Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-16

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-16
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ரவிவர்மா-தாமரை சந்திப்பு வழக்கமான ஒன்றாகிவிட்டது...திட்டமிடவில்லையெனினும்,இருவரும் சிறிது சிறிதாக நெருங்கி இயல்பாக அந்தப் புள்ளிக்கு வந்திருந்தார்கள்...அன்றும் அப்படியே...காபி ஷாப் சந்திப்பு..
''எதிர்பார்க்கவேயில்லை தாமரை...தூள் கிளப்பிட்ட..''என்று ரவிவர்மா புளகாங்கிதத்துடன் சொல்ல,

''இது நான் போட்டதில்ல...ஹோட்டல் காபி'' என்றாள் தாமரை கூலாக..
''ச்சே....மொக்கை போடாத...நான் உன்னோட பட்டிமன்ற ஸ்பீச்சைப்பத்தி சொன்னேன்...கையில ஒரு பேப்பர் குறிப்பு கூட இல்லாம பொளந்து கட்டறே..ஹால் அப்டியே அமைதியா ஆயிடுச்சி..எப்டி..இப்டி...''
''பழகிடுச்சு வர்மா...!ஏதோ கடவுள் தந்த பரிசு...''
''கரெக்ட்..இந்தா என்னோட பரிசு'' என்று ஒரு டப்பாவை நீட்டினான் ரவிவர்மா...
''ச்சே...பரவாயில்லையே...எனக்கு கிஃப்ட் குடுக்கக்கூட ஆளிருக்கே'' என்று முகம் மலர்ந்தாள் தாமரை...டப்பாவைப் பிரித்துப் பார்த்தாள்...ஏதோ எலக்ட்ரானிக் ஐட்டம்...ஆனால் அது என்னவென்று தெரியாததால்,ரவியிடமே கேட்டுவிட்டாள்..

''இது பேரு கிண்டில் ...நீ உனக்கு தேவையான புக்ஸையெல்லாம்,இதுல டவுன்லோட் பண்ணிப் படிச்சிக்கலாம்...உன்னோட ஸ்பீச்சுக்கு உதவுமேன்னு வாங்கினேன்...பிடிச்சிருக்கா தாமரை?''
''சூபர் வர்மா!...நான் இதைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்,,,பட்,இன்னிக்குத்தான் பார்க்கறேன்...தாங்க்யூ....தேங்கவெரி மச்...வீட்டுல புக் வாங்கி அடுக்கு வைக்கறதுக்கு,சிம்ப்ளா இதுல படிச்சுக்கலாம்...ஹேண்டியா இருக்கறதால,டிராவெல்ல கூடப் படிச்சுக்கலாம்...இல்ல...சூப்பர்..சூப்பர்...ஆமா,எனக்கொரு டவுட்டு...உங்களுக்கு எப்டி இது மாதிரி நல்ல ஐடியால்லாம் தோணுது'' என்று கிண்டலாய்க் கேட்க அவன் முறைக்கவும் பேச்சை மாற்றினாள்..

''ஓகே...லீவ் இட்...என்னோட ஸிபீச்சுல,உங்களுக்கு டவுட்,இல்ல,மாற்று கருத்து ஏதாவது இருக்கா''
''இல்ல..காரணம் உன்னோட வே ஆஃப் ஸ்பீக்கிங்க்..,ஏன்னா,முதல்ல நீ ஒரு பாயிண்டை சொல்ற...உடனேயே கேக்கறவங்க மனசுல ஒரு கேள்வி வரும்ல...அதுக்கான பதிலையும் நீயே சொல்லிடறே..ஸோ,.அங்க கேள்விகளுக்கு இடமில்ல...அதனால,நான் உள்பட,கூட்டம் வாய் பிளந்து ரசிக்குது உன்னோட ஸ்பீச்சை..''
வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிரித்தாள்..தாமரை....

‘’நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் நீ பேசுவியா தாமரை?..’’
‘’வீட்டுல கேட்கல..பட்டிமன்றத்துல’’
‘’வீட்டுலயும் பேசுவேன்...பட்டிமன்றத்துலயும் பேசுவேன்…..ஒரு டவுட் வர்மா,,,,பட்டிமன்றத்துல பேசறதுக்கு தடா போடுவீங்களா’’
‘’சேச்சே...அப்பிடியெல்லாமில்ல’’
‘’நீங்க தடை போட்டாலும் நான் கேக்கப்போறதில்ல....அது வேற விஷயம்...’’
‘’ச்சே..பெருத்த அவமானம்...’’ என்று சொல்லியபடி தலை உலுப்பினான் வர்மா...
‘’ரொம்ப மனநிறைவா இருக்கு வர்மா’’
‘’என்னை கலாய்ச்சதிலயா’’
‘’இல்ல வர்மா...டூ பி ஃபிராங்க் வித் யு. நான் விரும்பியது எல்லாமே எனக்குக் கிடைச்சிருக்கு...’’
‘’தாமரை,உன்னோட பரிசு லிஸ்ட்டுல நான் உண்டா’’

