Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi--12

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-12
தாமரை ரவிவர்மாவிடம் குடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக மறுநாள் மாலை அவனை தில்லை நகர் காபி ஷாப்பில் சந்தித்தாள்...
‘’தாங்க்ஸ்...என் வார்த்தைகளை மதிச்சு வந்ததுக்கு’’என்றான் ரவிவர்மா புன்னகைத்தபடி....லைட் ப்ளூ கலர் ஜீன்சும்,டார்க் ப்ளூ வில் குறுக்கு கோடுகள் போட்ட டீஷர்ட்டும் அணிந்திருந்தான்...ஒரு சாயலில் நடிகர் பிரசன்னா போலிருந்தான்....
‘’சரி...என் ஃபோன் நம்பர் எப்பிடி கிடைச்சுது’’—தாமரை..
‘’கட்டாயம் சொல்லனுமா?’’
‘’கட்டாயம்’’
‘’நான் அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தேன்ல,அப்ப உங்க வீட்டு காலண்டர்ல,ஒரு ஃபோன் நம்பர் குறிச்சு இருந்தது....அது உன்னுடையதாத்தான் இருக்கும்னு ஒரு அனுமானத்துல,குறிச்சிட்டு வந்தேன்....என் கணக்கு தப்பல’’
அம்மாவுக்கு சமயத்தில் உதவட்டும் என்று குறித்து வைத்ததை, துரை அபேஸ் பண்ணி விட்டாரா....போகிறது...எதற்கும் தொடக்கம் என்ற ஒன்று வேண்டுமல்லவா....சமோசா சாப்பிட்டு காபி குடித்தார்கள்...
‘’சரி..இப்ப நாம என்ன உரிமையில,சேர்ந்து உட்கார்ந்து காபி டிபன் சாப்பிட்டுட்டு உக்காந்திருக்கோம்...’’—தாமரை..
‘’ஒரு திருத்தம்...சேர்ந்து உக்காரலை...எதிர் எதிராப்புல உக்காந்திருக்கோம்’’
‘’ஸ்‌ஸ்‌ஸ்.....முடியல....கிடக்குது....கேள்விக்கு பதில் சொல்லுங்க சார்’’
‘’ம்‌ ....நல்ல கேள்வி....அதாவது என்னன்னா,நாம கணவன் மனைவி..’’
இடை மறித்து தாமரை ‘’ஏய்’’என்று பதற....
‘’இல்ல..இல்ல...கணவன் மனைவி இல்லேன்னுதான் சொல்லவந்தேன்...அடுத்து....காதலர்கள்....ஆஆ ...முறைக்காதீங்க...அந்த ஸ்டேஜுக்கும் போகல இல்லியா....அதனால நாம நண்பர்கள்னு சொல்ல வந்தேன்...’’
‘’அது’’ புன்னகையுடன் தலையாட்டி ஒப்புக்கொண்டாள்.
‘’தாமரை எங்க வீட்டுல உன்னைய ஓகே பண்ணிட்டாங்க....நானும்தான்...உங்க வீட்டு பொசிஷன் என்ன’’ என்றான் ஆவலுடன்...
‘’பேசிக்கிட்டு இருக்காங்க..தெளிவா இன்னும்...’’
குறுக்கிட்டான் ரவி வர்மா..’’சரி....நெகட்டிவ்வா எதுவும் சொல்லிடாத...லேட்டானாலும் பரவாயில்ல..நல்ல பதிலா சொல்லு’’ என்றான் பாவமாய்...
‘’அது சரி....நந்தினியை ஏன் உங்களுக்கு பிடிக்கல’’
‘’நந்தினி’’ என்று ரவிவர்மா புருவம் சுருக்க....
‘’சுத்தம்....பேரே தெரியாதா....என் தங்கை...அன்னிக்கு அவளைப் பார்க்கத்தானே எங்க வீட்டுக்கு வந்தீங்க’’
‘’ஓ...சரி...சரி...பெரிசா காரணம் ஒண்ணுமில்ல...அதுவும் போக, அவங்களை பிடிக்கலைன்னு நான் எப்ப சொன்னேன்’’
‘’ என்னையத்தான் பிடிச்சு ருக்குன்னு சொல்லி விட்டு இருக்கீங்களே..’’
‘’இப்பவும் சொல்றேன்’’
‘’அட ராமா....அதான் கேட்காறேன்...நந்தினியை ஏன் பிடிக்கலைன்னு’’
‘’அட க்ரிஷ்ணா....உன்னைய பிடிக்குதுன்னு சொன்னேன்...அதுக்கு அவளை..சாரி அவங்களைப் பிடிக்கலைன்னு அர்த்தமில்ல...இப்ப லட்டு பிடிக்கும்னு சொன்னா,ஜாங்கிரியைப் பிடிக்கலைன்னு அர்த்தமில்லா...’’
