டு,டாம்பீகமாக கல்யாணம் பண்ணி,திருஷ்டியை வாரிக்க் கட்டிக் கறதை விட,அந்த பணத்தை நம்ம பிள்ளைகளோட பிசினஸ்க்கு குடுத்தாலும்,பிரயோசனப்படும்’’

‘’சரிதான்...’’ என்று அனைவரும் ஒப்புக்கொள்ள....திருமணம் குறித்த மேலும் பல ஏற்பாடுகள் குறித்து பேசி முடிவு செய்து விட்டு, சரசு வீட்டிலிருந்து,அவளிடம் விடை பெற்று அனைவரும் கிளம்ப......சரசு ஓடிப்போய் கணவன் நிழற்படத்தின் முன்பாக விழுந்தாள்...அழுதாள்....சிரித்தாள்...புலம்பினாள்..மருகினாள்..
.உண்ணவுமில்லை....உறங்கவுமில்லை. ...எவ்வளவு நேரம் அப்படி ,உணர்வற்று கிடந்தாள் என அவளுக்கே தெரியவில்லை...இரவு எட்டு மணி போல,தாமரை வந்து கதவு தட்டியதும்தான் உணர்வு பெற்று எழுந்தாள்...

‘’என்னம்மா...டல்லா இருக்கே....சாப்ட்டியா’’
‘’ம்...தாமரை உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்டி’’
‘’சரி...இரு...வர்றேன்’’
என்று,கைப்பையை அதனிடத்தில் வைத்தவள்,முகம் கழுவி விட்டு வந்து ,அம்மாவிற்கு எதிரே அமர்ந்தாள்...
‘’சொல்லும்மா’’
‘’மதியம் மாப்பிள்ளையாத்துக்காரா வந்திருந்தா...உங்க ரெண்டு ஜோடிகளுக்கும் கல்யாண தேதி முடிவாயிடுத்து...தை மாசம் எட்டாம் தேதி அன்னிக்கு,முகூர்த்தம் வச்சிருக்கு’’
‘’குட்...நல்ல விஷயம் தானேம்மா....அதை ஏன் நீ இவ்வளவு திகிலா சொல்றே’’
‘’நல்ல விஷயம் தான்...இல்லேன்னு சொல்லலை...ஆனா,,,,மனசுக்கு ரொம்ப குழப்பமா இருக்குடி’’
‘’ஏன்மா’’
‘’என் பொண்ணுக்கு தாலியேறப் போறதேன்னு சந்தோசப்படவா...என் மருமானுக்கு கையில்லையேன்னு கவலைபடறாதான்னு புரியலடி...’’என்று கண்கலங்கினாள் சரசு...
‘’அம்மா....என்னம்மா...பின்னால,பின்னால போற’’
மகளின் கைகளை எட்டிப்பிடித்தாள் சரசு...
‘’இல்லடி தங்கம்...என்னோட தவிப்பு எனக்குத்தான் தெரியும்...ம்மா...தாமரை...உனக்கு இந்த கல்யாணத்துல பூரண சம்மதம்தானேம்மா.....!அம்மா நம்மளை இப்பிடி மாட்டி விட்டுட்டாளேன்னு நினைக்கலியே’’ என்றாள் பரிதாபமாய்...
‘’இல்லம்மா..!அப்பிடியெல்லாம் எதுவுமில்ல....நீயே ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு வருத்தப் பட்டுண்டு இருக்காதே...மனப்பூர்வமான சம்மதம் எனக்கு...’’
‘’அப்பாடி...அதுதான் வேணும்...என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டு துளைக்கறதுடி’’
‘’உன் மனசாட்சி ஓவரா பண்ணுதும்மா...சொல்லி வை’’
‘’கல்யாணத்துக்குள்ள ஏதாவது அதிசயம் நடந்து அவருக்கு கை வந்துடாதான்னு ,சின்ன புள்ளையாட்டம் ஆசையா இருக்குடி’’
‘’இப்பதான் கை வந்துடுத்தேம்மா’’
‘’என்னடி சொல்றே’’
‘’போனவாரம் செயற்கை கை பொருத்தியாச்சுல்ல...அதை சொன்னேன்’’
‘’ப்ச...போடி,,,,நீ வேற...என்ன இருந்தாலும் பிளாஸ்டிக் கைதான’’
‘’ம்மா...இப்ப கிச்சன்ல எடுத்துக்கோ...அம்மி அரைக்க முடியலேன்னு,மிக்ஸி வச்சிருக்கோம்ல.....அதுல அரைச்சி சட்னி சாப்பிடாமலா இருக்கோம்....அது போலத்தான்...எந்த இடத்துல ,இயற்கை நமக்கு கை குடுக்கலியோ,அல்லது நமக்கு இடர்ப்பாடா தெரியுதோ,அங்க,செயற்கையை நுழைச்சிக்க வேண்டியதுதான்..அம்மா....வாழ்க்கையில நீ பார்க்காத கஷ்டமா,,,,துன்பமா...துயரமா...இப்போ உன் பொண்ணுக்குன்னு வரும்போது,எந்த கஷ்டமும் படாம பொத்துனாப்புல வைக்கணும்னு நினைக்கறே...அது தப்பில்ல....அதே சமயம் சாத்தியமும் இல்ல...யாருக்கானாலும் சரி, பாதையில மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும்...தாண்டித்தான் வரணும்’’
‘’சரிதாண்டி பெரிய மனுஷி,,,அது எனக்கு புரியாம இல்ல...நீ இப்பிடி யோசிச்சு பாரேன்....மாப்பிள்ளைக்குஅந்த விபத்து மட்டும் நடந்திருக்கலேன்னா,இந்த ஒரு குறை மட்டும் இல்லேன்னா,நாம இந்த கல்யாண சந்தோஷத்தை எவ்வளவு முழுமையா அனுபவிக்கலாம்? இப்ப அப்பிடி இல்லையேடி....மனசுல ஒரு உறுத்தாலோடதான காரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கு’’
‘’புரியுதும்மா.....அப்பா இல்லேங்கற குறையோடவே நீ வாழ்க்கையை கழிக்கறே இல்ல...அது போல,நானும் ஒரு மனசுல ஒரு வருத்ததோடவேதான் வாழணும்கிறது அவன் எழுத்து போல’’
‘’கரெக்ட்டுதான்....நாம தாயும் மகளும் வாங்கிண்டு வந்த வாரம் அப்பிடி...பண்ணின பாவத்தை இப்பிடி வேதனைப் பட்டுத்தான கழிக்கணும்’’ என்று ஒருவாறாக,மகள் நிற்கும் புள்ளிக்கு வந்து சேர்ந்தாள் சரசு...
‘’சரிம்மா...என்ன டிபன்’’
‘’சப்பாத்தி,ஒயிட் குருமா’’
‘’சூப்பர்...ந்தா...இதுல பீட்ரூட் கீர் இருக்கு..உடனே சாப்ப்ட்டுரு’’
என்று சொல்லி விட்டு,உடை மாற்றப் போனாள்...தாமரை மாதிரியான பெண்கள்,வாழ்க்கையில் எதிர் கொள்ளும் அனுபவங்களை கடத்தி விடுவதில்லை...உணர்வுடன் கடந்து வருகிறார்கள்...ஆகவே, பக்குவம் அவர்களது மேனியில் பட்டாடையாய் படிந்து விடுகிறது...s
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
Top