‘’. நீங்கதான் முதல்ல இருக்கீங்க..நான் வந்து,விபரம் தெரியாத வயசிலேயே எங்க அப்பாவை இழந்துட்டேன்...அதுக்காக கடவுளை ரொம்ப நொந்திருக்கேன் நான்...என் வயசுப்பிள்ளைகள் யாருக்கும் குடுக்காத,குடுக்கக் கூடாத தண்டனையை எனக்கு ஏன் குடுத்தேன்னு வாய் திறந்து கேட்டு அழுதிருக்கேன்,,,ஆனா,இப்போ என் வயசுப் பிள்ளைகள் யாருக்கும் தராத பரிசுகளையெல்லாம் எனக்கு தந்த இறைவனை நன்றியோட நினைச்சிப் பாக்கறேன் வர்மா...லைஃப் சடனா மைனஸ்லெர்ந்து பிளஸ்ஸுக்கு மாறிடுத்து...’’என்றாள் தாமரை பரவசத்துடன்...
தாமரை வீசிய வார்த்தை மலர்கள் தந்த மணத்தை கண் மூடி சிறிது நேரம் அனுபவித்த வர்மா.
‘’தாமரை...நான் ரெண்டு மாசமா ,எனக்கு உன்னைய பிடிச்சிருக்குன்றதை, பல விதமா உருண்டு உருண்டு சொல்லிட்டு இருந்தேன்...ஆனா,நீ எவ்ளோ அழகா,உன் மனசுல நான் ஸ்ட்ராங்கா சேர் போட்டு உக்காந்திருக்கேன்றதை ஒரு வார்த்தையில சொல்லிட்டே...ம்‌ம்..என்ன இருந்தாலும் ஒரு பேச்சாளர் கூடப் போட்டி போட முடியுமா?’’ என்று பெருமையுடன் சலித்தான்..

‘’சரி...கிடக்குது.விடுங்க...நீங்க என்னோட கவிதையை கேட்டதில்லையே வர்மா?’’
‘’சொன்னாத்தான கேட்க முடியும்...பட்டிமன்றத்துக்கே,நான் அழுது அடம்பிடிச்சுல்ல, வந்தேன்...’’
‘’தோ...சொல்றேன்,,,கேளுங்க...நேத்து நைட்டுதான் எழுதினேன்,,அதான் மனப்பாடமா இருக்கு....கவிதையோட தலைப்பு ‘’பெண்’’ ஓகேவா’’
‘’ஓகே...சொல்லு...’’
கண்மூடி கவிதை சொன்னாள் தாமரை...

‘’பெற்றோருக்கு பாசமிகு மகள்..
கணவருக்கு காதல் மனைவி.
மாமியாருக்கு
மவுனமான மருமகள்...
குழந்தைகளுக்கு
குறை வைக்காத தாய்...
சகோதரர்க்கு
சகிப்புத்தன்மையுள்ள உடன்பிறப்பு...
அண்டை வீட்டாருக்கு
அனுசரணையான தோழி..
மொத்தத்தில்
சமுதாயத்திற்கு
பிரச்சினை இல்லா பிரஜை...!
எல்லோருக்கும் பெருமை சேர்த்த
எனக்கு எது பெருமை..?
என்
சுயத்தை அழித்ததா’’ என்று முடித்தாள் கவிதையை...
கவிதை குறித்து வர்மாவின் விமர்சனத்திற்காக அவன் முகத்தைப் பார்த்தாள்..அவனோ எதுவும் பேசாமல்,எழுந்து நின்று ஸ்டாண்டிங் ஓவியேஷன் தந்து கை தட்டினான்..
வெட்கத்தில் வேகமாய் வண்டியைக் கிளப்பி வீட்டுக்கே வந்து விட்டாள் தாமரை—மிகுந்த கிளுகிளுப் போடு..வீட்டுக்கு வந்தவளுக்கு சம்பந்தமில்லாமல் அக்கா நந்தினியின் நினைவு வந்தது.
.தெரிந்தோ தெரியோமலோ நந்தினிக்கான மகிழ்ச்சியை தான் பறித்துக் கொண்டு விட்டோம் என்ற குற்ற உணர்வில் கூட அது இருக்கலாம்...மாடியும் கீழுமாக இருந்தாலும்,நந்தினியிடம் பேசி நாளாகிவிட்டது
..எண்ணத்தை செயல்படுத்த ,உடனே அவளூக்கு ஃபோன் போட்டாள் தாமரை...இரண்டு ,மூன்று முறை முயற்சித்தும் அவளிடமிருந்து பதிலில்லை...எரிச்சலானாள் தாமரை...

