Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-21

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-21
‘’ஜெயா...நீங்க கடைக்குப் போறப்ப,சோபனாவை அவ சொல்ற அட்ரஸ்ல டிராப் பண்ணிடுங்க...’’—சிவசங்கரி..’’
‘’ஷாப்பிங் போறாளா?’’—என்றான் ஜெயராம் சட்டையை மாட்டிக்கொண்டே...
‘’இல்ல...வேலைக்குப் போறா’’
‘’அப்பிடியா?சொல்லவேயில்ல’’
‘’எங்களுக்கே நேத்துதான் கண்பார்ம் ஆச்சு’’
‘’ஈஸ் இட் ‘’என்றபடி,சோபனாவைத்தேடி ,அவளது அறைக்குப் போனான் ஜெயராம்...

‘’கங்கிராட்ஸ் ஷோபனா....வேலைக்குப் போகப்போறியாமே...அக்கா சொன்னா’’
தலை வாரிக் கொண்டிருந்த ஷோபனா சட்டென்று எழுந்தாள்...
‘’ஆமா அத்தான்’’

‘’நல்ல விஷயம்தான்...டீடைல்ஸ் சொல்லு’’‘’அதாவது அத்தான்,நம்ம ஊருல புதுசா,’’வானவில் இயற்கை உணவகம்’’அப்டின்னு ஒண்ணு ஆரம்பிச்சு இருக்காங்களாம்....இயற்கை உணவு முறையில,நம்பிக்கையும்,ஆர்வமும் உள்ள பெண் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் வந்துச்சு...எதேச்சையா எங்க கண்ணுல பட்டுச்சு....சங்கரியக்காதான்,நீ நேச்சுரோபதியில டிப்ளமோ வாங்கியிருக்கேல்ல,போயி அப்ரோச் பண்ணிப் பாப்போம்னு அழைச்சிட்டுப் போனாங்க..ஓகே ஆயிருச்சு....இன்னிலேர்ந்து வேலைக்கு வர சொல்லிட்டாங்க....அதான் கிளம்பறேன்’’

‘’சூப்பர்...சூப்பர்...படிச்ச படிப்புக்கேத்த வேலையைப் பாக்கறது ,எவ்ளோ பெரிய சந்தோஷம் தெரியுமா.....நானெல்லாம் எதையோ படிச்சுட்டு,சம்பந்தமில்லாம,எங்கியோ குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்...நீ ஸ்மார்ட்டா வேலை தேடிக்கிட்டே....குட்....வா...நான் உன்னைய டிராப் பண்ணிட்டு.அப்பிடியே உங்க கடையில ,ஏதாவது சாப்ட்டு போறேன்...சிவா!எனக்கு மார்னிங் டிபன் வேண்டாம்...!’’ என்று உற்சாகமானான் ஜெயராம்...
‘’ஆங்...என்னது....கேக்கல’’
‘’இன்னிக்கி.சோபனாவோட உணவகத்துல சாப்டப் போறேன்.....நல்ல சத்துள்ளதா’’
‘’அரசனை நம்பி புருசனாய் கை விடாதீங்க ஜெயா....நல்லதுக்கில்ல’’ என்று சிவசங்கரி கணவனை கலாய்க்க,
‘’பாத்துக்கலாம்....வித்தியாசமா சாப்பாடையாவது ட்ரை பண்ணுவோம்’’ என்று சொல்ல...அன்றைய காலை கேலியும்,கிண்டலுமாய் நகர்ந்தது...

