Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-13

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-13
மறுநாள் பட்டிமன்ற ஹாலுக்குப் போனவுடன்,தாமரையின் கண்கள் இயல்பாக ரவிவர்மாவைத்தேட,தேடிய இடத்தில் புன்னகையுடன்,அமர்த்தலாக அமர்ந்திருந்தான் ரவி வர்மா..நான்கு கண்களும் சரேலென்று சந்தித்த வேகத்தில்,படக்கென்று சிரித்து விட்டனர் இருவரும்.
..தாமரை உள்ளிட்ட நான்கு பேச்சாளர்கள் மற்றும் நடுவருடன்,பட்டிமன்றம் துவங்கியது...தலைப்பு.:.

‘’பெண் சுதந்திரம் இன்று எந்த நிலையில் இருக்கிறது?’’
நடுவர் உரையைத் துவங்கினார்...

‘’பெண் சுதந்திரம் எல்லாக் காலத்திலும்,அனைத்து தளங்களிலும்,ஒரு பேசுபொருளாகத்தான் இருந்து வந்திருக்கிறது...இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால்,பெண் சுதந்திரம் என்ற கருத்தைப் பற்றி அதிகம் பேசியவர்களும்,பாடியவர்களும்,பரப்பியவர்களும்,அதிகம் பேர் ஆண்களே...!பெண்களை அடக்கி வைத்ததாகச் சொல்லப்பட்ட ஆண் சமுதாயத்தில்தான்,பாரதியார்,பாரதிதாசன் போன்ற பல தலைவர்கள் உருவானார்கள் என்பதை மறுக்க முடியாது..
.அது போலவே அடிமைப்பட்ட நிலையில் இருந்ததால்,பெண்களின் திறமைகளை குறைத்து மதிப்பிட முடியாது...பார்க்கப்போனால்,இன்று பெண்களின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகத்தான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்
..பெண்கள் தங்களது கூற்புத்தி,கடின உழைப்பு,அர்ப்பணிப்புணர்வு,ஒருங்கிணைப்புத்திறன், முதலிய சிறப்பியல்புகள் காரணமாக,கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நுழந்து முன்னேறி, இன்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில்,முக்கியமான பங்களிப்பில் இருக்கிறார்கள்...சிறிய நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை, பெண் ஊழியர்களை நியமிப்பதற்கே முன்னுரிமை தருகிறது.
..அவர்களது வேலைத்திறன் அவர்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தருகிறது...அதர்க்காக பென்சமுதாயம் முழுவதும் முன்னேறி விட்டது என்ற கருத்தை ஏற்பதற்க்கில்லை...இன்றும்,படிப்பறிவில்லாமல்,நாகரீக வளர்ச்சியின் ஜாடை படியாமல்,குடிகாரக் கணவங்களுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கும் கிராமத்து சகோதரிகளுக்கு நாம் என்ன ஸிபதிலை சொல்லப் போகிறோம்?

ஒருமித்த வளர்ச்சியில்லாத,இந்த ஏற்றத்தாழ்வான சமுதாயமே, இன்றைய தலைப்பிற்க்கான பின்னணி...இதோ வல்லுனர்கள் நால்வரும் தங்களது வாதங்களை முன் வைக்கிறார்கள்....கேட்போம்’’ என்று தனது தொடக்க உரையை முடித்தார் நடுவர்...அதனை அடுத்து,மற்ற மூன்று பேச்சாளர்களும்,தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க, நிறைவாகப் பேச எழுந்தாள் தாமரை-கை தட்டல்களுக்கு நடுவே....

‘’சபையோருக்கு வணக்கம்...ஒரு கதையுடன் எனது வாதத்தை தொடங்குகிறேன்..ஒருவர் தேங்காய்,பழம்,சூடன்,-ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார்...அப்போ அந்த மூணு பொருட்களுக்குள்ள,ஈகோ போட்டி நடந்தது...நானே பெரியவன்னு தேங்காய் சொன்னுச்சு...அதெல்லாமில்ல,...உள்ள போனதும் உன்னைய மண்டையத்தட்டி,உக்கார வச்சிருவாங்க...நான்தான் மஞ்சள் நிறத்தழகி அப்டின்னு வாழைப்பழம் சொன்னுச்சு...தேங்காயும் பழமும் அமைதியா இருந்த சூடனைப் பார்த்து ஏளனமா சிரிச்சுதுங்க....’’நீயெல்லாம் ஒரு ஆளா அப்டிங்கறமாதிரி.! சூடன் வாய் திறந்துச்சு...’’உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எனக்குப் பாவமாயிருக்கு...கருவறைக்குள்ள போன வேகத்திலேயே உங்களை வெளியே துரத்திடுவாங்க...நான் மட்டும்தான் ஜோதியா இறைவனோட ஐக்கியமாவேன்னு சொன்னுச்சு..
.அது போல ,பெண்கள் உயர்ந்த நோக்கத்தோட வாழறவங்க.’’ என்று எடுத்த எடுப்பிலேயே நச்சென்று ஒரு நங்கூரம் போட,வேகமான கைதட்டல்களுக்கு இடையே பேச்சை தொடர்ந்தாள் தாமரை...’’முதலில் சுதந்திரம் என்பது யாரும் யாருக்கும் தருவதல்ல..உலகில் பிறக்கும்,ஒவ்வொரு உயிரும் சுதந்திரத்தோடுதான் பிறக்கின்றன....மற்றவர்களால்,பறிக்கப்படாமல் இருக்கையில்,ஒவ்வொருவரின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படுகிறது..