‘’அம்மா....உன் பொண்ணு நந்தினி ஏன்மா இப்டியிருக்கா...’’
‘’எப்டியிருக்கா...நிறம் கொஞ்சம் மட்டுதான்...ஆனாலும்,பாக்கறதுக்கு லட்சணமா நன்னா இருப்பாளே...’’
‘’சரி...அவ பேரழிகியாகவே இருக்கட்டும்...நான் ஃபோன் போட்டா அட்டென்ட் பண்ண மாட்டேன்றாளே ..அத சொல்றேன்.....’’

‘’எதானும் வேலையா இருந்திருப்பா...எல்லாத்தையும் தப்பா எடுத்துக்கப்படாது...காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்’’..என்றாள் சரசு...அம்மா சொல்வது போல் ஒரு வேளை தனது எண்ணத்தில்தான் கோளாறு இருக்குமோ....
‘’தோ...இப்ப ஸ்கூல் விட்டு வந்துடுவா...நீயே நேரா பேசிடு’’

ஆமாம் அப்படித்தான் செய்யவேண்டும்,,அவளிடம் ஒரு வேலை ஆக வேண்டியிருக்கிறது...அதையும் கேட்டு விட வேண்டியதுதான்...அம்மா சொன்னதுபோல,நந்தினி சிறிது நேரத்தில் வந்துவிட்டாள்...அவசரமாக மாடிக்கு படியேறப் போனவளை மடக்கினாள் தாமரை...
‘’அக்கா...உன்னைய பார்க்கவே முடியல....வேலையெல்லாம் எப்டி போயிண்டிருக்கு’’
‘’வழக்கம் போல...என்ன விஷயம் சொல்லு’’
நந்தினியின் குரலில் தெரிந்த விரைப்பும்,வெறுப்பும்,தாமரைக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தன...
‘’அது வந்துக்கா,ஆறாம் கிளாஸ் தமிழ் புக்லேர்ந்து ஒரு பாட்டு வேணும்...’’
‘’உனக்குத் தெரியாததா ?’’
‘’என்ன சொல்றே’’
‘’இல்ல!உனக்குத்தெரியாத தமிழ் பாட்டான்னு சொன்னேன்’’.
.நந்தினியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முகத்தில் அறைந்தது...சமாளித்துக் கொண்டு வாய் திறந்தாள் தாமரை...
‘’அந்த புக்ல,உமறுப்புலவரோட.....’’
‘’புக் வாங்கிட்டு வந்து தரேன்...நீயே பார்த்துக்க...’’ என்று தாமரையை இடை மறித்து சொன்ன நந்தினி,விறு விறுவென படியேறி விட்டாள்...முகம் கறுத்துப் போனது தாமரைக்கு....எப்படி ஓபனாக பாராமுகம் காட்டுகிறாள் இவள்?
மனதில் இருந்த மகிழ்ச்சி நீர் தெளித்த பால் போல,பொசுக்கென்று அமுங்கியது...அக்காவிடம் வாங்கிக் காட்டிக் கொண்டதை அம்மாவிடம் கொட்டினாள்...
‘’பேரீசா,பொண்ணுக்காக ஏத்துண்டு பேசினே..அவ,முகத்தை எப்பிடி முகத்தை வெட்டிண்டு போறா பாரு..!ரவி விஷயத்தை மனசுல வச்சுண்டு இப்டி நடந்துக்கறா...தெரியாமத்தான் கேக்கறேன்...திருமணங்கள் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுதுன்னு சொல்வாளே....அது இவளுக்கு தெரியாதா...ஒரு கல்யாணத்தை நிறுத்தறதுக்கும்,நடத்தறதுக்கும்,நாம கடவுளா என்ன?...இல்ல இவளுக்கு இனிமே வரன் அமையவே அமையாதா? இது கூடப் புரியாம ஒரு டீச்சர்....ம்ஹூம்..இவ பாடஞ்சொல்லிக் குடுத்து பிள்ளைக முன்னேற....காலக் கொடுமைடா சாமி’’என்று தானாகக் கத்தியவள்,அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

..அறிவிலும்,ஆற்றலிலும்,முன்னேறிய,தன்னை வளர்த்துக் கொண்ட பெண்கள் கூட,கல்யாணம்,கணவன் ,குடும்பம் என்று வந்துவிட்டால்,பிறரைப் புறந்தள்ளி விட்டு,தன்னையும்,தனது நலனையும் மட்டுமே முன்னிறுத்திக் கொள்பவர்களாக மாறி விடுகிறார்கள் என்ற நடைமுறை உண்மையை தாமரை உணர்ந்தாளில்லை..





v
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
தாமரையின் எண்ணம் தப்பு
தன்னை வேண்டாமுன்னு ஒருத்தன் சொன்னால் நந்தினிக்கு மட்டுமில்லை
யாருக்குமே மனசு வலிக்கத்தான் வலிக்கும்
அக்காவைப் பெண் பார்க்க வந்துட்டு தங்கைதான் வேணும்ன்னு சொன்ன ரவிவர்மா நல்லவனா, தாமரை?
 
Top