ஜெயராம் .சோபனாவுடன் வந்திறங்கிய ‘’வானவில் இயற்கை உணவகத்தின்’’ உரிமையாளர்கள் ரவி வர்மா,துருவன்,நந்தினி,தாமரை,நால்வரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்...ஜெயராம்,ஷோபனா இருவரையும் வரவேற்று அமர வைத்து,கேரட் கீர் தந்தனர்.
.. ஜெயராம் ஆசையாக அவல் / இனிப்பு கலவை வாங்கி சாப்பிட்டான்...கவனமாக காசு கொடுத்தான்..உணவகத்தை சுற்றி பார்த்தான்...போதுமான அளவு இட வசதி இருந்தது...பழைய காலத்து அரிக்கென் விளக்கு மாடலில் லைட் மாட்டியிருந்தார்கள்....சுவரில் ஓவியங்கள்...செராமிக் பாத்திரங்கள்...மரக் கரண்டிகள்...மூங்கில் நாற்காலிகள்...என ரசனையாக கட்டமைப்பு செய்யப்பட்டு இருந்தது...அவல்,வெல்லம்,ஏலம்,அரிசி,பொட்டுக்கடலை,நிலக்கடலை,மிளகு,சீரகம் போன்றவை கண்ணாடி பாட்டில்களில் வைக்கப்பட்டு இருந்தன...ஜெயராமிடம் சொல்லி விட்டு கிளம்புவதற்காக அவனிடம் போனான்....
‘’உணவக செட்டப் நல்லா இருக்கு.. நல்ல தோதான இடமா அமைஞ்சிட்டுது...வாழ்த்துகள்’’
‘’தாங்க்யூ சார்’’
‘’சோபனாவுக்கு இந்த ஊரு புதுசு...ஒரு ஆர்வத்துல வேலைக்கு வரணும்னு கிளம்பிட்டா...ஜாக்கிரதையா பாத்துக்கோங்க...’’ என்றான் ஜெயராம் கவலையுடன்...

‘’கவலையே படாதீங்க சார்...இது கடை இல்ல....ஒரு குடும்பம்தான்...அப்பிடின்னு சிலர் ஒரு பேச்சுக்கு சொல்வாங்க....ஆனா,நாங்க உண்மையில குடும்பமாத்தான் இருக்கோம்...நாங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பி...அவங்க ரெண்டு பேரும் அக்கா தங்கை...சோபனாவும் இந்த குடும்பத்துல ஒருத்தங்கதான்...அவங்களையும் சேர்த்து நாங்க ஐவரானோம்’’ என்று சொல்லி சிரித்தான் ரவிவர்மா,,
‘’நல்லது சார்..கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு...லேடீஸுக்கு வொர்க் பிளேஸ் நிம்மதியா அமையறது பெரிய கிஃப்ட் இல்லையா...சார் கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க....இது மாதிரி இயற்கை உணவுக்கெல்லாம்,மக்கள் கிட்ட வரவேற்பு இருக்குதா?’’

‘’அங்கதான் நாம தப்புக்கணக்கு போடறோம் சார்..மேற்கத்திய உணவுகளோட ஆதிக்கம் அதிகளவுல இருக்கற இந்த காலத்துலயும்,நாம நல்ல உணவுகளை அறிமுகப்படுத்தினா,மக்கள் அதை வரவேற்கவும்,வாங்கி சாப்பிடவும் தயாராவே இருக்காங்க..இயற்கை உணவு உடம்புக்கு நல்லது...நோய்களை விரட்டி அடிக்கறதுக்கும்,வராம தடுக்கறதுக்கும் அதுதான் ஒரே வழின்னு மக்களுக்கு தெரியுது...என்ன,,,செஞ்சு சாப்பிடறதுல மக்களுக்கு ஒரு சோம்பேறித்தனமும்,அசட்டையும் இருக்கு....இந்த இடத்துலதான் நாங்க வந்து நிக்கிறோம்,,,எங்க பிராடக்டை விக்கிறோம்’’ என்று ரவிவர்மாவும்,துருவனும் மாறி மாறி விளக்கம் சொல்ல,அனைவருக்கும் ஒரே சிரிப்பு,,,,