‘’ஓ....பொம்பளைகல்லாம்.உங்களுக்கு லட்டு ஜாங்கிரியா....ரொம்ப ஸ்வீட் சாப்பிடுவீங்களோ’’
என இரு பொருளில் தாமரை எகிற...
‘’ஐயோ....சாமி...சாமி...கன்னத்துல போட்டுக்கறேன்...நான் பெண்களை தெய்வமா மதிக்கறவன்‌ ....ஒரு உதாரணத்துக்கு சொன்னேன்.அவ்ளோதான்’’
அவன் பயத்தை மனதுக்குள் ரசித்தவள்,
‘’நீங்க பெண்களை தெய்வமாக்கவும் வேண்டாம்..தெருவுல போட்டு மிதிக்கவும் வேண்டாம்...சக மனுஷியா பார்த்தாப் போதும்..ஓகே..’’
‘’பேச்சாளர்ட்டல்லாம் பேச முடியும்களா ...சரி...உங்க பட்டிமனற வேலையெல்லாம் எப்பிடிப் போகுது?’’ என்று பேச்சை திசை திருப்பினான் ரவிவர்மா.
‘’நல்லாப் போகுது’’
‘’இப்போதைக்கு ஏதாவது பட்டிமன்ற நிகழ்ச்சி இருக்கா’’
‘’நாளைக்கு கூட இருக்கே’’
‘’எங்கே’’ ஆர்வமானான்...
‘’இங்கே லோக்கல்லதான்...ஒரு அசோசியஷன்ல’’
‘’நானும் வரவா’’
‘’பொது நிகழ்ச்சிதான....யாரு வேணா வரலாம்’’
சப்பென்றிருந்தது....இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சொன்னான்...
‘’பிடி கொடுக்காமல் பேசுவதில் பெண்கள் கில்லாடிகள்...கண்டிப்பா நாளைக்கு வருவேன்...நீ லொகேஷனை மட்டும் தெளிவா எனக்கு மெசேஜ் பண்ணிடு...’’
‘’ஓகே’’
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு இருவரும் அவரவர் வீடுகளுக்கு கிளம்பி சென்றனர்...மறுநாள் நடக்க இருக்கும் பட்டிமன்றத்தில் தனக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதாக உணர்ந்தாள் தாமரை.
..சற்று அதிகம் மெனக்கெட்டு பாயிண்டுகள் தயார் செய்தாள்...நிகழ்ச்சிக்கு உடுத்தி செல்வதற்காக அக்கறையாக நல்ல காட்டன் புடவை, அத்ற்கு பொருத்தமான காதணிகள், வளையல்கள்,கழுதுக்கான ஆபரணம் எல்லாவற்றையும் முதல் நாள் இரவே எடுத்து வைத்தாள்.
.. தன்னுடைய செயல்கள்தாமறைக்கே வியப்பாகத்தான் இருந்தது...இந்த காதல் கத்தரிக்காய்,இதில் எல்லாம் விழும் ரகம் நானில்லை... வேற லெவல் ஆளாக்கும் நான் என்று காட்டிக் கொள்ளவே முயற்சி செய்தாள்.
.தான் விருப்பு வெறுப்பு இல்லாமல் ரவி வர்மாவிடம் இருந்து விலகி நின்று பேசுவதாக அவள் நினைத்துக் கொண்டாலும்,தனது மனம் அவரை நெருங்குகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டது தாமரைக்கு ....அப்படி நடந்தால்தான் என்ன...தனக்கு கணவனாக வரக்கூடிய வாய்ப்பில் இருப்பவர்தானே அவர் என்று நினைத்துக் கொண்டாள்..பட்டிமன்ற நிகழ்ச்சிக்காகப் பதட்டப்படும் மகளை புதிதாகப் பார்த்தாள் சரசு...
‘’டீ...தாமரை ...நாளைய பட்டிமன்றத்துக்கு நான் வர முடியாது போல இருக்குடி’’
‘’ஏமா’’
‘’பெரிமாவுக்கு மூட்டு வலி அதிகமா இருக்காம்...நாளைக்கு டாக்டர்கிட்டப் போறதுக்கு, துணைக்கு கூப்பிட்டு இருக்காங்க..வர லேட்டாயிரும்னு நினைக்கறேன்...’’
என்று சரசு வருத்ததுடன் சொல்ல,மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் தாமரை...அவரவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்...





v
 
Top