.பெண்கள் முழுமையானவர்கள்...அவர்களுக்கு கொடுப்பதற்க்கு,இந்த சமுதாயத்திடம் எதுவுமில்லை...அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் ,கற்றுக் கொள்வதற்குமே நிறைய இருக்கிறது...நான் சொல்வது மிகைப்படுத்தலாக உங்களுக்குத் தோணலாம்...உங்கள் தாய்,உங்கள் சகோதரி,உங்கள் மகள்,உங்கள் தோழி உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை ,சற்றுப் பின்னோக்கிப் பார்த்தீர்கள் என்றால்,என் கருத்தைக் கட்டாயம் ஒப்புக் கொள்வீர்கள்...இன்று அதிகப் பெண்கள் பணிக்கு செல்வதை சுட்டிக்காட்டிப் பேசிய எதிரணியினருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்...
.குடும்பத்தினுடைய பொருளாதார தேவைக்காக,பணிக்கு செல்வதையெல்லாம், முன்னேற்றப் பட்டியலில் சேர்க்க முடியாது...குடும்பம்,அலுவலகம் என்ற ரெட்டைக்குதிரை சவாரி செய்வதால்,அவர்களுக்கு கூடுதலான பணி சுமைதான் பெண்களின் தலையில் இருக்கிறது...திருமணத்திற்கு பெண் தேடும்,இன்றைய இளைஞர்கள் பெண்ணின் வருமானத்தையும் சேர்த்தேதான் தேடுகிறார்கள் ....இதனை எதிர்க்கட்சியினர் மறுக்க முடியுமா?
தனது பொருளாதாரச் சுமையில் ,மனைவியின் பகிர்வும் இருக்க வேண்டுமென ஆண் நினைப்பது கவுரமாகப் பார்க்கப்படுகிறது....அதே சமயம்,இல்லக்கடமைகளில், பெண்ணுக்குத் துணையாக ஆண் நிற்கும்போது,அது சமுதாயத்தால்,கேவலமாகப் பார்க்கப்படுகிறது...
பெண்களின் சுதந்திரத்திற்கும்,வளர்ச்சிக்கும்,இன்று மிகப் பெரிய சவாலாக மாறியிருப்பது,பெண்களின் மீதான பாலியல் வன்முறை...பிறந்து சில மாதங்களே ஆன,தொட்டில் குழந்தை முதல்,மரணக் கட்டிலில் இருக்கும் மூதாட்டி வரை,அவர்கள் பெண் இனமாக பிறந்து விட்ட ஒரே காரணத்தால்,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்...சில வீராதி வீர ஆண்மகன்‌கள் ,அப்பாவிப் பெண்களை ,பாலியல் பலாத்காரம் செய்து விட்டு,கொன்று புதைத்து விடுகிறார்கள்.
.பார்க்கின்ற பெண்களையெல்லாம் படுக்கைக்கு அழைக்கின்ற தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது...?பல போராட்டங்களுக்குப் பின்னர் இப்போது தான் தலை நீட்டத் துவங்கியிருக்கும், பெண்களுக்கும்,பெண்களைப் பெற்றவர்களுக்கும்,அச்சத்தை ஏற்ப்படுத்தும் வேலை இது.
..இத்தகயோரை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டியது ஒருபுறமிருக்க, ஆண்/பெண் குழந்தை வளர்ப்பில் வேறுபாடு காட்டவேண்டாமென,நான் இல்லத்தரசிகளை கேட்டுக் கொள்கிறேன்...ஆணின் பிரச்சினைகளை விட பெண்ணுக்கு கூடுதலாய் ஒரு பிரச்சினை உண்டு...அதன்பேயர் ஆண் என்று சொன்னார் மாவோ
...நிறைவாக என் கருத்தை இப்படி சொல்லி முடிக்கிறேன்...மகளிர் முன்னேற்றம் என்பது,மக்களின் விருப்பமோ ,தேர்வோ மட்டுமல்ல,..அது காலத்தின் கட்டாயமும் கூட...மாற்றம் ஒன்றைத்தவிர அனைத்தும் அதிரடியாக மாறக் கூடிய இவ்வுலகில்,காலச்சக்கரத்தின் மேலும் கீழுமாய் புரட்டிப் போடும் சுற்று வட்டப் பாதையில்,பெண்கள் தம் நிலையிலிருந்து முன் செல்லத்தான் வேண்டும்...அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது.
..பயணம் உறுதி செய்யப்பட்டதுதான் எனினும்,பாதை பஞ்சு மெத்தை இல்லையே....!புதிதாகப் போடப்படும் ஒரு நடை பாதைக்குரிய அத்தனை இடர்ப்பாடுகளையும் கடந்து போய்த்தான் ஆகவேண்டும்..’’உளியெடுக்குமுன் வலி என்றழுதால்,சிலையாவது எப்போது’’என்ற கவலை கவிதை வரிகள் கலைகளுக்கு மட்டுமின்றி கண்ணியருக்கும் பொருந்தும்தானே....வாழ்க மகளிர்...வளர்க அவர்களது முன்னேற்றம்...நன்றி..வணக்கம்...’’ என்று வாதமாகத்தொடங்கி,ஆக்கபூர்வமான ஒரு கருத்துரையாக தன்னுடய பேச்சை தாமரை முடித்தபோது,கைதட்டல்களின்,கனம் கூடியிருந்ததையும்,
அதற்குள் ரவிவர்மா ஒளிந்திருந்ததையும் அவளால் உணர முடிந்தது....
 
Top