‘’இது ஹோட்டல் இல்ல சார்...ஒரு மெடிக்கல் ஸ்டோர்னு வேணா சொல்லலாம்...ஏன்னா,இங்க நாங்க தயாரிக்கறதை நீங்க சாப்டுங்கன்னு நாங்க சொல்றதில்ல...வர்ற கஸ்டமர்க்கு
என்ன தேவையோ ,அவங்களோட பிரச்சினைக்கு எது தீர்வோ ,அதை ரெடி பண்ணித் தரோம்...இப்ப உதாரணத்துக்கு,ரத்த சோகையா-பீட்ரூட் கீர்,அல்சரா-வெண்பூசனி ஜூஸ்,மூட்டு வலியா-முடக்கத்தான் கீரை சூப்,மலச்சிக்கலா-பப்பாளி பழ சாலட்,தலை முடி கொட்டுதா-கறிவேப்பிலை ஜூஸ்,அப்புறம் முளை காட்டிய தானியங்கள்,வெந்தயக் களி,உளுந்தங்களி,சத்து மாவு கஞ்சி,நில வேம்பு கஷாயம்,வேப்பிலை கஷாயம்,நெல்லி ஜூஸ்,அருகம்புல் ஜூஸ்,அவல் சாலட்,முருங்கை சூப் –இப்பிடி ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு சார்’’—என்றபடி,நந்தினி நோட்டீஸ் தர,

‘’உயிருள்ள இந்த உடலுக்கு,உயிருள்ள இயற்கை உணவுதான் சூப்பர் மேட்ச்’’ என்று தாமரை தனது பாணியில் சொல்ல,ஜெயராம் உட்பட அனைவரும் கை தட்ட,மிகுந்த மன திருப்தியுடன்,விடை பெற்று கிளம்பினான்....
‘’ஹலோ ஷோபனா....இப்ப சொன்னதெல்லாம் உங்களுக்கும் சேர்த்துதான்...!ஓகேவா’’
‘’புரிஞ்சுக்கிட்டேன்...நான் ஏற்கெனவே மூணு வேளையில ,ஒரு வேளை பழம்,பச்சைக் காய்கறிகள்னு இயற்கை உணவாத்தான் எடுத்துக்குவேன்,,,,முளை கட்டின பயறுகள் சாப்பிடுவேன்’’ என்றாள் பெருமையுடன்....

‘’’சூபர்...சூபர்...கடைக்கு பொருத்தமான ஆளுதான் வந்திருக்கு...’’
‘’ஆமா...நானும் எனக்கேத்த இடத்துக்குத்தான் வந்து சேர்ந்திருக்கேன்’’
இரவு எட்டு மணி வரை.பரபரப்பாக இயங்கிய இய்ற்கை உணவகம்,அதன் பின் சிறிது மூச்சு விட,ஐந்து இளைஞர்களும் கையில் கேரட் கீர் எடுத்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்தனர் ....

‘’தயாரானது எதுவும் மிச்சமா நந்தினி?’’ என்று கேட்டான் துருவன்....
‘’அவல் புட்டிங்க் மாத்திரம் மிச்சமிருக்கு....மத்த எல்லா ஐட்டமும் காலி...’’
‘’நோ...பிராபாளம்...அதை நாம சாப்பிட்டுடலாம்..’’
‘’எனக்கு ஒரு டவுட்டு...எதுக்காக உங்களுக்கு இயற்கை உணவகம் ஆரம்பிக்கணும்னு தோணுச்சு’’--ஷோபனா
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

‘’நாங்க நாலு பேருமே எங்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகள்தான்..ரவிவர்மாவும்,துருவனும் ஐ.டீ பீல்டுல இருந்தாங்க....நான் ஸ்கூல் டீச்சர்....தாமரை பட்டிமன்ற பேச்சாளர்....ஒரு விபத்துல ,நல்லா இருந்த ரவி வர்மாவுக்கு கை போயிட்டுது...கூடவே வேலையும் போயிட்டுது...அவரு திரும்ப யாருகிட்டாயாவது போயி வேலை கேட்டு நிக்கணும்...அவங்க இவரு நிலைமையைப் பார்த்து இரக்கப்பட்டு வேலை தரலாம்...தராமலும் போகலாம்...அதுல எங்களுக்கு விருப்பமும் இல்ல...அதனால நாம நாலு பெரும் சேர்ந்து சொந்தமா ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தோம்...அதிலயும் மக்களுக்கு நல்லது பண்றமாதிரி இருக்கணும்னு யோசிச்சப்ப,இந்த ஐடியா வந்துச்சு...நன்றே செய்...அதை இன்றே சேனு சொல்வாங்கல்ல...அதனால,எதைப் பத்தியும் யோசிக்காம,எங்க பேரண்ட்ஸ்ட்ட மட்டும் ஒரு வார்த்தை சொல்லிட்டு,ஸ்டார்ட் பண்ணிட்டோம்...இதோ ஒரு மாசம் ஓடிடுத்து....நல்லா போயிட்டு இருக்கு...நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னு ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்குது’’ என்று ஒரு பெருமூச்சுடன் முன்கதை சுருக்கத்துடன் நிலைமையை விளக்கினாள் நந்தினி...மற்ற மூவரும் அவல் சொன்னதை ஆமோதித்தனர்...

‘’சினிமா டிரைலர் பாத்தது போல இருக்கு...வாழ்க்கையில கஷ்டம்னு ஒண்ணு வரும்போது,அதை எப்பிடி சந்திக்கிறது,சமாளிக்கிறதுன்னு நீங்க சொல்லல....செஞ்சு காண்பிச்சு இருக்கீங்க....வெல்டன்’
‘’ நாங்க நாலு பேரும் ஒரே அலைவரிசையில இருந்ததால,இது சாத்தியப்பட்டுச்சி....’’
‘’கரெக்ட்....நீங்கள்லாம் கூட வேலையை விட்டுட்டீங்களா?’’
‘’ஆமா...பெரிய வேலை...!துருவன் ஏற்கெனவே எப்படா ,வெளிய ஓடி வரலாம்னுதான் இருந்தாரு...என்னோட வேலையில,மாசம் பூரா உயிரைக் குடுத்து வேலை பார்த்தா,ஏழாயிரம் ரூவா தருவாங்க...அதுக்கு இது பெட்டெர்னு இங்க வந்துட்டேன்...தாமரை மட்டும் பட்டிமன்ற வாய்ப்புகள் வரும்போது,தட்டாம போயிட்டு வந்துட்டு இருக்கா..அவ இல்லாதப்போ எனக்கு ஒத்தாசைக்கு ஆள் வேணும்னுதான் உங்களை எடுத்துகிட்டோம்..
வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த ஷோபனா....
‘’எல்லாம் சரி...நிச்சயம் ஆயிடுச்சுன்னு சொன்னீங்க...கல்யாணம்?’’
‘’ப்ச...இப்ப அவசரமா கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறோம்....வாழ்க்கையில ஏதாவது சாதிச்சுட்டு அப்புறம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி,வீட்டுலயும் சொல்லிட்டோம்...எங்க மேல நம்பிக்கை வச்சி சரினுட்டாங்க...’’ என்று பேச வேண்டியது அனைத்தையும் பேசி முடித்தார்கள்...எழுந்தார்கள்...
‘’சரி ..வாங்க பயறுகளை சுத்தம் செஞ்சு ஊறப்போடலாம்….ஷோபனா நீங்க எப்பிடி வீட்டுக்கு போவீங்க?’’
‘’ஃபோன் பண்ணிட்டேன்...அத்தான் கூப்பிட வருவாங்க...நாளையில இருந்து ஸ்கூட்டியில வந்துடுவேன்...இடம் தெரிஞ்சுகிட்டேன்ல’’
‘’ஓகே...அதுதான் உங்களுக்கும் வசதி’’---தாமரை...
நீண்ட நாட்களுக்குப் பிறகு ,சோபனாவின் மனதில் புதிய ஒளி தோன்றியது...
 
Top